Breaking

Showing posts with label Online Education. Show all posts
Showing posts with label Online Education. Show all posts

Wednesday, June 01, 2022

June 01, 2022

500 இலவச ஆன்லைன் படிப்புகள்



இன்ஜினியரிங், தொழில்நுட்பம், கணிதம், கலை, அறிவியல், சட்டம், மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில், தங்களது திறன்களை மெருகேற்றிக் கொள்ள விரும்புபவர்களுக்காக, ’நேஷனல் புரோகிராம் ஆன் டெக்னலாஜி என்கேன்ஸ்ட் லேர்னிங்’- என்.பி.டி.இ.எல்., வாயிலாக இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. துறைகள்ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், ஆர்கிடெக்சர் அண்ட் பிளானிங், பயோடெக்னாலஜி அண்ட் பயோஇன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிஸ்டரி, சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், டிசைன் இன்ஜினியரிங், எலட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ், லா, மேனேஜ்மெண்ட், எக்னாமிக்ஸ், மேத்மெடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், ஓசன் இன்ஜினியரிங், பிசிக்ஸ், டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு துறை பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

படிப்புகள்

ஏர் கிராப்ட ஸ்டெபிலிட்டி அண்ட் கன்ட்ரோல், ஹவுசிங் பாலிசி அண்ட பிளானிங், அர்பன் பிளானிங், விசுவல் கம்யூனிகேஷன் விசைன் பார் டிஜிட்டல் மீடியா, பயோமெடிக்கல் நானோடெக்னாலஜி, இன்டஸ்டிரியல் பயோடெக்னாலஜி, செல் கல்சுரல் டெக்னாலஜி, ரிவர் இன்ஜினியரிங், அனலிட்டிக்கல் கெமிஸ்டரி, கெமிக்கல் அண்ட் பயோலஜிக்கல், புராஜெக்ட் பிளானிங் அண்ட் கன்ட்ரோல், டிசைன் அண்ட் ஸ்டீல் ஸ்டக்சரல், கிளவுட் கம்ப்யூட்டிங், புரோகிராமிங் இன் சி++, ஜாவா, கிளவுட் கம்ப்யூட்டிங், இண்டர்நெட் ஆப் திங்ஸ், சாப்ட்வேர் டெஸ்டிங், சோசியல் நெட்வோர்க்ஸ், கன்ட்ரோல் இன்ஜினியரிங், டீப் லேர்னிங், டேட்டா சயின்ஸ் பார் இன்ஜினியர்ஸ், பிக் டேட்டா கம்ப்யூட்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், டிஜிட்டல் இமேஜ் புராசசிங், சாப்ட் ஸ்கில், ரோபாட்டிக்ஸ் உட்பட 500க்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகள், ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளன். கல்வி நிறுவனங்கள்

சென்னை, டெல்லி, மும்பை, கவுகாத்தி, ஐதராபாத், கான்பூர், கரக்பூர், ரூர்க்கி ஐ.ஐ.டி.,கள், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., சி.எம்.ஐ., என்.எல்.எஸ்.ஐ.யு., ஐ.எம்.எஸ்.சி., உட்பட நாட்டின் பல்வேறு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஆகியவை இணைந்து ஆன்லைன் வாயிலாக இந்த படிப்புகளை வழங்குகிறது.

மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், நிபுணர்கள் வழங்கும் விரிவுரை வகுப்புகளை, என்.பி.டி.எல்., இணையதளம் வழியே பங்கேற்று படித்து பயன்பெறலாம்.

படிப்பு காலம்: 4 வாரங்கள் முதல் 12 வாரங்கள் வரை

சான்றிதழ்இந்த படிப்புகளை யார் வேண்டுமானாலும் இலவச கற்கலாம்.

சான்றிதழ் பெற விரும்புவர்கள் குறைந்த தேர்வு கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

விபரங்களுக்கு: www.nptel.ac.in

Monday, February 14, 2022

February 14, 2022

ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு; உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு; உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

'பிளஸ் 2 தேர்வுகளை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்' எனக் கோரி, 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.கொரோனா இரண்டாவது அலை பரவல் காரண மாக, கடந்த ஆண்டு எந்த மாநிலத்திலும் ஜூன், ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதையும் படிக்க | அரசு நடுநிலைப்பள்ளி முன்பு பெற்றோர், மாணவர்கள் தர்ணா

பல மாநிலங்களில் செப்டம்பரிலும், சில மாநிலங்களில் அக்டோபரிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மூன்றாவது அலை பரவல் காரணமாக டிசம்பர் இறுதியிலிருந்து கடந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டன.

இந்த மாத துவக்கத்தில் தான் பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பிளஸ் ௨ பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன; சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு விட்டன.இந்த தேர்வை மாணவ - மாணவியர் பள்ளிக்கு நேரிடையாக வந்து எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட ௧௫ மாநிலங்களைச் சேர்ந்த, மாநில பாடத் திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ., வாரியங்களில் படிக்கும் மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவலால் பள்ளிகள் பல மாதங்கள் திறக்கப்படவில்லை. திறந்த போதும் தொற்று பயத்தால், மாணவர்கள்பலர் பள்ளிக்கு வரவில்லை.இந்நிலையில் பிளஸ் ௨ பொதுத்தேர்வை மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து எழுத வேண்டும் என அறிவித்திருப்பது, அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவத் துவங்கிஉள்ளது.

இதையும் படிக்க | நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு நேரிடையாக வந்து மாணவர்கள் தேர்வு எழுதினால் தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுக்கும். அதனால் பிளஸ் ௨ பொதுத்தேர்வை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 09, 2022

February 09, 2022

1-5ம் வகுப்பு டீச்சர்களுக்கு ஆன்லைனில் டெஸ்ட்!

1-5ம் வகுப்பு டீச்சர்களுக்கு ஆன்லைனில் டெஸ்ட்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு - அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1-5 ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது.

இதையும் படிக்க | 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான ஆங்கில திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு - தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு

எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் ஆன்லைன் மூலம் பிப்.9 -மார்ச் 25 வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரத்து 275 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

Thursday, January 20, 2022

January 20, 2022

கல்வி தொலைக்காட்சி, செயலி மூலமாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் பணி: தொடர்ந்து வழங்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் வழியாக 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ம் வகுப்புமாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கேற்ப, அந்தந்த மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக 10. 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலமாக கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகதளங்கள் வழியாக வாரம்தோறும் பாட வாரியாக குறுந்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். குறுந்தேர்வில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் பெறும் பகுதிகளை கண்டறிந்து ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sunday, January 16, 2022

January 16, 2022

கல்வித்துறையின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளிவைப்பு - ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியன திட்டமிட்டபடி நடைபெறும்.

முதன்மைக் கல்வி அலுவலர், சிவகங்கை
January 16, 2022

பொங்கல் விடுமுறை முடிந்து ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

ஜன.31 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் விடுமுறை முடிந்து ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் , ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன . 19 - முதல் தொடரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog