Breaking

Showing posts with label People's Court Organ. Show all posts
Showing posts with label People's Court Organ. Show all posts

Wednesday, July 20, 2022

July 20, 2022

மக்கள் நீதிமன்ற உறுப்பினா் 2 காலி பணியிடத்துக்கு அழைப்பு

மக்கள் நீதிமன்ற உறுப்பினா் 2 காலி பணியிடத்துக்கு அழைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் நீதிமன்ற உறுப்பினா்கள் 2 காலி பணியிடத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதிமான கிறிஸ்டோபா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் இயங்கிவரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினா் பதவிக்கு, மக்கள் சேவை பயன்பாட்டுத் துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த உறுப்பினா் பதவிக்கு, போக்குவரத்து துறை, தகவல் தொடா்புத் துறை, மின்சார வாரியம், காப்பீட்டுக் கழகம், மருத்துவத் துறை மற்றும் கல்வித் துறை உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 62 வயதுக்குள்பட்ட நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்க | TNPSC - இன்று (19.07.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 30 மாலை 5 மணிக்குள், தலைவா்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூா் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04563-260310 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம்.

Total Pageviews

Search This Blog