தமிழகத்தில் இல்லாத பாடத்திற்கு கிடைக்குது மத்திய அரசு நிதி - கேரளா டாப்; தமிழகம் பாடம் கற்குமா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 16, 2026

Comments:0

தமிழகத்தில் இல்லாத பாடத்திற்கு கிடைக்குது மத்திய அரசு நிதி - கேரளா டாப்; தமிழகம் பாடம் கற்குமா

தமிழகத்தில் இல்லாத பாடத்திற்கு கிடைக்குது மத்திய அரசு நிதி

கேரளா டாப்; தமிழகம் பாடம் கற்குமா Central government funds are being received for subjects that are not available in Tamil Nadu - Kerala is on top; Will Tamil Nadu learn the lesson?

கேரளாவில் 2016 முதல் ஒன் றாம் வகுப்பு முதல் மேல்நிலை வரை கணினி அறிவியல் பாடம், தனிப்பாடமாக வைக்கப்பட்டுள் ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர் வில் கணினி அறிவியல் பாடமும் உண்டு.

அந்த அளவிற்கு கணினி அறி வியலுக்கு முக்கியத்துவம் அளிக் கிறது. கணினி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.1.80 லட்சத்துடன் மாநில அரசும் இணைந்து சம்பளம் வழங்குகிறது.

இதுபோல் தெலுங்கானாவில் 61 பக்கங்களிலும், கர்நாடகாவில் 139 பக்கங்களிலும், டில்லியில் 146 பக் கங்களுடன் கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள் ளது.

கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில் மத்திய அரசின் தீட் டங்களை மாணவர்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில், கேரளாவிடம் தமிழக கல்வித்துறை பாடம் கற்க /வேண்டும்

தமிழகத்தில் அரசு பள் ளிகளில், இல்லாத பாடத் திட்டத்திற்காக மத்திய அரசு நிதி பெறப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வுக்காக ஹைடெக் லேப் வசதி 2010 முதல் 6454 பள்ளிகளில் துவங் கப்பட்டது. இதற்காக மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தில் நிதியாக ஒரு லேப்புக்கு ரூ.6.40 லட்சம் நிதி வீதம் ஒதுக் கப்பட்டது.

இவ்வகுப்புகளில் கணினி அறிவியலுக்கு என தனியாக பாடநுால் கழ கம் மூலம் பாடத்திட்டம் தயாரித்து வழங்க வேண் டும். இப்பாடத்தை தியரி, செய்முறையாக கற்பிக்க வேண்டும் என நிபந்த னையுடன் நிதி ஒதுக்கப் பட்டது.

மேலும் ஆண்டுதோ றும் இப்பாடத்திற்கான கணினி ஆசிரியர் சம்ப ளம், லேப்பிற்கான மின் கட்டணம், இணையதள சேவை கட்டணம் என ரூ.2.40 லட்சம் நிதியும் ஒதுக்கப்படுகிறது.

ஆனால் தமிழ தமிழகத்தில் 6 முதல் பத்தாம் வகுப்பு களில் கணினி அறிவியல் என தனியான பாடம் இல்லை. அதற்கு பதில் அறிவியல் பாடத்தில் 3 பக்கம் அளவில் ஐ.சி. டி., என்ற பெயரிலான பாடம் இணைக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews