PAY COMMISSION
November 10, 2025
Showing posts with label PAY COMMISSION. Show all posts

Monday, November 10, 2025
Wednesday, October 29, 2025
Tuesday, December 05, 2023
PAY COMMISSION
December 05, 2023
எட்டாவது சம்பள கமிஷன் எப்போது அமைக்கப்படும்? - மத்திய நிதித்துறை செயலர் பதில்
எட்டாவது சம்பள கமிஷன் எப்போது அமைக்கப்படும்? - மத்திய நிதித்துறை செயலர் பதில் When will the eighth pay commission be set up? - Union Finance Secretary Answer
''அடுத்தாண்டு நடக்கவுள்ள பார்லி., தேர்தலுக்கு முன்பாக, எட்டாவது சம்பள கமிஷன் அமைக்கும் எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை,'' என்று மத்திய நிதித்துறை செயலர் டி.வி., சோமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் அரசுகள், சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிக்கையை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிட்டுள்ளன.
மத்திய அரசு பணியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது ஓட்டுகளை பெறும் நோக்கில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 54 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். எனினும், சம்பள கமிஷன் அமைப்பது போன்ற திட்டம் எதுவும் அரசிடம் நிலுவையில் இல்லை.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Monday, May 15, 2023
Monday, September 05, 2022
PAY COMMISSION
September 05, 2022
ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தக்கோரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், கருப்புப் பட்டைஅணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.
இதுகுறித்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா் சங்க செயலா் டி.பிரின்ஸ் நிா்மல் கூறுகையில், புதுவை மாநிலத்தில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள், ஓய்வூதியா்கள் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
புதுவையில் அண்மையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என காத்திருந்தோம். ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
எனவே ஆசிரியா் தினத்தில் எங்களது எதிா்ப்பை காட்டும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்தோம். தொடா்ந்து பலகட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

Monday, July 04, 2022
Thursday, May 19, 2022
PAY COMMISSION
May 19, 2022
3000 Additional Teacher Post - 1 year Pay Continuation Order Published
பள்ளிக்கல்வி அரசு / நகராட்சி / உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை- மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பகிர்ந்தளிக்கப்பட்டது பகிர்ந்தளிக்கப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதரப்படிகள் ஆகியவற்றினை IFHRMS மூலம் பெற்று வழங்க இப்பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசாணைகளை ஒருங்கிணைத்தல் இப்பணியிடங்களில் பணியாளர்களை நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
3000 Additional Teacher Post - 1 year Pay Continuation Order - Download here
CLICK HERE TO DOWNLOAD
Wednesday, December 15, 2021
PAY COMMISSION
December 15, 2021
7th Pay Commission: அதிகரிக்கிறதா அகவிலைப்படி?
7th Pay Commission latest news: புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கவுள்ளது.
2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. புத்தாண்டில், மீண்டும் ஒரு முறை அகவிலைப்படி அதிகரிப்பு இருக்கக்கூடும். இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கும்.
இருப்பினும், 2022 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை. ஆனால், AICPI குறியீட்டின் தரவுகளின்படி, இது 3% ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு பணியாளர்களுக்கு புத்தாண்டில் நல்ல செய்தி
டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இது தவிர, 2022 ஆம் ஆண்டின் பட்ஜெட்டுக்கு முன்னர் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றியும் ஒரு முடிவு எடுக்கப்படும். இவை நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் அதிகரிக்கும். அகவிலைப்படியைப் பற்றி AICPI குறியீட்டின் தரவு மூலம் என்ன தெரிந்துகொள்ள முடிகிறது என பார்க்கலாம்.
அகவிலைப்படி AICPI தரவுகளின் அடிப்படையில் ளால் தீர்மானிக்கப்படும்
நிபுணர்களின் கூற்றுப்படி, 2022 ஜனவரியிலும் அகவிலைப்படி (Dearness Allowance) 3% அதிகரிக்கப்படலாம். அதாவது, 3% உயர்வு இருந்தால், மொத்த அகவிலைபப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். AICPI தரவுகளின்படி, செப்டம்பர் 2021 வரையிலான புள்ளிவிவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன்படி, அகவிலைப்படி (டிஏ) 32.81 சதவீதமாக உள்ளது.
ஜூன் 2021 வரையிலான தரவுகளின்படி, ஜூலை 2021க்கான அகவிலைப்படி 31 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது அதன் மேலதிக புள்ளிவிபரங்களின்படி, அகவிலைப்படி கணக்கிடப்படும், இதில் ஒரு நல்ல அதிகரிப்பைக் காணலாம்.
ஜூலை 2021 முதல் அகவிலைப்படி கணக்கீடு:
ஜூலை 2021: AICPI 353 புள்ளிகள், அகவிலைப்படி 31.81%
ஆகஸ்ட் 2021: AICPI 354 புள்ளிகள், அகவிலைப்படி 32.33%
செப்டம்பர் 2021: AICPI 355 புள்ளிகள், அகவிலைப்படி 32.81%
Sunday, November 21, 2021
Saturday, July 10, 2021
PENSION
July 10, 2021
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 5 பெரிய மாற்றங்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு நிலுவையில் உள்ள நிலையில், டிஏ, டிஆர் மற்றும் பயணப்படி போன்றவை பற்றி அதிரடியாக 5 மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
7 வது ஊதியக்குழு:
மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சதிற்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் 3 தவணைகளாக அவர்களின் சலுகைகள் அனைத்தும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்நிலையில், டிஏ, டிஆர் மற்றும் மற்ற சலுகைகள் அனைத்தும் பற்றிய 5 மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஏ., டி.ஆர் மறுசீரமைப்பு:
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், ஏழாவது ஊதியக்குழு வழிகாட்டுதலின் படி, செப்டம்பர் முதல் டி.ஏ மற்றும் டி.ஆர் அதிகரித்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜே.சி.எம் தேசிய கவுன்சிலுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ்:
ஒரு மத்திய அரசு ஊழியர் தங்கள் சொந்த வீட்டைக் கட்டுவதற்கு ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் (எச்.பி.ஏ) இன் கீழ் 7.9 சதவீத எளிய வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இந்த நன்மைகள் மார்ச் 31,2022 வரை கிடைக்கும்.
ஓய்வூதிய பயன்:
கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, குடும்ப ஓய்வூதிய விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார். COVID-19 தொற்றுநோய்களின் போது ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை பல மாற்றங்களை செய்துள்ளது. இறப்புச் சான்றிதழ் கொடுத்து குடும்ப உறுப்பினர்களின் இறப்பினை பதிவு செய்து, நன்மைகளை அடையாளம். பயணப்படி:
டிஏ மற்றும் டிஆர் உயர்வுக்கு முன்னதாக, டிஏ சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை மத்திய அரசு முந்தைய 60 நாட்களில் இருந்து 180 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
மெயில், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஓய்வூதிய சீட்டு:
ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய சீட்டுகளை எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவுசெய்த தொடர்பு விவரங்களில் வழங்குமாறு மத்திய அரசு வங்கிகளைக் கேட்டுள்ளது. இந்த முடிவு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.

Wednesday, July 07, 2021
PRESIDENT
July 07, 2021
7வது ஊதியக்குழு – மத்திய அரசு ஊழியர்களின் DA, DR வழங்குவது குறித்து இன்று முடிவு!
