Breaking

Showing posts with label Electricity Board. Show all posts
Showing posts with label Electricity Board. Show all posts

Wednesday, February 07, 2024

February 07, 2024

நமது பள்ளியின் மின் இணைப்பு சார்ந்த விவரத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை



How to upload electricity connection details of our school on EMIS website நமது பள்ளியின் மின் இணைப்பு சார்ந்த விவரத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை

நமது பள்ளியின் மின் இணைப்பு சார்ந்த விவரத்தினை (மின் இணைப்பு எண் + மின் அட்டை முதல் பக்க நகல்) EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை

குறிப்பு:

11 அல்லது 12 இலக்க மின் இணைப்பு எண்ணினை முழுமையாக உள்ளீடு செய்ய வேண்டும்.

EB Number (11 Digit) or (12 Digit) = Region Code (2 Digit) + Section (3 Digit) + Distribution (3 Digit) + Service Number (3 Digit) or (4 Digit)

🔗 அதற்கான நேரடி லிங்க்

https://emis.tnschools.gov.in/school/ebconnection

Tuesday, December 19, 2023

December 19, 2023

மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு



கனமழை பாதித்துள்ள 4 மாவட்டங்களில் அபராதம் இன்றி மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு Extension of time to pay electricity bill without penalty in 4 districts affected by heavy rain

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு

கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

2. ஏற்கனவே, மேற்படி மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 18.12.2023 அன்று அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்.

3. இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் பொருந்தும். மற்றும் பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் இவ்வாறு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Friday, December 01, 2023

December 01, 2023

தமிழ்நாட்டில் நாளை (02.12.2023) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விபரங்கள்



தமிழ்நாட்டில் நாளை (02.12.2023) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விபரங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (பகுதி), சாய்பாபா காலனி, வனக் கல்லூரி, வடக்கு கோயம்புத்தூர், பட்டேல் சாலை,, RGst,, மரக்கடை, ராம்நகர், காந்திபுரம் பூமார்க்கெட், சுகுர்னார்பேட்டை, ஆவாரம்பாளையம் (பகுதி), ரத்தின.*

ஈரோடு மாவட்டம் - வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கே.*

கன்னியாகுமரி மாவட்டம் - ஆற்றூர், குலசேகரம் உண்ணாமலை கடை, வேர்கிளம்பி,பேச்சிப்பாறை, திற்பரப்பு , திருவட்டார்,திருவிதாங்கோடு, பத்மநாபபுரம், விளவூர், முளகுமூடு, குமாரபுரம், வில்லுக்குரி,இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம்.* புதுக்கோட்டை மாவட்டம் - அரிமளம் முழுவதும்,அலியானிலை பகுதி முழுவதும்,தல்லாம்பட்டி பகுதி முழுவதும்,அறந்தாங்கி பகுதி முழுவதும்,அவனத்தன்கோட்டை பகுதி முழுவதும்,மரமடக்கி பகுதி முழுவதும்,நாகுடி பகுதி முழுவதும்,கொடிக்குளம் சுற்று வட்டார பகுதி,ஆவுடையார்கோயில் பகுதி முழுவதும்,கீரமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்,புதுக்கோட்டை கீரமங்கலம் கீரமங்கலம் கீரமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்,வல்லவரி பகுதி முழுவதும்,அமரடக்கி பகுதி முழுவதும்.*

சிவகங்கை - இடைமேலூர், தாமர்க்கி, மலம்பட்டி, கண்டாங்கிபட்டி.*

*தஞ்சாவூர் மாவட்டம் - திருப்புறம்பியம்,சுவாமிமலை,திருப்பனந்தாள், சோழபுரம்,பட்டுக்கோட்டை*

தேனி - லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்,ஆரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். திருச்சி மாவட்டம் - தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்,பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்தா NGR, NSB RD, வலக்கை கிருஷ்ணா மண்டி, பூலோகநாதர், விஸ்வநாதர் கோவில் வசந்தா என்ஜிஆர்,அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ்,புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி,முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி.

திருப்பூர் மாவட்டம் - அவிநாசி டவுன், கோவை மெயின் ரோடு, பழங்கரை, ராக்கியாபாளையம், கே.கே.புதூர், சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், மடத்துப்பாளையம், கந்தம்பாளையம்,வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவர்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம் பகுதி*

Thursday, October 26, 2023

October 26, 2023

மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 55,000-ஆக அதிகரிப்பு

மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 55,000-ஆக அதிகரிப்பு Increase in number of vacancies in Electricity Board to 55,000

தமிழக மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 55,000-ஆக அதிகரித்துள்ளது.

தமிழக மின் வாரியத்தில் உதவி பொறியாளா், கணக்கீட்டாளா் உள்ளிட்ட 1.44 லட்சம் பணியிடங்களில் நிகழாண்டு மாா்ச் நிலவரப்படி 88,774 போ் பணியாற்றி வருகின்றனா். இதனால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 55,226-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2,001 பணியாளா்கள் ஓய்வு பெற்றுள்ளனா்.


அதிக காலிப் பணியிடங்களால் மின் வாரியத்தில பல்வேறு பணிகள் தாமதமாகின்றன. இதனால் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின் வாரியத்துக்கு ஊழியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த ஊழியா்களை பணிக்கு அமா்த்தாமல், முதல்கட்டமாக 5,000 நிரந்தர ஊழியா்களை உடனே நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Total Pageviews

Search This Blog