Breaking

Showing posts with label 11th Practical Exam Model Question Paper. Show all posts
Showing posts with label 11th Practical Exam Model Question Paper. Show all posts

Tuesday, February 25, 2025

Wednesday, March 29, 2023

March 29, 2023

பிளஸ் 1 வேதியியல் தேர்வில் பிழையான கேள்வி - மாணவர்கள் குழப்பம்!



பிளஸ் 1 வேதியியல் தேர்வில் பிழையான கேள்வி - மாணவர்கள் குழப்பம்! - Wrong Question in Plus 1 Chemistry Exam - Students Confused!

பிளஸ் 1 வேதியியல் தேர்வில் இரண்டு மதிப்பெண் வினாவில் வார்த்தை பிழை இடம் பெற்றதால் மாணவர்கள் குழப்பம்அடைந்தனர்.

'ஐசோடோப்புகள் என்றால் என்ன' கேள்வியில் 'ஐசோடோப்பு' என்பதற்கு அருகில் 'மாற்றியங்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தன. ஐசோடோப்புகள் என்பது மாற்றியங்கள் கிடையாது. மாற்றியங்கள் என்பது 'ஐசோமெரிசம்' என அழைக்கப்படும்.

பிளஸ் 1 பாட புத்தகத்தில் ஐசோடோப்புகள் குறித்த பாடம் நான்காவதாகவும் மாற்றியங்கள் குறித்த பாடம் 11வதாகவும் உள்ளது. தேர்வில் இரண்டு பாடங்களின் வார்த்தைகளையும் கலந்து கேள்வி கேட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஏற்கனவே பிளஸ் 1 பாட புத்தகத்தில் ஐசோடோப்பு குறித்த பயிற்சி வினாவில் மாற்றியம் என பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பிழையை திருத்தாமல் விட்டதால் பொது தேர்விலும் அதே வார்த்தை பிழையுடன் கேள்வி இடம் பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Saturday, February 11, 2023

Total Pageviews

Search This Blog