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியபடி (DR) வழங்குவது குறித்து இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அமைச்சரவை கூட்டம்:
இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் DA, DR வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை இடையே நடந்த கூட்டத்தில், இந்த ஆண்டு செப்டம்பர் முதல் DA, DR சலுகைகள் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பான இறுதி முடிவு மத்திய அமைச்சரவையால் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2021 நிலுவைத் தொகை உட்பட, 2021 செப்டம்பரில் DA, DRன் நிலுவையில் உள்ள மூன்று தவணைகள் வழங்கப்படும் என்று அமைச்சரவை செயலாளர் ஒப்புக் கொண்டதாக பொதுச் செயலாளர் மிஸ்ரா அவர்கள் தெரிவித்து இருந்தார். மத்திய அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பணிபுரிந்தனர், இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. எனவே அரசாங்கம் அவர்களின் நியாயமான பலன்களை வழங்க வேண்டும் என அவர் கோரி உள்ளார். இதற்கிடையில், டிஏ மற்றும் டிஆர் குறித்து இறுதி முடிவை விரைவாக எடுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், ஆயுதப்படை ஊழியர்கள் உட்பட, தங்களுக்கு உரிய டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆரின் கூடுதல் தவணைகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 06, 2021
PAY COMMISSION
July 06, 2021
7வது ஊதியக்குழு: பரவி வரும் வதந்திகள் – மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வானது ஜூலை மாதம் வழங்கப்படுவதாக பல்வேறு அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியான நிலையில் மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் விளக்கம்:
மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் கடந்த 2020 ஜனவரி முதல் DA மற்றும் DR உயர்வானது கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தவணைகளுக்குமான DA உயர்வு தொகை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான பல வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. முன்னதாக மே மாதம் நடக்க இருந்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும், ஜூன் 26ம் தேதி அன்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும், ஊழியர்களுக்கான DA உயர்வு குறித்து எந்தவிதமான அறிவிப்புகளும் வெளிவரவில்லை. இதனால் ஜூலை முதல் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது புதிதாக DA உயர்வு செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று மீண்டும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜூலை முதல் DA நிலுவை வழங்கப்படும் என்று வெளியாகி வரும் தகவல் போலியானது என்றும் மத்திய அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் DA நிலுவையானது செப்டம்பரில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அதிகாரிகள் மட்டத்தில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன.
7வது ஊதிய குழுவின் அடிப்படை சம்பள பட்டியலின் படி, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. இறுதியில் ஊழியர்களின் DA, TA, மருத்துவ இழப்பீடு மற்றும் HRA போன்ற அனைத்து சலுகைகளும் அறிவிக்கப்பட்டு சேர்க்கப்படும் பொது தான் ஊழியரின் அதிகரிக்கப்பட்ட சம்பளம் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, July 04, 2021
PAY COMMISSION
July 04, 2021
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அகவிலைப்படி உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.
கொரோனா காரணமாக 2020 ஜன., 1 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் வரை, மூன்று தவணை அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 'ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும்; ஓய்வூதியர் விதிமுறைகள் தளர்த்தப்படும்' என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.
அதனால், நடப்பு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என, மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியர்களும் எதிர்பார்த்தனர். இது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், மத்திய அரசு அறிவிப்பில் உள்ள முக்கிய ஐந்து அம்சங்கள் குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது:
* ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக உயர்த்தப்படலாம். இது குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்
* மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி கடன் திட்டம், 2020 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்படலாம். இந்த திட்டத்தில், 7.9 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விதிமுறைகளை சமீபத்தில் மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது * கடந்த ஜூன் 15 முதல், ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களின் பயணப் படி கோரிக்கைக்கான கால வரம்பு, 60 நாட்களில் இருந்து, 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது
* ஓய்வூதியம் குறித்த விபரங்கள் அனைத்தையும் ஓய்வூதியதாரருக்கு மின்னஞ்சல், குறுந்தகவல், 'வாட்ஸ் ஆப்' ஆகியவற்றில் அனுப்ப, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநடைமுறை, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது
* குடும்ப ஓய்வூதிய விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர் இறந்தால், இறப்பு சான்றிதழுடன்விண்ணப்பிக்கும் குடும்ப வாரிசுக்கு, உடனடியாக பகுதி ஓய்வூதியம்வழங்கப்படும்
* உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்த பின், குடும்ப ஓய்வூதியம் நிலுவையுடன் முழுதுமாக வழங்கப்படும். இதனால், வாரிசுதாரர்கள் குடும்ப ஓய்வூதிய நடைமுறைகள் முடியும் வரை ஓய்வூதியம் பெற முடியாத நிலை தவிர்க்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Saturday, June 05, 2021
PAY COMMISSION
June 05, 2021
மத்திய அரசு பணியாளர்களின் PF மற்றும் Gratuity உயர வாய்ப்பு? – DA அதிகரிப்பு!?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR அதிகரிக்கையில், அவர்களின் PF மற்றும் Gratuity அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக 7 ஆவது ஊதியக்குழு தகவல் அளித்துள்ளது.
