Breaking

Showing posts with label RRB. Show all posts
Showing posts with label RRB. Show all posts

Sunday, February 08, 2026

Sunday, March 17, 2024

Tuesday, February 06, 2024

February 06, 2024

RAILWAY RECRUITMENT BOARDS - Recruitment of Technicians Tentative Timelines - Number of Vacancies - About 9000



RAILWAY RECRUITMENT BOARDS - Recruitment of Technicians Tentative Timelines - Number of Vacancies - About 9000)

MINISTRY OF RAILWAYS

RAILWAY RECRUITMENT BOARDS

RAILWAYS INDIAN

CEN No.02/2024- Recruitment of Technicians Tentative Timelines

(Tentative Number of Vacancies - About 9000) 1) Publication of Notification in Employment News - February 2024



2) Submission of Online Applications - March-April 2024

3) The Computer Based Tests (CBTs) are tentatively scheduled to be held between October and December 2024.

4) Shortlist for Document Verification will be released in February 2025.

Please Note: The Centralised Employment Notice for the next cycle of recruitment to the post of Technicians is provisionally planned for issue in April 2025.
February 06, 2024

2860 Apprentice Posts in Railways

ரயில்வேயில் 2860 அப்ரண்டிஸ் பணியிடங்கள் 2860 Apprentice Posts in Railways

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2860 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் 28ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளம்: https://sr.indianrailways.gov.in/

Tuesday, January 23, 2024

January 23, 2024

இரயில் வண்டி ஓட்டுநராகிய "லோகோ பைலட்" ஆக வேண்டுமா?

இரயில் வண்டி ஓட்டுநராகிய "லோகோ பைலட்" ஆக வேண்டுமா?

அதற்கு நாங்கள் என்ன செய்யனும்?

அதற்கு நீங்கள் தற்போது இந்தியன் இரயில்வே வெளியிட்டுள்ள உதவி ஓட்டுநர் (Assistant Loco Pilot) ஆள்சேர்ப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பபது?

அதற்கான இணையதள முகவரியினுள் சென்று இணையவழியில் (online mode) விண்ணப்பிக்க வேண்டும்.

தெற்கு ரயில்வேக்கான இணையதள முகவரிகள் என்ன?

www.rrbchennai.gov.in www.rrbthiruvananthapuram.gov.in

இதுக்கு விண்ணப்பிக்க என்ன படிச்சிருக்கனும்?

இதுக்கு இரண்டு வருட ஐ.டி.ஐ படிப்பு படிச்சிருந்தா போதும்.

அல்லது



எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் மூன்று வருட டிப்ளமோ படிப்பு அல்லது

அதே துறைகளில் பொறியியல் (BE) படிப்பு. இதுக்கு விண்ணப்பிக்க எத்தனை வயசு இருக்கனும்?

பொது (UR) : 18 - 30 இ.பி.வ (OBC) : 18 - 33 ப.வ/ப.ப.(SC/ST) : 18 - 35

இதுக்கு ஏதாவது உடற்தகுதி இருக்கனுமா?

ஆமாம். கண்ணாடி இல்லாமல் கண்பார்வை 6/6 விகிதத்தில் இருக்கணும். விண்ணப்பிக்கும் போதே கண் மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று சேர்த்து அனுப்பனும்.

மேலும், இரத்த அழுத்தம், சர்க்கரை, இ.சி.ஜி எல்லாம் சரியாக இருக்கனும். மொத்தத்தில் A-1 fit ஆக இருக்கனும்.

விண்ணப்பக் கட்டணம் ஏதாவது உண்டா?

ஆமாம்.

எஸ்.சி/எஸ்.டி, பெண்கள், மூன்றாம் பாலினத்தோர் ஆகியோருக்கு ரூ. 250ம், மற்றோருக்கு ரூ 500ம் விண்ணப்பிக்கும் போதே ஆன்லலைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தந்துடுவாங்கனு சொல்றாங்களே.. அப்படியா?

ஆமாம். நீங்கள் தேர்வு எழுதியதும் ஆன்லைன் மூலமாகவே திருப்பி வழங்கப்படும். தேர்வு எழுதலைனா திரும்பக் கிடைக்காது.

விண்ணப்பிக்கும் போது என்னென்ன சேர்த்து வச்சு விண்ணப்பிக்கனும்? 1. கல்வித்தகுதிச் சான்றிதழ்கள், 2. பிறந்தநாள் சான்றிதழ் 3. சாதிச் சான்றிதழ் 4. கண்பார்வைக்கான மருத்துவச் சான்றிதழ் 5. மார்பளவு புகைப்படம் 6. மாதிரிக் கையெழுத்து (ஆங்கிலத்தில்) தேர்வு எத்தனை விதமா இருக்கும்? எப்படி இருக்கும்?

தேர்வு ஐந்து விதமாக இருக்கும்.

1. கணினி வழித் தேர்வு 1 (CBT 1)

2. கணினி வழித் தேர்வு 2 (CBT 2)

3. கணினி வழி உளவியல் தேர்வு (CBAT )

4. சான்றிதழ் சரிபார்ப்பு

5. மருத்துவ பரிசோதனை

இந்த ஐந்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று வருகிறவர்களுக்கே பணிநியமனம் வழங்கப்படும்.

தேர்வுக்கான பாடத்திட்டங்கள் எப்படி?

CBT -1 (75 marks)

கணிதம், மன உளவியல், பொது அறிவு

CBT - 2

CBT - 1ல் தகுதியானவர்களை 1:15 என்கிற விகிதத்தில் CBT -2 தேர்வுக்கு எடுக்குறாங்க.

CBT -2 தேர்வு PART - A; PART - B என இருவிதமா நடத்துறாங்க.

Part - A ,யில் கணிதம், உளவியல், காரணமறிதல், அடிப்படை அறிவியல், பொறியியல் பகுதுகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.

Part -B யில் விண்ணப்பதாரரின் துறை தொடர்பான பாடங்களில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும்.

தவறாக விடையளித்தால் ஏதேனும் எதிர்மறை மதிப்பெண்கள் (negative marks) உண்டா?

ஆமாம்.

CBT - 1 & CBT - 2 ல் தவறான விடைகளுக்கு 1/3 என்ற விகிதத்தில் எதிர்மறை மதிப்பெண் (negative mark) களும் உண்டு.

எனவே விடை தெரிந்த கேள்விகளை மட்டும் எழுதுதல் நலம். CBT - 2 முடிஞ்சதுக்கு அப்புறம்??

அதுல தேர்ச்சி பெற்றவர்களை மூன்றாவது கட்ட தேர்வாகிய APTITUDE TEST எனும் உளவியல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மற்ற தேர்வுகளை விட இது வித்தியாசமானது. படங்களாகவும் எண்களாகவும் கொடுத்து கேள்வி கேட்பாங்க. அதுல brick test, memory test, yes or no, numerical test அப்படி இப்படினு உண்டு. ஒவ்வொரு testலயும் குறைஞ்சது 42 மார்க்காவது எடுக்கனும். அதற்கான மாதிரி வினாக்களை rdso.indianrailways.gov.com எனும் இணைய முகவரியில் சென்று பார்க்கலாம்.

தேர்வுப்பட்டியல் எப்படிப் போடுவாங்க??

CBT-2 மற்றும் APTITUDE TEST ல தேர்ச்சி அடைஞ்சவங்களை (70% & 30%) சராசரி மதிப்பெண்கள் போட்டு மதிப்பெண் வாரியாக தேர்வுப்பட்டியல் வெளியாகும்.

அப்புறம்??

அப்புறமா இவுங்க எல்லாம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் தேர்வு செய்யப்பட்டு பெயர் பட்டியல் இரயில்வேயின் அந்தந்த மண்டல தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இப்போ நம்ம தெற்கு ரயில்வேனா சென்னையில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

அப்போ மெடிக்கல் டெஸ்ட் எப்போ??

