PF
January 14, 2026
Showing posts with label EPFO. Show all posts
Showing posts with label EPFO. Show all posts
Wednesday, January 14, 2026
Saturday, March 01, 2025
Monday, February 10, 2025
Friday, July 28, 2023
TPF
July 28, 2023
PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!!
You can claim the full PF amount even before attaining the age of 58, if you have retired from your service and you have been unemployed for straight two months (60 days).
PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!! - When can I withdraw all PF money?? Instructions for that!!
பிஎஃப் என்பது ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பிடிப்பது ஆகும்.
இவ்வாறு பிடித்த இந்த தொகையை சேகரித்து நமக்கு வழங்குவார்கள்.
எனவே, இந்த தொகையை நாம் நினைத்த நேரம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது.
அதன்படி, இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே இந்த பிஎஃப் தொகையை நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். அதாவது, ஊழியர் வேலையே இல்லாமல் இரண்டு மாதங்கள் இருந்தால் இந்த பிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றொன்று, ஊழியர் வேலையில் இருந்து ஈயவு பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது அவசர காலத்தில் பணம் தேவைபட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் இதற்கும் சில வழிமுறைகள் உள்ளது. மேல்படிப்பு படிப்பதற்கு பணம் தேவைப்பட்டால் வேலைவாய்ப்பு பங்களிப்பில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு வருடமாவது பணி புரிந்திருக்க வேண்டும். மேலும் மாத ஊதியம் ஆனது 15 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த பிஎஃப் பணமானது தனிப்பட்ட நபருக்கு மட்டும் அல்லாமல் அந்த நபரின் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போகும்போதும் கூட இந்த பிஎஃப் பணத்தை அவர்கள் படிப்பு செலவிற்காக நாம் எடுத்து பயன்படுத்த முடியும்.
இதே போல் நாம் ஒரு வீடு கட்டுவதற்கோ அல்லது நிலம் வாங்குவதற்கு கூட இந்த பி எஃப் தொகையை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு 5 வருடங்கள் ஆவது அங்கு பணி புரிந்திருக்க வேண்டும். இந்த பிஎஃப் தொகையை 24 இல் இருந்து 36 முறை மாத வாரியாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏற்கனவே சொந்த வீடு இருந்து அதற்கு ஏதாவது செலவு செய்ய நினைத்தாலும் இந்த பிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கும் ஐந்து ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். இவ்வாறு பிஎப் தொகையை எடுத்து இதற்கு பயன்படுத்தலாம் என்று தெரியாமல் வங்கியில் லோன் வாங்கி இந்த வேலைகளை செய்திருந்தால் கூட இந்த பி எஃப் தொகையை எடுத்து லோனை கட்ட முடியும்.
இதற்கு அந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டு மட்டும் பணிபுரிந்தாலே போதும். மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பிலிருந்து 90% பெற்றுக் கொள்ளலாம்.
பிஎஃப் தொகைக்கு உரிய நபரின் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் அந்த நபரின் தங்கை தம்பி குழந்தைகள் என அனைவரும் தேவைகளுக்காகவும் கூட இந்த pf தொகையை தாராளமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் நாம் பணிபுரிந்து இருக்க வேண்டும் மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பில் 50% பெற்றுக் கொள்ளலாம்.
Tuesday, March 28, 2023
TPF
March 28, 2023
பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி
பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு - 8.15 percent interest on Employees' Provident Fund
2022-23ம் ஆண்டிற்கான பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை ஓய்வூதிய நிதி அமைப்பு இபிஎப்ஓ அதன் கூட்டத்தின்போது நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இபிஎப்ஓ 2021-22க்கான வைப்பு நிதி மீதான வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 8.1 சதவீதமாக குறைத்தது. பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பணியாளர்களின் வைப்பு நிதிக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
epfo2020-21ம் ஆண்டிற்கான ஊழியர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் குழுவால் முடிவு செய்யப்பட்டது. மத்திய அறங்காவலர் குழுயின் முடிவிற்குப் பிறகு, 2022-23க்கான பணியாளர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் இபிஎப்ஓவின் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
https://www.maalaimalar.com/news/national/tamil-news-jairam-ramesh-responds-on-centres-rs-319-penalty-to-ttd-regarding-fcra-588996?infinitescroll=1
Monday, September 12, 2022
TPF
September 12, 2022
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
Your bf How much is in the account? Easy to know
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால், உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 8.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளர் வருங்கா வைப்பு நிதி திட்டத்தில் கடனும் வழங்கப்படுகிறது.