DA உயர்வு
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு (DA ) இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து கொடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் இதுவரை வெளியான தகவலின் படி, ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வை மீட்டெடுக்கும் முயற்சியில், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். !
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு கிடைக்கும் சேவைகள் விளக்கப்பட்டுள்ளன. தற்போது வரை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் 17% DA உயர்வை பெற்று வருகின்றனர். இதன் பின்பாக 2020 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர இருந்த 3% டிஏ உயர்வு, மற்றும் ஜூலை 1, 2020 க்கான 4% டிஏ உயர்வு, மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 4% டிஏ உயர்வு ஜூலை 1 முதல் அதிகரிக்கவுள்ளது. சமீபத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய DA மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான DR வழங்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் கூறியது. மேலும் ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 முதல் செலுத்த வேண்டிய DA மற்றும் DRன் கூடுதல் தவணைகளும் செலுத்தப்படாது என கூறப்பட்டது. இருப்பினும், தற்போதைய கட்டணத்தின் படி DA தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தவணைகளும் வருங்காலத்தில் மீட்டெடுக்கப்படும் என்றும் 2021 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள, ஒட்டு மொத்த திருத்தப்பட்ட விகிதத்தில் அவை அடங்கும் என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இதில் அடிப்படை ஊதியம் மற்றும் DA வின் சதவீதத்துடன் PF பங்களிப்பு கணக்கிடப்படுகிறது. அதாவது DA அதிகரிப்பானது, மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர PF பங்களிப்பையும் அதிகரிக்கும். எனவே DA உயர்வானது ஊழியர்களின் க்ராஜூவிட்டி அதிகரிக்கும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Sunday, May 16, 2021
PAY COMMISSION
May 16, 2021
7 வது ஊதியக்குழு ஜூலை 1ல் DA அதிகரிக்குமா? – மத்திய அரசின் நிலை!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி வரும் ஜூலை மாதம் கிடயிக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அவை தள்ளிபோவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
7 வது ஊதியக்குழு: நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1 மற்றும் 2021 ஜனவரி 1 ஆகிய மூன்று தவணைகளுக்கான படிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடைசியாக DA 17% ஆக இருந்தது. ஒவ்வொரு கால தவணைக்கும் DA தொகை குறிப்பிட்ட சதவீதம் அதிகரிக்கப்படுவது வழக்கம். அகவிலைப்படி உயர்வை பொருத்து பணியாளர்களின் ஊதியம் மற்றும் மற்ற சலுகைகளும் மாறுபடும். நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இருப்பினும் இன்னும் அவர்களுக்கு உயர்த்தப்படும் DA சதவீதம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. 7 வது ஊதியக் குழு குறித்த ஆலோசனைக் கூட்டம் இம்மாதம் நடக்க இருந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் ஊதியக் குழு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மே 8ம் தேதி நடக்க இருந்த ஆலோசனைக் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மே மாத இறுதியில் கூட்டம் நடக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் ஜூலை மாதம் முதல் கிடைக்க வேண்டிய அகவிலைப்படி தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக அறியப்படுகிறது. மேலும், பயனபடியும் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஜே.சி.எம் இன் பணியாளர் தரப்புச் செயலாளர் டி.ஏ.சிவ் கோபால் மிஸ்ரா அவர்கள் DA பொதுவாக 25% அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் தான் பயணப்படி அதிகரிக்கும் ஆனால் டிஏ விகிதம் தற்போது 17% ஆக உள்ளது. ஆக தற்போதைக்கு பயணப்படி உயராது என்றும் கூறியிருந்தார்.

