Breaking

Showing posts with label PM Modi. Show all posts
Showing posts with label PM Modi. Show all posts

Tuesday, May 12, 2026

Tuesday, December 10, 2024

Sunday, December 01, 2024

Thursday, April 04, 2024

Tuesday, March 19, 2024

Wednesday, October 04, 2023

October 04, 2023

புதிய மருத்துவ கல்லுாரி துவங்குவதில் சிக்கல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.



*புதிய மருத்துவ கல்லுாரி துவங்குவதில் சிக்கல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அறிவிப்பை நிறுத்தக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழகம் போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்த வேண்டும்.
மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பால் தமிழகம் போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்படும்.

புதிய மருத்துவமனைகள், புதிய முதலீடுகள் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tuesday, June 13, 2023

Saturday, January 28, 2023

January 28, 2023

பிரதமர் மோடியை அவுட்டாக்கிய மதுரை பள்ளி மாணவி: சிரிப்பலையால் அதிர்ந்த அரங்கம்

பிரதமர் மோடியை அவுட்டாக்கிய மதுரை பள்ளி மாணவி: சிரிப்பலையால் அதிர்ந்த அரங்கம் Madurai school girl who knocked out PM Modi: The hall shook with laughter

பிரதமர் மோடியிடம் அதிரடி கேள்விகளை எழுப்பி, மதுரை மாணவி அசத்தினார். ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லி டால்கொடரா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் டெல்லியில் நேரடியாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணொலி வாயிலாகவும் மாணவ, மாணவியர் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.

மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி அஸ்வினி, பிரதமரிடம் முதல் கேள்வியை எழுப்பினார்.

மாணவி, பிரதமரிடம், ‘‘தேர்வு மதிப்பெண் குறித்த பெற்றோரது ஏமாற்றத்தை கையாள்வது எப்படி? அவர்களது எதிர்பார்ப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால், தேர்வு என்பது அவர்கள் நினைப்பதுபோல் எளிமையானது இல்லை. நல்ல மதிப்பெண் பெறும் சிறந்த மாணவியாக இருப்பதென்பது சவாலானது என்பதை அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது எனத்தெரியவில்லை.
தேர்வு நேரத்தில் மாணவ, மாணவியர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சமீப காலமாக பெற்றோரின் இதுபோன்ற எதிர்பார்ப்புகள் மாணவர்களின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. இதற்கு வழிகாட்ட வேண்டும். தேர்வினால் வரும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?’’ என்று அதிரடியாக கேள்வியை, மாணவி அஸ்வினி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘கிரிக்கெட்டில் ஹூக்ளி என்ற முறை உள்ளது. அதுபோல் முதல் பந்திலேயே மாணவி அஸ்வினி என்னை அவுட்டாக்க முயல்கிறார்’’ என்றார். இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய பிரதமர், ‘‘பிள்ளைகள் தேர்வில் அதிக மதி்ப்பெண் எடுக்க வேண்டும் என பெற்றோர் நினைப்பது இயற்கைதான். அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் படிப்பில் பிள்ளைகள் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களும் தேர்வு மதிப்பெண் குறித்த அழுத்தத்தை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டாம்’’ என்றார். இந்நிகழ்வு குறித்து மாணவி அஸ்வினி கூறும்போது, ‘பிரதமர் மோடியுடனான கலந்துரையாடல் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது’’ எனறார்.

Total Pageviews

Search This Blog