Breaking

Showing posts with label GATE. Show all posts
Showing posts with label GATE. Show all posts

Friday, November 10, 2023

November 10, 2023

NPTEL-GATE Portal | கேட் தேர்வுக்கான பாடத் தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் தளம்

NPTEL is a joint initiative of the IITs and IISc. NPTEL stands for National Programme on Technology Enhanced Learning. We are supported by the Ministry of Education, Government of India. This is a large platform providing free online certification courses in the MOOCs format. NPTEL offers 500+ courses every semester. To provide students with an integrated platform to prepare for GATE, this project was initiated with CSR support from Amadeus Labs Bengaluru.

GATE is not only a qualifying exam for graduate studies but also provides an opportunity for PSU jobs

NPTEL-GATE Portal | கேட் தேர்வுக்கான பாடத் தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் தளம்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐஐடி) என்பிடெல்-கேட் இணையமுகப்பு (gate.nptel.ac.in), கேட் தேர்வுக்கான பாடத் தயாரிப்புகளை இலவசமாக வழங்குகிறது.

என்பிடெல்-கேட் இணையமுகப்பில் 50,700-க்கும் மேற்பட்ட விண்ணப்பப் பதிவுகள் வரப்பெற்றுள்ளன. 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற கேட் தேர்வின் உள்ளடக்கங்கள், முந்தைய ஆண்டுகளில் அதாவது கடந்த 2007 முதல் 2022-ம் ஆண்டு வரை இடம்பெற்ற கேள்விகளை இந்த இணையமுகப்பு வழங்குகிறது. இதன் விரிவான தேர்வுத் தயாரிப்புத் திட்டத்தால் கடந்த ஆண்டைவிட குறிப்பிடத்தக்க அளவில் மாணவர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் (NPTEL) என்பது சென்னை ஐஐடி உள்ளிட்ட பல்வேறு ஐஐடி-க்கள் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். பெங்களூரு அமேடியஸ் லேப்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த கேட் இணையமுகப்பு ஆகஸ்ட் 2022-இல் தொடங்கப்பட்டது. பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) என்பது பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கட்டிடக்கலை, மானுடவியல் (Humanities) என பல்வேறு இளங்கலை-நிலைப் பாடங்களில் விரிவான புரிதலுக்கான விண்ணப்பதாரர்களை மதிப்பிடும் தேசிய அளவில் மதிப்புவாய்ந்த தேர்வாகும். கேட் தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள், சாத்தியமான நிதி உதவியுடன் கூடிய முதுகலை மற்றும் நேரடி முனைவர் பட்டத்திற்கான பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 7 முதல் 10 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வை எழுதுகின்றனர். 2023-ம் ஆண்டில், ஏறத்தாழ 7 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வுக்குப் பதிவு செய்திருந்தனர், இதில் ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள் வெற்றிகரமாகத் தகுதி பெற்றனர்.

என்பிடெல்-கேட் இணையமுகப்பின் தாக்கம் குறித்து விவரித்த என்பிடெல்-ஐஐடி மெட்ராஸ்-ன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், "மாதிரித் தேர்வுகள் மற்றும் நேரடி அமர்வுகளில் மாணவர்கள் அதிகளவில் கலந்து கொள்வது, இணையமுகப்பின் விரிவான தகவல்களைப் பயன்படுத்தி கேட் தேர்விற்கு தயாராவதில் அவர்களுக்கு உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. என்பிடெல்-கேட் இணையமுகப்பானது கேட் ஆர்வலர்களுக்கு பல்வேறு அம்சங்களை இலவசமாக வழங்குவதுடன், உயர்தரமுள்ள கல்வியின் உள்ளடக்கத்தை எல்லோரும் பெறும் வகையில் அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டார். கேட் தரவரிசையில் மிகச் சிறந்த முறையில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்னரே தங்களைத் தயார்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். பலர் மிகுந்த பொருட்செலவு செய்து தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும், ஆன்லைன் தளங்கள் மூலமும் பயிற்சித் தேர்வுகளை எழுதுகின்றனர். என்பிடெல்-கேட் இணையமுகப்பு 2007 முதல் 2022 வரையிலான முந்தைய ஆண்டுகளின் கேள்விகளை (PYQs) வழங்குகிறது. 16 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கேட் தேர்வுகளின் தலைப்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது.

மின்சாரப் பொறியியல், இயந்திரப் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், மின்னணு மற்றும் தொலைத்தொர்பு, இயற்பியல், வேதியியல் ஆகிய 6 முக்கிய பாடங்களில் 115 மாதிரித் தேர்வுகளை கடந்த ஆகஸ்ட் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். கடந்த 15 அக்டோபர் 2023ல் தொடங்கிய தற்போதைய செமஸ்டரில் முந்தைய 6 தேர்வுகளுடன் உயிரிப் பொறியியல் உள்பட 7 பாடங்களில் மொத்தம் 19 மாதிரித் தேர்வுகளை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர்.

நேரடித் தயார்படுத்தும் அமர்வுகளில் அதிகளவில் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 521 முதல்கட்ட அமர்வுகளில் 3,975 மாணவர்களும், 367 இரண்டாம் கட்ட அமர்வுகளில் 3,321 மாணவர்களும் பங்கேற்றனர். மூன்றாம் கட்ட நேரலை அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல்வேறு களங்களில் அத்தியாவசிய கேட் தலைப்புகளை உள்ளடக்கியதாக இந்த கலந்துரையாடல் பாடங்கள் அமைந்திருக்கின்றன.
2022-ம் ஆண்டில் கேட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ராம்பாலாஜி என்பிடெல்-கேட் இணையமுகப்பைப் பற்றியும் அதன் வீடியோ தீர்வுகள், குறிப்புகள், உபாயங்கள், பாடத்திட்டத்திற்கான துல்லியமான உள்ளடக்கத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார். தலைப்புகள் அடிப்படையிலான தேர்வுகள் மற்றும் வரிசைப்படுத்தப்பட்ட கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்கள் ஆகியவை உதவியாக இருந்ததாகத் தெரிவித்தார்.

கருத்தியல் ஆய்வு மற்றும் கேள்விகளுக்கான தீர்வு போன்றவை உதவிகரமாக இருந்ததாக கேட் தரவரிசையில் 318 இடத்தைப் பெற்ற சாந்தனு தாரா குறிப்பிட்டார். முந்தைய ஆண்டுகளின் கேள்விகள் மற்றும் ஊக்கமளிக்கும் பாடக்குறிப்புகள் ஆழ்ந்த விளக்கங்களுடன் இருந்ததாக கேட் தரவரிசையில் 894 இடத்தைப் பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் கௌரவ் போலாநாத் முங்கேகர் குறிப்பிட்டார்

CLICK HERE https://gate.nptel.ac.in/

Friday, September 29, 2023

September 29, 2023

GATE நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கணினி வழியிலான கேட் தேர்வு, இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 29பாடப் பிரிவுகளில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11-ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்த உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட்30-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் (செப். 29) நிறைவடைகிறது.

மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தாமதக்கட்டணத்துடன் அக். 13 வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, நவம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் மார்ச் 16-ம் தேதி வெளியாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர

Monday, August 28, 2023

August 28, 2023

GATE தேர்வு பிப்ரவரி 3-ம் தேதி தொடக்கம்: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தகவல்



GATE தேர்வு பிப்ரவரி 3-ம் தேதி தொடக்கம்: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தகவல்

கேட்’ தேர்வு பிப். 3-ம் தேதி தொடங்குகிறது. தேர்வு நடைபெறும் நாட்களில் வேறு தேர்வுகள் நடைபெறாதவாறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

பொறியியல் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்காக தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

2024-ல் நடைபெறவுள்ள கேட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 30-ம் தேதி முதல் செப். 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

கணினி வாயிலாக நடைபெறும் இத்தேர்வானது ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐஐஎஸ்சி, 7 ஐஐடி-க்களுடன் இணைந்து நடத்த உள்ளது. தேர்வு முடிவு அடுத்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண் அட்டைகளை அதே மாதம் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேட் தேர்வு நடைபெறும் நாட்களில், வேறு எந்த தேர்வுகளும் நடைபெறாதபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்து உள்ளது.

