Breaking

Showing posts with label Ph.D.. Show all posts
Showing posts with label Ph.D.. Show all posts

Wednesday, November 08, 2023

November 08, 2023

IISTயில் Ph.D அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 9

ஐ.ஐ.எஸ்.டி.,யில் பிஎச்.டி., அட்மிஷன்

மத்திய அரசின் கீழ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

துறைகள்

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்

ஏவியானிக்ஸ்

கெமிஸ்ட்ரி

எர்த் அண்டு ஸ்பேஸ் சயின்சஸ்

ஹுமானிட்டீஸ்

மேத்மெடிக்ஸ்

பிசிக்ஸ்

தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். அக்டோபர் 31, 2023ன் படி 35 வயதிற்கும் குறைவான வயது உள்ளவராக இருக்க வேண்டும்.

எம்.இ., அல்லது எம்.டெக்., படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டியலினத்தவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

பி.இ., அல்லது பி.டெக்., படித்த பொதுப்பிரிவினர் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 70 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். உரிய ’கேட்’ மதிப்பெண் வைத்திருப்பதும் அவசியம். மேலும் விரிவான தகுதி விபரங்களுக்கு கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iist.ac.in/admissions/phd/regular எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 9

விபரங்களுக்கு: www.iist.ac.in

Sunday, July 17, 2022

July 17, 2022

எம்.பில்., பி.எச்டி.,க்கான நுழைவுத்தேர்வு:விண்ணப்பிக்க அழைப்பு

எம்.பில்., பி.எச்டி.,க்கான நுழைவுத்தேர்வு:விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அழைப்பு

ஆக., 29ல் நடக்க உள்ள எம்.பில்., - பி.எச்டி., படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்கலை துறைகள், இணைப்பு கல்லுாரிகள், ஆராய்ச்சி மையங்களில் பி.எச்டி., - எம்.பில்., படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஆக., 29 காலை, 11:00 முதல் 12:30 மணி வரை தேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க மாணவர்கள், ஆக.,10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுத்தேர்வு, ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலை இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 0422 -2422 222/ 2425 706.பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், ''இத்தேர்வுக்கு வரும் ஆக., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.500 விண்ணப்பக்கட்டணம். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.250 கட்டணம். வரும் 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடைபெறும் மாதிரி தேர்வு எழுத வேண்டும். www.cet.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2021ம் ஆண்டு இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், அக்., 2022ம் ஆண்டுக்கான அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் இத்தேர்வை எழுதத் தேவையில்லை,'' என்றார்.

Wednesday, June 15, 2022

June 15, 2022

TAMIL NADU NATIONAL LAW UNIVERSITY - Admission to the Ph.D. Programme 2022-23 - last date for submission of the application is 11.07.2022.

Admission to the Ph.D. Programme 2022-23

Applications are invited for admission to the Ph.D. Programme in Law and Ph.D. Programme in Interdisciplinary (Commerce from the perspective of Law) for the Academic Year 2022-2023. The details regarding eligibility, fees and other information are available on the University website and the last date for submission of the application is 11.07.2022. 

Entrance Test will be conducted online on 17.07.2022. Online application form is available on the University website www.tnnlu.ac.in


Thursday, March 17, 2022

March 17, 2022

இனி முதுநிலை பட்டம் இல்லாமல் பி.எச்டி படிக்கலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு

இனி முதுநிலை பட்டம் இல்லாமல் பி.எச்டி படிக்கலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு

பி.எச்டி எனப்படும் ஆராய்ச்சி படிப்புகளை படிக்க இனிமேல் முதுநிலை பட்டம் இல்லாமல் 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் முடித்த உடன் பி.எச்டி படிப்பில் சேரலாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உயர்கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.எச்டி படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகப்படுத்துகிறது. இளநிலை படிப்புகள் 3 ஆண்டுகள் என நடைமுறையில் உள்ள நிலையில், 4 ஆண்டுகால படிப்புகளும் துவங்கப்பட உள்ளன.

யுஜிசி.,யின் இந்த திட்டத்தின்படி,

* 4 ஆண்டு இளநிலை படிப்பை படித்தால் முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.எச்டி சேரலாம்.

* இந்த 4 ஆண்டுகால படிப்பை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், தொலைதூர கல்வி மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பயிலலாம்.

* புதிய படிப்பில் சேருவோர் எப்போது விரும்பினாலும் பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் எந்த உயர் கல்வி நிலையத்திலும் படிப்பை தொடரலாம்.

- உயர்கல்வித்துறையில் இந்த மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, March 13, 2022

March 13, 2022

மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.31,000 கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச்31ஆம் தேதி கடைசி நாள் - யு.ஜி.சி. அறிவிப்பு!

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எம்பில், பிஎச்டி படித்து வந்தால் இம்மாதம் மார்ச் 31 - ஆம் தேதி வரை அவர்களின் கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.

| மாணவர்கள் https://www.ugc.ac.in/ugc schemes இந்த இணையதளத்தில் சென்று மார்ச் 31ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம் கல்வி உதவித்தொகை மாதம் மாதம் மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு முதல் இரண்டு வருடங்களும் மாதம் மாதம் ரூ 31,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் மேலும் இதர செலவுக்காக வருடத்திற்கு 12,000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும் மூன்றாவது ஆண்டிலிருந்து மாதம்தோறும் அப்பத்தை ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் மேலும் இதர செலவிற்காக வருடத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

Total Pageviews

Search This Blog