HIGH COURT Question
November 18, 2025
Showing posts with label High Court. Show all posts
Showing posts with label High Court. Show all posts
Tuesday, November 18, 2025
Thursday, May 08, 2025
Tuesday, March 18, 2025
Sunday, December 08, 2024
Friday, December 06, 2024
Thursday, December 05, 2024
Wednesday, December 04, 2024
Saturday, October 26, 2024
Sunday, March 24, 2024
Thursday, January 18, 2024
TNPSC
January 18, 2024
TNPSC குரூப்-4 : தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 : தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித் தகுதியை நிர்ணயிப்பது குறித்து பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிப்பது குறித்து பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த குரூப் 4 தேர்வுக்கு கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேநேரம் அதிகபட்ச கல்வித் தகுதி எதுவுமில்லை. அதாவது 10 வகுப்பு தேர்ச்சி முதல் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வரை யார் வேண்டுமானாலும் குரூப் 4 தேர்வை எழுதலாம். இந்தநிலையில், திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு 135 சமையல் கலைஞர்கள் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 10 ஆம் வகுப்பு தோல்வி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், திடீரென அதிக கல்வித்தகுதி இருப்பதாக கூறி, பணியில் இருந்து சதீஷ்குமார் நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதை அதிக கல்வித் தகுதியாக கருத முடியாது. அதனால், அதிக கல்வித்தகுதியுடன் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்திற்கான சிறப்பு விதிகளின்படி, அதிக வயதுடையவர்களை பணியில் நியமிக்கலாம் என்ற உத்தரவு சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு பணியில் நியமிக்கப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமாகக் கருதப்படும். தொடர்ந்து பணியில் நீட்டிக்கவும் உரிமை இல்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும். விரைவாக நடவடிக்கை எடுப்பதன் மூலமாகப் புறக்கணிப்பு மற்றும் சமவாய்ப்புகள் மறுக்கப்படுவது தடுக்கப்படும் என நம்புகிறேன், என தனது தீர்ப்பில் கூறினார்.
Friday, January 12, 2024
High Court order
January 12, 2024
பள்ளிகளில் இதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆபாச படங்கள்:
"பதிவிறக்கம் செய்வது குற்றமல்ல; பகிர்வதுதான் குற்றம்
90s kids எப்படி மது, புகைக்கு அடிமையாகியிருந்தார்களோ, அதேபோல 2K kids ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்
பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் - சென்னை உயர் நீதிமன்றம்
"ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல"
ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல
மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் .
- சென்னை உயர் நீதிமன்றம்
ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல; மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சட்டப்படி குற்றம்
90's kids எப்படி மது, புகைக்கு அடிமையாகியிருந்தார்களோ, அதேபோல் 2K kids ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர் அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும்
பள்ளிகளில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
Thursday, December 14, 2023
teachers news
December 14, 2023
ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு
ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு
தரமான கல்வியை பெறும் உரிமை உள்ளதால், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் ரமேஷ் என்பவர், தனது பணியை வரன்முறை செய்து பணிமூப்பு உள்ளிட்ட பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு:
எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமானது. ஒரு நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு கல்வி மிக முக்கிய பங்கை வகிக்கிறது. உயர் கல்வியை வழங்குவதற்காகத் தான் நாடு முழுவதும் பல்கலைக்கழக அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
இவை, தரமான கல்வியை வழங்க வேண்டும். இதற்காகவே நல்ல ஆசிரியர்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. பல பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்குவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கியோர் மாநில அரசின் நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களையே நாடுகின்றனர். ஆனால், போதிய வசதிகள் இல்லாவிட்டாலும், அங்கேயே கல்வியை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒவ்வொருவரும் தரமான கல்வியைப் பெற உரிமை உண்டு. கல்வி என்பது அடிப்படை மனித உரிமை. இது தனிமனிதன் மட்டுமின்றி ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான கல்விக்கு ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிப்பதே சரியானது.