Saturday, August 26, 2023

August 26, 2023

GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியானது.



GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியானது.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில், முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேர்வதற்கான GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியானது.

தகுதியுள்ளவர்கள், www.gate2024.iisc.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Thursday, February 03, 2022

February 03, 2022

கேட் தேர்வுக்கு தடை: சுப்ரீம் கோர்ட் விசாரணை

கேட் தேர்வுக்கு தடை:: சுப்ரீம் கோர்ட் விசாரணை

முதுநிலை பொறியியல் படிப்பிற்கான 'கேட்' தேர்வை தள்ளி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுஉள்ளது.

ஐ.ஐ.டி., - எம்.ஐ.டி., போன்ற உயர் கல்வி மையங்களில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேர 'கேட்' எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்களில் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதனால் ஏராளமான பொறியியல் மாணவர்கள் கேட் தேர்வில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்தாண்டு கேட் தேர்வு வரும், 5ம் தேதி நடக்க உள்ளது. நாடு முழுதும், 200 மையங்களில், ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுத உள்ளனர். இந்நிலையில் நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், பல்லவ் மோங்கியா என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் கேட் தேர்வில், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. அதனால் கேட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஏற்கனவே அனுமதி சீட்டு வழங்கப்பட்டு விட்டது. அத்துடன் தேர்வுக்கு சில தினங்களே உள்ளதால், மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவின் முக்கியத்துவம் கருதி, உடனடியாக விசாரணை பட்டியலில் சேர்க்க அமர்வு உத்தரவிட்டது

Sunday, September 26, 2021

September 26, 2021

பொறியியல் மேற்படிப்புகளுக்காக கேட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு.

பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ஐஐடி காரக்பூர் தெரிவித்துள்ளது.


ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி காரக்பூர் நடத்துகிறது.


ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2022- 23ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது.


மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது 2022-ம் ஆண்டில் மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதலாம். இதற்கிடையே கேட் தேர்வை எழுத ஆகஸ்ட் 30 முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க, நேற்று (செப்டம்பர் 24-ம் தேதி) கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று பெரும்பான்மையான மாணவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இந்நிலையில் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ஐஐடி காரக்பூர் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஐஐடி காரக்பூர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செப்.28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியாகிறது. அதேபோலத் தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

Wednesday, September 01, 2021

September 01, 2021

BE - கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு திடீரென ஒத்திவைப்பு.

பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கான மாணவர்களின் விண்ணப்பப் பதிவு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. செப்.2 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூர் தெரிவித்துள்ளது.
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சில தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். 2022-ம் ஆண்டுக்கான கேட் தேர்வை ஐஐடி காரக்பூர் நடத்துகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2022-23ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு 2022-ம் ஆண்டில் மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் நடைபெற உள்ளது. பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதலாம்.

இதற்கிடையே கேட் தேர்வை எழுத ஆகஸ்ட் 30 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பப் பதிவு திடீரென தள்ளிப்போயுள்ளது. மாணவர்கள் செப்டம்பர் 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விண்ணப்பிக்கக் கடைசித் தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை. மாணவர்கள் செப்டம்பர் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க அக்.1 கடைசி நாள் ஆகும்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியாகிறது. அதேபோலத் தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Monday, August 30, 2021

August 30, 2021

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். மாணவர் சேர்க்கை- ‘கேட்’ நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், உதவித்தொகையுடன் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கு `கேட்' நுழைவுத்தேர்வு (Graduate Aptitude Test in Engineering) நடத்தப்படுகிறது.
சில தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன. ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு ஐஐடி கேட் நுழைவுத்தேர்வை நடத்தும். அந்த வகையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான (2022-2023) கேட் நுழைவுத்தேர்வை கரக்பூர் ஐஐடி நடத்த உள்ளது. 2022 பிப்ரவரி 5, 6 மற்றும் 12 13-ம் தேதிகளில் பல்வேறு கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படும்.

சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 20 பாடப் பிரிவுகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கேட் நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. https://gate.iitkgp.ac.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி செப்டம்பர் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான அனுமதிச்சீட்டு ஜனவரி 3-ம் தேதி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். நுழைவுத்தேர்வு முடிவு மார்ச் 17-ல் வெளியாகும்.

Sunday, August 29, 2021

August 29, 2021

பொறியியல் மேற்படிப்புகளுக்காக கேட் நுழைவுத் தேர்வு: ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூர் தெரிவித்துள்ளது. ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி காரக்பூர் நடத்துகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2022-23ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தேர்வு ற உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது மூலம் 2022-ம் ஆண்டில் மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதலாம். இந்நிலையில் கேட் தேர்வை எழுத ஆகஸ்ட் 30 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதற்கு செப்டம்பர் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியாகிறது. அதேபோலத் தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

Saturday, August 28, 2021

August 28, 2021

IIT & NIT பொறியியல் மேற்படிப்புகளுக்கான GATE நுழைவுத் தேர்வு – செப்.24 வரை விண்ணப்பிக்கலாம்!

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு GATE நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் வரவேற்கப்பட்டுள்ளது.

GATE நுழைவுத்தேர்வு
இந்தியாவில் பொறியியல் படிப்புகளை மத்திய உயர்கல்வி நிறுவனங்களான IIT, NIT மற்றும் IISC போன்றவைகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், இளங்கலை படிப்புகளுக்கு JEE தேர்வையும், முதுநிலை படிப்புகளுக்கு GATE என்ற நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டியது கட்டாயமாகும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டும் IIT, NIT மற்றும் IISC கல்வி நிறுவனங்களில் பயில வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான M.E, M.Tech, M.Plan உள்ளிட்ட முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக GATE (Graduate Aptitude Test in Engineering) நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருக்கக்கூடிய IIT கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் GATE தேர்வுகளை நடத்தும். அதன்படி இந்த ஆண்டு IIT கரக்பூர் தேர்வுகளை நடத்துகிறது. முன்னதாக 2022 ஆம் கல்வியாண்டுக்கான GATE நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உள்ளிட்ட 27 பாடப்பிரிவுகளுக்காக நடத்தப்பட்ட GATE தேர்வுகள் இந்த ஆண்டு முதல் கூடுதலாக பிடிஎஸ் மற்றும் எம் பார்ம் உள்ளிட்ட 2 படிப்புகளுக்கும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்நிலையில் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 30 முதல் துவங்கி செப்டம்பர் 24 ஆம் தேதி வரை பெறப்பட உள்ளது. இதை தொடர்ந்து ஹால் டிக்கெட்டுகள் ஜனவரி 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் நுழைவுத் தேர்வுக்கான இறுதி முடிவுகள் முடிவுகள் மார்ச் 17 ஆம் தேதி வெளியாகும் என்பது கூடுதல் தகவல்.

Thursday, August 05, 2021

August 05, 2021

GATE EXAM - ஆக.30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் 2022 தேர்வுக்கு ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் கேட் நுழைவுத்தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி காரக்பூர் நடத்துகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. இந்தத் தேர்வில் புதிதாக 2 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புவிசார் பொறியியல் - GE (Geomatics Engineering) மற்றும் கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல்சார் பொறியியல் - NM (Naval Architecture and Marine Engineering) ஆகிய 2 தாள்கள் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் 2022-ம் ஆண்டில் மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதலாம்.

