Breaking

Showing posts with label Government exam. Show all posts
Showing posts with label Government exam. Show all posts

Friday, December 22, 2023

December 22, 2023

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் வருகிற 27ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்; அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு



Individual candidates who want to appear for Class 10, 11 and 12 Public Examination can apply online from 27th; Government Exams Movement Notification - 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் வருகிற 27ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்; அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு

“நடைபெறவுள்ள ஏப்ரல் 2024, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்:

பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், வருகிற 27ம் தேதி (புதன் கிழமை) முதல், ஜனவரி 10ம் தேதி வரை (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

தக்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்:

மேற்காண்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதியில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 (மேல்நிலை) / ரூ.500 (10ம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்:

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி, அறிவுரைகள் மற்றும் தேர்வுக்கான அட்டவணை ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

Saturday, February 26, 2022

February 26, 2022

அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி இன்று துவக்கம்

சென்னையில் இயங்கி வரும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடெமியில், யுபிஎஸ்சி நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ,பி.எஸ் போன்ற குடிமைப்பணித் தேர்வுகளுக்கும், டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் 26-02-2022 தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் சேரும் முதல் 100 மாணவர்களுக்கு 70 மாதிரி தேர்வுகள் மற்றும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 5413 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் யுபிஎஸ்சி-ல் 1011 இடங்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ பதவிக்கு 8000க்கும் அதிகமான காலிப்பணியிடங்களும் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படிக்க | தேசிய தொழில் சான்றிதழில் திருத்தம் செய்ய கால அவகாசம்

எங்களது அகாடமியில் சிறந்த வல்லுநர்கள் மூலம் மாணவர்களுக்கு 10 நாட்கள் மட்டும் இலவச பயிற்சி வகுப்புகளும் பின்னர், குறைவான கட்டணத்தில் 500 மணி நேர பயிற்சி வகுப்புகளும், 70 மாதிரி தேர்வுகளும் மாணவர்களுக்கு நடத்தப்படும். பொதுத் தமிழ்/ ஆங்கிலம் மற்றும் பொது அறிவுத் தாள்களுக்கு கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் சிறந்த வல்லுநர்களை கொண்ட தயாரிக்கப்பட்ட தரமான புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கப்படுகிறது. யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வை 2023 ஆம் ஆண்டு எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் ஹரி நாராயணன், ஜவஹர் உரையாற்ற உள்ளனர். கடந்த ஆண்டுகளில் யுபிஎஸ்சி தேர்வில் 500க்கு அதிகமான மாணவர்களும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் 1000க்கும் அதிகமான மாணவர்களும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயின்று தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி வகுப்பில் முன்பதிவு செய்ய https://bit.ly/seminar_registration1 இணைய முகவரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Total Pageviews

Search This Blog