Breaking

Showing posts with label Public Exam 2023. Show all posts
Showing posts with label Public Exam 2023. Show all posts

Friday, September 22, 2023

September 22, 2023

பொதுத் தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள்: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

பொதுத் தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள்: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய மையங்களை அமைக்க கருத்துருக்களை அனுப்புவது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில்(2023-2024) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பாக கருத்துருக்களை கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி அனுப்பலாம். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்:

அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.

10 கிமீ தொலைவுக்கு மேல் பயணம் செய்து தேர்வெமுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

இதையும் படிக்க | மேல்நிலை பொதுத் தேர்வு -2024க்கு புதிய தேர்வு மையங்கள் DGE அறிவுரைகள்!

இதையும் படிக்க | 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு -2024க்கு புதிய தேர்வு மையங்கள் DGE அறிவுரைகள்!

Wednesday, April 05, 2023

April 05, 2023

6-9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

6-9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Advance Examination for Classes 6-9 - School Education Notification

தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளில் சுமார் 1 கோடி பேர் படிக்கின்ற னர். இவர்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பில் படிக்கும் ஆரம்ப பள்ளி மாணவ மாணவியர்தவிர 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவ மாணவியருக் கான ஆண்டுத் தேர்வுஒவ் வொரு ஆண்டும் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்தப் பட்டு, மே மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப் படும்.

அதன்படி, இந்த ஆண் டும் ஏப்ரல் 24ம் தேதி முதல் ஆண்டுத் தேர்வுகள் நடத் தப் போவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் மற்றும் வெப் பம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. அதனால், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு முன்கூட் டியே தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், பெற் றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

அனைத்து வகைஉயர் நிலை, மேனிலைப் பள்ளி கள் மற்றும் மெட்ரிக் பள் ளிகளில் 6ம் வகுப்புமுதல் 9ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக் கான ஆண்டுத் தேர்வு ஏப் ரல் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்த வேண் டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

time table

6 முதல் 9ம் வகுப்பு வரை இறுதி தேர்வு எப்போது?

Monday, April 03, 2023

April 03, 2023

அறை கண்காணிப்பாளர் வழிகாட்டி!

. .அறை கண்காணிப்பாளர் வழிகாட்டி.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். | என்ற குறளின் படி
ஆகச் சிறந்த ஆசிரியர்களைகத் தேர்ந்தெடுத்து செயற்கரிய செய்வார் பெரியார் என்ற வாக்கிற்கு ஏற்ப தேர்வுப் பணி நம்மிடம் கல்வித்துறை ஒப்படைத்துள்ளது.
மாணவர் உள நலம் / உடல் நலம் கருத்தில் கொண்டு முழு பாதுகாப்போடு/ சுகாதாரத்தைப் பேணுதல் நம் தலையாய கடமை.
மையத்திற்கு தேர்வர் வருகைபுரிந்ததில் இருந்து தேர்வு எழுதி வெளியேறும்வரை உரிய நேரத்தில் உரிய பணியினைத் திறம்பட செய்து தேர்வர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம்.
🌷கட்டுப்பாட்டு அறையில். 1. மையத்திற்கு
8.30 am வருகை புரிதல் செல்போனை அணைத்து ஒப்படைத்தல்..பேட்ஜ் அணிதல்
2. வருகை கையொப்பம்
3. குலுக்கல் முறையில் அறை தேர்வு
4.அறைக்கு உரிய பை பெறுதல்
5. பையின் உள்ளே
a. விடைத்தாள் கொண்ட ஸ்பெஷல் எண்கள் ஒட்டப்பட்ட பிரவுன் உறை
b. தேர்வர் வருகைப்பதிவு படிவம்
c. ஹால்டிக்கெட்
d கூடுதல் விடைத்தாள்
f. சிறு கத்தி . 6. விடைத்தாள் முகப்புத்தாளில் மு.கண்காணிப்பாளர் பேசிமலி.. விடைத்தாள் பிரவுன் உறையில் ஒட்டப்பட்ட தேர்வர் எண்கள் படிவம்..
தேர்வர் வருகைப் பதிவு ( ‌‌attendance sheets)தாள்கள்.. விடைத்தாட்களின் முகப்புச் சீட்டு ஒப்பிட்டு....நுழைவுச் சீட்டு ஆகியன சரிபார்க்க வேண்டும்.
7. விடைத்தாளின் முகப்புச்சீட்டின் part.A வின் வலப்புறம் மேல் பகுதியில் உரிய இடத்தில் Verified என எழுதி சுருக்கொப்பம்.
8. அறைக்கு செல்ல தயார்படுத்திக் கொள்ளல்
9. 9.40am க்கு வினாத்தாள்
உறை மற்றும் அறைக்கு உரிய bag, blue pen.. red pen எடுத்து கொண்டு அறைக்கு செல்லுதல்.

🌷தேர்வறையில்
1. அறையை திறந்து முதலில் சென்று தேர்வருக்கான இருக்கை அமர்வு,காற்றோட்டம், வெளிச்ச வசதி ஏற்பாடு
2. தேர்வரை சோதிட்டு ஒதுக்கப்பட்ட 20 தேர்வரையும் அவரவர்க்கு உரிய இடத்தில் அமரச்செய்தல்.
( மிதியடி..பெல்ட் வெளியே)
கைக்குட்டை/ சானிடைசர் அனுமதிக்கலாம்.
3.பள்ளி மாணவர்கள் சீருடையில் தான் அனுமதிக்கப் படுவர்.
4.ஹால்டிக்கெட் வழங்குதல்.
5. 9.55am வினாத்தாள் உறை பாதுகாப்பு தன்மை விளக்கி இருதேர்வரிடம் பதிவெண் எழுதி கையொப்பம் பெற்று cut செய்தல். 10.00am வினாத்தாள் வழங்கல்..
6. ‌10.10 வரை தேர்வரை வினாத்தாள் மட்டுமே பார்க்க அனுமதித்தல்.( அச்சு தெளிவாக அனைத்து பக்கங்களில் உள்ளதை உறுதி செய்க) பதிவு எண் எழுதச் சொல்லுதல்.
7. ‌10.10 am விடைத்தாள்
வழங்கல். முகப்புச் சீட்டில் உள்ள விவரம் தங்களுடையது தானா என சரிபார்த்தல்.. விடைத்தாள் மொத்த பக்கமும் பக்க வாரியாக சோதிக்க அறிவுறுத்தல்...
மொத்த பக்கங்களின் எண்ணிக்யும் சரிபார்த்து தேர்வரின் கையொப்பம் பெறுதல். 8. ‌10.15 am "start writing" என கூறுதல்
9. . வருகை பதிவுத்தாளில் தேர்வர் கையொப்பம்.
விடைத்தாளில் blue டிக் செய்து கண்காணிப்பாளர் கையொப்பம்.
10. ‌அறைக்கு வரும் பதிவேட்டில் வராதோர் எண் எழுதி கையொப்பம்.
விடைத்தாள் உறையில்blue pen கொண்டு P/ red pen கொண்டு ABSENT எழுதுதல் 11. 10.30 am வராதோர் விடைத்தாளின் முகப்புச் சீட்டில் red tick மற்றும் கையொப்பம். ஹால் டிக்கெட்டில் சுருக்கொப்பம்.
12.. வராதோர் வினாத்தாள்- விடைத்தாள் ஒப்படைப்பு.
13. கண்காணிப்பு பணி இடையிடையே தேவைப் படின் வருகை படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் பெற்று கூடுதல் விடைத்தாள் வழங்கல்
14. ‌1.10 pm ஹால்டிக்கெட் சேகரித்து உறையில் வைத்தல்
15. ‌ 1.15 pm stop writing and Stand up நிகழ்த்தி எழுதாத பக்கங்கள் அனைத்திலும் பேனாவால் குறுக்குக் கோடிட அறிவுறுத்துதல். வரிசையாக விடைத்தாள் பெற்று உறையிலிடுதல்
அறையை சோதித்துவிட்டு தேர்வர்களை செல்ல அனுமதித்து( விளக்கு பேன் off செய்தபின்பு)தாமும் கட்டுப்பாட்டு அறைக்கு விரைதல். 🌷கட்டுப்பாட்டு அறையில்
1. கவனமாக DGE/SSLC (விடைத்தாள் மேல் பகுதியில் பக்கங்கள் சந்திப்பு பகுதியில்)முத்திரை இடல். விடை முடிவுறும் இடத்திலும் முத்திரை இடல்.
2. Part - A பிரிப்பு.
Part-A எண்ணிக்கை விடைத்தாள் எண்ணிக்கை சரிபார்ப்பு.
( Tic mark, present/absent மார்க், கையொப்பங்கள், பேசிமலி...etc) பிரிக்கப்பட்ட part-A உடன் விடைத்தாள்கள் சரிபார்த்து
3.முதன்மை கண்காணிப்பாளர்/ துறையலுவலர் முன்னிலையில் விடைத்தாள்களை ஸ்பெஷல் பிரவுன் உறையில் வைத்து ஒட்டி கையொப்பம் இடல்.
Part- A ..pin செய்துவழங்குதல்
4.CSD பூர்த்தி செய்தல்
5.அறைக்கு உரிய பை -யில் உள்ள எஞ்சிய பொருட்களை ஒப்படைத்தல்.
6. கட்டுகள் தயார் செய்வதை பார்வையிடல்
7. அனுமதி பெற்று இன்றைய பணி சிறப்பாக அமைந்ததை எண்ணி மகிழ்வுடன் செல்லுதல்.
தேர்வர்கள் மகிழ்வோடும் வசதியோடும் பிழையின்றி விவரங்களை தெளிவாக சரிபார்க்க தேர்வறையில் உரிய நேரத்தில் ரத்தினச் சுருக்க அறிவிப்பு அவசியம்.
அருவினை என்ப உளவோ கருவியாலா காலமறிந்து செயின். என்பதை நாம் கற்பித்தும் கடமையாற்றியும் வருவதால் ...தேர்வுப் பணி சிறப்பாகவும் செம்மையாகவும் அமைந்திட வாழ்த்துகள்.

Wednesday, March 29, 2023

March 29, 2023

பிளஸ் 1 வேதியியல் தேர்வில் பிழையான கேள்வி - மாணவர்கள் குழப்பம்!



பிளஸ் 1 வேதியியல் தேர்வில் பிழையான கேள்வி - மாணவர்கள் குழப்பம்! - Wrong Question in Plus 1 Chemistry Exam - Students Confused!

பிளஸ் 1 வேதியியல் தேர்வில் இரண்டு மதிப்பெண் வினாவில் வார்த்தை பிழை இடம் பெற்றதால் மாணவர்கள் குழப்பம்அடைந்தனர்.

'ஐசோடோப்புகள் என்றால் என்ன' கேள்வியில் 'ஐசோடோப்பு' என்பதற்கு அருகில் 'மாற்றியங்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தன. ஐசோடோப்புகள் என்பது மாற்றியங்கள் கிடையாது. மாற்றியங்கள் என்பது 'ஐசோமெரிசம்' என அழைக்கப்படும்.

பிளஸ் 1 பாட புத்தகத்தில் ஐசோடோப்புகள் குறித்த பாடம் நான்காவதாகவும் மாற்றியங்கள் குறித்த பாடம் 11வதாகவும் உள்ளது. தேர்வில் இரண்டு பாடங்களின் வார்த்தைகளையும் கலந்து கேள்வி கேட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஏற்கனவே பிளஸ் 1 பாட புத்தகத்தில் ஐசோடோப்பு குறித்த பயிற்சி வினாவில் மாற்றியம் என பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பிழையை திருத்தாமல் விட்டதால் பொது தேர்விலும் அதே வார்த்தை பிழையுடன் கேள்வி இடம் பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tuesday, March 28, 2023

March 28, 2023

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்போது பணியில் ஈடுபடுவோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியதாவது; பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.
March 28, 2023

பிளஸ் 2 கணிதத்தில் சதம் குறைய வாய்ப்பு - ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி!!

பிளஸ் 2 கணிதம் கேள்விகள் கடினம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித கேள்விகள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ராஜ் கூறியதாவது:

பத்தாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' பெற்று, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, கொஞ்சம் எளிமையான வினாக்களை வைத்திருக்கலாம்.

கட்டாய வினா பகுதி கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதை பார்த்து பயந்திருந்தால், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுத சிரமப்பட நேரிட்டிருக்கும்.

ஒரு மதிப்பெண்ணில், 13 கேள்விகள் பயிற்சி பகுதியில் இருந்தும், ஏழு கேள்விகள், பாடத்தின் உள்பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையாது. ஆனால், 'சென்டம்' மதிப்பெண் எடுப்போர் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து அரசு மற்றும் தனி யார் பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,

இது போன்ற வினாத்தாள்கள் மாணவர்களுக்கு கணிதபாடத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்தும். இத னாவ் எதிர் காலத்தில் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் பயில மாணவர் கனே இருக்க மாட்டார்கள்.

இந்த ஆண்டு கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக வும் குறைவாகவே இருக்க வாய்ப் புள்ளது. அதேபோல கணிதப் பாடத்தில் நேர்ச்சி விகிதமும் சற்று குறையலாம் என்றனர்.

Saturday, March 25, 2023

March 25, 2023

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் - பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 48 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. செங்கோட்டையன் (அதிமுக), பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்டோர் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள். அவர்கள் பேசியதாவது: மொழித்தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் பாடம் கட்டாயம் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். உறுப்பினர்களின் பேச்சுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதும் மாணவர்கள் 2020-21ல் கொரோனா காலக்கட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள். இவர்களில் 47 ஆயிரத்து 943 பேர் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதவில்லை. இவர்கள் அனைவரையும் ஜூலை மாதம் நடைபெறும் பிளஸ் 2 துணைத்தேர்வை எழுத வைப்பதற்காக முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இடைநிற்றல் மாணவர்களை துணைத்தேர்வுக்கு அழைக்கும்போது பெற்றோர் தவறாமல் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் பள்ளிக்கூடங்களில் சேரும் அனைத்து மாணவர்களும் பிளஸ் 2 வரை முழுமையான கல்வியை கற்க வேண்டும் என்பதில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இடைநிற்றல் மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்து 4 வாரங்கள் வரை அவர் வரவில்லை என்றால் அவரை இடைநின்ற மாணவராக கருதி நேரில் சென்று பள்ளியில் மீண்டும் சேர்க்க அறிவுறுத்தியுள்ளோம். வட்டார, மாவட்ட அளவிலான அதிகாரிகள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். துணைத்தேர்வு மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணில் மாணவர்களுக்கு விழிப்புணர்வும் அளிக்கப்படுகிறது. இடைநிற்றல் மாணவர்களை ஆசிரியர்கள் நேரில் சென்று அழைத்தால் பெற்றோர் மறுக்காமல் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். அவர்களை இந்த அரசு பார்த்துக்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

Wednesday, March 22, 2023

March 22, 2023

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. கடந்த 13-ம் தேதி 12 வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. ஆண்டு தமிழ் மொழி பாட தேர்விற்க்கே 50ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தேர்வு துறை அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆங்கில பட தேர்வுக்கும் 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், முக்கிய தேர்வுகளுக்கு மாணவர்களை வரவைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில், நேரு நடைபெற்ற இயற்பியல் பொருளியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு கூட 47 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடி பிடித்து தேர்வுக்கு வரவைக்க முயற்சி எடுத்துவரும் நிலையில், பெரும்பாலான மாணவர்கள் அவர்கள் சொந்த ஊரிலோ, வெளியிடங்களிலோ பணியில் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Monday, March 20, 2023

March 20, 2023

இந்தாண்டு பொது தேர்வு எழுத முன் வராத பல மாணவர்கள் பள்ளியிலேயே படிக்கவில்லை: அன்பில் மகேஷ் பேட்டி!

இந்தாண்டு பொது தேர்வு எழுத முன் வராத பல மாணவர்கள் பள்ளியிலேயே படிக்கவில்லை: அன்பில் மகேஷ் பேட்டி! This year, many students who did not appear for the public examination did not study in school: Anbil Mahesh interview!

பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் பள்ளியிலேயே படிக்கவில்லை என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்தாண்டு பொது தேர்வு எழுத முன் வராத பல மாணவர்கள், தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். திருச்சி கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அந்த மக்களை தேடி என்ற குறைதீர் முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி பங்கேற்று, மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; “பிரச்சனைகளை புரிந்து கொண்டால் தான், பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்பதால், இந்தாண்டு 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்தோம்.

கொரோனா காலகட்டத்தில் 10 வகுப்பு படித்துவந்த மாணவர்கள் அனைவருக்கும் முழு தேர்ச்சி வழங்கப்பட்டது. மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக வந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்செல்லும் வரை, அந்த மாணவரின் பெயரை வருகை பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதையும் படிக்க | மத்திய உப்பு, கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2023

அந்தவகையில், இந்தாண்டு பொது தேர்வு எழுத முன் வராத பல மாணவர்கள், தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் இடைநிற்றல் என கண்டறியப்பட்ட ஒரு லட்சத்து 88 ஆயிரம் மாணவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து கல்வி கொடுத்து வருகிறோம். ஆண்டுதோறும் சராசரியாக 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முன் வருவதில்லை. கடந்த கல்வியாண்டில் அவ்வாறு தேர்வு எழுத முன் வராத 52 ஆயிரம் மாணவர்களை கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுத வைத்துள்ளோம். அதேபோல் தற்போது பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை வரும் ஜூன் மாத இறுதியில் நடத்தப்படவுள்ள உடனடி தேர்வினை எழுத வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கல்வியில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்த வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அத்தகைய வகுப்புகளை நடத்த ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். அந்த திட்டத்தை வரும் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

Friday, March 17, 2023

March 17, 2023

பள்ளி பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பள்ளி பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பொதுத்தேர்வு அனுமதி - புதிய மாற்றம்:

"ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி"

பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றம்.

"இரண்டு அல்லது மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் வழங்குகிறோம்"

*"மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்"- பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவிப்பு*
March 17, 2023

ஆப்சென்ட் ஆன 50 ஆயிரம் மாணவர்களும் பின்னணியில் பல ஷாக் தகவல்களும்

ஆப்சென்ட் ஆன 50 ஆயிரம் மாணவர்களும் பின்னணியில் பல ஷாக் தகவல்களும்.. அப்செட் ஆக்கும் 'பிளஸ் 2 ஆப்சென்டீஸ்'

Thursday, March 16, 2023

March 16, 2023

குமரியில் ப்ளஸ் 2 தேர்வு எழுதும் முன் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. குழப்பத்தில் போலீசார்

குமரியில் ப்ளஸ் 2 தேர்வு எழுதும் முன் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. குழப்பத்தில் போலீசார்

கன்னியாகுமரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பு, அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி சுதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மகன் மற்றும் மகளை, தாய்மாமன் சுரேஷ் என்பவர் வளர்த்து வந்துள்ளார். 17 வயதான சிறுமி, நாகர்கோவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். மாணவி பொதுத் தேர்வை எழுத இருந்த நிலையில், கடந்த 11ம் தேதி, வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் மாணவியை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அதிக சத்து மாத்திரைகள் உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாணவிக்கு அதிக சத்து மாத்திரைகள் கிடைத்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் செல்போன் மாயமானதால், கடைசியாக செல்போனில் பேசிய நபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
March 16, 2023

பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உடனே மறு தேர்வு நடக்கும் - பாடநூல் கழகத் தலைவர்

"உடனே மறு தேர்வு நடக்கும்" - திண்டுக்கல் லியோனி சொன்ன தகவல்

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி கூறினார்.





March 16, 2023

பொதுத்தேர்வில் அதிக ஆப்சென்ட் ஏன்..? 'இது தான் முக்கிய காரணம்..' கல்வியாளர் சொன்ன ஷாக் தகவல்

பொதுத்தேர்வில் அதிக ஆப்சென்ட் ஏன்..? 'இது தான் முக்கிய காரணம்..' கல்வியாளர் சொன்ன ஷாக் தகவல்

Total Pageviews

Search This Blog