Breaking

Showing posts with label NCERT. Show all posts
Showing posts with label NCERT. Show all posts

Saturday, June 27, 2026

Friday, December 26, 2025

Tuesday, April 29, 2025

Wednesday, March 12, 2025

Monday, February 24, 2025

Wednesday, June 19, 2024

Tuesday, June 18, 2024

Thursday, May 02, 2024

Monday, April 22, 2024

Wednesday, November 22, 2023

November 22, 2023

பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் சேர்க்க NCERT குழு பரிந்துரை - NCERT recommends Ramayana Mahabharata in syllabus



பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் சேர்க்க NCERT குழு பரிந்துரை NCERT Committee recommends inclusion of Ramayana, Mahabharata in the syllabus

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் குழுவின் தலைவர் சி.ஐ. ஐசக் கூறியதாவது:

அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை அனைத்து வகுப்பறைகளின் சுவர்களிலும் உள்ளூர் மொழியில் எழுதி வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், பண்டைய கால வரலாறு பாடத்திட்டத்தின் கீழ், ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை ஆண்ட அனைத்து பேரரசுகள் குறித்த தகவல்களும் பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஜாம்பவான்களின் போராட்ட வாழ்க்கை, அவர்களது சாதனைகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு ஐசக் தெரிவித்தார்.

Wednesday, October 25, 2023

October 25, 2023

இனி பாடபுத்தகத்தில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் Bharat instead of India in textbooks



இனி பாடபுத்தகத்தில் இந்தியாவிற்கு பதிலாக பாரத்

என்சிஇஆர்டி ன் ஆலோசனை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாரத் என்று மாற்றுவதற்கு என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது.இனி என்சிஇஆர்டி யின் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் பாரத் என்ற வார்த்தையே இருக்கும். இந்தியாவுக்கு பதில் பாரத் - NCERT பரிந்துரை!

சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்களில் 'இந்தியா' என்ற வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' என மாற்ற என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை - கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்!

ஏற்கனவே ஜி20 மாநாடு அழைப்பிதழிலும், பிரதமர் மோடியின் மேஜையிலும் | இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டிருந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது!

பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன. அடுத்த கல்வியாண்டில் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யவும் இந்த கவுன்சில் பல்வேறு நிபுணர்களை கொண்டு குழுக்களை அமைத்துள்ளது.

இந்த நிலையில், சமூக அறிவியல் பாடத்திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, பாடப்புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என அச்சடிக்க பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரிந்துரையை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில், இனி அச்சடிக்கப்படும் NCERT-ன் பாடப்புத்தகங்கள் அனைத்திலும் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயரே இடம்பெறலாம் என்று யூகிக்கப்படுகிறது.

இதே போன்று, இந்திய வரலாறு பாடப்புத்தகத்தில் பண்டைய வரலாறு என்ற தலைப்புக்கு பதிலாக, கிளாசிக்கல் வரலாறு என்ற பெயர் மாற்றவும், இந்திய அறிவு அமைப்பை பிரதானப்படுத்தவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Saturday, September 02, 2023

September 02, 2023

NCERTக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து மத்திய மந்திரி அறிவிப்பு

என்சிஇஆர்டி-க்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லியில் இன்று (செப். 1) நடைபெற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி-யின் 63-வது நிறுவன தின விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், என்சிஇஆர்டி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆராய்ச்சி, பள்ளிக் கல்வி, ஆசிரியர் பயிற்சி உள்ளிட்டவற்றில் என்சிஇஆர்டி ஒரு வலுவான பங்களிப்பை வழங்கியுள்ளது என்றார். என்சிஇஆர்டி ஒரு நிகர்நிலை ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாறுவதன் மூலம் உலகளாவிய ஒத்துழைப்புகள் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

என்சிஇஆர்டி உருவாக்கிய 3 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் பொருளான ஜதுய் பிதாரா, என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி நாட்டின் 10 கோடி குழந்தைகளுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்தார்.

