Breaking

Showing posts with label நீட் தேர்வு. Show all posts
Showing posts with label நீட் தேர்வு. Show all posts

Wednesday, July 20, 2022

July 20, 2022

கேரள நீட் கொடுமை- உண்மை கண்டறியும் குழு அமைப்பு

கேரள நீட் கொடுமை- உண்மை கண்டறியும் குழு அமைப்பு

கொல்லம் அருகே நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை களையச்செய்து தேர்வு எழுதவைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | DEO Promotion List Preparation - Dir Proceeding

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள அமைச்சர் பிந்து கடிதம் எழுதிய நிலையில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.
July 20, 2022

நீட் தேர்வு ஆடை விவகாரம்: 5 பேர் கைது

நீட் தேர்வு ஆடை விவகாரம்: 5 பேர் கைது

கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION (GROUP I SERVICES) (Counselling) - PDF (19.07.2022 (COUNS_PHASE_II))

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில் 5 பெண்களை கைது செய்துள்ளனர். 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என காவல்துரையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.

Tuesday, July 19, 2022

July 19, 2022

நீட் தோ்வா்கள் மன நல ஆலோசனைக்கு 104 எண்ணை அழைக்கலாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ட்,
நீட் தோ்வா்கள் மன நல ஆலோசனைக்கு 104 எண்ணை அழைக்கலாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).

தமிழகத்தில் நீட் தோ்வு எழுதிய தோ்வா்களுக்கு மன அழுத்தம் மற்றும் குழப்பங்கள் இருந்தால், 104 என்ற இலவச எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் நீட் தோ்வு எழுதிய 1,42,286 மாணவ, மாணவிகளுக்கு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை உதவி மையத்தின் மூலம் மனநல ஆலோசகா்களை கொண்டு ஆலோசனை வழங்கும் சேவையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் உமா, மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நடைபெற்ற நீட் தோ்வை தமிழகத்தில் இருந்து மட்டும் 1,42,286 மாணவா்கள் எழுதியுள்ளனா். இது கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்வு எழுதிய மாணவா்களின் எண்ணிக்கையான 1,10,971 என்பதைவிட கூடுதலாக உள்ளது. 2020-ம் ஆண்டில் 1,17,000 மாணவா்கள் தமிழகத்தில் இருந்து நீட் தோ்வு எழுதினா். குறிப்பாக, அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு, தோ்வு எழுதிய 17,567 மாணவா்களின் பட்டியல் பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்டது. நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கும், அவா்களின் பெற்றோா்களுக்கும் மனநல ஆலோசனைகள், மனநல மருத்துவா்கள் மற்றும் மனநல ஆலோசகா்களால் வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க | தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசால் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கடந்த வருடம் 445 மாணவா்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் (324 மாணவா்கள் அரசு கல்லூரிகள், 121 மாணவா்கள் தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்), 110 மாணவா்கள் பி.டி.எஸ். படிப்புக்கும் (13 மாணவா்கள் அரசு கல்லூரிகள், 97 மாணவா்கள் தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) என மொத்தம் 555 மாணவா்கள் பயனடைந்தனா்.

இந்த ஆண்டு நீட் தோ்வு எழுதிய மாணவா்கள் நலனில் அக்கறையுள்ள தமிழக அரசு தொடா்ந்து மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கிவருகிறது. மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மனநல ஆலோசனைகள் தொடா்ந்து பெறுவதற்கு 104 என்ற கட்டணமில்லா இலவச எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Monday, July 18, 2022

July 18, 2022

நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி, ஹரியானாவில் ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி மற்றும் ஹரியானாவில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் பணம் கைமாற்றப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வ்ருகிறது

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது.

இதையும் படிக்க | இன்று விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர்

இதையடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தேர்வர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்த தேர்வு எழுதிய 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக விண்ணப்பதாரர்களின் புகைப்படங்களை கலந்து மார்பிங் செய்து பயன்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சுஷில் ரஞ்சன், பிரிஜ் மோகன் சிங், பப்பு, உமா சங்கர் குப்தா, நிதி, கிருஷ்ண சங்கர் யோகி, சன்னி ரஞ்சன், ரகுநந்தன், ஜீபு லால், ஹேமேந்திரா மற்றும் பாரத் சிங் ஆகியோர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
July 18, 2022

நீட் தேர்வு எழுதிய தந்தை, மகள்: 50 வயதிலும் பார்மசிஸ்ட் ஆர்வம்

ராணிப்பேட்டை மையத்தில் மகள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 50 வயதான அவரது தந்தை வேலூர் மையத்தில் ஆர்வத்துடன் நீட் தேர்வு எழுதினார். வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீர் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் அவரை நிறுத்தி, ‘பெற்றோர் உள்ளே செல்ல அனுமதி கிடையாது’ என்றனர். அதற்கு அவர், ‘நானும் நீட் தேர்வு எழுத போகிறேன்’ என்றார். இதையடுத்து, அவரின் அனுமதி சீட்டை சோதனை செய்து, தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘நான் ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை சேர்ந்த தயாளன்(50). பார்மஸ்சிஸ்டாக பணிபுரிகிறேன். எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் ராணிப்பேட்டை டிஏவி பெல் மையத்தில் நீட் தேர்வு எழுதுகிறார். நீட் தேர்வு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் நானும் எழுத வந்துள்ளேன்’ என்றார். * நீட் தேர்வு எழுதிய 70 வயது தாத்தா

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த 70 வயதான பிரின்ஸ் மாணிக்கம், கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரி மையத்தில் நேற்று நீட் தேர்வு எழுதினார். அவர் கூறியதாவது:

இதையும் படிக்க | தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

நான் விவசாயம் படித்து, பிஎச்டி முடித்துள்ளேன். வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு சிறு வயது முதல் டாக்டராக வேண்டும் என்பது கனவு. மாணவர்கள் பலர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வுக்காக தற்கொலை செய்து கொள்வது என்பது தீர்வாகாது. அப்படி என்ன இந்த தேர்வில் இருக்கிறது? என கண்டறியவே இந்த முறை தேர்வு எழுதினேன் என்றார். இதேபோல மதுரை அருகே உள்ள மாடக்குளத்தைச் சேர்ந்த 55 வயது ராஜ்ஜியக்கொடி (55)யும் நீட் தேர்வு எழுதினார்.

Sunday, July 17, 2022

July 17, 2022

Neet 2022: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு... 18 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தை பொறுத்தவரை 18 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வு நாடு முழுவதும் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில், 10 லட்சத்து 64 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்களை சோதிப்பதற்கான இடங்கள், சமூக இடைவெளி விட்டு நிற்க குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.

தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதிச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் வண்ண புகைப்படமும் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும் ஒன்றாம் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒத்துப் போக வேண்டும்.

மாணவர்களின் கையெழுத்து அனுமதி சீட்டின் பக்கம் இரண்டில் புகைப்படத்தின் மீது இடதுபக்கம் இருக்க வேண்டும். பெற்றோரின் கையெழுத்து அனுமதிச் சீட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாணவருக்கும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் வந்து சேர வேண்டும். மதியம் 1.30 மணிக்கு மேல் நுழைவாயில் மூடப்படும். மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, என ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேர்வு எழுதி முடித்த பின், ஓ.எம்.ஆர் காகிதத்தை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வினாத்தாளை மட்டுமே வெளியே கொண்டுவர வேண்டும்.

தேர்வு கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் வெளியே செல்லக் கூடாது. தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரண்டு முறை attendance படிவத்தில் நேரம் குறிபிட்டு கையெழுத்திட வேண்டும். இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் கொடுக்கவில்லை என கருதப்படும்..

மாணவர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்கள், அனுமதி சீட்டு, வைத்திருக்கலாம்.

Saturday, July 16, 2022

July 16, 2022

NEET ( 17.07.2022 ) - தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

நாளை பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 543 நகரங்களில் நடைபெறவுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழ், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.



கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள் 12 மூன்றாம் பாலினத்தவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 31,803 பேர் தமிழ் மொழியில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். நாளை பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு நடைபெறவுள்ளதையடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதில், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிற்பகல் 1.30 மணிக்கு நீட் தேர்வு மைய நுழைவாயில் மூடப்படும். அதன்பின் மாணவர்களுக்கு அனுமதியில்லை.
மாணவர்கள், பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் உரிய இடத்தில் இருக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப் பதிவு பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்சை அவசியம். மாணவர்கள் செல்போன்களில் கொண்டுவரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தேர்வு மையத்தில் வழங்கப்படும் என்.95 முகக்கவசத்தை மாணவர்கள் கட்டாயம் அணிய வேண்டும்.
தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரு முறை வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும்.
மாணவர்கள் வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்களை வைத்திருக்கலாம்.
செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதனப் பொருளையும் மாணவர்கள் தேர்வறைக்குள் கொண்டுவரக் கூடாது என்பன உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Total Pageviews

Search This Blog