Breaking

Showing posts with label 000. Show all posts
Showing posts with label 000. Show all posts

Monday, August 01, 2022

August 01, 2022

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டம்; வெளியானது சூப்பர் அறிவிப்பு

விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை கவனமுடன் பயன்படுத்தி விண்ணப்பபங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு உயர்கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இரண்டு நாள் கால அவகாசம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. இந்நிலையில், தங்கள் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மாணவிகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து வந்தன. இந்த கோரிக்கையினை ஏற்று, உயர்கல்வித் துறை தற்போது இரண்டு நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

எனவே, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கிக்கணக்கு விவரங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் மேற்கொள்ளுதல், புதிதாக வங்கிக்கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைத்து மாணவிகளுக்கும் இந்த வசதி பொருந்தும்.

திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பிற வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை கவனமுடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்ள, https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Thursday, July 07, 2022

July 07, 2022

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000: பயனாளிகளில் 34 லட்சம் பேர் தேர்வு?

தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்க 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், சொந்த வீடு வைத்திருப்போர் என, 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை, அனைத்து அரிசி கார்டுதாரர்களும் வழங்க முடியாது.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு, 'ஆதார்' எண் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்திலும் முதியோர் உதவி தொகை, விவசாய நிதியுதவி என, மத்திய, மாநில அரசு திட்டங்களை பெறும் பயனாளிகள்;

ஏழ்மையில் உள்ளவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

மத்திய அரசு, இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு ஆய்வுக்கு பயனாளிகளை தேர்வு செய்கிறது. சிலிண்டர் மானியம் வழங்குவதற்காக, அந்த பயனாளிகளின் வங்கி கணக்கு விபரங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் ஏற்கனவே உள்ளன.

தமிழகத்தில், 34.51 லட்சம் இலவச சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 உரிம தொகை வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வில் முதல் கட்டமாக, இலவச காஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களை சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மொத்த பயனாளிகளும் அடையாளம் காணப்பட்ட பின், உரிம தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

Total Pageviews

Search This Blog