Breaking

Showing posts with label ஜாக்டோ-ஜியோ. Show all posts
Showing posts with label ஜாக்டோ-ஜியோ. Show all posts

Monday, August 29, 2022

August 29, 2022

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு: பொதுச் செயலாளர் தகவல்

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு: பொதுச் செயலாளர் தகவல் - 25,000 people participate in JACTO-JEO Conference on behalf of Primary School Teachers Alliance: General Secretary Information

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித் துள்ளார்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வடக்கு மண்டல மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் தலைமைதாங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடக்க இருக்கின்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வர இருக்கின்றனர்.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமுல்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது, தொடக்க கல்வித்துறை முழு சுதந்திரமாக இயங்க அரசாணை 101, 108 ஆகியவற்றை ரத்து செய்தல், தேசிய மருத்துவ காப்பீட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ செலவினங்களை முழுவதுமாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள பணிப்பாதுகாப்பு போல ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யும் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவற்றை பரிசீலித்து அவர் அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
August 29, 2022

செப்டம்பர் 10-ந் தேதி ஜாக்டோ-ஜியோ மாநாடு - 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்பு

Jacto-Jeo conference on 10th September - 3 lakh government employees, teachers, civil servants to participate

சென்னையில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம், சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளருமான கு.தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் தியாகராஜன் கூறியதாவது:-

10-ந்தேதி மாநாடு

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு சார்பில் வருகிற 10-ந்தேதி சென்னையில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இதில் ஒட்டுமொத்த தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வது என இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் குடும்பங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

ஆணையர் பதவி ரத்து

பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாங்க 101, 108 ரத்து, ஆணையர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் முதல்-அமைச்சர் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையோடு வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டை நடத்துகிறோம்.

கல்வித்துறைக்கு தொடர்பு இல்லாத ஆணையர் பணியிடத்தை கொண்டு வந்த நாள் முதல் எங்கள் சங்கத்தையும், நிர்வாகிகளையும் எதுவும் கேட்பதில்லை. ஒரு சில அதிகாரிகளின் செயல்பாடுகளால்தான் கல்வித்துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் கெட்ட பெயர் வருகிறது. எனவே இந்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அந்த இயக்குனர் பணியிடத்தை பதவி உயர்வு மூலம் கொண்டுவர வேண்டும். ஆணையர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, August 01, 2022

August 01, 2022

"மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்" - பின் வாங்கிய ஜாக்டோ-ஜியோ - போராட்டம் ஒத்திவைப்பு..!

"மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்" - பின் வாங்கிய ஜாக்டோ-ஜியோ - போராட்டம் ஒத்திவைப்பு..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இம்மாத இறுதியில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என, தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது நிதி அமைச்சரின் பேச்சு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், அவரின் செயல்பாடுகள் குறித்து, முதல்வரிடம் நேரடியாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Total Pageviews

Search This Blog