Education News
April 22, 2024
Showing posts with label chennai university. Show all posts

Monday, April 22, 2024
Tuesday, April 02, 2024
Saturday, February 24, 2024
Saturday, December 09, 2023
chennai university
December 09, 2023
சென்னை பல்கலை. பருவ தேர்வுக்கான புதிய அட்டவணை

கனமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்களில் கடந்த டிச. 3, 4-ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு,கலை அறிவியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில், பருவத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகளின் விவரங்களை சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. அதில், டிச.4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருந்த பல்கலைக்கழக பருவத் தேர்வுகள், டிச.11 முதல் 16-ம்தேதி வரை நடைபெறும். விரிவான தேர்வுக்கால அட்டவணை உள்பட கூடுதல் விவரங்களை www.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, September 29, 2023
chennai university
September 29, 2023
சென்னை பல்கலை.யில் நாளை உடனடி தேர்வு
சென்னை பல்கலை.யில் நாளை உடனடி தேர்வு
சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான உடனடித் தேர்வுகள் சனிக்கிழமை 3 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரலில் நடத்திய இளங்கலை 5, 6-ஆவது பருவத் தேர்வுகள், முதுநிலை, தொழில்சார் படிப்பு பருவத் தேர்வுகள் ஆகியவற்றின் மறு மதிப்பீடு முடிவுகள் இணையதளத்தில் கடந்த புதன்கி ழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவர்களுக்கான உடனடித் தேர்வுகள் சென்னை அடையாறு பேட்ரிஷியன் கலை அறிவியல் கல் லூரி (பிஎஸ்சி, பிசிஏ), குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி (பி.காம்., பிபிஏ),ராஜாஅண்ணாமலை புரம் டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி (முதுநிலை, தொழில்சார் படிப்புகள், பிஏ, பிஎஸ் டபிள்யு உள்ளிட்டவை) ஆகிய மையங்களில்செப்.30-ஆம் தேதி காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பல்கலைக்க ழக இணையதளத்தில் (www.unom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பதிவாளர் வி.ஏழுமலை வெளி யிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 27, 2023
Tamil Nadu Governor
September 27, 2023
துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைக்க, உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி.
உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் இல்லை - ஆளுநர் அறிக்கை
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் அனுமதியின்றி அமைக்க உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை; துணைவேந்தர் தேடுதல் குழு தமிழக அரசு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது; தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழை திரும்பப் பெற வேண்டும் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தேர்வு குழு அமைக்க ஆளுநர் எதிர்ப்பு; தனது ஒப்புதலின்றி தேர்வு குழு அமைக்க அதிகாரம் இல்லை என குற்றச்சாட்டு.
ஆளுநரின் ஒப்புதலின்றி துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைக்க, உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்பாக வெளியிட்ட அரசிதழை உடனடியாக திரும்பப்பெற உயர்கல்வித்துறை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு.
துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க ஆளுநர் ரவி நியமித்த தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதியை நீக்கியிருந்தது தமிழ்நாடு அரசு. Press Release No: 63
Date:26.09.2023
RAJ BHAVAN, TAMIL NADU - PRESS RELEASE
The Hon'ble Governor, as the Chancellor of University of Madras has issued a Notification dated 06.09.2023 notifying the constitution of the Search-cum-Selection Committee for identification of candidate for appointment of the Vice Chancellor of the University and the same was also published in the website of Raj Bhavan, as well as made known to the public by a press release. The information of Notification was also published in the Tamil daily viz. 'Dhina Thanthi' dated 12.09.2023 and English daily viz. 'Times of India' dated 13.09.2023.
By an act of impropriety, the Principal Secretary to Government, Higher Education Department, has issued a further notification of a Search-cum-Selection Committee by excluding the nominee of the UGC Chairman and the same is published in the Government Gazette on 13.09.2023, without adhering to the decision of the Hon'ble Supreme Court of India and in violation of the same. The said notification published on 13.09.2023 is void ab initio, being contrary to the UGC Regulations and order of the Hon'ble Supreme Court. The said publication in the Government gazette is without any such authority from the Chancellor, being the head of the University and that the Principal Secretary to Government, Higher Education Department, has no role in the affairs of the University and hence the Chancellor has called upon to withdraw the said Notification published in the Tamil Nadu Government Gazette Extraordinary.
Monday, August 21, 2023
Vice Chancellors
August 21, 2023
துணைவேந்தர் பணி ஒய்வு: சென்னை பல்கலை.யை நிர்வகிக்க 4 பேர் குழு நியமனம்!
துணைவேந்தர் கவுரி பணி ஒய்வு: சென்னை பல்கலை.யை நிர்வகிக்க 4 பேர் குழு நியமனம்
சென்னை பல்கலைக்கழக நிர்வாக பணிகளை கண்காணிக்க உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி எஸ்.கவுரி நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததையடுத்து அவர், நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து புதிய துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பான தேடல் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தலின்படி தமிழக அரசு விரைவில் அறிவிக்கும். அதன்பின் தேடல் குழு பரிந்துரைக்கும் நபர்களில் தகுதியான ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்வார். இந்தப் பணிகள் முடியும்வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் உயர்கல்வித் துறை செயலர் ஒருங்கிணைப்பாளராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர், சென்னை ஐஐடி பேராசிரியர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்புக் குழுவுக்கு ஒப்புதல் பெறுவதற்கான ஆட்சிமன்ற குழுக் கூட்டம் சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் பெறப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் 4 பேர் கொண்ட குழுவுக்கு பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Thursday, August 10, 2023
chennai university
August 10, 2023
சென்னை அண்ணா பல்கலை.க்கு NAAC அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வுக் குழு ஆய்வு..!!
சென்னை அண்ணா பல்கலை.க்கு என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வுக் குழு நாளை ஆய்வு..!!
சென்னை அண்ணா பல்கலை.க்கு என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வுக் குழு நாளை ஆய்வு செய்ய உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அளித்த சுய மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் என்.ஏ.ஏ.சி. அங்கீகார குழு நாளை ஆய்வு மேற்கொள்கிறது. என்.ஏ.ஏ.சி. அமைப்பின் சார்பில் பல்கலைக்கழகங்களில் இருந்து நியமிக்கப்பட்ட 8 பேராசிரியர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் 2019ம் ஆண்டு முதல் காலாவதியானது.கடந்த 2019-க்கு பின் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் என்.ஏ.ஏ.சி. சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் பெற பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் காலாவதியானதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், அங்கீகார மதிப்பீட்டிற்காக நாளை என்.ஏ.ஏ.சி. குழு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Wednesday, August 09, 2023
chennai university
August 09, 2023
சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி மீது முறைகேடு புகார்: விசாரணைக்கு ஆளுநர் அனுமதி?
சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி மீது முறைகேடு புகார்: விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்கவில்லை
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எஸ்.கவுரி, 2020 ஆகஸ்ட் மாதம்நியமனம் செய்யப்பட்டார். இவர் மீது உயர்கல்வித் துறைக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் அனுப்பிய புகார் கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தியில் மல்டிமீடியா ஆராய்ச்சி மைய இயக்குநராக கவுரி இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிஏஜி அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. அவர் மீதானகுற்றச்சாட்டுகள் தீர்க்கப்படும்வரை அவரைவிடுப்பில் அனுப்ப வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர். இதுதவிர சென்னை பல்கலைக். துணைவேந்தராக பதவியேற்ற பிறகு நிதிப்பிரிவு போன்ற துணை அமைப்புகளின் ஆலோசனையை பெறாமல் பல்வேறு முக்கிய முடிவுகளை கவுரி எடுத்துள்ளார். சிண்டிகேட் ஒப்புதல் பெறாமல், டெண்டர் கோராமல் தனது இல்லத்தை ரூ.30 லட்சம் செலவில் பழுதுபார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கவுரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து பல்கலை. வேந்தர் என்ற முறையில் விசாரணைக்கு ஆளுநரிடம் அனுமதி கேட்டு அவரது தனி செயலருக்கு கடந்த மார்ச் 9-ல் அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஊழல் தடுப்புச் சட்டம் (திருத்தம்) 2018 பிரிவு 17ஏ(1)-ன்கீழ் சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்துமுதல்கட்ட விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், 5 மாதங்களாகியும் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து இதுவரை மாநில அரசுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Tuesday, August 08, 2023
chennai university
August 08, 2023
தகுதி இருந்தும் தங்கப்பதக்கம் வழங்கவில்லை: மாணவ - மாணவிகள் குற்றச்சாட்டு!
