Breaking

Showing posts with label Gram Sabha. Show all posts
Showing posts with label Gram Sabha. Show all posts

Friday, January 26, 2024

January 26, 2024

26.01.2024 - கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் பங்கு

26.01.2024 - கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் பங்கு

கிராம சபைக் கூட்டம் - ஜனவரி 26 - 2024

ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் , ஆசிரியர் பிரதிநிதி , பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

பள்ளி வளர்ச்சி , கற்றல் கற்பித்தல் , உட்கட்டமைப்பு , மாணவர் பாதுகாப்பு , இடைநிற்றல் மற்றும் உயர்கல்வி தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை கிராமசபைக் கூட்டத்தில் முக்கிய கூட்டப் பொருளில் ஒன்றாக இணைக்க வேண்டும்.


கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யவும் மற்றும் பிரச்சனைகள் களையவும் ஒத்துழைப்பு வழங்க கோருதல்.

கிராம சபைக் கூட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பார்வை அலுவலர்கள் ( CEO , DEOs , APOs , BEOs , DCs மற்றும் BRTEs ) மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் அனைவரும் பார்வையாளர்களாக பங்கேற்க வேண்டும்.

Monday, January 22, 2024

January 22, 2024

கிராம சபா கூட்டம் - தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உத்தரவு

கிராம சபா கூட்டம் - தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உத்தரவு Gram Sabha Meeting - Headmasters, Education Officers directed to attend

குடியரசு தின விழா நாளில் நடக்கும் கிராம சபா கூட்டத்தில், தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து கிராமங்களில் கிராமசபா கூட்டம் நடக்கிறது. இதில், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் பங்கேற்று, தங்களது தேவை மற்றம் கோரிக்கை குறித்து நேரடியாக தெரிவிக்க உள்ளனர். இந்நிலையில், தங்கள் பகுதியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில், அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக துாய்மை பணி உள்ளிட்ட செயல்பாடுகளை பள்ளிக்கு அருகில் வசிக்கும் மக்களும், பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர் அல்லது கல்வி அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, இது குறித்து பேச வேண்டும். அதற்காகவே, கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அரசு அறிவுறுத்தியுள்ளது என்றனர்.

Saturday, October 21, 2023

October 21, 2023

நவ.1ல் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு

நவ.1ல் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு Tamil Nadu Government orders to hold Gram Sabha meeting on November 1

நவ.1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும் நவம்பர் 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.



கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்றி முறையை பின்பற்றி உள்ளாட்சிகள் தினத்தன்று வரும் நவம்பர் 1ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடத்த வேண்டும்.



உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.



கிராமசபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்திடக் கூடாது. கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog