Breaking

Showing posts with label NEET COUNSELING. Show all posts
Showing posts with label NEET COUNSELING. Show all posts

Friday, September 09, 2022

September 09, 2022

விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்ணுக்கு சரியான பதில் எழுதியபோதும் 115 மதிப்பெண்களே வந்ததாக திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் வழக்கு தொடர்ந்தார். 115 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய OMR விடைத்தாளை தனது பெயரில் பதிவேற்றம் செய்துள்ளதாக மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Thursday, September 08, 2022

September 08, 2022

நீட் தோ்வில் 4 பேர் ஒரே மதிப்பெண் எடுக்க ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்தாா்.

நீட் தேர்வில் தனிஷ்கா உள்பட நான்கு பேர் 715 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். இவர்களில் தனிஷ்கா முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தில்லியைச் சோ்ந்த வத்ஸா ஆசிஷ் பாத்ரா, ரிஷிகேஷ் கங்குலே, கர்நாடகத்தைச் சேர்ந்த ருச்சா பவாஷே ஆகியோரும் 715 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக 9.93 லட்சம் போ் இத்தோ்வில் வெற்றி பெற்றனா்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அதனை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

ஒரே மதிப்பெண்ணை இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எடுக்கும் போது அவர்களுக்குள் தரவரிசையில் பட்டியலிடும் முறைக்கு வயதை கருத்தில் கொள்ளும் முறையை தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு மாற்றியமைத்திருந்தது.

அதன்படி, இந்த ஆண்டு ஒரே மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அ. ஒரே மதிப்பெண் எடுத்த நான்கு பேரில் உயிரியியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை.
ஆ. அதிலும் ஒரே மதிப்பெண் இருந்தால், அடுத்து வேதியியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.
இ. அடுத்து இயற்பியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்ணும்
ஈ. உயிரியியல் பாடத்தில் எத்தனை கேள்விகளுக்கு தவறான பதிலளித்திருந்தார், எத்தனை கேள்விகளுக்கு சரியான பதிலளித்திருக்கிறார் என்பதும்
உ. வேதியியல் பாடத்தில் மாணவர்கள் எத்தனை கேள்விகளுக்கு தவறான பதிலளித்திருந்தார், எத்தனை கேள்விகளுக்கு சரியான பதிலளித்திருந்தார் என்பதும் கணக்கில் எடுக்கப்பட்டு முதல் இடத்தைப் பிடித்தவர்கள் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா் உள்பட 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வை 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்றனா். அதற்கான விடைக்குறிப்பு, தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவில் வெளியிடப்பட்டது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் அவை வெளியாகின.

Thursday, September 01, 2022

September 01, 2022

நீட் முதுகலை கலந்தாய்வு ஒத்திவைப்பு

Postponement of NEET post graduate consultation to 19th September

The NEET post graduate consultation scheduled to be held today has been postponed to September 19. The NEET entrance exam for 2022 postgraduate medical courses was held on 21st May.

நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.

Tuesday, August 30, 2022

August 30, 2022

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் தடுக்க கருவிழியை பதிவு செய்ய வேண்டும்

Iris should be registered to prevent impersonation in 'NEET' examination 'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுக்க மாணவர்களின் கருவிழியை பதிவு செய்ய வேண்டும் என, சி.பி.ஐ., - சி.பி.சி.ஐ.டி., தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக, சென்னை மாணவர் உதித்சூர்யா உட்பட சிலர் மீது, 2019ல் தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர்.கைதான இடைத்தரகர் கேரளா, திரூர் உன்னியலைச் சேர்ந்த ரஷீத் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.ஏற்கனவே விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், 'இவ்வழக்கில் தொடர்புடைய மாணவர்களுக்காக வெளிமாநில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் மூலம் சிலர் தேர்வு எழுதியுள்ளனர்.

'இதுபோல் பிற மாநிலங்களில் நடந்திருக்க வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் இதுபோல தவறுகள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சி.பி.ஐ., பதிலளிக்க வேண்டும்' என்றார்.இந்த வழக்கை நீதிபதி எம்.நிர்மல்குமார் மீண்டும் நேற்று விசாரித்தார். சி.பி.சி.ஐ.டி., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:நீட் ஆள்மாறாட்ட வழக்கில், 13 பேர் கைதாகியுள்ளனர். மூன்று பேர் கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இரண்டு பேர் முன்ஜாமின் பெற்றுள்ளனர்.

தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது போட்டோ, கைரேகையை தவிர கண்ணின் கருவிழியை பதிவு செய்து பாதுகாக்க வேண்டும்.மாணவர்கள், பெற்றோர் பெயர், முகவரியை முறையாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகம் அல்லது அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியின் சான்றொப்பம் பெற வேண்டும்.இதில், மாறுபாடு இருந்தால் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக அனுமதி வழங்கும் முன் ஆதார், இ.எம்.ஐ.எஸ்., எண், மாணவர், பெற்றோர் பெயர் இரட்டைப் பதிவுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.

Wednesday, July 20, 2022

July 20, 2022

நீட் தேர்வு ஆடை விவகாரம்: 5 பேர் கைது

நீட் தேர்வு ஆடை விவகாரம்: 5 பேர் கைது

கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION (GROUP I SERVICES) (Counselling) - PDF (19.07.2022 (COUNS_PHASE_II))

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில் 5 பெண்களை கைது செய்துள்ளனர். 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என காவல்துரையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.

Tuesday, July 12, 2022

July 12, 2022

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு..! - விதிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வு - விதிமுறைகள்

ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம். வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும்

வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதலாம்

ஹால்டிக்கெட்டுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி

தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்

ஜூலை 17ம் தேதி பகல் 1.30 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வருக்கும், தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை

- தேசிய தேர்வு முகமை

Friday, February 04, 2022

February 04, 2022

2022-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தள்ளிவைப்பு: ஒன்றிய அரசு தகவல்

மார்ச் 12-ம் தேதி 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வுகள் 6 முதல் 8 வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதால் 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

அந்தவகையில், 2022 கல்வியாண்டிற்கான மருத்துவ மேற்படிப்புக்கு NEET PG 2022 நீட் தேர்வுக்கு மார்ச் 12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதால் 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog