Breaking

Showing posts with label Transfer. Show all posts
Showing posts with label Transfer. Show all posts

Friday, January 19, 2024

January 19, 2024

அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்



அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல் Insisting on transfer of government employees

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இம்மாத இறுதிக்குள் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு.

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இம்மாத இறுதிக்குள் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்...

Monday, August 28, 2023

August 28, 2023

அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்: கல்லூரி இயக்ககம் உத்தரவு



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்: கல்லூரி இயக்ககம் உத்தரவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சிவகங்கை, வியாசர்பாடி, கும்பகோணம் கலை கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் கூடலூர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வியாசர்பாடி கல்லூரியில் பணியாற்றும் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரியில் பணியாற்றும் கிருஷ்ணன் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றும் சரவணபெருமாள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்கவும், மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டும். சாதி பாகுபாடுகளை காட்டி மாணவர்களை தூண்டிவிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பேராசியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Saturday, September 24, 2022

September 24, 2022

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Associate Director of School Education processes depending on the transfer of ministry staff who have been in the same office for more than 3 years!

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி அனைத்து வகைப் பணியாளர்களுக்கான மாறுதல் - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் - நெறிமுறைகள் - சார்பு.

பார்வை:

1. அரசாணை நிலை எண் 10 பணியாளர் மற்றும் நிர்வாக சீரமைப்புத் துறை, நாள்: 07.01.1994

2. அரசாணை எண்.101, ப.க.(வ.செ.) பள்ளிக் கல்வித்துறை, நாள்.18.05.2018

3. அரசாணை எண்.151, பள்ளிக்கல்வி (SE1(1), துறை, நாள்.09.09.2022

4. சென்னை –6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண்.24689/அ4/இ1/2019, நாள்.12.08.2022.

பார்வை (2) மற்றும் (3) இல்காணும் அரசாணையின்படி கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்கள் நிர்வாக நலனை முன்னிட்டு சீரமைக்கப்பட்டும், புதிய அலுவலகங்கள் உருவாக்கம் செய்யப்பட்டும் ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், பார்வை (1)இல் காணும் அரசாணையின்படி, நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பணியிடத்தில் பணிபுரியும்பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திட கீழ்க்கண்ட நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தக்கவகையிலும், அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 01.06.2022 அன்றைய நிலையில், மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோர்களுக்கு இணைப்பில் கண்டுள்ள பட்டியலின்படி மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே கலந்தாய்வு நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. புதிய அலுவலகங்களில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு பணியிடம் அனுமதித்து, பார்வை (3) இல் கண்டவாறு அரசாணை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் அப்பணியிடங்களைக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். மேலும் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றி கலந்தாய்வினை செவ்வனே செய்து முடிக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டத்திற்குள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:

1. மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற அறிவுறுத்த வேண்டும்.

2. 01.06.2022 அன்றைய நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு / பொதுப் பணியாளர்களைத் தங்கள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்தி பிற அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

3. அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

4. கோயம்புத்தூர் மற்றும் மதுரை மண்டல கணக்கு (தணிக்கை) அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

5. அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொண்டு புதிய பணியிடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

6. பட்டியலில் உள்ளபடி மாறுதல் கலந்தாய்வின்போது கலந்துகொள்ள வேண்டிய பணியாளர்கள், கலந்து கொள்ளாத நிலையில் அப்பணியாளர்களுக்கு நிருவாக மாறுதல் அளிக்கப்படும்.

7. தங்கள் வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் செய்யும்போது மாவட்டத்திற்குள் பணியிடம் இல்லாத நிலையிலோ, பணியாளர் வேறு மாவட்டத்தைக் கோரும் போதோ, அப்பணியாளர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள, அவர்தம் பட்டியலை ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலில் செல்வதற்கான வாய்ப்பு இல்லாதபட்சத்தில் அப்பணியாளர்களது பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

8. பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு பார்வை (4)இல் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

9. மேற்கண்ட மாறுதல் அனைத்து மாவட்டங்களிலும் பட்டியலில் குறிப்பிடப்பட்ட நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வி வளாக (DPI) அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் ஒரே அலகாக கருதி ஆணையரகத்தில் இணைப்பில் கண்ட பட்டியலில் குறிப்பிட்டவாறு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

10. ஒரே பணியிடத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிமாறுதல் கோரும்நிலையில் பணியாளரின் பதவியில் சேர்ந்த நாளினை (Cadre seniority and not the station seniority)முன்னுரிமையாக கருதப்பட வேண்டும்.

11. மூன்றாண்டு பணிமுடித்த பணியாளர்கள் கட்டாய மாறுதலுக்குத் தகுதியுடையவராய் இருந்த போதிலும் சில பணியாளர்கள் எதிர்வரும் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் அப்பணியாளர்களுக்கு இடம்பெற்றிருப்பாராயின் மூன்றாண்டுகளுக்கான மாறுதல் அளிக்கத் தேவையில்லை.

மாவட்ட அளவில் அனைத்து அமைச்சு / பொதுப்பணியிடங்களுக்கும் (மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் / முறையான கண்காணிப்பாளர்கள் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் / உதவியாளர்கள் / இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்கள் வரை) இணைப்பில் கண்ட பட்டியல்படி மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு. உடனுக்குடன் தங்கள் மாவட்ட அளவில் உள்ள காலிப்பணியிட விவரங்களை (Resultant Vacancy) பதவி வாரியாக தனித்தனியாகப் பட்டியலிட்டு அவ்வப்போது ஆணையரகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை தவறாது பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமின்றி செவ்வனே செயல்படுத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.

இணைப்பு:- பட்டியல் (அட்டவனை) CLICK HERE TO DOWNLOAD

Thursday, September 01, 2022

September 01, 2022

தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு - 4 நாட்களாக பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் - கருப்பு கொடி கட்டிய மக்கள்

தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு - 4 நாட்களாக பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் - கருப்பு கொடி கட்டிய மக்கள்

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லிகுந்தம் ஊராட்சியில் உள்ளது வன்னியனூர் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம், உப்புபள்ளம், மருக்கம்பட்டி கிராமங் களை சேர்ந்த 286 குழந்தைகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக சிவகுமார்(45) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி, சிவகுமார் வாழதாசம்பட்டி பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மறுத்தனர். பெற்றோரும் கடந்த 3நாட்களாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வன்னியனூர் கிராமத்தின் நுழைவு வாயிலில் கருப்பு கொடி கட்டிய மக்கள், அந்தப்பகுதியில் திரண்டனர். தலைமை ஆசிரியர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வர முடிவு செய்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘11 ஆண்டுகளாக சிவகுமார் இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் வரும்போது இங்கு படித்த மாணவர்களின் எண்ணிக்கை 90 ஆக இருந்தது. தற்போது 286 பேர் படித்து வருகின்றனர். அதற்கு அவரது தீவிர முயற்சியே காரணம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக பல்வேறு பணிகளையும் அவர் செய்து கொடுத்துள்ளார். இந்த வட்டாரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் வந்து ஆர்வத்துடன் சேரும் ஊராட்சி பள்ளியாகவும் இது உள்ளது.

இதற்கு காரணமான தலைமை ஆசிரியரை மாற்றக்கூடாது. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கும். எனவே அவரை மீண்டும் இந்த பள்ளியில் பணியமர்த்த வேண்டும். இது குறித்து வன்னி யனூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட செல்கிறோம்’’ என்றனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் மேட்டூர் தாசில்தார் முத்துராஜா மற்றும் மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Monday, August 29, 2022

August 29, 2022

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு - உயர் நீதிமன்றத்தின் உத்தரவு - Date : 29-08-2022

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Daily Status

Madras High Court

In The Court Of The Hon'ble Justice CNR Number :HCMA010984882022

Case Number :WP/0017500/2022

A.Rajavelu Versus School Education Department

Date : 29-08-2022

Business : d

Disposal Date : 29-08-2022

The Hon'ble Justice

Monday, August 22, 2022

August 22, 2022

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு



தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் 24.08.2022க்கு ஒத்திவைப்பு

Daily Status

Madras High Court

In The Court Of:The Hon'ble Justice CNR Number :HCMA010984882022

Case Number:WP/0017500/2022

A.Rajavelu Versus School Education Department

Date: 22-08-2022

Business : at 2.15 p.m.

Next Purpose : PART HEARD AT 2.15 P.M.

Next Hearing Date : 24-08-2022

The Hon'ble Justice

Saturday, July 02, 2022

July 02, 2022

ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயா்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அந்த வகையில், அரசு, நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதியும், அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 12-ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியா், சிறப்பாசிரியா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 14, 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு இணையவழியில் நடைபெறும் என குறிப்பிப்பட்டுள்ளது.

Wednesday, June 29, 2022

June 29, 2022

மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் என்று பரவி வரும் தவறான பட்டியல்

மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் என்று பரவி வரும் தவறான பட்டியல் : இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் என 131 பக்க PDF File அனைத்து குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

அப்பட்டியலைத் தயார் செய்தது யாரெனத் தெரியவில்லை. மேலும் அப்பட்டியலில்,

1.மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

2. பிற மாவட்டத்திற்கு

என்ற இரு விருப்பங்களைத் தேர்வு செய்து விண்ணப்பித்தோரின் பெயர்கள் மட்டுமே உள்ளது. ஆனால், மாறுதல் விண்ணப்பம் அளித்த போது,

1. ஒன்றியத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

2. மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

3. ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

4. பிற மாவட்டத்திற்கு

என்ற 4 விருப்பத் தேர்வுகள் இருந்தன. இதில், ஒன்றிய / மாவட்ட அளவிலான கலந்தாய்வுகளில் புதிய பள்ளிகளைத் தேர்ந்தெடுக்காத ஆசிரியர்களும் பிற மாவட்டத்திற்குச் செல்ல நடைபெறவுள்ள கலந்தாய்விற்கான முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறத் தகுதியானவர்கள்.

ஆனால், தற்போது பகிரப்பட்டு வரும் பட்டியலில் அத்தகையோரின் பெயர்கள் இல்லை. எனவே இது முழுமையான பட்டியல் அல்ல என்பதோடே முன்னுரிமையும் மாறக்கூடும் என்பதால், இது தவறான பட்டியல்.

ஒருவேளை இது துறைரீதியாக வெளியிடப்பட்டதுதான் என்றால் மேற்படி ஆசிரியர்களின் பெயர்களும் அடங்கிய முழுமையான பட்டியலை வெளியிட அறிவுறுத்த வேண்டும்.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

Friday, June 17, 2022

June 17, 2022

தொடக்கக்கல்வித்துறை மலை சுழற்சி பொது மாறுதல் அரசாணை வெளியீடு

தொடக்கக் கல்வி நிர்வாகத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மலைச் சுழற்சி மாறுதலின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!!

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Friday, June 03, 2022

June 03, 2022

7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்





CEO அந்தஸ்தில் உள்ள 7 கல்வி அலுவலர்கள் இடமாற்றம்





DEO அந்தஸ்தில் உள்ள 4 பேருக்கு, CEO ஆக பதவி உயர்வு





பள்ளிக்கல்வித்துறை உத்தரவு கல்வி அலுவலர்கள் மாற்றம்

மதுரை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட CEO-க்கள் மாற்றம்

தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட CEO-ஆக நியமனம்

புதுக்கோட்டை CEO சத்தியமூர்த்தி, தஞ்சை மகாராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலராக மாற்றம்

திருவள்ளூர் CEO ஆறுமுகம், பாடநூல் கழக துணை இயக்குநராக மாற்றம்

4 DEO-க்களுக்கு CEO-க்களாக பதவி உயர்வு

நாமக்கல், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு DEO-க்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி மாவட்ட CEO-க்களாக நியமனம்

திருச்செங்கோடு DEO விஜயா, தொடக்கக் கல்வி துணை இயக்குநராக நியமனம்

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆணை

அரசாணை (நிலை) எண்.100 நாள் 03.06.2022 - தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - காலிப் பணியிடம் நிரப்புதல் - பணியிட மாறுதல் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் அலுவலருக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

Thursday, May 26, 2022

May 26, 2022

பள்ளி சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கம்

பள்ளி சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
2022-23-ம் கல்வியாண்டுக்கான வருடாந்திர நாட்காட்டி வெளியீடு, ஆன்லைன் சேவைகள் தொடக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று தொடங்கி வைத்தார். உடன் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர்.

தமிழ்வழிச் சான்று உள்ளிட்ட 25 வகையான பள்ளி ஆவணங்களை ஆன்லைனில் பெறுவதற்கான வசதியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

தமிழக பள்ளிக்கல்வியில், வரும் கல்வியாண்டுக்கான (2022-23) நாட்காட்டி வெளியீடு மற்றும் ஆன்லைன் சேவைகள் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:

தமிழ்வழியில் படித்தமைக்கான சான்று, கல்வி இணைச் சான்று உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்களை, இ-சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனில் பெறுவதற்கான வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

பதிவேடுகள் மின்மயமாக்கல்

அதேபோல், ஆசிரியர்களின் நிர்வாகப் பணியைக் குறைக்க 100-க்கும் மேற்பட்ட பதிவேடுகளை மின்னணுமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக 30 பதிவேடுகள் மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதேபோல் வரும் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுப்பு விவரங்கள் அடங்கிய நாட்காட்டி, ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான அட்டவணை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஆசிரியர்கள், மாணவர்கள், திட்டமிட்டு தங்கள் பணிகளை மேற்கொள்ள வழி செய்யும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் மாணவர்களுக்கான புத்தகம், சீருடை உள்ளிட்ட இலவசக் கல்வி உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும். அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட இருமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஆராய்ந்து தேர்வெழுதாத மாணவர்களைச் சந்தித்து அவர்களை உத்வேகப்படுத்தி, துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் கல்வியாண்டில் நீட் தேர்வு பயிற்சிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே உள்ள ஹைடெக் ஆய்வகம் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. காலை சிற்றுண்டி திட்டம்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்.

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, பணி நிரந்தரம், தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அரசின் நிதிநிலை சீரான பின்னர் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Friday, May 20, 2022

May 20, 2022

EMIS Students TC Generation and Students promotion reg.

Kind Attention :

EMIS Students TC Generation and Students promotion reg.

மாநில EMIS மையத்தில் இருந்து முறையான வழிகாட்டுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு வரும் வரை youtube வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டாம். தகவல் தெரிவிக்கப்படும்.

- State EMIS Team

Tuesday, April 19, 2022

April 19, 2022

அரசு பள்ளி ஆசிரியர்கள் இடம் மாற தேதி நீட்டிப்பு!

Government school teachers have extended the application date for relocation. For high school teachers working in government schools, optional transfer counseling is already over. Following this, the teachers talk to each other and change places, and a change of heart is announced.

Online registration for this started on the 12th. The deadline has been extended to the 21st, as registration was closed the day before yesterday. After review of the application, the change is given on the 26th. Following this, counseling for unit to unit transfer will take place on the 27th, the School Education Commission has announced. அரசு பள்ளி ஆசிரியர்கள்

அரசு பள்ளி ஆசிரியர்கள், பரஸ்பரம் இடம் மாறி கொள்வதற்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் ஏற்கனவே முடிந்து விட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக பேசி இடங்களை மாற்றி கொள்ளும், மனமொத்த மாறுதல் அறிவிக்கப் பட்டுள்ளது.

அலகு விட்டு அலகு மாறுதல்

இதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 12ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் பதிவு முடிய இருந்த நிலையில், 21ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. விண்ணப்ப பரிசீலனைக்கு பின், வரும் 26ம் தேதி மாறுதல் வழங்கப்படுகிறது. இதையடுத்து, அலகு விட்டு அலகு மாறுவதற்கான கவுன்சிலிங் வரும் 27ம் தேதி நடக்க உள்ளதாக, பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவித்துள்ளது.

Thursday, March 10, 2022

March 10, 2022

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...?

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...??

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...??

மலை சுழற்சியால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் மலை சுழற்சி அரசாணை-404 தொடக்கக் கல்வித் துறையில் தொடரும் என்ற தொடக்கக்கல்வி இயக்குனரின் கடிதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தனர். தமிழக அரசு தடையை நீக்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. எனவே இன்னும் சில நாட்களில் மலை சுழற்சி தடையை முறையாக நீதிமன்றத்தில் நீங்கும் என்றும் ,மாவட்ட மாறுதல் கண்டிப்பாக நடைபெறும் என தெரிகின்றது.

மழை சுழற்சியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் (மலை சுழற்சி உள்ள மாவட்டங்களில்) மற்றும் மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற தடை நீங்கியவுடன் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு நடைபெறும் இது குறித்து பல்வேறு குழுக்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இத் தகவல் பகிரப்பட்டுள்ளது.

தகவல் பகிர்வு: மாநில தலைமை

SSTA-2009& TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு
March 10, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 10.03.2022 )

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 10.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?

DSE : பள்ளிக் கல்வித்துறை

10.03.2022 - வியாழக்கிழமை

அரசு / நகராட்சிஉயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் , கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்

( வருவாய் மாவட்டத்திற்குள் )

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog