Breaking

Showing posts with label Delete messages for everyone. Show all posts
Showing posts with label Delete messages for everyone. Show all posts

Tuesday, August 02, 2022

August 02, 2022

”இனியாவது கனிவுடன் இருங்களேன்..”- வைரலாகும் ஆசிரியருக்கு மாணவி அனுப்பிய வாட்ஸ்-அப் மேசேஜ்

பள்ளிக் காலங்களில் விருப்பமான ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்ட பள்ளியை விட்டுச் சென்றால் மாணவர்கள் பலரும் அந்த ஆசிரியரை சூழ்ந்து அழுது, கட்டியணைத்து பிரியா விடை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி இருக்கையில், தன்னுடைய பள்ளி காலத்தின் போது தன்னை மட்டம்தட்டி பேசிய ஆசிரியர் ஒருவருக்கு பெண் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் செய்து “நீங்கள் நினைத்தது போல, கூறியது போல இல்லாமல் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்வி நிலையத்தில் எனக்கு பிடித்த படிப்பை படிக்கப்போகிறேன். இனிமேலாவது கனிவுடன் இருக்க பழகுங்கள். குறிப்பாக உங்களது உதவியை நாடும் மாணவர்களிடம் கனிவுடனும் இருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்த ஸ்க்ரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய டீச்சருக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என நானும் என்னுடைய தோழியும் நினைத்திருந்தோம். அதற்கான நாள் இப்போதுதான் வாய்த்திருக்கிறது என கேப்ஷனும் இட்டிருக்கிறார். இந்த பதிவு ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு நெட்டிசன்களிடையே படுவைரலாகியிருக்கிறது. மேலும், தங்களுடைய பள்ளி காலங்களின் போது ஆசிரியர்கள் தங்களை இழிவுபடுத்தி பேசியது பற்றியும் பகிர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், வைராலன பதிவில் உள்ள வாட்ஸ் அப் மெசேஜிற்கு அந்த ஆசிரியர் பதிலளித்துள்ளார் எனவும் இணையவாசிகள் கேட்டிருக்கிறார்கள். அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டையும் அப்பெண் ஷேர் செய்திருக்கிறார்.

அதில், “நீ இப்படி தேர்ச்சி பெறுவதற்கான பெருமையும் என்னைத்தான் சேரும்” என அந்த ஆசிரியர் பதிலளித்திருக்கிறார். அந்த பதிவும் பலரால் ஷேர் செய்யப்பட்டதோடு விமர்சன பதிவுகளும் இடப்பட்டிருக்கிறது.

Sunday, July 31, 2022

July 31, 2022

WhatsApp New Update - அட்மின்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

WhatsApp New Update :

வாட்ஸ்அப் அட்மின்களுக்கு மகிழ்ச்சியான செய்தி .

நிங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த அப்டேட் வந்தாச்சு

வாட்ஸ்அப் க்ரூப்பில் நாம் பலவகையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.

சிலர் க்ரூப்பிர்க்கு தேவையில்லாத பதிவுகளை அனுப்பி குரூப் அட்மிகளை கோவப்படுகின்றனர்.

இந்த "தலைவலி"க்கான மருந்தை கொண்டு வரும் WhatsApp!

வாட்ஸ்அப், கடந்த பல வாரங்களுக்காகவே 'யூசர் இன்டர்பேஸில்' எக்கச்சக்கமான மேம்படுத்தல்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது.

அந்த வரிசையில் ஒரு அதிரடியான அப்டேட் வந்துல்லது.

அது என்னவென்றால், அட்மின்களுக்கான டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரிஒன் (Delete messages for everyone) என்கிற அம்சம் ஆகும்.

இதுநாள் வரையிலாக 'டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரிஒன்' என்கிற அம்சம் தனிப்பட்ட நபர்களுக்கான ஒரு அம்சமாகவே வாட்ஸ்அப்பில் கிடைக்கிறது.

ஆனால் இனிமேல் அது க்ரூப் அட்மின்களுக்கும் இது கிடைக்கும்.

அதாவது இனிமேல் வாட்ஸ்அப் க்ரூபில் யாரவது கிறுக்கு தனமான மெசேஜ்களை அனுப்பினால், அது மற்றவர்களை எரிச்சல் அடைய வைக்கும் என்று அட்மின்கள் நினைத்தால், அதை அவர்களால் ஒட்டுமொத்தமாக டெலிட் செய்ய முடியும்.

Total Pageviews

Search This Blog