Breaking

Showing posts with label NEET/JEE. Show all posts
Showing posts with label NEET/JEE. Show all posts

Saturday, November 27, 2021

November 27, 2021

நீட் மசோதாவுக்கு உடனே ஆளுநர் ஒப்புதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் மசோதாவுக்கு உடனே ஆளுநர் ஒப்புதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வுக்கு விலக்க கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

நீட் மசோதாவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆளுநருக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு விரைவில் குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்றுத்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற கடந்த செப்டம்பர் 13ல் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் நேரில் சந்தித்து, நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ர் ஏ.கே ராஜன் அவர்களின் தலைமையில் குழு ஒன்றை முதலமைச்சர் அமைத்தார். இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்தும், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத் தீர ஆராய்ந்தும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநர்க்கு அனுப்பப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு , தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை முதலமைச்சர் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இச்சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Sunday, November 21, 2021

November 21, 2021

NEET தேர்வர்கள் கவனத்திற்கு! - மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டியின் எச்சரிக்கை அறிவிப்பு!!

மோசடியான இணையதளம் அல்லது முகவர்களை நம்பி நீட் தேர்வர்கள் தங்களது பாஸ்வேர்டை பகிர வேண்டாம் என்று மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் 1ம் தேதி வெளியாகின. நீட் தேர்வு முடிவுகளை, மாணவர்களின் மின்னஞ்சலுக்கு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேரடியாக அனுப்பியது. மேலும், என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்திலும் மாணவர்கள் நீட் ஸ்கோர் கார்டை டவுன்லோடு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில், 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர். நீட் - 2021 இளங்கலை கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. கட்ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள். இந்நிலையில், மருத்துவ ஆலோசனைக் குழு (எம்சிசி) வெளியிட்ட அறிவிப்பில், ‘அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in வெளியிடப்படும் தகவலின் அடிப்படையில் உரிய விபரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். போலி இணைய முகவரிகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். கவுன்சிலிங்கின் போது விண்ணப்பதாரர்களே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சேர்க்கை செயல்முறைகளை கடைபிடிக்க வேண்டும். முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் தவிர வேறு எந்த வலைத்தளத்துடனும் எம்சிசி ‘ஹோஸ்ட்’ செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தவறான தகவல்களைப் பரப்பக்கூடிய பிற இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாணவர் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மோசடியான இணையதளம் அல்லது முகவர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், எம்சிசிக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டுகிறோம். அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய முடியும்’ என்று தெரிவித்துள்ளது.

Monday, October 18, 2021

October 18, 2021

விடைக்குறிப்பு சரிபார்ப்பு முடிந்தது நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்பு: ஆர்வமுடன் காத்திருக்கும் மாணவர்கள்

நீட் தேர்வு விடைக்குறிப்பு சரிபார்ப்பு நேற்று இரவுடன் முடிந்த நிலையில், பல லட்சம் மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை சரிபார்த்துக் கொண்டனர். இதன்படி இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் 500க்கும் மேல் மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்புள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ், பிஎஸ்எம்எஸ் மற்றும் இதர மருத்துவ படிப்புகளில். 86 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, செப்டம்பர் 12ம் தேதி 202 நகரங்களில் 3,858 மையங்களில் நடந்தது. மொத்தம் 13 மொழிகளில் 2 கட்டமாக நடந்தது. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி, தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் நாடு முழுவதும், 11 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு, 15ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அத்துடன் மாணவர்களின் ஓஎம்ஆர் விடைத்தாளையும் இணைய தளத்தில் வெளியிட்டது. இவை இரண்டையும் மாணவர்கள், தங்கள் பிறந்த தேதி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து, விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தது.

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட விடைக்குறிப்பில் ஏதாவது பிழை இருந்தால் அதை மாணவர்கள் தக்க ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம் என்றும் அதற்காக ரூ. 1000 கட்டணம் செலுத்தவும், ஓஎம்ஆர் விடை சரியாக இருந்து விடைக்குறிப்பில் பிழை இருந்தால் அது குறித்து திருத்தம் செய்ய ஒரு கேள்விக்கு ரூ. 200 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. கடந்த 15ம் தேதி முதல் 17ம் தேதி இரவு 9 மணி வரை மாணவர்கள் இது குறித்து தெரிவிக்கலாம். அதற்கான கட்டணங்களை 17ம் தேதி இரவு 10 மணி வரை செலுத்தவும் அவகாசம் அளித்து இருந்தது.

இதன்படி, தேசிய தேர்வு முகமை அளித்திருந்த கால அவகாசம் நேற்று இரவு 10 மணியுடன் முடிவுக்கு வந்தது. தேசிய தேர்வு முகமையின் இந்த வாய்ப்பை பல லட்சம் மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அதன்படி, ஒவ்வொரு மாணவரும் தங்கள் ஓஎம்ஆர் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்ட விடைக்குறிப்பையும் பதிவிறக்கம் செய்து ஒப்பிட்டு பார்த்துக் கொண்டனர். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, பல மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகளை நேற்று இரவு வரை சரிபார்த்துக் கொண்டனர். சில தனியார் பயிற்சி மையங்களில் இதற்கென உருவாக்கிய மென்பொருள் மூலமும் மாணவர்கள் தங்கள் விடைகளை சரி பார்த்தனர். தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்த விதிகளின் அடிப்படையில் எத்தனை கேள்விகளுக்கு சரியாக விடை எழுதி இருந்தார்களோ அதற்கு தலா 4 மதிப்பெண்கள் வீதமும், பிழையான விடைகளுக்கு தலா 2 மதிப்பெண்கள் கழித்தும் மதிப்பெண்கள் வந்துள்ளன. இதன்படி இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு மாணவர்கள் விடைகளை சரிபார்த்துள்ளனர். இதன் மூலம் பெரும்பாலான மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்களை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை எடுப்பார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தபடி, அக்டோபர் 15ம் தேதி விடைக்குறிப்பை வெளியிட்டது. இதையடுத்து, அக்டோபர் இறுதிக்குள் வெளியாகும் என்றும் மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Monday, October 04, 2021

October 04, 2021

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி உச்சநீதிமன்றம் செய்தது. வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. 7.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய கோருவது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Sunday, September 26, 2021

September 26, 2021

நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 200 பேர் மன அழுத்தத்தில் உள்ளனர்:

நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 200 பேர் மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 353 இடங்கள், நகர்புற பகுதிகளில் 162 இடங்கள் ஆக மொத்தம் 515 இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்று வரும் முகாமினை மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய 10 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர்கள் சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் பாராட்டு தெரிவித்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன்... தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இன்று 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவது என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் சதவீதம் இதுவரை 56 சதவீதமாக உள்ளது. அது இன்று 60 சதவீதத்தை கடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சை வழங்குவதற்கான தனி துறை ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதற்காக 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துறைக்கு தேவையான கருவிகள் 25 நாட்களுக்குள் வாங்கி நிறுவப்படும். நகராட்சி நிர்வாக துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக முதல்வர் ஆணை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில்  நீட் தேர்வு எழுதிய 1,10,971 மாணவர்கள் அனைவருக்கும் மன நல ஆலோசனை வழங்கும் பணியில் 333 மன நல மருத்துவர்களும்,மன நல ஆலோசகர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.


இதில் 80 விழுக்காடு மாணவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் சுமார் 200 மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறோம். 20 சதவீத மாணவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. அவர்களையும் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இந்தியாவில் இத்தகைய நல்ல நடைமுறை தமிழ்நாட்டில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். தமிழ்நாட்டிற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் தேவை என முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் மத்திய சுகாதார துறை அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளார். 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளி கல்வி துறை சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்கம் தொடர்பான கூட்டத்தில் முதலமைச்சர் அது குறித்து முடிவெடுப்பார்.


நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரிடமிருந்து குடியரசு தலைவருக்கு சென்ற பின்பு குடியரசு தலைவரை நேரில் சந்திப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என கூறினார். இந்த நிகழ்வில் திருச்சி சட்ட பேரவை உறுப்பினர்கள் பழனியாண்டி, செளந்தரராஜன், ஸ்டாலின் குமார், கதிரவன், தியாகராஜன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Thursday, September 23, 2021

September 23, 2021

நாடு முழுவதும் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் டெல்லி, ராஞ்சியில் ஆள்மாறாட்டம் செய்து மெகா மோசடி: சி.பி.ஐ. விசாரணையில் அம்பலம்

நாடு முழுவதும் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் டெல்லி, ராஞ்சியில் ஆள்மாறாட்டம் செய்து மெகா மோசடி செய்தது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லியில் 2 மாணவர்களிடம் தலா ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட நாக்பூர் நீட் பயிற்சி மைய உரிமையாளர்பரிமால்கோட்பல்லிவார் உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நாக்பூர் பயிற்சி மைய உரிமையாளர் பரிமால், நீதி தேர்வு விடைத்தாளை திருத்தி அதிக மதிப்பெண் வாங்கி தருவதாக உறுதி அளித்து பணம் வசூலித்துள்ளார். நீட் தேர்வு விடைகளை முன்கூட்டியே மாணவர்களுக்கு அளிப்பதாக கூறி மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். நாட்டின் புகழ்பெற்ற கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக கூறி மாணவர்களிடம் தலா 50 லட்சம் ரூபாய் வசூலித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


நாடு முழுதும் நடைபெற்ற மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடந்ததாக ஏற்கனவே புகார்கள் எழுந்தது. ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக கவசத்தில் மைக் வைத்தும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது டெல்லி மற்றும் ராஞ்சி நகரில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் பல்வேறு மோசடிகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த தனியார் நீட் பயிற்சி மையம் இந்த மோசடியில் ஈடுபட்டதாக எல்லி [போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் இந்த முறை கேட்டில் மூளையாக செயல்பட்டுள்ளார். நீட் தேர்விற்கு விண்ணப்பித்த வசதி படைத்த மாணவர்களிடம் இருந்து தலா 50 லட்சம் வசூலித்தது தெரியவந்துள்ளது. இதன்படி டெல்லியில் 4 மையத்திலும், ராஞ்சியில் 1 மையத்திலும் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தொடர்ந்து அம்பலமாகும் நீட் முறைகேடுகள், நீட் தேர்வு தேவையில்லை என்று கூறும் கருத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Wednesday, September 22, 2021

September 22, 2021

நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை திரிக்கப்பட்ட ஒன்று! - முன்னாள் துணைவேந்தர் E. BALAGURUSAMY அறிக்கை

நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை திரிக்கப்பட்ட ஒன்று!


ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை அடிப்படையில் சட்டமசோதா இயற்றப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.


முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிக்கை.


PROF E BALAGURUSAMY Former Member, Union Public Service Commission


Press Release on A K Rajan Report


It is really amusing to read the report of A K Rajan Committee on NEET. It is a completely lopsided report based on skewed statistics. It is obviously clear that the report is scripted to suit the whims and fancies of people in power. The report refers to a number of court cases, constitutional provisions and many other matters that have no relevance to the NEET issue under consideration. It appears that the committee wrote the recommendations first and then drafted the contents to support them.


There are some amazing statements in the report.


1. The Central Government cannot conduct entrance exams for state-run colleges. 2. The Central Government has no power to establish universities. 3. The State Government must enact a law to takeover all the Deemed-to-be Universities.


How could a committee headed by a retired judge with many senior government officers as members make such statements? The most astonishing and hilarious part of the report is its concluding remarks. It says that "if NEET continues for a few more years, the Healthcare System of Tamil Nadu will be very badly affected, no doctors will be available for Primary Healthcare Centres and ultimately Tamil Nadu may go to pre-independence days". It clearly shows that the committee has neither understood the importance of NEET nor its benefits to the students and public.


