Breaking

Showing posts with label engineering counseling. Show all posts
Showing posts with label engineering counseling. Show all posts

Friday, November 04, 2022

November 04, 2022

பி.இ. துணைக் கலந்தாய்வு எப்போது?

பி.இ. துணைக் கலந்தாய்வு எப்போது?

தமிழக பொறியியல் பி.இ./பி.டெக்., மாணவர்கள் சேர்க்கை 2022-23 பொதுக்கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணைக் கலந்தாய்வு விளம்பர அறிவிக்கை (09.11.2022) வெளியிடப்பட உள்ளது.

சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 ஆம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்ற, தகுதி வாய்ந்த தமிழகத்தை சார்ந்த மாணவர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணைக் கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 110 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் 09.11.2022 அன்று வெளியிடப்பட உள்ள துணைக் கலந்தாய்வு அறிவிக்கையினை தொடர்ந்து, விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக 09.11.2022 - ம் தேதி முதல் 13.11.2022 - ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 5 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, September 21, 2022

September 21, 2022

Eng., First Round: 'Admission' ends tomorrow - இன்ஜி., முதல் சுற்று: 'அட்மிஷன்' நாளை கடைசி

Tomorrow is the last day for the first round allotted students in engineering counseling to join colleges.

Engineering General Counseling started on 10th. Out of a total of four rounds, 12,591 candidates were allotted seats in the first round. 6,277 confirmed this allotment and got the final allotment. Also, 4,430 people have got their allotment and are on the waiting list to get allotment if desired seats are available.

In this case, all those who have got quota have been given a week's time to confirm their admission. Accordingly, the concerned students will submit their original certificates, pay the tuition fee and accept the provisional allotment tomorrow to confirm the admission and the final allotment order will be issued on 25th.

Accordingly, it has been announced that the 'Choice Billing' registrations for the second round will start on the 25th. For more information, visit www.tnea online.org.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்வதற்கு நாளை கடைசி நாளாகும்.

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங், 10ம் தேதி துவங்கியது. மொத்தம் நான்கு சுற்றுகளில், முதல் சுற்றில் 12 ஆயிரத்து, 591 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டை, 6,277 பேர் உறுதி செய்து, இறுதி ஒதுக்கீடு பெற்றனர். மேலும், 4,430 பேர் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றதுடன், விரும்பிய இடங்கள் கிடைத்தால் ஒதுக்குமாறு, காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில், ஒதுக்கீடு பெற்ற அனைவரும் சேர்க்கையை உறுதி செய்வதற்கு, ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை அளித்து, கல்வி கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்வதற்கு நாளை கடைசி.தற்காலிக ஒதுக்கீட்டை ஏற்று, முன்னிலை இடங்களுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு, வரும், 25ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்படும்.

இதையடுத்து, இரண்டாம் சுற்றில் உள்ளவர்களுக்கு, விருப்ப கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு தேர்வுக்கான 'சாய்ஸ் பில்லிங்' பதிவுகள், 25ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnea online.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Saturday, September 10, 2022

September 10, 2022

பொறியியல் கலந்தாய்வு; இட ஒதுக்கீடு குறித்த முழு விபரம்

தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்கு முன் தேதிகள் வெளியிடப்பட்டு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாகவும் பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே வந்தது. இந்நிலையில் இன்று துவங்க இருக்கும் பொறியியல் கலந்தாய்வுக்கான விவரங்களையும் இடஒதுக்கீடு குறித்த தகவல்களையும் உயர்கல்வித்துறை அமைச்சர் இதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டிருந்தார்.

அப்போது அவர் பேசியதாவது ''இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்குபெற உள்ளது. தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் என 431 கல்லூரிகள் பங்குபெற உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடுகள் 1,48,711 இடங்கள் உள்ளது. தனியார் கல்லூரிகளில் 65 சதவிகிதம் அரசு கோட்டா. இதில் அரசுப்பள்ளி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10,968 இடங்கள். இந்த ஆண்டுமுதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி (vocational) பாடப்பிரிவு வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது''

"பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு 10ம் தேதி(இன்று) துவங்க இருக்கிறது. 10 ம் தேதி தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும். நான்கு கட்டமாக பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை முதல்கட்டம் நடைபெறும். இரண்டாவது கட்டம் செப்டம்பர் 25 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரை நடைபெறும். முதல் கட்டத்திற்கும் இரண்டாம் கட்டத்திற்கும் இடையில் உள்ள காலம் மாணவர்களின் நலன் கருதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டம் அக்டோபர் 13 ல் தொடங்கி 15 வரை நடைபெறும். நான்காவது கட்டம் அக்டோபர் 29 முதல் 31 வரை நடைபெறும். நான்கு கட்டங்களில் நடைபெறும் இந்த கலந்தாய்வுகளில் பொதுப்பிரிவு 31%. இந்த பொதுப்பிரிவில் உள் ஒதுக்கீடாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் 30% ல் உள் ஒதுக்கீடாக 3.5% இஸ்லாமியர்களுக்கு என்று ஒதுக்கப்படும். அதிலும் 7.5% உள் ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் 7.5% உள் ஒதுக்கீடு.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். 18% பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் அதிலும் 3% உள் ஒதுக்கீடு அருந்ததியர் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1% இடஒதுக்கீடு பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும். அதிலும் உள் ஒதுக்கீடாக 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு கொடுக்கப்படும். துணைநிலை கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து இரண்டாம் முறை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுக்கப்படும். செப்டம்பர் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். பாடத்திட்டத்தை பொறுத்தவரை பொறியியல் பிரிவிலும் தமிழ் மொழிப்பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

Monday, August 29, 2022

August 29, 2022

ஒரே கட் ஆஃப்-ல் 500+ மாணவர்கள்: பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் 2 போட்டி எப்படி இருக்கும்?

TNEA Counselling: பொறியியல் கவுன்சலிங் போறீங்களா? செகண்ட் ரவுண்ட்க்கான போட்டி எப்படி இருக்கும் எனத் தெரிந்துக் கொள்ளுங்கள்

TNEA Engineering counselling second round competition details: தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ரவுண்ட் கவுன்சலிங்கில் டாப் மோஸ்ட் கல்லூரிகள் பெரும்பாலும் நிரம்பிவிடும் நிலையில், அடுத்த கட்டத்தில் இருக்கும் கல்லூரிகளை பிடிக்க இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்களிடையே கடும் போட்டி இருக்கும். இந்த நிலையில், இரண்டாவது ரவுண்ட் கவுன்சலிங் எவ்வளவு போட்டி நிறைந்ததாக இருக்கும்? சாய்ஸ் ஃபில்லிங்கில் என்ன செய்ய வேண்டும்? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

இரண்டாவது ரவுண்ட் கவுன்சலிங்கில் கட் ஆஃப் மதிப்பெண் 163 முதல் 184.50 வரை உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள். இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு இரண்டாவது ரவுண்டில் 14,525 ரேங்க் முதல் 45577 ரேங்க் வரை உள்ள மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.

இந்தநிலையில், பொறியியல் கவுன்சலிங்கின் இரண்டாவது ரவுண்டில் போட்டி எப்படி இருக்கும் என கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.

சென்ற வருடத்தைப்போலவே இந்த வருடமும், ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். இதனால் போட்டி கடுமையானதாக இருக்கும். மாணவர்களுக்கு சாய்ஸ் ஃபில்லிங் செய்வதும் கடினமாக இருக்கும்.

எனவே, நமக்கு விருப்பமான கல்லூரியில் விருப்பமான பாடப்பிரிவை ஒதுக்கீடு பெற, முதலில் நம்முடைய கட் ஆஃப் மதிப்பெண்ணில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு கட் ஆஃப் மதிப்பெண்ணிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம். 
கட் ஆஃப் மதிப்பெண்மாணவர்களின் எண்ணிக்கை
184.5521
184523
183.5542
183562
182.5521
182553
181.5503
181563
180.5522
180564
179.5559
179611
178.5542
178632
177.5613
177615
176.5617
176633
175.5571
175567
174.5639
174614
173.5620
173634
172.5595
172634
171.5639
171619
170.5592
170614
169.5650
169664
168.5619
168621
167.5656
167684
166.5658
166665
165.5645
165642
164.5661
164641
163.5651
163678

இவ்வாறு ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் அதிகமானோர் இருப்பதால் சாய்ஸ் ஃபில்லிங் செய்யும்போது கவனமாக செயல்பட வேண்டும். குறைவான சாய்ஸ் கொடுக்க வேண்டும். அதிக அளவில் சாய்ஸ் கொடுங்கள். கவுன்சலிங் ஆனது முன்னர் போல் நேரடியாக இல்லாமல், ஆன்லைனில் நடைபெறுவதால் உங்கள் கட் ஆஃப் மற்றும் அதற்கு மேல் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை தெரிந்து அதிகமான சாய்ஸ்களை கொடுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு இடம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே கவனமுடன் செயல்படுங்கள்

Saturday, August 27, 2022

August 27, 2022

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது? பொன்முடி அறிவித்தார்

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக. 25ஆம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலந்தாய்வு ஏன் ஒத்திவைக்கப்பட்டது?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக. 25ஆம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் ஒத்திவைக்கப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், தமிழகத்தில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வராமல் பொதுக் கலந்தாய்வை நடத்தும்போது, மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவம், பொறியியல் படிப்புகள் என இரண்டு கலந்தாய்வுகளுக்கும் மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். மேலும், பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவப் படிப்பை தேர்வு செய்யும் போது, பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் உருவாகும்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வர காலதாமதம் ஆனதால், முன்பு பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போனது. இப்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இணையதளம் வழியாக கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்) கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.

நீட் முடிவு எப்போது?

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 497 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் https://neet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, August 20, 2022

August 20, 2022

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.20) தொடங்கி ஆகஸ்ட் 24 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-இல் தொடங்கி அக்டோபர். 23 வரை நடைபெறும்.

சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவு கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறுகின்றன. கிராமப்புற மாணவா்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவா் சோ்க்கை மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

Tuesday, August 02, 2022

August 02, 2022

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர்

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் பேட்டி

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு 2லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பம் பதிவாகி உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 69,079 ேபர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.1 முதல் வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பொறியில் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பொறியியல் படிப்பில் நடப்பாண்டு முதல், புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்த பின்னர் 7 நாட்கள் கல்லூரியில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்படும். இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்று கலந்தாய்வில் அந்த இடங்கள் காண்பிக்கப்படும். அவர்களுக்கு பின்னால் இருக்கும் மாணவர்களுக்கு அந்த இடம் வழங்கப்படும். அதேபோல், கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் இந்த இடம் தனக்கு தேவை எனவும், அடுத்த சுற்றில் கலந்துகொண்டு வேறு இடத்தை தேர்வு செய்ய விரும்புவதாக( Upborad Movement) தெரிவிக்கும் மாணவர்கள் தகவல் உதவி மையங்களில் சென்று அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதனால் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் அதற்கு பின்னர் சேராமல் இருப்பதால் ஏற்படும் காலியிடங்கள் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேற்று 250 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 146 பேர் மட்டுமே வருகை தந்தனர்.

Total Pageviews

Search This Blog