Breaking

Showing posts with label முதல்வர் மு.க.ஸ்டாலின். Show all posts
Showing posts with label முதல்வர் மு.க.ஸ்டாலின். Show all posts

Thursday, August 11, 2022

August 11, 2022

போதை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | நேரலை காட்சி



பெற்றோர்கள்,ஆசிரியர்களும் சேர்ந்து தான் இதை தடுக்க வேண்டும்;

தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரம் பேச வேண்டும்;

குழந்தைகளிடம் அன்போடு பேசுங்கள், எந்த காரணத்திலும் குழந்தைகளை விட்டு விடாதீர்கள்

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது;

போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்

போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை”

“மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை;

போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாக இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tuesday, July 26, 2022

July 26, 2022

மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன் விழா ஆண்டு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மவுலானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீப கால சம்பவங்கள் மன வேதனை அளிப்பதாகவும், எத்தகைய இடையூறுகளையும் மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

July 26, 2022

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"மாணவச் செல்வங்களே, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் தான் இருக்க வேண்டும்; உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை"
July 26, 2022

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதல்வரின் அறிவுரை

பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

மாணவிகளுக்கு மன, உடல் ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது

மாணவர்கள் அவமானத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்

இதையும் படிக்க | பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவேக்கூடாது; தலைநிமிரும் எண்ணமே வேண்டும்

மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் மனம் விட்டு பேச வேண்டும்

படிப்போடு கல்வி முடிவதில்லை; பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்துவிடாது

கல்வி நிறுவனம் நடத்துவோர் தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும்

- சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
July 26, 2022

பள்ளியில் மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை..! எச்சரிக்கை விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

“சமீப காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய வைத்துள்ளன” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க | குரூப் 4 தோ்வு: 18.50 லட்சம் போ் எழுதினா்: வினாக்கள் எளிதாக இருந்ததாக கருத்து

சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைறபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்றார். அப்போது, அந்த விழாவில் முதல்வர் பேசியதாவது, “ பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது. தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. கொரோனா பாதிப்பால் எனது தொண்டை பாதிக்கப்பட்டிருந்தாலும், எனது தொண்டு பாதிக்கப்படவில்லை. “

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிக்க | அன்று ஆசிரியர்.. இன்று நாட்டின் முதல் குடிமகள் - திரௌபதி முர்மு குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள்

கள்ளக்குறியிச்சில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 23, 2022

July 23, 2022

இலவச சைக்கிள் திட்டத்தை 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Total Pageviews

Search This Blog