Breaking

Showing posts with label அரசாணை. Show all posts
Showing posts with label அரசாணை. Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

இனி TNPSC மூலம் தேர்வு - மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம்: அரசாணை

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இதுவரை நேரடியாக நியமித்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும்.



உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியில் சேருவோர் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி நீக்கப்பட்டு, இதழியல் படிப்பு படித்திருப்பதும் கட்டாயம் என மாற்றப்பட்டுள்ளது.



மேலும், 2 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது.



உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அவ்வபோது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் செய்யப்படும். அந்தவகையில், நேரடி நியமனம், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வின் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும்.



அதாவது 1:1 என்ற விகிதத்தில் (50% நேரடி நியமனம், 50% பதவி உயர்வு, பணிமாறுதல் நியமனம்) நிரப்ப வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

Friday, August 05, 2022

August 05, 2022

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெறும் மாநில அரசு பணியாளர்கள் / ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கி அரசாணை வெளியீடு



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை குழந்தைகள் நலம் மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறும் மாநில அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதற்காக 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது .

GO NO : 44 , Date : 29.07.2022

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு.: அரசாணை வெளியீடு

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெயிட்டுள்ளது. பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

Thursday, August 04, 2022

August 04, 2022

G.O(Ms) NO.44 அரசு பணியாளர்கள் / ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் விடுப்பு வழங்குதல் சார்ந்து அரசாணை வெளியீடு

G.O(Ms) NO.44 மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெறும் மாநில அரசு பணியாளர்கள் / ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்குதல் சார்ந்து அரசாணை வெளியீடு


CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Saturday, July 30, 2022

July 30, 2022

விடுதி காப்பாளர் ஓய்வுபெற்றால் ஆண்டு இறுதிவரை பணியாற்றலாம்: அரசாணை

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணை: கடந்த 2022ம் ஆண்டு ஜூன் வெளியான அரசு உத்தரவின்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 2022-23ம் ஆண்டின் இறுதி வரையில் தங்கள் பணியை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிற்பட்டோர் நலத்துறையின் ஆணையர் கடந்த 2022 ஜூலை மாதம் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.

அதில் 31.5.2020 வரை பணியில் உள்ளவர்கள் ஓய்வு பெறுவதாக இருந்தால் 59 வயதையும் தாண்டி 60 வயது வரை பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியராக இருந்து கொண்டு விடுதிக் காப்பாளர்களாகவும், ஆசிரியராக இருந்து கொண்டே விடுதியின் பெண் காப்பாளர்களாக இருப்பவர்கள், இடைநிலை, காப்பாளர்கள், இடைநிலை பெண் காப்பாளர்களும் தங்கள் பணியில் இருந்து இடையில் ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டால் அவர்களும் அந்த ஆண்டின் இறுதி வரை பணியாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இதன்படி கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டால் அவர்கள் தங்கள் பணியை அந்த கல்வி ஆண்டின் (2022-23) இறுதி வேலைநாள் வரை பணியாற்றலாம் என்று அரசு ஆணையிடுகிறது.

Wednesday, July 27, 2022

July 27, 2022

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்.: அரசாணை வெளியீடு - PDF

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்.: அரசாணை வெளியீடு
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் , விதி எண் . 110 - ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு – அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குதல் முதற்கட்டமாக செயல்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

CLICK HERE TO DOWNLOAD

Saturday, July 23, 2022

July 23, 2022

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்த நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு - PDF

Total Pageviews

Search This Blog