சென்னை பல்கலைக்கழக 165-வது பட்டமளிப்பு விழா; தகுதி இருந்தும் தங்கப்பதக்கம் வழங்கவில்லை: மாணவ - மாணவிகள் குற்றச்சாட்டு
சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது, தங்களுக்கு தகுதிஇருந்து தங்கப்பதக்கம் வழங்கப்படவில்லை என மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டினர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு சிறியதாக இருந்ததால், அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 762 மாணவ-மாணவிகளையும் விழா அரங்கில் அமர வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா அரங்கில் அமர வைக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பட்டமளிப்பு விழா அரங்கத்தின் அருகே காக்க வைக்கப்பட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
நிதி பற்றாக்குறை காரணமா? - அங்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், மாணவர்களும், அவர்களதுபெற்றோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, 105மாணவ-மாணவிகளுக்கு மட்டும்தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கிவிட்டு குடியரசு தலைவர் முர்மு புறப்பட்டு சென்றார். அதன்பிறகு, மீதமுள்ள மாணவர்களுக்கு துணைவேந்தர் கவுரி பட்டங்களை வழங்கினார். அப்போது தங்கப்பதக்கம் பெற தகுதிஇருந்தும், தங்கப்பதக்கம் வழங்கப்படவில்லை எனவும், இதற்கு நிதிபற்றாக்குறைதான் காரணம் எனவும் ஒருசில மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டினர். மேலும், குடியரசு தலைவர் கையால் பட்டம் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தும், சிறிய அரங்கில் விழா நடத்தியதால், தங்களால்,பட்டம் பெற முடியாமல் போய்விட்டது எனவும் மாணவர்கள் தங்களது கவலையை தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவ, மாணவிகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி கூறுகையில், ``தங்கப்பதக்கம் வழங்க நிதி பற்றாக்குறை காரணமாக இருப்பதாக வெளியான தகவல் தவறானது. தகுதியான நபர்களுக்குதான் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒருவேளை, தகுதி இருந்தும் யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் பல்கலைக்கழகத்தை தொடர்புகொண்டால், பதக்கம் வழங்கஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிய அரங்கத்தில் இந்த விழா நடத்தப்பட்டதால் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களால் பட்டம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது'' என்றார்.
சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற வந்திருக்கும் மாணவர்கள் முறையாக வழிநடத்தப்படாதது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Thursday, July 27, 2023
chennai university
July 27, 2023
சென்னை பல்கலை. சுற்றறிக்கை - கல்வியாளர்கள் எதிர்ப்பு

அரசியல் சார்பு அமைப்புகளில் இருந்தால் நீக்கப்படுவீர்கள் என்ற சென்னை பல்கலை.யின் முதுநிலை சமூகவியல் துறையின் சுற்றறிக்கை சர்ச்சையாகியுள்ளது.
பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் 73 துறைகள், 45 ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதுதவிர 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 19 இளநிலை, 21 முதுநிலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
ஒப்புதல் படிவம்:
இந்நிலையில் முதுநிலை சமூகவியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அத்துறை சார்பில் சமீபத்தில் ஒப்புதல் படிவம் ஒன்று வழங்கப்பட்டது. அதில், ‘நான் அரசியல் கட்சிகள் சார்ந்த எந்தவொரு அமைப்பு மற்றும் சங்கங்களில் உறுப்பினராக இல்லை.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு எதிராக எந்த போராட்டங்களிலும் பங்கேற்கமாட்டேன். முன் அனுமதியின்றி நீண்டகால விடுப்பு, வகுப்புக்கு வராமல் இருக்கமாட்டேன்’ ஆகிய விதிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளித்து கையொப்பமிட வேண்டும். மேலும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் இந்த விதிகளை மீறினால் துறைத்தலைவர் உடனே படிப்பில் இருந்து நீக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.
கல்வியாளர்கள் எதிர்ப்பு: இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
அதில், 'இது மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை தடுக்கும் எந்தவொரு அறிவிப்பையும் மாணவர்களிடம் இருந்து பெறக்கூடாது. எனவே, இந்த ஒப்புதல் படிவத்தை சென்னை பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday, June 21, 2023
Saturday, April 15, 2023
University of Chennai
April 15, 2023
சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் - Apply for Masters and Diploma courses in University of Chennai
ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர வரும் ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான தகவல்களை அறிய இந்த இணையத்திலேயே அனைத்து தகவல்களும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Saturday, January 21, 2023
Result Notification
January 21, 2023
சென்னை பல்கலை ‛ ரிசல்ட் அறிவிப்பு
சென்னை பல்கலை ‛ ரிசல்ட் அறிவிப்பு Chennai University ‛ Result Notification
சென்னை:முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என சென்னை பல்கலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பல்கலையின் பதிவாளர் இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் நடத்தப்படும் முதுநிலை பட்ட படிப்புகள், எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - ஐ.டி., ஆகியவற்றுக்கான ஜூன் மாத தேர்வு முடிவுகள், நாளை மறுதினம்வெளியிடப்படும்.
