Breaking

Showing posts with label job camp. Show all posts
Showing posts with label job camp. Show all posts

Sunday, January 21, 2024

January 21, 2024

ஜன. 23-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்



ஜன. 23-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக ஜனவரி 23 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் படித்து வேலை வாய்ப்பை தேடி வரும் பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் உரிய முறையில் வேலை வாய்ப்பை வழங்க நோக்கில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 23ஆம் தேதி காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட அனைவரும் பங்கேற்கலாம் பட்டதாரிகள், பட்டப்படிப்பு ஐடிஐ, 10 மற்றும் 12ம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்களும் பங்கேற்று அதற்கேற்றவாறு வேலைவாய்ப்பு பெறலாம்.

முகாமிற்கு வரவுள்ளவர்கள் சுயவிவர குறிப்புடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வர வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044 – 27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 16, 2024

January 16, 2024

20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்



Dr.ஏ.சி.சண்முகம்

B.A., B.L., Ex.MP., & MLA., FRCPS - UK ACS மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

இடம்: திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம்

நாள்: 20.01.2024 சனிக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

அனுமதி இலவசம்!

100 மேற்பட்ட நிறுவனங்கள்

வேலூர் பாராளுமன்ற தொகுதியை சார்ந்த பொறியியல், கலை (ம) அறிவியல், மேலாண்மை, ARCH, நர்சிங், பிசியோ, பார்மசி, AHS, மருத்துவத் துறை, டிப்ளமோ, ஐடிஐ, பள்ளி படிப்பு முடித்த / கைவிட்ட அனுபவமில்லாத / அனுபவமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

3000 மேற்பட்ட வேலைவாய்ப்புகள்

Thursday, October 26, 2023

October 26, 2023

அரசு சார்பில் அக்.28-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்



சென்னையில் அரசு சார்பில் அக்.28-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 100 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னை மாவட்டத்தின் 3-வது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்,அக்.28-ம் தேதி சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 முதல்மாலை 3 மணிவரை நடைபெறுகிறது. இந்த முகாமில், 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறைநிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல்12-ம் வகுப்பு தேர்ச்சி வரை, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழிற்கல்வி பட்டயம், பொறியியல்பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்துவித தகுதியுள்ளவர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்டமுன்னோடி வங்கியின் வாயிலாகவங்கிகடன் வழிகாட்டுதல்கள் ஆகியன வழங்கப்படுகிறது. தனியார் துறையில் பணியாற்ற ஆர்வமாக உள்ள அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.. தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரிலோ 044-24615160 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ pjpsanthome@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 25, 2023

October 25, 2023

வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - வரும் 28ஆம் தேதி சிறப்பு முகாம்!



இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! வரும் 28ஆம் தேதி சிறப்பு முகாம்..!! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், வரும் அக்டோபர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள நிலையில், இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் புகைப்படத்தை எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Friday, September 29, 2023

September 29, 2023

நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 30) தனியார் வேலைவாய்ப்பு முகாம்!



சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம், இளைஞர் திறன் திருவிழா ஆகியவை சரவணம்பட்டியில் உள்ள சங்கரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெறவுள்ளன.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் சங்கரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் செப்டம்பர் 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், DDUGKY, RSETI, TNSDC திட்டங்களின்கீழ் நடைபெ றும் இலவச திறன் பயிற்சியில் DDUGKY திட்டத்தின்கீழ் ரெஸ் டாரன்ட் கேப்டன், செக்யூரிட்டி சூப்பர்வைசர், ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ், ரீடெயில் சேல்ஸ் அசோஷியேட் உள்ளிட்ட பயிற்சிகள், RSETI திட்டத்தின்கீழ், பியூட்டி பார்லர் மேனேஜ்மென்ட், வுமன்ஸ் டெய்லர், கேன்டில் மேக்கிங், காஸ்டியூம் ஜுவல்லரி உள்ளிட்டபயிற்சிகள் TNSDC திட்டத்தின்கீழ் ஆட்டோ மோட்டிவ், டெக்ஸ்டைல்ஸ் &ஹேண்ட்லூம்ஸ் உள்ளிட்ட பயிற் சிகள் நடைபெறவுள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம், இளைஞர் திறன் திருவிழாவில் 50-க்கும்மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவ னங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளனர். இதில், 8 ஆம் வகுப்பு முதல் இளங்கலை, முதுகலை தொழில்நுட் பக் கல்வி, பட்டயப் படிப்பு, ஐடிஐ பயின்றவர்கள் கலந்துகொள்ள லாம்.எனவே, 18 முதல் 35 வரையுள்ள வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவர குறிப்பு, புகைப்படம், இதர தகுதிச் சான்றுகளுடன் (அசல், நகல்) கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Wednesday, March 15, 2023

March 15, 2023

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 18.03.23

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 18ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகின்றன.

இந்த முகாம் பற்றி, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், நேற்று துவக்கி வைத்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tuesday, March 14, 2023

March 14, 2023

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 15.03.2023

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 15.03.2023

ஓய்வூதியர்கள் (All Retired Officers) தொழிலதிபர்கள். இல்லத்தரசிகள் முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு

நாள்: 15.03.2023 புதன்கிழமை நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

தொடர்புக்கு 63809 08501

அகில் பிளாசா, 2வது தளம், பெருந்துறை ரோடு, சத்தியமூர்த்தி ஹாஸ்பிட்டல் அருகில் ஈரோடு.

Saturday, January 21, 2023

January 21, 2023

நாளை (22.01.2023) மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் Tomorrow (22.01.2023) huge private placement camp

கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர்  செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

January 21, 2023 by பிரபாகரன் வீரமலை

கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நலத்துறையின் சார்பாகவும், கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் கரூர் மாவட்ட மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (22.01.2023 ) நடைபெற உள்ளது.

இந்த சிறப்புமிக்க வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு தொழில் திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சேர்க்கை சான்றிதழ்களை வழங்க உள்ளார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 220 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 26 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி 2 கோடி 67 லட்சம் இணைப்பு இணைத்து கொண்டிருக்கிறார்கள். இதில் 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து உள்ளார்கள். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது. மின் இணைப்புடன் ஆதார்  என்னை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் இரத்து ஆகும் என்ற பயம் தேவையில்லை. விவசாயிகளுக்கு விசைத்தறி கைத்தறி நெசவாளர்களுக்கு குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம்  மின்சாரத் துறையை மேம்படுத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு 9048 கோடி மானியத்தை வழங்கினார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 4000 கோடி மானியத்தை வழங்கி உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியோடு இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ‌.சுந்தரவதனம்,இ.கா‌.ப., மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) திரு.ஞானசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ஷீலா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் திரு சீனிவாசன், கரூர் மாநகராட்சி துணை மேயர் திரு.ப. சரவணன், கல்லூரி முதல்வர் திருமதி கௌசல்யா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி வாணிஸ்வரி, மண்டல தலைவர் திரு எஸ். பி.கனகராஜ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

Thursday, January 19, 2023

January 19, 2023

ஜன. 21-இல் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

ஜன. 21-இல் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ஜன.21-ஆம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் சாா்பில் 21-ஆம் தேதி சனிக்கிழமை நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பல்வேறு பணிகளுக்கு தனியாா் நிறுவனங்கள் சாா்பில் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட 8-ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், பொறியியல் கல்வி பயின்ற வேலையில்லா இளைஞா்கள் முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

Wednesday, October 26, 2022

October 26, 2022

28.10.2022 (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Press Release No : 1868 ] From the Director of Employment and Training - On Private Job Fair on 28th October 2022

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர். வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள . ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு. கொ. வீரராகவ ராவ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Wednesday, October 05, 2022

October 05, 2022

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 09.10.2022)

அன்பார்ந்ந தனியார் பள்ளி தாளாளர்களுக்கும், முதல்வர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஒருங்கினைப்பாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கம்...

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (09/10/2022) திருப்பத்தூர் ST. MARY'S MATRIC. HR. SEC பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர்.

விருப்பமுள்ள,அனுபவமுள்ள,அனுபவமற்ற மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்....

BE, ME, B. TECH, M. TECH, IT, Ph.D, MPHIL, M. ED, B. ED, BSc, MSc, BA, MA, B. LIT, M. LIT, B. COM & M. COM போன்ற அனைத்து பட்டதாரிகளும் ( without B. ED) கலந்து கொள்ளலாம்....

தனியார் பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:

ST. MARY'S MATRIC. HR. SEC.

SCHOOL, UDAYAMUTHUR, VISHAMANGALAM,

TIRUPATTUR MAIN ROAD, TIRUPATTUR 635652...

நேரம்: 08:30AM - 03:30PM

தொடர்புக்கு:

8148453366,8248111592,6382013957.

Saturday, September 03, 2022

September 03, 2022

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!

தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்

WANTED TEACHERS Tamil, English, Physics, Chemistry, Maths, Botany, Zoology, Comp.Sci., Commerce, Economics, Accountancy, History, Business Maths, Hindi, Abacus,

Music, Yoga, Physical Education, D.T.Ed., B.E.,

M.Sc., B.Sc., MA., B.A., M.Com., B.Com., MCA,

BCA, D.T.Ed., M.Tech., B.Tech with B.Ed.,
or without B.Ed., 

Montessori (Experience / Fresher) 

இடம் : 
VELALAR VIDYALAYAA SENIOR SEC SCHOOL

MARUTHI NAGAR,THINDAL, ERODE

நாள் : 04.09.2022 SUNDAY 

நேரம் : 9.00 am - 4.00pm

94425 68675,97888 29179

Total Pageviews

Search This Blog