இந்நிலையில் கேட் 2022 தேர்வுக்கு ஆக.30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 24 கடைசித் தேதி ஆகும். தாமதக் கட்டணத்துடன் சேர்த்து, அக்டோபர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 1 கடைசித் தேதி ஆகும். அதேபோலத் தாள்கள் மாற்றம், தேர்வு மையம் மாற்றம் ஆகியவற்றைக் கூடுதல் கட்டணத்தோடு மேற்கொள்ள நவம்பர் 12 கடைசித் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, August 01, 2021

August 01, 2021

கேட்-பி நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

கேட்-பி நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

சென்னை, ஜூலை 31: ‘கேட்-பி' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த வர்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொள்ளலாம் என தேசிய தேர் வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு விவரம்: நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) படிப்புகளில் சேருவதற்கான ‘கேட்-பி' என்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பயோடெக்னாலஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெற பிஇடி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகள் ஆகஸ்ட் 14-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருப் பின் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலான மூன்று நாள்களுக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை dbt.nta.ac.in, www.nta.ac.in ஆகிய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Thursday, July 29, 2021

July 29, 2021

பொறியியல் மேற்படிப்புகளுக்கான GATE நுழைவுத் தேர்வு – பிப்ரவரி மாதம் துவக்கம்!

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கான GATE நுழைவுத் தேர்வு, 2 புதிய கூடுதல் படிப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
GATE தேர்வு:

பொறியியல் படிப்புகளுக்கு முதன்மையானதாக விளங்கும் IIT மற்றும் IISC போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் GATE நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத்தேர்வானது நாடு முழுவதும் உள்ள 7, IIT கல்வி நிறுவனங்களால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான GATE நுழைவுத் தேர்வை IIT காரக்பூர் நடத்துகிறது.

மேலும் இத்தேர்வுகள் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என தற்பொழுது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக IIT காரக்பூர் இயக்குநர் வி.கே.திவாரி கூறுகையில், ‘மத்திய கல்வி நிறுவனங்களில் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை GATE நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனுடன் புதிதாக புவிசார் பொறியியல் (GE) மற்றும் கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல்சார் பொறியியல் (NM) உள்ளிட்ட 2 பாடங்களுக்கும் GATE நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய நிபுணத்துவம் தேவைப்படுவதால் GATE தேர்வுகளை நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த 2 பாடங்களை சேர்த்து மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதம் 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளில் பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் பட்டப்படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

Saturday, July 03, 2021

July 03, 2021

'கேட்' தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கப் பயிற்சி வகுப்புகள் - முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

'கேட்' தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கப் பயிற்சி வகுப்புகள் - முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு
சென்னை, ஜூலை 2: உயர் கல்விக்கான கேட்' தேர்வில் தமிழக மாணவர் களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அரசின் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய அம் சங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர்களின் சேர்க்கை சில மாவட்டங்க ளில் குறைவாக இருந்து வருகிறது. இந்த நிலையை சீர்செய்யும் விதமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து விவா திக்கப்பட்டது.
தாலுகாக்களில் கல்லூரிகள்: வேலைவாய்ப்புக்கு உகந்த பாடத் திட்டங் களை அறிமுகப்படுத்தவும், தேவையான தாலுகாக்களில் புதிய கல்லூரிக ளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப் பது குறித்தும், 'கேட்'தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பயிற்சி வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும் விதமாக, உட்கட் டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும், திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் மின் ஆளுமைத் திட்டத்தைச் செயல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

மின்னணு நூலகங்கள்:
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு மையத்தின் தரத்தை மேம்படுத்தவும், புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. கலை, அறிவியல் கல்லூ ரிகளில் மின்னணு நூலகங்களை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்த நிலையான நிதி மேலாண்மையை உருவாக்கி நிதிச் சுமையை சீராக்கவும் ஆலோசிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, தலை மைச்செயலாளர் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச்செயலா ளர் எஸ்.கிருஷ்ணன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த் திகேயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அண்ணா பல்கலை.யில் ட்ரோன் கார்ப்பரேஷன்: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ட்ரோன் கார்ப்பரேஷன் நிறுவ ஆலோ சிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சியாக அரசின் உதவியுடன் அனைத்துத் துறைகளிலும் ட்ரோன்களைப் பயன்படுத்தும் விதமாக புதிய ட்ரோன் கார்ப்பரேஷன் நிறுவ ஆலோசிக்கப்பட்டதாக அரசின் செய்தி யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 02, 2021

July 02, 2021

GATE நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி - கல்லூரிகளில், வேலைவாய்ப்புக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம்.

GATE நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி.
கல்லூரிகளில், வேலைவாய்ப்புக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம்.

வெளிப்படைத்தன்மையுடன் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை.

தமிழ் பாரம்பரிய கலை திருவிழாக்கள்.

- உயர்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை.

Monday, April 05, 2021

April 05, 2021

அகில இந்திய அளவிலான 'கேட்' தேர்வில் திருச்சி என்.ஐ.டி., மாணவர்கள் சாதனை!

அகில இந்திய அளவிலான 'கேட்' தேர்வில், திருச்சி என்.ஐ.டி., மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்து வரும் மாணவர்கள், உதவித்தொகையுடன், உயர் கல்வி படிப்பதற்கும், பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்காகவும், தேசிய அளவில் நுழைவுத் தேர்வான, கேட் நடத்தப்படுகிறது. நடப்பு, 2021ம் ஆண்டுக்கான கேட் தேர்வில் நாடு முழுவதும், 16 ஆயிரத்து, 75 மாணவ - மாணவியர் எழுதினர். நீங்கள் வாக்குச்சாவடி அலுவலரா? அப்படியெனில் இந்த 50 கேள்விகளை படித்து விடையினை தெரிந்துகொள்ளுங்கள்!
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படிக்கும் இன்ஜினியரிங் பிரிவு இறுதி ஆண்டு மாணவர்களும் தேர்வில் பங்கேற்றனர். இதில், வேதியியல் இன்ஜினியரிங் துறையில் இறுதி ஆண்டு படிக்கும் சிவன் மேகி என்ற மாணவர், தேசிய அளவில் எட்டாவது இடத்தையும், அனந்தநாராயணன் பொட்டி என்ற மாணவர், 220 இடத்தையும் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

Monday, March 01, 2021

March 01, 2021

‘கேட்’ தோ்வு விடைத்தாள் வெளியீடு: தவறான விடைகளைத் தெரிவிக்கலாம்

கேட் தோ்வு முடிவுகள் மாா்ச் 22-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவா்கள் இதில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயா் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.
PGTRB Computer Instructor Unit test Question Bank

இயந்திரவியல், கட்டடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சோ்வதற்கான இத்தோ்வு கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தோ்வு நடைபெறுகிறது. 2021-22ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கேட் தோ்வு 2021 பிப்ரவரி 5, 6, 7, 12, 13, 14-ஆம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக நடைபெற்றது. இந்தத் தோ்வை மும்பை ஐஐடி நடத்திய நிலையில், தற்போது ஆரம்பக்கட்ட விடைத்தாள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்குமான விடைத்தாளை இணையதள முகவரியில் காணலாம். பரிக்சா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) போட்டி - தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் பாரதப் பிரதமருடன் கலந்துரையாடலாம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! இதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் மும்பை ஐஐடியிடம் தெரிவிக்கலாம். எனினும், இதற்காக ஒவ்வொரு மறுப்பு விடைக்கும் ரூ.500-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இறுதிக்கட்ட விடைத்தாள் மாா்ச் 18 அன்று வெளியிடப்படும்

Thursday, February 04, 2021

February 04, 2021

ஐஐடி கேட் 2021 தேர்வு நாளை தொடக்கம்: 9 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

ஐஐடி கேட் 2021 தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சேர்வதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2021- 22ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு நாளை (பிப்ரவரி 5) தொடங்குகிறது. தொடர்ந்து பிப்.6, 7, 12, 13, 14-ம் தேதிகளில் பாடப் பிரிவு வாரியாகத் தேர்வுகள் நடக்க உள்ளன. சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர். இத்தேர்வை மும்பை ஐஐடி நடத்துகிறது. இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தேர்வர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகத் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரவேண்டும். தேர்வரின் உடல் வெப்பநிலை 99.4 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக இருந்தால் தேர்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, தேர்வை எழுத வேண்டும். முகக்கவசம், கையுறை ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தேர்வர்கள், தங்களுடன் சொந்தமாக சானிடைசர் பாட்டிலை எடுத்துவர வேண்டும், அனைத்து நேரங்களிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Total Pageviews

Search This Blog