Breaking

Showing posts with label All Subjects. Show all posts
Showing posts with label All Subjects. Show all posts

Thursday, January 26, 2023

January 26, 2023

பாடங்களை முழுவதுமாக நிறைவு செய்ய உத்தரவு



பாடங்களை முழுவதுமாக நிறைவு செய்ய கல்லூரிகளுக்கு உத்தரவு Order to complete the subjects completely

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு பயிலும் மாணவா்களுக்கு மே 1-ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநா் ஈஸ்வரமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில், 1.3 லட்சத்துக்கும் அதிகமான இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை 2022 ஆகஸ்ட் தொடங்கி நவம்பா் வரை நடைபெற்றது. இதன்காரணமாக, முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கான முதலாம் ஆண்டு பாடங்களை வரும் மே 1-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய கல்லூரிக் கல்வி இயக்குநா் ஈஸ்வரமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் அனைத்து மாவட்ட இணை இயக்குநா்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த ஆண்டு நவ. 19 வரை நடைபெற்றது.

இதனால், பேராசிரியா்கள் பாடங்களை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் முழுமையாக முடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான பாடங்களை வரும் மே 1-ஆம் தேதிக்குள் பேராசிரியா்கள் நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தலாம். தேவை இருப்பின் கூடுதல் நேரங்களில் வகுப்புகள் எடுக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, September 03, 2022

September 03, 2022

தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சமா? ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வரும் தமிழக அரசு, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ந்தேதி வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த சில நாள்களிலேயே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை என்றால் அப்போதே தெரிந்திருக்கும்; அவ்வாறு தெரிந்திருந்திருந்தால் அப்போதே மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருக்கலாம்.

ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தப்படுகின்றன என்றால், அதற்கு காரணம் ஆசிரியர் பற்றாக்குறை அல்ல... வேறு ஏதோ ஒன்று தான்.

தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை தமிழக அரசு பெருமிதத்துடன் விளம்பரம் செய்து கொள்கிறது.

இந்தத் திட்டங்களின் நோக்கம் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுவது தான். இதைத் தான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் செய்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு தான் தொழிற்கல்வி பாடப்பிரி வினருக்கு பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.

தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம். இது கூடாது.

மேல்நிலைக்கல்வியை முடித்தவுடன் பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பு பெறவும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான எளிய வழி தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தான். அவற்றை மூடி கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வெந்நீர் ஊற்றி அழித்து விடக் கூடாது.

தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்தால், புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து பற்றாக்குறையை போக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Thursday, April 07, 2022

April 07, 2022

பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - 10th,11th,12th - T/M& E/M - All Subjects - PDF

Wednesday, April 06, 2022

Total Pageviews

Search This Blog