Breaking

Showing posts with label shocking information. Show all posts
Showing posts with label shocking information. Show all posts

Saturday, June 11, 2022

June 11, 2022

10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத 34 மாணவர்கள் தற்கொலை; கடும் அதிர்ச்சி!

ஆந்திராவில், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களில், 34 பேர் தற்கொலை செய்து கொண்டது, மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆறு லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.கடந்த 3-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், நான்கு லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துஇருந்தனர்.

தேர்ச்சி அடையாத இரண்டு லட்சம் பேரில் 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவ - மாணவியரின் பெற்றோருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆறுதல் கூறினார். இதற்கு, ஒய்.எஸ்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ-.,க்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Thursday, June 02, 2022

June 02, 2022

அதிர்ச்சி தகவல்.. சட்டவிரோதமாக 269 பள்ளிகள்.. மாநகராட்சி அறிக்கை..!

BJP leader Nitish Rane from Mumbai, Maharashtra, had recently written a letter to Chief Minister Uttam Thackeray.

The letter said the schools were operating without proper permits and the future of the students was being questioned, adding that action should be taken to find illegal schools as soon as possible.

Mumbai Corporation education officials have been informed to take action in this regard. Following this, the education officials of the corporation conducted an inspection and submitted a report.

According to the report, a survey conducted in Mumbai during the current academic year (2022 - 2023) revealed that 269 schools were operating illegally without proper permits. During the last academic year, 283 schools were found to be operating illegally and 11 schools were closed.

In addition, 4 schools were incorporated into the National Institute of Open Schools. 4 more schools were brought under the control of the corporation. Similarly, a survey of schools operating under the Mirabayandar Corporation revealed that 7 schools were operating illegally. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாஜக பிரமுகர் நித்தேஷ் ரானே அண்மையில் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், உரிய அனுமதியின்றி பள்ளிகள் நடந்து வருவதாகவும், இதில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகவும், விரைவில் சட்டவிரோத பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மும்பை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், மும்பையில் நடப்பு கல்வியாண்டில் (2022 - 2023) நடத்திய ஆய்வின்படி 269 பள்ளிகள் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வருவது தெரியவந்தது.

கடந்த கல்வி ஆண்டை பொறுத்தவரை 283 பள்ளிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 பள்ளிகள் மூடப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், 4 பள்ளிகள் தேசிய இன்ஸ்டிடியூட் ஆப் திறந்தவெளி பள்ளிகளில் இணைக்கப்பட்டது. இன்னும் 4 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

இதேபோல, மிராபயந்தர் மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகளில் நடத்திய ஆய்வில் 7 பள்ளிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
June 02, 2022

தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது... ஒற்றை இலக்க மாணவர்களைக்கொண்டு செயல்படும் 669 பள்ளிகள் - அதிர்ச்சி தகவல்!'

தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லாமலும், ஒற்றை இலக்க மாணவர்களோடு 669 பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும் கல்வித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2022 - 2023ஆம் கல்வியாண்டில் வருகிற ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், பள்ளிகளைத் திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் இன்று (ஜூன் 2) ஆலோசனை நடத்தினார்.

அப்போது, “அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழுவின் உதவியுடன் 14 மாணவர்கள் சேர்க்கைப்பேரணியை நடத்திட வேண்டும். ஒரு மாணவரும் இல்லாத 22 பள்ளிகளில் 10 மாணவர்களை சேர்த்தால் 2 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்.

மேலும், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள 669 பள்ளிகளிலும் இரட்டை இலக்கத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.

ஓரிலக்க கல்வித்துறை:

தமிழ்நாட்டில் 22 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவரும், ஆசிரியர்களும் இல்லாமல் உள்ளனர். 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். ஒரு மாணவர் மட்டும் 11 பள்ளிகளிலும், இரண்டு மாணவர்கள் 24 பள்ளிகளிலும், மூன்று மாணவர்கள் 41 பள்ளிகளிலும், நான்கு மாணவர்கள் 50 பள்ளிகளிலும், ஐந்து மாணவர்கள் 77 பள்ளிகளிலும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது.. ஒற்றை இலக்க மாணவர்களில் செயல்படும் 669 பள்ளிகள் - கல்வித்துறை அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது.. ஒற்றை இலக்க மாணவர்களில் செயல்படும் 669 பள்ளிகள் - கல்வித்துறை அதிர்ச்சி தகவல்!அதேபோல், 114 பள்ளிகளில் ஆறு மாணவர்களும், 95 பள்ளிகளில் ஏழு மாணவர்களும், 104 பள்ளிகளில் எட்டு மாணவர்களும், 153 பள்ளிகளில் 9 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

மேலும், 3800 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 3,131 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு மேல் 60 மாணவர்களுக்குள் இருந்தும் தலைமை ஆசிரியர் மட்டுமே 5 வகுப்பிற்கான பாடங்களை நடத்தும் சூழ்நிலை உள்ளது.

தரமான கட்டமைப்பு வேண்டும்:

இவ்வாறு இருக்கும் தலைமை ஆசிரியரும் அலுவல் பணிகள் காரணமாக வெளியே சென்றால், மாணவர்களுக்கு கற்பிப்பதற்கும் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள 31,336 பள்ளிகளில் 1,08,537 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 25,50,997 மாணவர்கள் படித்து வருகின்றனர் என பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், “அரசுப்பள்ளிகளில் தரமான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். குடிநீர், கழிவுநீர் வசதிகளை முறையாக ஏற்படுத்த வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என நியமிக்கப்பட வேண்டும். தரமான கல்வியை அளிப்பதற்கும், நவீன முறையில் கல்வியை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

Total Pageviews

Search This Blog