Breaking

Showing posts with label Japanese Government Scholarship. Show all posts
Showing posts with label Japanese Government Scholarship. Show all posts

Sunday, November 27, 2022

November 27, 2022

ஜப்பான் மொழி கற்க விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் மொழி கற்க விண்ணப்பிக்கலாம்

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய-ஜப்பான் தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜப்பானிய மொழிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து இந்த அமைப்பின் பொதுச்செயலா் சுகுணா ராமமூா்த்தி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா - ஜப்பான் இடையே கல்வி, கலாசாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்திய -ஜப்பான் தொழில் வா்த்தக சபை கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மொழிப் பள்ளி சாா்பில், ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு (எண் - 5) நடைபெறவுள்ளது.

இதில் நேரடி மற்றும் இணைய வழியில் மாணவா்கள் கலந்து கொள்ளலாம். இந்த வகுப்பு டிச.17-ஆம் தேதி தொடங்கி 6 மாதங்கள் வரை, வாரந்தோறும் சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும். இதற்கு ரூ.10,900 பயிற்சிக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பயிற்சியின் முடிவில் ஜப்பான் அறக்கட்டளை நடத்தும் ஜப்பானிய மொழிப்புலமை தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு வலைதளம் அல்லது 044-4855 6140, 98843 94717 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Tuesday, May 31, 2022

May 31, 2022

ஜப்பானிய அரசு உதவித்தொகை

ஜப்பானிய அரசு உதவித்தொகை

ஜப்பானிய அரசின் எம்.இ.எக்ஸ்.டி., எனும் கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஜப்பானிய பல்கலைக்கழகங்கள் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.

இந்த உதவித்தொகை திட்டத்திற்கு, உரிய தகுதிகள் பெற்ற இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், இத்திட்டத்தில் தேர்வு செய்வதில் கல்வி அமைச்சகம் தலையிடாது. மாணவர்கள் நேரடியாக அதிகாரப்பூர்வ ஜப்பானிய கல்வி உதவித்தொகை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். படிப்புகள்:

அறிவியல், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டடீஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், நேவல் ஆர்க்கிடெக்சர், என்விரான்மென்டல் இன்ஜினியரிங், கெமிக்கல் படிப்புகள், வேளாண் படிப்புகள், பார்மசி, நர்சிங், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், அரசியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பானிய மொழி, பொருளாதாரம், தொழில்நிர்வாகம் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள்.

தகுதிகள்:

பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடும். ஏப்ரல் 2, 1998ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். மாணவர்கள் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவராக இருத்தல் வேண்டும். ஜப்பானுக்கு வருவதற்கு முன்பாகவும், வருகை புரிந்த உடனும் ஜப்பான் நாடு குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.

மேலும், அந்நாட்டு அரசின் கல்வித்திட்டத்திற்கு ஏற்ப ஜப்பானிய மொழியில் கற்கும் ஆர்வமும், திறனும் கொண்டிருக்க வேண்டும். உடல் தகுதியும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆகவே, தகுதியான மருத்துவரிடம் இருந்து உடல் மற்றும் மனநிலை தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை விபரம்:

தேர்வு செய்யப்படும் மாணவர்களது போக்குவரத்து செலவு, நுழைவுத்தேர்வு கட்டணம், பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தை ஜப்பானிய அரசே ஏற்கிறது. இவைதவிர, மாதம் சுமார் 71 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 2023 ஏப்ரல் முதல் மார்ச் 2028ம் ஆண்டுகள் வரையிலான 5 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

இதில், ஓர் ஆண்டு ஜப்பானிய மொழியை கற்பதற்கான தயார்படுத்துதல் காலமும் அடங்கும். மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் 6 ஆண்டுகள் கொண்ட பார்மசி படிப்பு ஆகியவற்றிற்கு மார்ச் 2030 வரை அதாவது 7 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

விபரங்களுக்கு: www.education.gov.in

Total Pageviews

Search This Blog