தேர்வர்கள், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், மாலை, 6:00 மணிக்கு மேல் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, October 15, 2022
exam news
October 15, 2022
அரியா் மாணவா்களுக்கு தோ்வெழுத வாய்ப்பு:சென்னைப் பல்கலை

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் 2015-2016-ஆம் கல்வியாண்டில் சோ்ந்து அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கு வரும் நவம்பா் மாத பருவத் தோ்வு, 2023 ஏப்ரல் மாத பருவத் தோ்வுகள் எழுத இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2019–2020-ஆம் கல்வியாண்டில் முதுநிலை படிப்பில் சோ்ந்து அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கும் வரும் நவம்பா் மாத பருவத் தோ்வு, 2023 ஏப்ரல் மாத பருவத் தோ்வுகள் எழுத இருவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
மாணவா்கள் தோ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Thursday, September 01, 2022
Universities
September 01, 2022
சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு - செப்.24-இல் உடனடித் தேர்வு
சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
செப்.24-இல் உடனடித் தேர்வு
சென்னை, ஆக. 31: கடந்த ஏப்ரல் மாதம் நடை பெற்ற பருவத் தேர்வு முடிவுகள் வியாழக்கி ழமை வெளியிடப்படவுள்ள நிலையில், உடன டித்தேர்வு செப்.24-ஆம் தேதி நடைபெறவுள்ள தாகசென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள் ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இளநிலை, முது நிலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்.1-ஆம் தேதி வியாழக் கிழமை www.unom.ac.in என்ற இணையத எத்தில் வெளியிடப்படும். இதையடுத்து மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாண வர்கள் செப். 5-ஆம் தேதி முதல் செப்.14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவ ரியில் கையொப்பமிட்டு 300 ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆறாவது பருவத்தில் ஒரு தாள் மற்றும் அரி யர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும்.
முதுநிலை மாணவர்கள் நான்காவது பருவத் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்க ளுக்கும் உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும். இவர்கள் தாங் கள் பயின்று கல்லூரி மூலமாக செப். 5 முதல் செப். 14-ஆம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் இளநிலை மாணவர்கள் ரூ.300, முதுநிலை மாணவர்கள் ரூ.350, எம்.பி.ஏ.,எம்.எல்.சட்டப்படிப்புமாண வர்கள் ரூ.600- உடனடி தேர்வுக்கான கட்ட ணமாக செலுத்த வேண்டும். சிறப்பு தேர்வு செப். 24- ஆம் தேதி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 29, 2022
Thursday, June 02, 2022
Free education for students from families with an annual income of less than Rs 3 lakh
June 02, 2022
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி
பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம்
*பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ₨3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்
*தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் www.unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
*சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2022-2023 கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம்
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

Saturday, April 02, 2022
Wednesday, March 23, 2022
Universities
March 23, 2022
இளநிலை படிப்புகளில் திருநங்கைகளுக்கு இலவச சீட் : சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு
இளநிலை படிப்புகளில் திருநங்கைகளுக்கு இலவச சீட் வழங்கப்படும் என சென்னை பல்கலைகழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். திருநங்கைகள் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். உயர்கல்வி பயின்று அதன் காரணமாகவே திருநங்கைகளுக்கு சில இடங்களில் பணி பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்தநிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திருநங்கைகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக பேருந்தில் இலவச பயணம், காவல்துறையில் திருநங்கைகளுக்கு உயர் பதவி, மேலும் பல்வேறு வேலை வாய்ப்புகளில் தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய வகையிலும், திருநங்கைகள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு சென்னை பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் இலவச சீட் வழங்கப்படும் என துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும் விதி 110-ன்கீழ் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த அறிக்கை - த. நா.ச.பே. எண்:14 நாள் : 23.03.2022
இது குறித்து அவர் கூறும்போது, ”சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 131 கல்லூரிகளிலும் தலா ஒரு இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்படும். இந்த நடைமுறை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும்” என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு இலவசமாக வழங்குவதற்கு தயார் என ஏற்கனவே துணைவேந்தர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.