இரயில்வே மண்டல அலுவலகத்தில் இருந்து அந்த மண்டலங்களில் உள்ள கோட்டங்களுக்கு கோட்ட வாரியான காலி இடங்களைப் பொறுத்து கோப்புகள் அனுப்பி வைக்கப்படும். தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் என ஆறு கோட்டங்கள் உள்ளன.

Monday, October 30, 2023

October 30, 2023

தாம்பரம் - சென்னை இடையே நாளை (அக்.31) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்



தாம்பரம் - சென்னை இடையே நாளை (அக்.31) மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை பணிமனையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 மணி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 11 முதல் பிற்பகல் 2.20 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், காஞ்சிபுரம் (காலை 9.30), திருமால்பூரில் (காலை 11.05) இருந்து புறப்படும் ரயில்களும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு (காலை 10) புறப்படும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும், பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் நாளை (அக்.31) கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

Thursday, October 19, 2023

October 19, 2023

தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை மற்றும் சனிக்கிழமை கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை

தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை மற்றும் சனிக்கிழமை கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை Additional Metro train services tomorrow and Saturday in view of the ongoing holiday

செய்தி வெளியீடு எண்: 115/2023

நாள்: 19.10.2023

பத்திரிக்கைச் செய்தி

தொடர் விடுமுறையால் நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு

ஆயுத பூஜை 23.10.2023 (திங்கள்கிழமை) மற்றும் சரஸ்வதி பூஜை (செவ்வாய்க்கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 20.10.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை 20.10.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.

வெளியீடு: இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை - 600 035.

Monday, August 21, 2023

August 21, 2023

தெற்கு ரயில்வேயில் 15,240 பணியிடங்கள் காலி!

தெற்கு ரயில்வேயில் 15,240 பணியிடங்கள் காலி

தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் உள்ள, 15,240 காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், கூடுதல் பணி சுமையால் அவதிப்படுவதாக, ரயில்வே பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூலை நிலவரப்படி, இந்திய ரயில்வேயில், 2,61,233 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

அதிகபட்சமாக, வடக்கு ரயில்வே - 32,468, கிழக்கு ரயில்வே - 29,869, மேற்கு ரயில்வே - 25,597, மத்திய ரயில்வே - 25,281 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, தெற்கு ரயில்வேயில் மொத்தம் உள்ள 97,000 பணியிடங்களில், 15,240 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கூடுதல் சுமைரயில் ஓட்டுனர், நிலைய அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர்கள், கிளார்க், பாயின்ட் மேன், மெக்கானிக் என பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன.இதுகுறித்து, ரயில்வே பணியாளர்கள் சிலர் கூறியதாவது:

எங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது.

விடுப்பு இன்றி பணியாற்றுவதால், உடல் சோர்வு ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்படுகிறது. முன்பெல்லாம் எங்களுக்கு வார விடுமுறையும், மற்ற விடுமுறையும் தடையின்றி கிடைக்கும். இப்போது விடுப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. கூடுதல் பணி பளுவால், கவனக்குறைவும் ஏற்படுகிறது. இதனால், ரயில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்புவதில் இனியும் அலட்சியம் காட்டாமல், ரயில்வே உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.நடவடிக்கைரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது:

காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. ரயில் ஓட்டுனர், நிலைய மேலாளர் உள்ளிட்ட சில பிரிவுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எஞ்சியுள்ள பணியிடங்களை படிப்படியாக நிரப்ப, ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tuesday, August 08, 2023

August 08, 2023

ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் குரூப் - சி பதவிகளில் 2.49 லட்சம் காலியிடங்கள்

ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் குரூப் - சி பதவிகளில் 2.49 லட்சம் காலியிடங்கள் - 2.49 lakh vacancies in Group-C posts in all zones of Railways

ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் குரூப் - சி பதவிகளில் 2.49 லட்சம் காலியிடங்கள் - மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் குரூப் - சி பதவிகளில் 2.49 லட்சம் காலியிடங்களும், குரூப் ஏ & பி பதவிகளில் 2,070 பணியிடங்களும் காலியாக உள்ளன

- மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதில்

Total Pageviews

Search This Blog