Breaking

Showing posts with label Madurai Kamaraj University. Show all posts
Showing posts with label Madurai Kamaraj University. Show all posts

Sunday, October 08, 2023

October 08, 2023

M.Phil., Ph.D,க்கு இன்று நுழைவுத்தேர்வு

எம்.பில்., பி.எச்டி.,க்கு இன்று நுழைவுத்தேர்வு

மதுரை காமராஜ் பல்கலையில் எம்.பில்., பி.எச்டி., படிப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வு மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள காமராஜ் பல்கலை கல்லுாரி மற்றும் சமூக அறிவியல் கல்லுாரியில் அக்., 8 இன்று நடக்கிறது.ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான பல்கலை லிங்க் விண்ணப்பதாரர்களின் இ-மெயிலுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை www.mkuniversity.ac.in என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Friday, October 06, 2023

October 06, 2023

நிதி நெருக்கடியில் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம்

நிதி நெருக்கடியில் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் போதிய நிதி இல்லாததால் கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை பெற முடியாமல் பேராசிரியர்கள் சிரமப்படுகின்றனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியில் 650-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஓய்வூதியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓய்வூதியம் வழங்க ரூ.10.50 கோடி தேவைப்படுகிறது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் பேராசிரியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியத் தொகை குறித்த நேரத்தில் வழங்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் துணைவேந்தர் ஜெ.குமாரிடம் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தினர், பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தாலும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேராசிரியர்கள், அலுவலர்கள் கூறியதாவது: இப்பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்பு நிர்வாக ரீதியாக சில பிரச்சினைகள் இருந்தபோதும், நிதி நெருக்கடியை சந்தித்தது இல்லை. அண்மைக் காலமாக பல்கலைக்கழகத்துக்கான வருவாயை அதிகரிப்பதில் நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது பொறுப்பிலுள்ள துணைவேந்தரும் அதற்கான முயற்சியை சரிவர மேற்கொள்ளவில்லை. இப்பல்கலைக்கழகத்தில் நிலுவையிலுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடிட் ஆட்சேபத்துக்கு நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. இதன் காரணமாக அரசிடமிருந்து தேவையான நிதியை பெற முடியவில்லை.

ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை நம்பியே பெரும்பாலான பேராசிரியர்கள், அலுவலர்கள் ஓய்வூதியர்கள் உள்ளனர். இஎம்ஐ, ஓய்வூதியர்கள் மருத்துவ செலவினங்களுக்கென வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. குடும்பச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், சம்பளம் வழங்காதது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.

துணைவேந்தர், பதிவாளர் மற்றும் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் நிதி நிலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Saturday, January 07, 2023

January 07, 2023

பல்கலை முறைகேடு தொடர்பான மனு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலை முறைகேடு தொடர்பான மனு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மீன்வள பல்கலை முறைகேடு தொடர்பான மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மீன்வள பல்கலை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் ஜெயசகிலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலை உள்ளது. அரசின் அனுமதியின்றி, வெவ்வேறு பட்டப் படிப்புகளை வழங்கும் ஒன்பது சுயநிதிக் கல்லுாரிகள் துவங்க அனுமதிக்கப்பட்டது.

இதற்கு பல்கலை நிதி, மானியம், இதர அரசு நிதிகளிலிருந்து தொகை திருப்பிவிடப்பட்டது. இதனால் வழக்கமான பட்டப்படிப்புகள் நடத்தப்படவில்லை. உதவிப் பேராசிரியர் பணி நியமன அறிவிப்பு 2018 ஜூன் 27ல் வெளியானது. இதில் விதி மீறல் உள்ளது.

பல்கலையின் அப்போதைய துணைவேந்தர் பெலிக்ஸ், பதிவாளர் ஸ்ரீனிவாசன் மீது விசாரணை, நடவடிக்கை கோரி பல்கலை வேந்தர், கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலருக்கு 2020ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜெயசகிலா கூறியிருந்தார். மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

தமிழக அரசு தரப்பில், 'மனுதாரர் குறிப்பிடும் எதிர்மனுதாரர்கள் தற்போது பணியில் இல்லை. இருப்பினும் மனு சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, 'மனுவை கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலர் பரிசீலிக்க வேண்டும். பெலிக்ஸ், ஸ்ரீனிவாசன் விளக்கமளிக்க போதிய வாய்ப்பளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

Tuesday, July 12, 2022

July 12, 2022

"மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்" - அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேட்டி

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலை புகுத்த கவர்னர் முயற்சிக்கிறார் என சந்தேகம் எழுந்துள்ளது. பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை; அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே கவர்னரின் கடமை. கவர்னரின் செயல்பாடுகள் பாஜகவின் பிரசாரமாக உள்ளது. இந்திய நாட்டின் வரலாற்றை முதலில் கவர்னர் படிக்க வேண்டும். கவர்னர் எந்த '-ism' பின்பற்றுவேராக இருந்தாலும் 'Humanism' என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, March 29, 2022

March 29, 2022

மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் நியமனம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்பட்டுவருகிறார்.

இதையும் படிக்க | ஆசிரியர் செயல் திறன் சுய மதிப்பீடு 2021 - 2022 | மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

துணை வேந்தரை நியமிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கும் சூழலில் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வரும் குமாரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog