Tuesday, May 19, 2026
Saturday, February 10, 2024
Incentive for +2 students: Education Department notification
தொழிற் பயிற்சி பெறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்த விவரங்கள வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிதியானது விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, December 22, 2023
நாளை தொடங்குகிறது பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை!
Thursday, November 23, 2023
பள்ளிகளில் ‘ பிராட்பேண்ட் ' : கல்வித் துறை உத்தரவு. 'Broadband' in Schools: Education Department
பள்ளிகளில் ‘ பிராட்பேண்ட் ' : கல்வித் துறை உத்தரவு.
தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை நிறுவுவது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் சராசரியாக பத்து முதல் இருபது கணினிகள், புரொஜக்டா்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு தனித்தனியாக 100 ம்க்ஷல்ள் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 (ஜிஎஸ்டி உள்பட) கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம்.
அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பிராண்ட் பேண்ட் இணைப்புக்கான நிறுவுதல் கட்டணத்தை பள்ளிக்கு வழங்கப்படும் மானியத் தொகையிலிருந்து செலுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, September 14, 2022
"சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள்" - கல்வித்துறை திடீர் அறிவிப்பு
"சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள்" - கல்வித்துறை திடீர் அறிவிப்பு
பொது தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்தலாம்"
சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி - கல்வித்துறை திடீர் அறிவிப்பு
விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில், கல்வித்துறை புதிய அறிவிப்பு
Tuesday, September 06, 2022
'அரசு பள்ளிகளில் தரமான இலவச கல்வி வேண்டும்!'
"ஏழை, பணக்காரர் என அனைத்து மாணவர் களுக்கும், தரமான இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்." என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
சென்னையில் நடந்த, 'புதுமைப் பெண்' திட் டம் மற்றும் மாதிரி பள்ளிகள் துவக்க விழாவில் கெஜ்ரிவால் பேசியதாவது:
கல்லுாரி செல்லும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும், 'புதுமைப் பெண்' திட் டம் புரட்சிகரமானது. மாணவியர் பொருளாதார பற்றாக்குறையால், உயர் கல்வியை இடையி லேயே நிறுத்துவது, இந்த திட்டத்தால் குறையும். இந்தியாவில், 27 கோடி மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
அவர்களில், 66 சதவீதமான, 18 கோடி பேர். அரசு பள்ளிகளில் தான் படிக்கின்றனர். ஆனால், தமிழகம், டில்லி உட்பட சில மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில், பள்ளிகளின் உள் கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.
தனியார் பள்ளிகளை போன்ற தரமான கல் வியை, அரசு பள்ளிகளில் வழங்கும் வரை, வளர்ந்த நாடாகும் கனவு நனவாகாது. போது, அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் தற் இணைந்து, கல்வி திட்டங்களை செயல்படுத்து கின்றன. இதேநிலை நீடித்தால், இன்னும் ஐந்து ஆண்டுகளில், நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Monday, August 08, 2022
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா?
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா? நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
(அ) உக்ரைனில் போர் காரணமாக, மருத்துவக் கல்வியை தொடர முடியாமல், தாயகம் திரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி தேசிய மருத்துவ ஆணையத்தின் முன் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தில்லி வந்து போராட்டம் நடத்தினார்களா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
(இ) உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்காக எம்.பி.க்கள் மற்றும் பொது பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதா? அப்படியெனில், அதன் விவரங்கள் மற்றும் அதற்கு என்ன பதில் தரப்பட்டது?
(ஈ) போர் காரணமாக உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மறுசேர்க்கை வழங்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள் என்ன?
வைகோவின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் அளித்த பதில்:-
(அ) முதல் (ஈ) வரை: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் பிரச்னை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு “திறன் தணிக்கை தேர்வு (Screening Test) விதிமுறைகள்- 2002” அல்லது “வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி உரிமம் விதிமுறைகள்- 2021” கீழ் வருகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 இன் படி, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை. வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்ய இந்திய மருத்துவ ஆணையத்தால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இந்திய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள திட்டத்தின் கீழ், இளங்கலை மருத்துவப் படிப்பின் கடைசி ஆண்டில் (கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்றவை காரணமாக, வெளிநாட்டு மருத்துவ நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது) இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தனர். இதன்படி, அந்தந்த நிறுவனத்தால் படித்து முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது
இந்திய மருத்துவ ஆணையம் அறிவித்த பின்பு, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு, வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMG) தகுதி பெற்றவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாய சுழற்சி மருத்துவப் பயிற்சி (CRMI) பெற வேண்டும். அதன்பிறகு, இந்திய நிலைமைகளின் படி மருத்துவப் பயிற்சிகள் வழங்கப்படும்.
வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சுமூகமான முறையில் வழங்குவதற்காக, கிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து பல்கலைக் கழகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அவற்றைத் தீர்ப்பதற்கும், மாணவர்களுக்கு உதவுவதற்கும் தூதரகத்தின் இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
Thursday, June 02, 2022
ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள், மே 13ல் முடிந்தன. மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன் 12 வரை கோடை விடுமுறை.
இந்நிலையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை 5ம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும், 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை, பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புக்கு, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி திறந்த பின் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tuesday, May 17, 2022
மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குநர்களின் தெளிவான விளக்கம் - ஆசிரியர் கூட்டணி அறிக்கை!
தமிழக ஆசிரியர் கூட்டணி
அரசு அறிந்தேற்பு எண்:36/2001
மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குனர்களின் தெளிவான அறிக்கை..
பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரின் தெளிவான அறிவிப்புக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 20ஆம் தேதி வரை பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து நிலை ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உணரவேண்டும். மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்தவர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தடையின்மைச் சான்று பெற்று வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள் தயக்கமின்றி செல்லலாம். நேற்று இரவு ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது "இயக்குநரகத்தின் சார்பில் நாங்கள் தெளிவாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்பு வழங்கி விட்டோம்.. எவ்வித தயக்கமின்றி அவரவர்கள் செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்." சங்க வித்தியாசமின்றி ஆசிரியர்களின் நலனுக்காக தான் நாம் சங்கம் நடத்தி வருகின்றோம். சங்கத் தலைவர்கள் அவரவர்கள் முழு பொறுப்பேற்று பணி முடித்த ஆசிரியர்களை விடுவித்து அனுப்பி வைப்போம். எவராவது நடவடிக்கைகள் எடுத்தால் தகவலினை தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
ஆட்சியின் மீது வெறுப்புணர்வை ஆசிரியர்களுக்கு நாளுக்கு நாள் பீறிட்டு எழச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு சிலர் இதுபோன்று செய்து வருகிறார்கள் என்பதே எதார்த்த உண்மையாகும். மாணவர்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பது, ஆசிரியர்கள் 20 ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்வது, அப்புறம் 20 ஆம் தேதி வரை வரத் தேவையில்லை என்று சொல்லுவது இப்படி எல்லாம் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு உள் நோக்கத்தோடு திட்டமிட்டு ஆசிரியர்களை பழிவாங்குகிறார்கள் என்று பேச வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காலம் வரும் போது இதனை நாங்கள் நிருபிப்போம் ...
வாழ்த்துகளுடன்...
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.
மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.
அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.
க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.
Saturday, April 16, 2022
பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவிடும் வகையில் உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள்: ஏப்ரல் 18 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும், அதன் தகவல்களை அறியவும் ‘நான் முதல்வன்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், உயர்கல்வி மற்றும்வேலைவாய்ப்பு குறித்த பல்வேறுதகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு பல்துறை நிபுணர்களைக் கொண்டு வரும்18, 19-ம் தேதிகளில் முதல்கட்டமாகவும், 22, 23-ம் தேதிகளில் 2-ம் கட்டமாகவும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், மருத்துவம், அறிவியல்,பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வங்கி, பணப் பரிவர்த்தனை, காப்பீடு, அரசு, விவசாயம், தொலைதொடர்பு சட்டம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
அந்தந்த துறைகளில் உள்ள உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து அவர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கஉள்ளனர். உயர்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், நுழைவுத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளனர்.
அனைத்து அறிவியல் பிரிவு மாணவர்களும் வரும் 18 மற்றும் 22-ம் தேதிகளிலும், மற்ற பிரிவு மாணவர்கள் 19 மற்றும் 23-ம் தேதிகளிலும் ஒரே இடத்தில் கூடி, நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த 3 மணிநேர பயிற்சி வகுப்பை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்துவதற்கு உரிய அறிவுறுத்தல்களையும், அந்தந்த பாட ஆசிரியர்கள் வாயிலாக வழங்க வேண்டும்.
இதற்கான பணிகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
Monday, April 11, 2022
பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது
100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்
9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%
11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% -
பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை
அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் -
பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேர இதுவரை 6.72 லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் - பள்ளிக்கல்வித்துறை.
Saturday, March 12, 2022
ஏப்ரல் வரை மாணவர் சேரலாம் - பள்ளி கல்வி துறை அனுமதி!
'ஒன்பதாம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பருடன் மாணவர் சேர்க்கை நிறுத்தி கொள்ளப்படும். அதன்பின், மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதி விலக்கு காரணமாக, டிசம்பர் வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால், பல தனியார்பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