எனவே, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் நிரந்தர அடிப்படையில் தகுதியான நபர்களை ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் பல்கலைக்கழக மானிய குழு உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும். இதனடிப்படையில் மனுதாரர் மனுவை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
High Court
December 14, 2023
HSHM Case Contempt வழக்கு விசாரணை
Wednesday, November 08, 2023
TNPSC Exams
November 08, 2023
TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு
TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு 'Jaihind' at the end of the paper in TNPSC examination - Maduraiklai High Court verdict
TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ என எழுதியதால் விடைத்தாள் செல்லாது என்று கூறியது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
2014ம் ஆண்டு நடந்த TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வில், இயற்கை வளங்களை காப்பதற்கான முக்கியத்துவம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முடிவில், 'ஜெய் ஹிந்த்.. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்' என எழுதியதற்காக, திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்பவரது விடைத்தாள் செல்லுபடியாகாது என கூறியது ஏற்புடையதல்ல - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு.
விடைத்தாளை மீண்டும் திருத்தி, அவரது கட் ஆஃப் குரூப் 2 பணிக்கு தகுதியுடையதா என பரிசீலிக்கவும் TNPSC-க்கு உத்தரவு!
இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதும்போது, ஒருவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, தேச பக்தியை உணர்வது இயல்புதான்.
ஜெய்ஹிந்த்' என்றால் இந்தியாவுக்கு வெற்றி என்று பொருள். அவ்வாறு எழுதியதற்காகவே விடைத்தாள் செல்லாது என்பது ஏற்கத்தக்கது அல்ல - நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

Sunday, October 08, 2023
maternity leave
October 08, 2023
'Maternity Leave நாட்களை பணிக்காலமாக கருத முடியாது' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
'Maternity Leave days cannot be considered as working time' - High Court action order 'Maternity Leave நாட்களை பணிக்காலமாக கருத முடியாது' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நாகஜோதி என்பவர், சென்னை மாவட்டத்துக்கு, 2018 ஆகஸ்ட்டில் இடமாற்றம் செய்யப்பட்டார்; 2019 ஜனவரியில் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தின்போது, 2020 மார்ச் முதல் டிசம்பர் 1 வரை, 9 மாதங்கள் பேறுகால விடுமுறை எடுத்தார். இந்த விடுமுறை காலத்தை பணிக் காலமாக கருதாததால், தன்னை விட இளையவர்கள், தாசில்தாராக பதவி உயர்வு பெற்று விட்டதாகவும், எனவே, பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதி, தாசில்தாராக பதவி உயர்வு வழங்க கோரியும், உயர் நீதிமன்றத்தில், நாகஜோதி வழக்கு தொடர்ந்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ''முழு சம்பளத்துடன், பேறுகால விடுமுறை எடுக்க உரிமை உள்ளபோது, அந்த விடுமுறை நாட்களை பணிக் காலமாகதான் கருத வேண்டும்.
''கேரளாவில் உள்ள பணி விதிகளின்படி, பயிற்சி காலத்தின்போது பேறுகால விடுமுறை எடுத்தால், பணி காலமாக கருதப்படும். அந்த விதி, தமிழகத்தில் இல்லை என்றாலும், மகளிருக்கு அந்த சலுகையை வழங்க வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எம்.அழகு கவுதம், ''விடுமுறை நாட்களை, முழு பணிக் காலமாக கருத முடியாது,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
வருவாய் பணி விதிகளின்படி, இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும். அதனால், பயிற்சி காலத்துக்கு முழு விலக்கு கோர முடியாது. பயிற்சி காலத்தின் போது, பல தேர்வுக்கு உட்பட வேண்டும். பயிற்சி காலத்தை பூர்த்தி செய்யும்பட்சத்தில், நிரந்தர பணியில் வரன்முறை செய்யப்படுவர். எனவே, பயிற்சி காலத்தை வெறும் சம்பிரதாயமாக கருத முடியாது.
பேறுகால விடுமுறையை, பயிற்சி காலத்தின்போது எடுத்திருந்து, அந்த நாட்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், பயிற்சி காலத்தை நீட்டிக்க, நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. விதிகளில் எந்த திருத்தங்களையும் கொண்டு வருவது, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
அதற்காக, அரசுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பேறுகால விடுமுறையை, பணிக் காலமாக கருதும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tuesday, August 29, 2023
Order of High Court
August 29, 2023
மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கிடையாது: உயர் நீதிமன்றம்
மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கிடையாது: உயர் நீதிமன்றம்
இரண்டு குழந்தைகளுக்கு பின், அடுத்ததாக பிறந்த இரட்டை குழந்தைக்கும் பேறுகால விடுப்பு வழங்க கோரிய, பள்ளிக் கல்வித் துறை ஊழியரின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், உதவியாளராக பணியாற்றுபவருக்கு, முதல் திருமணம் வாயிலாக, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவரது கணவர் இறந்ததால், இரண்டாவதாக திருமணம் செய்தார்; இரட்டை குழந்தை பெற்றார். கருவுற்றிருக்கும்போதே, 11 மாத பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார்; மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'அரசுப் பணியில் சேர்வதற்கு முன், இரண்டு குழந்தைகள் பிறந்தன. பணியில் சேர்ந்த பின், இரண்டாவது திருமணம் வாயிலாக, இரட்டை குழந்தைகள் பிறந்தன. பேறுகால விடுமுறை இதுவரை எடுக்கவில்லை என்பதால், விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு' என கூறப்பட்டது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண், கூடுதல் பிளீடர் அருண்குமார் ஆஜராகி, 'இரண்டு குழந்தைகள் பிறப்புக்கு மட்டுமே, பேறுகால விடுமுறை வழங்க முடியும் என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
'மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை பெற உரிமை இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு தான் பேறுகால விடுமுறை என்பது அரசின் கொள்கை' என்றனர்.
மனுவை விசாரித்த, நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு, நான்கு குழந்தைகள் உள்ளன. மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை இல்லை என்பது அரசின் கொள்கை மற்றும் அடிப்படை விதியாக உள்ளது.
எனவே, பேறுகால சலுகை சட்டத்தின் அடிப்படையில், பேறுகால விடுமுறையை, உரிமையாக மனுதாரர் கோர முடியாது. விடுமுறை நிராகரித்தது செல்லும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை கோரி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை தாக்கல் செய்த மனுவில், 'பணியில் சேர்வதற்கு முன், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
'பேறுகால சலுகையை அனுபவிக்காததால், மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.
'மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை கோர உரிமையில்லை' எனக் கூறி மனுவை, நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்தார்.

Wednesday, August 16, 2023
VIDEOS
August 16, 2023
பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ? - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ? - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கில், அடுத்த கல்வியாண்டு முதல் போக்சோ குறித்த பாடங்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என அம்மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்தது.
இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு காரணம், போக்சோ குறித்த விழிப்புணர்வு இல்லாததே என கருத்து தெரிவித்த கேரள உயர்நீதிமன்றம், இது குறித்து ஒருவாரத்தில் பதில்மனு அளிக்க மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது

Monday, July 10, 2023
Thursday, March 02, 2023
High Court
March 02, 2023
தேர்வு ரத்தான 10ம் வகுப்புக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடையாது
கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகள்
9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு
ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் பரவலால், 2020 - 21ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 9.30 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை திரும்ப பெற்று, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் வழங்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது, ரயில்வே துறையில் 1.03 லட்சம் பணியிடங்களுக்கும், தபால் துறையில் 40 ஆயிரம் பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் 'வீல்' தொழிற்சாலையில் 4,103 பயிற்சியாளர் பணிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம். எனவே, கொரோனாவால் தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஏற்கனவே இதே பிரச்னை தொடர்பான வழக்கில், தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.
இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Thursday, January 26, 2023
temple trustees
January 26, 2023
கோயில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
கோயில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு High Court orders publication of application for appointment of temple trustees
கோயில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பத்தை பிப்.8ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கோயில்களில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பங்களை பிப்ரவரி 8ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அறங்காவலர்கள் பணிக்கான விண்ணப்பங்களை இணையதளங்களில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை முடிக்க அவகாசம் வழங்கப்படும். மேலும், 10 மாவட்டங்களில் அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட வாரியான தேர்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், மீதமுள்ள 29 மாவட்டங்களில் விரைவில் குழுக்கள் அமைக்க வேண்டும். அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 8ம் தேதிக்குள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.