தாய்மொழியில் கல்வியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். என்சிஇஆர்டி-யின் 7 மண்டல மையங்களிலும் மெய்நிகர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.


4-வது தொழிற்புரட்சிக்கு நாட்டின் குழந்தைகள் தயாராக வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் கரோனா தொற்று மேலாண்மை, சந்திரயான்-3 போன்ற தலைப்புகளில் சிறிய கையேடுகளை உருவாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். புதிய தலைமுறையினருக்கு சமீபத்திய முன்னேற்றங்கள், இந்திய மதிப்புகள் மற்றும் நெறிமுறைகள் கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஆலோசனைகளுக்கு ஏற்ப கற்றல் உபகரணங்களை உருவாக்குவதில் என்சிஇஆர்டி மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், என்சிஇஆர்டி-யின் பல்வேறு முக்கிய முயற்சிகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.

Thursday, June 01, 2023

Saturday, September 03, 2022

September 03, 2022

பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை "துாய்மை நிகழ்வுகள்" - 2022. நிகழ்ச்சி நிரல் விவரம் (செப்டம்பர் 1 முதல் 15 வரை)

பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை "துாய்மை நிகழ்வுகள்" - 2022. நிகழ்ச்சி நிரல் விவரம் (செப்டம்பர் 1 முதல் 15 வரை)

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, May 17, 2022

May 17, 2022

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி

Elementary school teachers working in government schools have been ordered to provide one week of counting and writing training. In this regard, a circular has been sent to the Primary Education Officers on behalf of SCERT, the State Educational Research and Training Institute, the Curriculum Preparation Division of the Department of School Education:

Counting and writing training classes for the coming academic year have been arranged for government school teachers working in primary and secondary schools. As a first step, six days of training classes will be conducted in Madurai from the 23rd to the 28th for the lecturers and teachers who will act as the primary facilitators.

After the primary counselors have completed their training, training classes should be conducted for other teachers through the primary counselors as soon as the schools reopen. NCERT சார்பில் ஒரு வாரம் பயிற்சி

அரசு பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு வாரம் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையின் பாட திட்ட தயாரிப்பு பிரிவான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, முதன்மை கருத்தாளர்களாக செயல்படும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும், 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மதுரையில் ஆறு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியை முடித்த பின், பள்ளிகள் திறந்ததும், மற்ற ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர்கள் வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tuesday, January 18, 2022

January 18, 2022

2021-ம் ஆண்டுக்கான கலா உத்சவ் போட்டி முடிவுகளை வெளியிட்டது NCERT - தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மாணவர்கள் வெற்றி

மத்திய அரசின் NCERT நடத்தும் கலா உத்சவ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மாணவர்கள் வெற்றி

2021-ம் ஆண்டுக்கான கலா உத்சவ் போட்டி முடிவுகளை வெளியிட்டது NCERT

Saturday, September 25, 2021

September 25, 2021

உயா்கல்வி வரை உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தோ்வு அக்.24-இல் நடைபெறும் - NCERT அறிவிப்பு

உயா்கல்வி வரை உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தோ்வுக்கான 2-ஆவது கட்டத் தோ்வு நாடு முழுவதும் அக்.24-ஆம் தேதி நடைபெறும் என்று என்சிஇஆா்டி தெரிவித்துள்ளது.


அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு (என்டிஎஸ்இ) நடத்தப்படுகிறது. மாநில, தேசியளவில் என 2 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தோ்வில் வெற்றி பெறுபவா்களுக்கு உயா்கல்வி (பிஎச்டி) முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.