உங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருக்கும் தொகையை 5 வழிகளில் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
1. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்திருக்கும் பயனாளர்களுக்கு தனித் தனி அடையாள எண் வழங்கப்படும். அது யுஏஎன் என்று கூறப்படுகிறது. ஒரு பயனாளருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு அடையாள எண்தான். நிறுவனங்கள் மாறினாலும் இந்த எண் மாறாது. உங்களது யுஏஎன் செயல்பாட்டில் இருந்தால், இபிஎஃப் ஓ இணையதளமான http://www.epfindia.gov.in என்ற பக்கத்துக்குச் செல்லவும்.
அதில் 'அவர் சர்வீஸ்' என்பதை தேர்வு செய்து, அதில் விரியும் பட்டியலில் 'ஃபார் எம்ப்ளலாயிஸ்' என்று கிளிக் செய்யவும்.
'மெம்பர் ஃபாஸ்புக்' என்பதில் சர்வீசஸ்' என்பதை தேர்வு செய்யவும்.
அதில் லாக்-இன் பக்கம் வரும். உங்கள் யுஏஎன் எண்ணையும் கடவுச் சொல்லையும் உள்ளிடவும். இதைச் செய்தாலே போதும். உங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.
2. குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளும் வழி
உங்களது யுஏஎன் எனப்படும் அடையாள எண்ணுடன் உங்களது தனிநபர் விவரங்கள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தால் குறுந்தகவல் மூலமாகவே பி.எஃப். விவரங்களை அறியலாம்.
1. 7738299899 என்ற எண்ணுக்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
2. உங்கள் செல்லிடப்பேசியில் 'EPFOHO UAN TAM' என்று டைப் செய்து அனுப்பினால் போதும். TAM என்பது தமிழில் விவரங்கள் வேண்டும் என்பதைக் குறிக்கும். ஆங்கிலத்தில் என்றால் இஎன்ஜி என்றும், தெலுங்க என்றால் டிஇஎல் என்றும் டைப் செய்து அனுப்பினால், உங்கள் செல்லிடப்பேசிக்கு விவரங்கள் குறுந்தகவலில் வந்து சேரும்.
1. 044 - 22901406 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசியிலிருந்து மிஸ்டுகால் கொடுத்தால் அந்த அழைப்பு துண்டிக்கப்படும்.
2. உடனடியான உங்கள் செல்லிடப்பேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் தெரியவரும்.
செயலி இருக்க பயமேன்?
உங்கள் செல்லிடப்பேசியில் உமங் அல்லது இபிஎஃப்ஓ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
1. எம்ப்ளாயி சென்ட்ரிக் சர்வீசஸ் என்பதை தேர்வு செய்து, வியு பாஸ்புக் என்ற வாய்ப்பை கிளிக் செய்யுங்கள்.
2. பிறகு உங்கள் யுஏஎன் மற்றும் ஓடிபியை பதிவிட்டால், உங்கள் கணக்கின் விவரங்கள் அனைத்தும் தெரியவரும்.
4. யுஏஎன் எனும் அடையாள எண் இல்லாதவர்கள் கணக்கு விவரங்களை அறியும் வழி..
1. www.epfindia.gov.in இணையதளத்துக்குச் செல்லவும்.
கிளிக் ஹியர் டு செக் யுவர் பிஎஃப் பேலன்ஸ் என்பதை தேர்வு செய்யவும்.
மாநிலம், முதன்மை அலுவலகம், வணிக நிறுவனத்தின் கோடு, பிஎஃப் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
பிறகு ஐ அக்ரி என்பதை அழுத்தி, உங்கள் வருங்கால வைப்பு நிதி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Tuesday, July 26, 2022
PSU
July 26, 2022
அவசரகால மருத்துவ செலவா? PF தொகையில் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்
Provident Fund Withdrawal | நோய்க்கு சிகிச்சை தரும் வகையில், அரசு அல்லது பொதுத்துறை பிரிவு (PSU) அல்லது CGHS செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்த தொகையை பெறலாம்.
தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களை மருத்துவ அவசரநிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, அவர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதி தொகையை திரும்பப் பெற அனுமதிக்கிறது.
மருத்துவமனை சான்றிதழ்களை வழங்கிய பின்னரே இந்த தொகையை திரும்பப் பெற முடியும் என்று இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதுள்ள விதிகளில், EPFO உறுப்பினர்கள் மருத்துவ உதவிக்காக தங்கள் வருங்கால வைப்பு நிதி முன்பணமாக ₹1 லட்சம் வரையில் மருத்துவமனை ஆவணங்களின்றி பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
CS(MA) விதிகள் அல்லது மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான ஒன்றாகும். நோய்க்கு சிகிச்சை தரும் வகையில், அரசு அல்லது பொதுத்துறை பிரிவு (PSU) அல்லது CGHS செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்த தொகையை பெறலாம். ஆனால் தனியார் மருத்துவமனையை பொறுத்தவரையில், இறுதிப் பணப்பரிமாற்றத்திற்கு முன்பாக EPFO-ன் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ காலத்தில்அவசர உதவிக்காக PF பணத்தை பெறுவது எப்படி?
* EPFO போர்டல், epfindia.gov.in இல் உள்நுழைந்து, கேப்ட்சா (capsa) விவரங்களை சரிபார்க்கும் முன், உங்கள் கணக்கு எண் (UAN) மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி Log in செய்யவும்.
* அதில் Online services பகுதியில் Claim ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* பின் அந்த பக்கத்தில் கேட்கப்படும் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். பின்னர் வங்கிக் கணக்கு எண்ணை பதிவிடவும்.
* வங்கிக் கணக்கு எண் சரிபார்க்கப்பட்ட பின் ‘Proceed for Online claim' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதில் PF Advance ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் பணம் எடுப்பதற்கான காரணத்தில் 'Outbreak of pandemic' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* எவ்வளவு தொகை வேண்டும் என்பதை பதிவிட்டு, காசோலை நகலை அப்லோடு செய்து, முகவரியை பதிவிடவும். பின்னர் மொபைலுக்கு ஒரு OTP வரும் அதையும் பதிவிடவும். இதன்பின் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் ஒரு வேலை நாளில் சமர்ப்பிக்கப்பட்டால், அடுத்த நாளின் இறுதிக்குள் பணம் செலுத்தப்படும்.தகவல்கள் சரியாக இருந்தால் வங்கிக் கணக்குக்கு பணம் விரைவில் வந்துவிடும்.
குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புப்படி, மருத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட தொகையை EPFO உறுப்பினரின் சம்பளக்கணக்கிலோ, சிகிச்சை மேற்கொள்ளப்படும் மருத்துவமனையிலோ திரும்பப் பெறலாம்.
நோயாளி முன்கூட்டியே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், ஊழியர் மருத்துவக் கட்டணங்களுக்கான சான்றிதழ்களை 45 நாட்களுக்குள் EPFO விடம் சமர்ப்பித்தால் மட்டுமே PF திரும்பப் பெறும் வசதியைப் பெற முடியும்.
வேறுபிற காரணங்களுக்காக ஆன்லைனிலில் தங்கள் PFஐ பணியாளர்கள் மிக எளிதாக திரும்பப் பெற EPFO இன் உறுப்பினர் e-SEW போர்டலை பயன்படுத்தலாம்.
பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களின் PF இல் உள்ள மொத்த சேமிப்பு தொகையையும் திரும்பப் பெறலாம். ஆனால் ஓய்வு பெறுவதற்கு முன்பே, ஒரு பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவது சாத்தியம்.
வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கான முக்கிய விவரங்கள் :
PF கணக்கிலுள்ள பணத்தை பெற, ஒருவரின் ஆதார் அட்டையை உலகளாவிய கணக்கு எண்ணுடன் (UAN) இணைப்பது முக்கியம். இது EPFO இணையதளம் மூலமாக அல்லது UMANG மொபைல் app மூலமாக ஆன்லைனில் இணைக்கலாம்
PF திரும்பப் பெறுவதற்கு முன் உங்களின் KYC யை படித்து அறிந்து கொண்டு, அதை நிறைவு செய்து சமர்பிப்பது மிகவும் முக்கியம்.