Tuesday, May 11, 2021
PAY COMMISSION
May 11, 2021
7வது ஊதியக்குழுவின் படி அகவிலைப்படி உயர்வு?? மேலும் தாமதமாக வாய்ப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மூன்று தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் தாமதமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய மூன்று தவணைகளுக்கான DA மற்றும் DR நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மத்திய அரசு பல கோடி ருபாய் பணம் லாபமடைந்துள்ளது. இந்த நிலுவைப் பணம் வரும் ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
7 வது ஊதியக் குழுவின் மேட்ரிஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மே 8ம் தேதியன்று நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் இந்த மாத இறுதியில் நடத்தப்படும் என்று ஊடகத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜே.சி.எம் தேசிய கவுன்சில், ஸ்டாஃப் சைட்டின் செயலாளர் சிவ் கோபால் மிஸ்ரா, அவர்கள் இது தொடர்பாக அரசுடன் ஆலோசிப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 7 வது ஊதியக்குழு தொடர்பான அனைத்து நிலுவையில் உள்ள சிக்கல்களும் ஆராயப்பட உள்ளது. 2021 ஜூலை 1ம் தேதி முதல் தான் புதிய விகிதங்கள் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் DA இன்னும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
Wednesday, May 05, 2021
PAY COMMISSION
May 05, 2021
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூலை 1 முதல் வழங்கப்படும்
2020 ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்த அகவிலைப்படியினை ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதலே அனைத்து ஊழியர்களும் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசாங்க துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி
கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது மத்திய அரசு அரசு துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகளை ரத்து செய்தது. இதன் காரணமாக பலரும் பாதிப்படைந்து வந்தது. அதில் ஒன்று தான் அகவிலைப்படி நிறுத்தம். இதனை அடுத்து பல அரசாங்க ஊழியர்களும் இது குறித்து மத்திய அரசாங்கத்திடம் இதனை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு செவிசாய்த்துள்ள மத்திய அரசு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைவரும் நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. இந்த செய்தியினை நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆண்டுதோறும் இரு முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி இந்த ஆண்டு உயற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அகவிலைப்படி 17 சதவீதமாக இருக்கின்றது, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tuesday, May 04, 2021
PROCEEDINGS
May 04, 2021
பள்ளிக் கல்வி - சுற்றுச்சூழல் மேம்பாடு - ஒரு உதவி இயக்குநர் மற்றும் 32 முதுகலை ஆசிரியர்கள் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021 ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - சார்ந்து - 1 Assistant Director and 32 Eco Coordinators Pay Order for the month of April - 2021
1. அரசாணை (1டி) எண்.175, பள்ளிக்கல்வி[பக5(1)]துறை, நாள் 20.07.2009.
2. அரசாணை (1டி) எண்.99, பள்ளிக்கல்வி [பக5(1)] துறை, நாள் 05.03.2018.
3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண். 001510/எல்/ இ3/2021, நாள் 23.04.2021. பார்வை 1ல் காணும் அரசாணையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான, சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கும்,
பசுமைப்படை திட்டத்தினை செம்மையாக செயல்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு முதுகலை ஆசிரியர் (தாவரவியல்/உயிரியல்) வீதம் புதியதாக 32 பணியிடங்கள் ரூ.9300 - 34800 ரூ4600/- நிலை ஊதியம் (Grade Pay) என்ற ஊதிய விகிதத்திலும் + மாவட்டங்களிலுள்ள செயல்பாடுகளைக் கவனிக்கவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் உதவி இயக்குநர் என்ற நிலையில் ஒரு பணியிடம் (ரூ.15600-39100 +ரூ.5400/ நிலை ஊதியம் (Grade Pay) என்ற ஊதிய விகிதத்திலும் தோற்றுவித்து ஆணைகள் வெளியிடப்பட்டன. பார்வை 2-ல் காணும் அரசாணையில் இப்பணியிடங்களுக்கு கடைசியாக, 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 2) மேற்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும் இப்பணியிடங்களுக்கு, ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணையினை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
3) பார்வை 1ல் குறிப்பிட்டுள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இப்பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021 ஆம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில், ஏப்ரல் 2021-ம் மாதத்திற்கான ஊதியப் பட்டிகளை அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Wednesday, March 10, 2021
SGT
March 10, 2021
குமுறும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்!
