Breaking

Showing posts with label When do classes start for engineering 2nd year students. Show all posts
Showing posts with label When do classes start for engineering 2nd year students. Show all posts

Thursday, August 18, 2022

August 18, 2022

பொறியியல் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும்?

பி.இ. இரண்டாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 22-இல் தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் வரும் ஆக.22-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இது குறித்து அந்தப் பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பொறியியல் கல்லூரிகளில் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு ஆக.22 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். இதில் பி.இ, பி.டெக், பி.ஆா்க் மற்றும் எம்பிஏ ஆகிய பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவா்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன.

மேலும், கடைசி வேலை நாள் டிசம்பா் 8-ஆம் தேதியாகும். இவா்களுக்கான பருவத் தோ்வுகள் டிசம்பா் 21அன்று தொடங்குகிறது. அதேநேரம், 2023-ஆம் ஆண்டு ஜனவரி 23-இல் மீண்டும் அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் தொடங்கும். மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் வரும் பருவத் தோ்வு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog