Breaking

Showing posts with label Issue by Court Order. Show all posts
Showing posts with label Issue by Court Order. Show all posts

Thursday, May 08, 2025

Tuesday, December 05, 2023

December 05, 2023

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு விவகாரம் சென்னை ஹை கோர்ட் தீர்ப்பு.



மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு விவகாரம் சென்னை ஹை கோர்ட் தீர்ப்பு.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கே.ராஜசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சீர்காழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1986-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின்னர் 2006-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று சட்டநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

1987-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த பாபு என்பவர் தற்போது புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் என்னைவிட பணியில் இளையவர். ஆனால், என்னை விட ரூ.4,400 அதிகமாக ஊதியம் பெற்று வருகிறார். ஊதியம் அதிகம்

எனவே, எனக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரிடம் மனு கொடுத்தேன். ஆனால் அந்த மனுவை நிராகரித்து விட்டார். என்னை விட இளையவரான பாபுவுக்கு நிகராக ஊதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வி. காசிநாத பாரதி ஆஜராகி, பணி விதிகளின்படியும், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புகளின் படியும், பணியில் இளையவரை விட மூத்தவர் குறைவான சம்பளம் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அதை அரசு சரி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரின் உத்தரவை ரத்து செய்கிறேன். பணியில் இளையவரான பாபு பெறும் ஊதியத்தை மனுதாரருக்கும் 8 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Wednesday, September 27, 2023

September 27, 2023

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நேரிடும்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நேரிடும்

நீதிமன்ற உத்தரவுகளைத் தொடா்ந்து அமல்படுத்த மறுக்கும் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்யப் பரிந்துரைக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த சிவஞானம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினேன். கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். இதற்கான மருத்துவச் செலவு ரூ. 9 லட்சத்தை காப்பீட்டுத் தொகை மூலம் எனக்கு வழங்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குநருக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எனது மனு நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் எனக்கு வழங்க வேண்டிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தொகை இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. எனவே, தொடா்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தார்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்ட மருத்துவ இணை இயக்குநராகப் பணியாற்றிய நெடுமாறன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அப்போது, மனுதாரரின் கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டதால் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அரசுப் பேருந்தில் செல்லும் பயணி தனது பயணச் சீட்டை தொலைத்துவிட்டால், அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல, ஒரு நடத்துநா் தனது பயண சீட்டுக் கட்டை தொலைத்துவிட்டால் அவரை பணியிலிருந்து நீக்கக் கூடிய நிலை உள்ளது.

எனவே, மருத்துவத் துறையில் ஓா் உயரதிகாரி ஆவணங்களை தொலைத்துவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. இனி வரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். அதுதான் பிற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். கடமை தவறும் அரசு உயரதிகாரிகளைச் சரி செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே இது உணா்த்துகிறது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அதைச் செயல்படுத்த அரசு அதிகாரிகள், தங்களது சொந்த பணத்தை செலவழிப்பது போல நினைத்துக் கொள்கின்றனா். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் ஆவணங்கள் தொலைந்துவிட்டதாகப் பதிலளிக்கின்றனா்.

எனவே, ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Saturday, February 11, 2023

February 11, 2023

மாணவர்களின் கல்வி கட்டணத்தில் முறைகேடு; நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களின் கல்வி கட்டணத்தில் முறைகேடு; நீதிமன்றம் உத்தரவு - Irregularities in students' tuition fees; Court order

மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை பெற்று முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட ஒய்எம்சிஏ கல்லூரியின் திட்ட செயலாளரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஒய்எம்சிஏ கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணமாக ரூ.1 கோடியே 69 லட்சத்து 59,137 வசூல் செய்யப்பட்டது. இந்த தொகையில் ரூ. 1 கோடியை கல்லூரியின் திட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த பால் தாமஸ் ஆக்சிஸ் வங்கியில் டெபாசிட் செய்யதாகவும், மீதமுள்ள தொகையை கல்லூரி செலவு செய்ததாகவும் கணக்கு காட்டியுள்ளார்.

இதில் முறைகேடு நடந்ததாக கல்லூரியின் தாளாளர் பெஞ்சமின் பிராங்கிளின மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாத கூறப்பட்ட ரூ.1 கோடிக்கான டிடி ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, ஒரு கோடியே 69 லட்சத்து 59,137 ரூபாயை கையாடல் செய்ததாக கல்லூரி சேர்மன் லிபி பிலிப் மேத்யூ, செயலாளர் கோசி மேதியூ, திட்ட செயலாளர் பால்சன் தாமஸ், ஊழியர்கள் மலர்விழி, ரூபாதேவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த இளங்கோவன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பால்சன் தாமஸ் 2022 டிசம்பர் 26ல் கைது ெசய்யப்பட்டார்.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பால்சன் தாமஸ் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்துவருவதால் ஜாமீன் வழங்ககூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, பால்சன் தாமஸின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Saturday, April 16, 2022

April 16, 2022

TNPSC - 500 கால்நடை டாக்டர்கள் பணி - நீதிமன்ற உத்தரவால் சிக்கல்

500 veterinarians working in Tamil Nadu are lamenting the Supreme Court order to write the Tamil Nadu Public Service Commission (TNPSC) examination by December 2022.

In 2012, 500 assistant veterinarians were temporarily appointed by the Department of Veterinary Care. In 2014, DNPSC announced the appointment of new doctors. Those who were then temporarily appointed were allowed to write the exam with privileges. But the newcomers sued in the Chennai High Court against the offer.

The High Court has thus ordered that all examinations be conducted in the same manner. The temporary doctors appealed to the Supreme Court against the order. Temporary veterinarians must also write the DNPSC exam. They were ordered to calculate the number of years they had worked and to give a grace score of 5 points per year and to show concession in the age range. Ordered to standardize the work by conducting an examination by December 2022. With this order the temporary doctors are lamenting how to pass the written test as they are over 50 years old.

தமிழகத்தில் பணிபுரியும் 500 கால்நடை டாக்டர்கள் 2022 டிசம்பருக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு எழுத வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் டாக்டர்கள் புலம்புகின்றனர்.

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2012ல் 500 உதவி கால்நடை டாக்டர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். 2014ல் புதிதாக டாக்டர்களை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது. அப்போது தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள் சலுகைகளுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் புதியவர்கள் சலுகை வழங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் அனைவருக்கும் ஒரே மாதிரி தேர்வுகள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக டாக்டர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.2019 ல் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வெளியானது. அதில் தற்காலிக கால்நடை டாக்டர்களும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத வேண்டும்.

அவர்கள் பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கிட்டு, ஆண்டிற்கு 5 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண் வழங்கவும், வயது வரம்பில் சலுகை காட்டவும் உத்தரவிடப்பட்டது.

2022 டிசம்பருக்குள் தேர்வு நடத்தி பணியை வரன்முறைப்படுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தற்காலிக டாக்டர்கள் 50 வயதை தாண்டியவர்களாக இருப்பதால் தேர்வு எழுதி எப்படி தேர்ச்சி பெறுவது என புலம்புகின்றனர்.

Total Pageviews

Search This Blog