குறிப்பாகத் தோ்வில் வெற்றி பெறுவோருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும்போது மாதந்தோறும் ரூ.1,250 தொகையும், உயா்கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு மாதம் ரூ.2,000 தொகையும் வழங்கப்படும். யுஜிசி விதிமுறைகளின்படி பிஎச்டி மாணவா்களுக்குத் தேவையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சாா்பில் இந்தத் தோ்வு (என்டிஎஸ்இ) நடத்தப்படுகிறது. இந்தநிலையில் இரண்டாவது கட்ட தேசிய திறனாய்வுத் தோ்வு, அக்டோபா் 24-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 13-ஆம் தேதி இந்தத் தோ்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அக்.24-ஆம் தேதி நாடு முழுவதும் தோ்வு நடைபெறுகிறது. இதில் இரண்டு தோ்வுகள் தலா 100 மதிப்பெண்களுக்கு இரண்டு மணிநேரம் நடைபெறும்.


முதல்கட்டத் தோ்வில் தோ்ச்சி அடைந்தவா்கள் மட்டுமே இந்தத் தோ்வை எழுத முடியும். அக்டோபா் 8-ஆம் தேதியன்று தோ்வுக்கான அனுமதிச் சீட்டை மாணவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்சிஇஆா்டி தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் மூலம் முதல்கட்ட தேசிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 27, 2021

July 27, 2021

கல்வி அமைச்சகம் (பள்ளி கல்வி & எழுத்தறிவு துறை) - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ‘கவுன்சில்' (NCERT), புதுடெல்லியில் செயலாளர் பதவிக்கான விளம்பரம்

இந்திய அரசு கல்வி அமைச்சகம் (பள்ளி கல்வி & எழுத்தறிவு துறை)
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ‘கவுன்சில்' (NCERT), புதுடெல்லியில் செயலாளர் பதவிக்கான விளம்பரம்

கிரேடு சம்பளம் ரூ.8700/- உடன் பேமேட்ரிக்ஸ் சம்பள நிலை-13 (ரூ.1,18,500-2,14,100) (முன்னர் மாற்றியமைக்கப்பட்ட சம்பள கட்டமைப்பு ரூ.37,400-67,000 (PB-4)-ல் NCERT, செயலாளர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி நியமனம் ஆனது டெபுடேசன் அடிப்படையில் பணியிட மாற்றம் மூலம் அல்லது ஐந்து வருட காலத்திற்கு குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் அல்லது அபேட்சகர்களின் 60 வயது வரை அல்லது அவன்/அவளது தாய் நிறுவனத்தில் அவன்/ அவளது வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை, இதில் எது முந்தியதோ அந்த காலத்திற்கு இருக்கும். தேர்ந்தெடுத்தல் நடைமுறையானது தேர்வு கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும்.

தகுதிகூறு மற்றும் இதர விபரங்களுக்கு 31 ஜூலை 2021-ந் தேதியிட்ட எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் உள்ள எங்களது விளம்பரத்தை பார்க்கவும் மற்றும் NCERT இணையதளம் www.ncert.nic.in-ஐ பார்க்கவும். இணைத்துள்ள மாதிரி படிவத்தில் முறையாக தயாரிக்கப்பட்டு A4 அளவு பேப்பரில் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் திரு.T.S.ரவ்தலா, இயக்குனர், கல்வி அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, அறை எண் 503-D, சாஸ்திரி பவன், புதுடெல்லி-110001 அவர்களுக்கு உரிய முறை மூலம் எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வந்து சேர வேண்டும்.

Sunday, June 06, 2021

June 06, 2021

மின்-புத்தகங்கள் மற்றும் இதர மின்-வளங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெற இ-பாடசாலாவின் வாயிலாக டிஜிட்டல் கற்றல் முறைக்கு மாறுங்கள்!

டிஜிட்டல் தளமான இ-பாடசாலாவின் மூலம் என்சிஇஆர்டி மின்-புத்தகங்கள் மற்றும் இதர மின்-வளங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அணுகலாம்.
இ-பாடசாலாவின் வாயிலாக டிஜிட்டல் கற்றல் முறைக்கு மாறுங்கள்!
https://www.epathshala.nic.in

Sunday, May 16, 2021

Total Pageviews

Search This Blog