Breaking

Showing posts with label CONFERENCE. Show all posts
Showing posts with label CONFERENCE. Show all posts

Saturday, March 15, 2025

Thursday, December 07, 2023

December 07, 2023

மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

விருதுநகரில் உயர்கல்வி வாய்ப்பு மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்...

Monday, March 27, 2023

March 27, 2023

அதிகரிக்கும் கரோனா: மத்திய அரசுடன் தமிழக அதிகாரிகள் இன்று ஆலோசனை

அதிகரிக்கும் கரோனா: மத்திய அரசுடன் தமிழக அதிகாரிகள் இன்று ஆலோசனை - Increasing Corona: Tamil Nadu officials will consult with the central government today

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷ ணுடன் மாநில மக்கள் நல்வாழ் வுத் துறை அதிகாரிகள் திங்கள் கிழமை (மார்ச் 27) காணொலி முறையில் கலந்தாலோசனை நடத்தவுள்ளனர்.

Tuesday, January 31, 2023

January 31, 2023

G20 Education Conference - மாணவர் இடைநிற்றலை தடுப்பது குறித்து ஜி20 கல்வி மாநாட்டில் ஆலோசனை

மாணவர் இடைநிற்றலை தடுப்பது குறித்து ஜி20 கல்வி மாநாட்டில் ஆலோசிக்கப்படும்: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்G20 education summit to discuss curbing student dropout: IIT Chennai director Kamakody informs

மாணவர் இடைநிற்றலை தடுப்பது குறித்து ஜி20 கல்வி மாநாட்டில் ஆலோசிக்கப்படும்: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்

கற்றலில் மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஜி20 கல்வி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதையொட்டி கல்வி சார்ந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னையில் ஜன.31 முதல் பிப்.2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

முதல் நாளில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் சிறப்புகருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நடைபெறுகிறது.

முக்கிய முடிவுகள்: இதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் ஒவ்வொரு நாடுகளும் பின்பற்றும் பாடத்திட்டங்கள், செயல்பாடுகள், திறன் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதன்பின் பிப்.1, 2-ம் தேதிகளில் நடைபெறும் கல்வி மாநாட்டில் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து நாடுகளிலும் மாணவர்கள் இடைநிற்றல் இருக்கிறது. நம் நாட்டில் 13 கோடி பேர் மாணவப் பருவத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பட்டதாரிகளாக மாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இந்த கருத்தரங்கம் வாயிலாக எதிர்பார்க்கலாம்.

கருத்தரங்கில் மொத்தம் 29 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பேசப்படும் அனைத்து நல்ல கருத்துகளையும் சேர்த்து ஒரு கொள்கையாகக் கொண்டு வருவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது. கரோனா காலத்தில் கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.

அதன் பின்னும் கல்வியில் தொழில்நுட்ப தேவை உயர்ந்து இருக்கிறது. இதுகுறித்தும் கருத்தரங்கில் விவாதிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது மத்திய கல்வித்துறை இணை செயலர் நீதா பிரசாத், ஜி20 கல்வி பிரிவின் தலைவர் சைதன்யா பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Thursday, December 29, 2022

December 29, 2022

உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சு

உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சு

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் குழுவினருடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் முடித்துக் கொள்ளப்படுமா அல்லது போராட்டம் தொடருமா என்பது சற்று நேரத்தில் தெரியவரும்.

Tuesday, September 13, 2022

September 13, 2022

தமிழக அரசின் அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

தமிழக அரசின் அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

தமிழக அரசின் துறை வாரியான திட்ட பணிகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை செயலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, முன்னோடியாக கலந்து கொண்டுள்ளார்.

நிதிநிலை அறிக்கை, திட்டங்களின் நிலை என்ன, கூடுதலாக எடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் என்ன? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 2022- 23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் துறைசார்ந்து எந்த நிலையில் இருக்கின்றன? அதற்கான நிதிகள் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? திட்டங்கள் சரியாக சென்று சேர்கிறதா? முடியும் தருவாயில் உள்ள திட்டங்கள் எத்தனை? உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடைபெறவுள்ளது.

துறைவாரியான திட்ட பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் தலைமையிலான அனைத்துத்துறை செயலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருக்கிறது. மேலும் பருவமழை தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Tuesday, August 30, 2022

August 30, 2022

சென்னையில் செப். 10ம் தேதி 5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

Chennai in Sep. Conference of 5 lakh teachers on 10th: Chief Minister M.K.Stalin will attend

புதுக்கோட்டையில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிக ளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங் கேற்ற அமைப்பின் மாநில பொது செயலாளரும், ஜாக்டோ ஜியோ அமைப் பின் மாநில ஒருங்கிணைப் பாளருமான சண்முகநா தன் அளித்த பேட்டி:

பள்ளி கல்வித்துறை யில் ஆணையர் என்ற பொறுப்பு, ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப டுத்தி உள்ளது. ஆணைய

ரின் செயல்பாடு தான் தீவுத்திடலில் நடக்கிறது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. அந்த பதவியை ஒழிக்க வேண் டும் என்பது தான் எங்க ளின் கோரிக்கை. அதை நிச்சயம் முதல்வர் செய் வார் என்ற நம்பிக்கை எங் களுக்கு உள்ளது.

இதில் தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் பங் கேற்கிறார். செப்டம்பர் 10ம் தேதிக்கு முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப் பின் முக்கிய கோரிக்கைக ளான பழைய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர் களுக்கு மத்திய அரசுக்கு ணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்று நம்பு கிறோம். இவ்வாறு அவர்

செப்டம்பர் 10ம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் பங் கேற்கும் வாழ்வாதார நம் பிக்கை மாநாடுசென்னை கூறினார்.

Monday, August 29, 2022

August 29, 2022

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு: பொதுச் செயலாளர் தகவல்

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு: பொதுச் செயலாளர் தகவல் - 25,000 people participate in JACTO-JEO Conference on behalf of Primary School Teachers Alliance: General Secretary Information

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித் துள்ளார்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வடக்கு மண்டல மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் தலைமைதாங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடக்க இருக்கின்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வர இருக்கின்றனர்.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமுல்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது, தொடக்க கல்வித்துறை முழு சுதந்திரமாக இயங்க அரசாணை 101, 108 ஆகியவற்றை ரத்து செய்தல், தேசிய மருத்துவ காப்பீட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ செலவினங்களை முழுவதுமாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள பணிப்பாதுகாப்பு போல ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யும் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவற்றை பரிசீலித்து அவர் அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, August 22, 2022

August 22, 2022

தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - செப்டம்பர் 10ம் தேதி

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும்

ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு

வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் சென்னை - தீவுத்திடலில் நடைபெற இருக்கிறது

வங்கக் கடலோரம் சங்கமித்து சாதிப்போம் வாருங்கள் !!!

இவண்...

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

ஜாக்டோ ஜியோ


CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Friday, August 19, 2022

August 19, 2022

ஜாக்டா ஜியோ மாநாடு செப்டம்பர் 4 ல் சென்னையில் நடைபெறுகிறது - முதல்வர் கலந்துகொள்கிறார் - வைக்கப்படும் கோரிக்கைகள்

ஜாக்டா ஜியோ மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார்.

ஜாக்டா ஜியோ மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார்.

தமிழக முதல்வர் அவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகள்

1) CPS ரத்து செய்ய வேண்டும்.. பழைய ஓய்வூதியத்-திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

2)அரசாணை 101,108 ரத்து செய்ய வேண்டும்

(தொடக்கக் கல்வித் துறை தனியாக செயல்படுத்தல் ) ஆணையர் பதவி ரத்து செய்ய வேண்டும்

3) ஒப்படைப்பு மீண்டும் வழங்குதல்

4)மேற்படிப்புகளுக்கான ஊக்கஊதியம் மீண்டும் செயல்படுத்த வேண்டும்

5)இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைதல் வேண்டும்

6) 1.1.2022 முதல் D.A வழங்க வேண்டும்

7) ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்

8) Emis - இணையதளத்தினால் ஏற்படும் சுமைகளை குறைத்தல்

9) 2004-2005 - ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தை பணி நியமன செய்யப்பட்ட நாள் முதல் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

10) உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் .

11) ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்

12) பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

Wednesday, August 03, 2022

August 03, 2022

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு ஒரு நாள் கருத்தரங்கம்: ஆளுநர் மாளிகையில் நாளை நடக்கிறது

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் ஆளுநர் மாளிகையில் நாளை நடக்கிறது. அதில், தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் சிறந்த இடங்களை பிடித்த தமிழ்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களை ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி கவுரவிக்கிறார். தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலின் அடிப்படையில், உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் கருத்தரங்கம் கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களை ஆளுநர் பாராட்டுகிறார். கருத்தரங்கில் தேசிய தரவரிசையில் சிறந்து விளங்குவதற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகள் மற்றும் உத்திகள் குறித்து பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் விளக்கம் அளிக்கின்றன. இதில் பங்கேற்க அமைச்சர்கள், அரசின் செயலாளர்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிற கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த தகவல் கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 14, 2022

July 14, 2022

நாளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் இரண்டு நாள் கல்வி அதிகாரிகள் கூட்டம்

நாளை சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் இரண்டு நாள் கல்வி அதிகாரிகள் கூட்டம்

முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.

தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கும் கூட்டம், மாதம்தோறும் நடத்தப்படும். மூன்று மாதங்களாக, பொது தேர்வு மற்றும் அதற்கான பணிகள் இருந்ததால், இந்த கூட்டம் நடக்கவில்லை.புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.

பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், கமிஷனர் நந்தகுமார் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர்.கடந்த, 2021- - 22ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு அதிகரித்தது. ஆனால், புதிய கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து, கூட்டத்தில் பேசப்பட உள்ளது.மேலும், ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, March 05, 2022

March 05, 2022

ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள பள்ளிகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வரும் 8ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்காக மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள பள்ளிகள் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. பிற்பகலில் பள்ளிக் கல்வி ஆணை யரகம் சார்பில் மேல்நிலைப்பள்ளிக ளில் சிறப்பு ஊக்க தொகை குறித்த தகவல்கள், விலையில்லா நலத்திட் டங்களை பெற்ற மாணவ, மாணவிகள் குறித்த விபரங்கள், தலைமை ஆசிரி யர்களுக்கு ஊக்குவிப்பு தொகை பெற தகுதியானவர்கள், மாணவர்களுக்கு உபகரண பெட்டிகள் வழங்கிய விப ரங்கள் பெறப்பட உள்ளது.

இதையும் படிக்க | குரூப் 1 மெயின் தேர்வு: மே மாதம் ரிசல்ட்

இத்தக வல்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி கல்வி அதிகாரிகள் தொகுத்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளளது.

Monday, January 17, 2022

January 17, 2022

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு? - அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக்கோரி அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக்கோரி அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு நடத்தினர்.

டி.ஆர். பாலு தலைமையிலான தமிழக கட்சிகளின் பிரதிநிதிகள் குழு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

3 முறை சந்திப்பு ரத்தான நிலையில் 4- வது முயற்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் குழு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

ஜெயக்குமார்(காங்.), நவநீதகிருஷ்ணன்(அதிமுக), வைகோ (மதிமுக) உள்ளிட்டோரும் அமித்ஷாவுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Total Pageviews

Search This Blog