திரு சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழுவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பாக அரசு திருத்தம் செய்து அளித்த அரசாணை எண் 138 நாள் 24.04.2018 ன் நிலை என்ன?
AICTE - PUBLIC NOTICE FOR APPROVAL PROCESS 2021-22 (approval from all the existing and new Technical Institutions for conducting Technical Programmes/ Courses) - PDF
Joint Entrance Examination (Main) February 2021 Session Paper 1 (B.E./B.Tech.) Result - Direct Link
இடைநிலை ஆசிரியர்களின் கடுமையான போராட்டம் காரணமாக ஊதிய முரண்பாட்டை களைய திரு.சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு பரிசீலிக்கும் என அரசு ஆணை Go 138 நாள்: 24.04.2018 ல் வெளியிட்ட பின்னரும் அதன்பின் நல்ல தற்போது குழு அறிக்கையில் பாதிக்கப்பட்ட 2009 மற்றும் TET ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து ஏதும் குறிப்பிடப்படாமல் காணாமல் போனது புரியாத புதிராகவே உள்ளது.
PAY COMMISSION
March 10, 2021
சித்திக் குழுவின் பரிந்துரைப்படி பல்வேறு துறை பணியாளர்களுக்கு புதிய ஊதியங்களை நிர்ணயித்து அரசாணை: 40 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊக்க ஊதிய உயர்வு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் பரிந்துரைப்படி பல்வேறு துறை பணியாளர்களுக்கான புதியஊதியங்களை நிர்ணயித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு நபர் குழு பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய வீதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த 7-வது ஊதியக் குழுவில், பல்வேறு துறைகளின் கீழ் பல்வேறு பணிநிலைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பதாக ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டின. போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, ஊதிய முரண்பாடுகளை போக்க கடந்த 2018பிப்ரவரியில், அப்போது நிதித்துறை செலவினப் பிரிவு செயலராக இருந்த சித்திக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அறிக்கை தயாரித்து, கடந்த 2019 ஜனவரியில் முதல்வரிடம் அளித்தது.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை
இந்த அறிக்கையில் பொதுவான சம்பள விகிதம், கோரிக்கைகள் அடிப்படையில் பல்வேறு துறைகளின் பணியாளர்களது ஊதியவரம்புகளில் இருந்த முரண்பாடுகள் களையப்பட்டு புதியசம்பள அட்டவணை தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அடிப்படையில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதிஅரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுவான சம்பள அட்டவணைப்படி, அடிப்படை சம்பளமாக ரூ.15,700, அதிகபட்ச சம்பளமாக ரூ.2 லட்சத்து 61 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுதுபொருள் அச்சகத் துறை, சட்டப்பேரவை செயலகம், சுற்றுலா, பேரூராட்சிகள், செய்தி, அரசு அருங்காட்சியகங்கள், சிறைத்துறை, பொது நூலகம், பொதுப்பணித் துறை, பள்ளிக்கல்வி, சமூக பாதுகாப்பு, சமூகநலம், இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை, கால்நடை பராமரிப்பு, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு இருந்த ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் குழு பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய வீதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு!
இதுதவிர, ஒரே பதவியில் 40 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றுபவர்களுக்கு ஒரு சிறப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.