I agree with one statement that "coaching has replaced learning among the students". This is very much true for the +2 exams as well. Coaching has been existing in schools long before the NEET and JEE. It is a well known fact that only rich students studying in private "coaching" schools have been garnering the medical and engineering seats in large numbers in the past.


The committee has failed to highlight the benefits associated with NEET.


1. NEET eliminates multiple entrance tests usually conducted by different states, central institutions and deemed universities. With NEET score, one can seek admission in any institution anywhere in India. Students can save a considerable amount of money, energy and time spent in the preparation for multiple exams, in addition to reducing stress and anxiety. 2. NEET provides a fair and transparent approach and guarantees an equal opportunity to secure a seat in any college in the country.


3. All medical seats (except Government of India Quota) in Tamil Nadu will be allotted to only the students of Tamil Nadu.


4. With NEET score, one can get admission in all Central Institutions, Central Universities and all Deemed Universities as well as 15% of seats in all the other state medical colleges in the country. These seats are many times more than the seats available in TN colleges. If we do not participate in NEET, TN students will lose the opportunity to join these institutions.


5. Since government agencies conduct counseling for admission to Deemed Universities and private colleges, the menace of 'capitation fees' is totally eliminated. NEET will also put an end to the existing atmosphere of admission scandals.


6. NEET score will facilitate getting admissions abroad. 7. NEET will ensure not only the quality of medical education in India but also the international recognition of Indian medical degrees.


An extremely amusing recommendation is that medical admission should happen only based on the 12th marks to ensure equality in opportunities to the students from different boards of education. It is in fact the other way round. Only a common test can guarantee equality for all students. The recent announcement of reservation of 27% for OBC and 10% for EWS in All India Quota (AIQ) on July 29, 2021, will benefit a large number of poor and rural students.


It is really unfortunate that the Tamil Nadu Government has recently passed the anti NEET bill based on this squinted report.
September 22, 2021

NEET - SS தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நவம்பர் 13, 14 தேதிகளில் நடைபெறும் NEET - SS தேர்வுக்கு இன்று முதல் வரும் அக்டோபர் 12-ம் தேதி வரை nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


நவம்பர் 30-ல் முடிவுகள் வெளியிடப்படும்.


நவ.13, 14 தேதிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு-மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு.


NEET - SS தேர்வுக்கு nbe.edu.in இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


நவம்பர் 30-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். விரிவான விவரங்களுக்கு exam.natboard.edu.in.

Tuesday, September 21, 2021

September 21, 2021

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தேவை இல்லையென்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.
September 21, 2021

நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்!

நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியை பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
September 21, 2021

'நீட்' தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை - PDF

Wednesday, September 15, 2021

September 15, 2021

63 வயதில் 'நீட்' தேர்வு எழுதிய ஆசிரியர்; இளம் மாணவர்களுக்கு 'ரோல் மாடல்!'

சென்னை : அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர், 63 வயதில் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வை எழுதியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்துள்ளன.


கடந்த 12ம் தேதி நடந்த நீட் நுழைவு தேர்வில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வு எழுத வயது ஒரு தடை அல்ல என்பதால், 63 வயது நிறைந்த முனுசாமி என்ற அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும் தேர்வில் பங்கேற்றுள்ளார்.பணி ஓய்வுசென்னை பெருங்குடியில் வசிக்கும் முனுசாமி, எம்.எஸ்சி., - எம்.எட்., -எம்.பில்., மற்றும் எம்.பி.ஏ., படித்துள்ளார். கடந்த 1984ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, கவர்னர் மாளிகையில் சுருக்கெழுத்தராக பணியை துவங்கிய முனுசாமி, 1987ல் போலீஸ் துறையில் நேரடி எஸ்.ஐ., தேர்வில் பங்கேற்று தேர்வாகி, எஸ்.ஐ.,யாக நான்கு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.அதன்பின், போலீஸ் துறையில் இருந்து கல்வித் துறைக்கு மாறினார். முதுநிலை ஆசிரியராக தேர்வாகி, செங்கல்பட்டு, பொலம்பாக்கம் பள்ளியில் பணியாற்றினார்.


பின், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 15 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியராக பணிபுரிந்தார். பின், வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி 2018ல் ஓய்வு பெற்றார்.இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி, தினேஷ் கண்ணா என்ற மகன், மஞ்சு என்ற மருமகள், லட்ஷிதா மற்றும் பரினிதா என்ற பேத்திகள் உள்ளனர்.நீட் தேர்வு எழுதியது குறித்து ஆசிரியர் முனுசாமி அளித்த பேட்டி:வடமாநிலத்தில் அப்பாவும், மகளும் நீட் தேர்வு எழுதி ஒரே கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்கின்றனர்.


இந்த தகவலை, அசோக் நகர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர்கள் உதயகுமார், மணிமாறன் ஆகியோர் என்னிடம் தெரிவித்து, என்னையும் நீட் தேர்வு எழுத ஊக்குவித்தனர்.நம்பிக்கைபின், குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், ஆதரவும்கிடைத்தது. நீட் தேர்வுக்கு பல்வேறு புத்தகங்கள் வாங்கி ஐந்து மாதங்கள் சொந்தமாக படித்து பயிற்சி பெற்று, தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு 351 மதிப்பெண் கிடைக்கும்.


அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தால், வடமாநில கல்லுாரியில் சென்று படிக்கவும் தயாராக உள்ளேன்.நான் செங்கல்பட்டு மாவட்டம் பட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஆதி திராவிட பள்ளியில் படித்தவன். மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் படிப்பையும், நந்தனம் அரசு கல்லுாரியில் பட்டப்படிப்புகளையும் முடித்துள்ளேன். எப்படியும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். கோழைத்தனம்


தன் 63 வயதிலும் நீட் தேர்வை எழுதியுள்ள ஆசிரியர் முனுசாமியை, இளம் மாணவர்கள் தங்களின் 'ரோல் மாடலாக' எடுத்து கொண்டு, எந்த வயதிலும் விருப்பப்பட்ட படிப்பை படிக்கலாம் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். மாறாக, நீட் தேர்வை கண்டு அச்சப்பட்டு, ஒதுங்கி தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகளை எடுத்து, வாழ்வை வீணாக்கி விடக்கூடாது என, கல்வியாளர்களும், உளவியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.


'ஜிம்' உரிமையாளரின் 'நீட்' தேர்வு ஆர்வம்!


சென்னை வடபழநியை சேர்ந்த ஜிம் உரிமையாளர் மோகன், தன், 47வது வயதில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இவர் தன் மகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தானும் படிக்க ஆரம்பித்து நீட் தேர்வை எழுதியுள்ளார்.நீட் தேர்வில் 550 மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். தேர்வு எழுத மகனும், மகளும் உறுதுணையாக இருந்ததாக அவர் கூறினார்.

Tuesday, September 14, 2021

September 14, 2021

'நீட்டை நீக்கும் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது': மாணவி கனிமொழியின் மரணம் குறித்து முதல்வர் அறிக்கை வெளியீடு

நீட் தேர்வை நீக்கும் வரை சட்டப்போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என மாணவி கனிமொழியின் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,


“நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன்.


தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன். நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வல்ல என்பதை, ஆள்மாறாட்டம் - வினாத்தாள் விற்பனை - பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக் கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.


மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்கிடுவோம்.”
September 14, 2021

கசிந்தது நீட் வினாத்தாள்: 8 பேர் கைது; நீட் வினாத்தாளின் விலை எவ்வளவு தெரியுமா?

"ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நீட் வினாத்தாளை இளைஞர் ஒருவர், தனது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து, அதனை சிகரைச் சேர்ந்த இருவருக்கு அனுப்பிய விவகாரத்தில் நீட் தேர்வு மையத்திலிருந்து ஒரு பெண் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. கரோனா இரண்டாம் அலையின் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 202 நகரங்களில் கடந்த ஞாயிறு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வின் வினாத்தாள் கசியவிடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை குறித்து ஜெய்ப்பூர் காவல்துறை துணை ஆணையர் ரிச்சா தோமர் கூறுகையில், ராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மையம் நீட் தேர்வுமையமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. அப்போது வினாத்தாளை கசியவிட்டு முறைகேடு நடைபெற்றதாக தகவல் கிடைத்தது.


இதில், வினாத்தாளை கசியவிட்ட நபர்களைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


வினாத்தாளை கசியவிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ராம் சிங் கூறியிருப்பதாவது, தனக்கு நன்கு அறிமுகமான நவரத்னா என்பவர் பன்சூரில் கல்வி மையம் நடத்தி வருகிறார். அவருடைய நண்பர் அனில் யாதவ் இ-மித்ரா நடத்தி வருகிறார். அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த சுனில் யாதவின் உறவினர்தான் தனேஷ்வரி. தனேஷ்வரியின் நீட் தேர்வு மையம் ராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையமாகும்.


இதனால், எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். நீட் வினாத்தாளை ரூ.35 லட்சத்துக்கு விற்பது என்று முடிவெடுத்தோம். அதன்படி, வினாத்தாள் தேர்வு மையத்துக்கு வந்ததும் அதனை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து விற்பனை செய்வது என்பதே எங்கள் திட்டம். இதற்காக, ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்துடன் தனேஷ்வரியின் உறவினர் தேர்வு மையத்துக்கு வெளியே காரில் அமர்ந்திருந்தார். பிறகு காவலர்களால் அவரும் கைது செய்யப்பட்டார். பங்கஜ் யாதவ் மற்றும் சந்தீப் ஆகியோர் வினாத்தாளைப் பெற்று உடனடியாக அதற்கான விடைகளை எழுதி ராம் சிங்கிடம் கொடுத்துள்ளனர். அது கல்லூரியின் நிர்வாகி முகேஷ் சமோடாவிடம் வழங்கப்பட்டது. அதனை அவர் சமோடா தனேஷ்வரிக்கு கொடுத்துள்ளார். விசாரணையில், தனேஷ்வரியிடமிருந்து வினா மற்றும் விடைத்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் அசல்கள் ராம் சிங்கிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதற்கிடையே, ராம் சிங் மற்றும் முகேஷ் சமோடா ஆகியோர் வினாத்தாளை பங்கஜுக்கு செல்லிடப்பேசியில் அனுப்பியுள்ளனர். இந்த வினாத்தாளை, பங்கஜ் யாதவ் சிகரில் உள்ள சுனில் ரின்வான் மற்றும் தினேஷ் பெனிவால் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். உடனடியாக அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வினாத்தாளை அனுப்பி, விடைகளைத் தேர்வு செய்து அவர்கள் மூலம் நீட் வினாத்தாள் ஜெய்ப்பூர் மற்றும் சிகர் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கசியவிடப்பட்டுள்ளது.


இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிகருக்கு விரைந்து சென்று சுனில் மற்றும் தினேஷை கைது செய்துள்ளனர்."
September 14, 2021

'நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசனை': 104 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்

நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று கூறினார்.


மேலும், 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசுவதன் மூலம் மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.


தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேறப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும், பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்ட அவர்,


நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
September 14, 2021

BREAKINGNEWS - நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை!

#BREAKINGNEWS நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை!


நீட் தேர்வு எழுதிய பிறகு மிகவும் சோர்வாக காணப்பட்ட கனிமொழி, தேர்வு முடிவு பயம் காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்.


நீட் தேர்வில் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் கண்ணீர்.


பிளஸ் 2 தேர்வில் கனிமொழி 600-க்கு 562.28 மதப்பெண்களை பெற்றிருந்தார்.


10 ஆம் வகுப்பில் கனிமொழி 500-க்கு 462 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.


கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வு எழுத அச்சமடைந்த மாணவன் தனுஷ் தற்கொலை.


மாணவி கனிமொழியுடன் சேர்த்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 15.

Monday, September 13, 2021

September 13, 2021

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


நீட் தேர்வு:


மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இருப்பினும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் தமிழகத்தில் இருந்து 1.10 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், இயற்பியல், விலங்கியல் பாட வினாக்களில் 95 சதவீத கேள்விகள் தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மேலும், தாவரவியல், வேதியியல் பாடங்களில் இருந்து 75 சதவீத வினாக்கள் மாநில அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 76 வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், 62 வினாக்கள் சராசரியாக இருந்ததாகவும், 62 வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாவரவியலில் 20 வினாக்கள் கடினம் என்றும், இயற்பியலில் 19 வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இயற்பியல் பாட வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்த நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
September 13, 2021

இயற்பியல், வேதியியல் வினாக்கள் மிகவும் கஷ்டம்: நீட் ‘கட்-ஆப்’ மதிப்பெண் குறைய வாய்ப்பு? கல்வி வல்லுனர்கள் தகவல்

நேற்று நடந்த நீட் தேர்வில், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் கஷ்டமாக இருந்ததால், இந்தாண்டுக்கான நீட் ‘கட்-ஆப்’ மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக கல்வி வல்லுனர்கள் தெரிவித்தனர்.


நாடு முழுவதும் 202 நகரங்களில் உள்ள 3,800 மையங்களில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடைபெற்றது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வை எதிர்கொண்டனர்.


கடந்த முறையை விட பத்து சதவீதம் அதிகமாகும். தேர்வு மையங்களில் மாணவர்கள் நடத்தப்பட்ட விதங்கள் பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கும்படி இருந்தது.


முழுக்கை சட்டைகள் மற்றும் நகைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. சில மையங்களில் முழுக்கை சட்டை அணிந்து வந்தவர்களின் சட்டைகள் கழற்றப்பட்டு அவை அரைக் கை சட்டையாக்கப்பட்டன.


சில மையங்களில் தந்தையும் மகனும் சட்டைகளை மாற்றிக் கொண்டனர். கொரோனா கட்டுபாடுகளுக்கு மத்தியில், ஒருவழியாக இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிந்தது. ஆனால், வினாத்தாளில் இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடுமையாக இருந்துள்ளது. பெரும்பாலான கேள்விகள் கஷ்டமானதாக இருந்துள்ளன. வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் ஓரளவு கடினமாக இருந்தது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுடன் ஒப்பிடும் போது, உயிரியல் பாட கேள்விகள் எளிதாக இருந்துள்ளது.


கேள்விகளைப் புரிந்துகொள்ள நீண்ட நேரம் பிடித்ததாக தேர்வர்கள் கூறினர். இதனால், கடந்தாண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டு வினாத்தாள் கடுமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர்.


இதுகுறித்து கல்வி வல்லுனர்கள் கூறுகையில், ‘இயற்பியல் பாட கேள்விகள் மிகவும் கஷ்டமானதாக இருந்தன. இயற்பியலில் கேட்கப்பட்ட 50 கேள்விகளில் 42 கேள்விகள் கஷ்டமானவை.


கிட்டத்தட்ட எல்லா கேள்விகளும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் என்சிஇஆர்டி (தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டன.


உயிரியல் பாடங்களுக்கு முதலில் பதிலளித்தால் நேரம் கொஞ்சம் மிச்சமாகி இருக்கும். இயற்பியலில் பதிலை தொடங்கி இருந்திருந்தால், தேர்வர்களுக்கு அதிக நேரம் எடுத்திருக்கும். தாவரவியலில் கேள்விகள் எளிதானதாக இருந்தன. ஆனால் விரைவாக பதிலளிக்க முடியாது. வினாத்தாள் கடினமாக இருந்ததால், ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது’ என்றனர்.

Total Pageviews

Search This Blog