Breaking

Showing posts with label PROMOTION. Show all posts
Showing posts with label PROMOTION. Show all posts

Monday, January 01, 2024

January 01, 2024

ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமையின்படி பதவி உயர்வு - வரவேற்பும் , எதிர்ப்பும்!!!



ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமையின்படி பதவி உயர்வு - வரவேற்பும் , எதிர்ப்பும்!!! State-level priority promotion for teachers - welcome and protest!!!

Why promotion is important for teachers?

According to Luthans (2015) promotions are employed in motivating teachers for better job satisfaction when the addition grade level is fully implemented. These are good motivation for work in salary increment, gratuity, and regular promotion, ensuring job security, and establishing cordial relationship among teachers.

How do you get promotion by education?

To increase your chances of getting a promotion in education, make sure you have the necessary qualifications and certifications, gain relevant experience, build a strong professional network, showcase your achievements, seek feedback and mentorship, and stay informed about job opportunities within your organization

Do teachers get promotion?

BENGALURU: For the first time, the state education department has decided to promote teachers based on their qualification.As per the information available from the department, there are over 12,000 teachers who have completed their graduation and post graduation.

What is your career path as a teacher?

Career Paths for Teachers - College of Education - UT Austin

Teachers make great advocates for education because of their direct experience in the classroom. Master's and doctoral degrees in education can prepare you to work in administrative positions in colleges and universities, become a researcher of issues in education, or become prepare future teachers as a professor

ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமையின்படி பதவி உயர்வு - வரவேற்பும் , எதிர்ப்பும்!!!

தொடக்கக் கல்வியில் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமையின்படி பதவி உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. இதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் வரவேற்பும், இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை எனும் நடைமுறையின்படி பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மறுபுறம் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வட்டார அளவிலேயே பின்பற்றப்பட்டது. இதனால் மூத்த ஆசிரியர்கள் பலர் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை மாற்றி அமைக்கக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதையேற்று தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே இனி பதவி உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதற்கான அரசாணையும் வெளியானது. இதன்மூலம் இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் இனி நேரடியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது. இந்த அறிவிப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, “தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243-ன்படி இனி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். இது இடைநிலை ஆசிரியர்களிடம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே 6, 7, 8-ம் வகுப்புக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பால் இடைநிலை ஆசிரியர் நியமனமும் மிகவும் குறைந்துவிட்டது. அதேபோல், ஊதிய முரண்பாடுகளும் உள்ளன. ஒருபுறம் ஊதியத்துக்காக போராடி வரும் நிலையில், மறுபுறம் பதவி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான முன்னுரிமை குறித்தும் எந்தவொரு தொடக்கக்கல்வி இயக்கத்தின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை ஏற்புடையதல்ல. இதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்”என்று தெரிவித்தார். மறுபுறம் தங்கள் 19 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, “எந்தவொரு ஆசிரியர்களின் பதவி உயர்வையும் தட்டி பறிக்கவில்லை. எங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையைதான் போராடி பெற்றுள்ளோம். தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் நிலையில் இருந்து, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவது ஏற்புடையதல்ல. ஒருநாள்கூட பட்டதாரி ஆசிரியராக பணிபுரியாதவர் பட்டதாரிகளுக்கு தலைமை ஆசிரியராக வருவது சரியாக இருக்காது. அதை உணர்ந்துதான் விதிமுறைகளை தற்போது அரசு திருத்தியுள்ளது” என்றார்.

Monday, December 11, 2023

December 11, 2023

4,500 இளநிலை உதவியாளர்களுக்கு 10 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை - பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் மனு

4,500 இளநிலை உதவியாளர்களுக்கு 10 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை - பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் மனு

4,500 இளநிலை உதவியாளர்களுக்கு 10 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் மனு கொடுக்க முடிவு.

Friday, November 17, 2023

November 17, 2023

முதுகலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிய பிறகு பணிநிரவல் கலந்தாய்வு

Recruitment consultation after promotion of Post Graduate Teacher, High School Headmasters முதுகலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிய பிறகு பணிநிரவல் கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களாக பதவி உயர்வு வழங்கிய பிறகு, பணிநிர வல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 6 ஆயிரத்திற்கும் மேற் பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்ட தாரி ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களின் எண் ணிக்கை, 1.08.2023 நிலவ ரப்படி மாணவர் எண் ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி உபரியாக கண் டறியப்பட்டுள்ள பட்ட தாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் 20ம் தேதி நடத்தப்ப டும் என அறிவிக்கப்பட்டுள் ளது. இதனிடையே, கல்வி யாண்டிற்கு இடையே பணி நிரவல் மேற்கொண்டால், மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள், தங்களுக் கான முதுகலை ஆசிரி யர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிய பிறகு, பணிநிரவல் கலந்தாய்வு நடத்தவேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில நிர்வாகிகள் பாஸ்கரன், சோமசுந்தரம், மலர்க்கண்ணன் மற்றும் கமலக்கண்ணன் ஆகி யோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது

Friday, July 28, 2023

July 28, 2023

உதவிப் பேராசிரியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

உதவிப் பேராசிரியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு இரட்டைப் பதவி உயர்வாக, மூன்று மாதங்களில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பதவி உயர்வு திட்டத்தின் அடிப்படையில், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என இரட்டை பதவி உயர்வு வழங்குவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டு பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இரட்டை பதவி உயர்வு வழங்காமல், இணை பேராசிரியர் பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டதை எதிர்த்து இணை பேராசிரியர்கள் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உய ர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில், "குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இணை பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்" என விளக்கம் அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதவி உயர்வு குழு கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு தான் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் பல உதவி பேராசிரியர்கள் பலர் பதவி உயர்வு கிடைக்க பெறாமல் பணி ஓய்வு பெற்றுள்ளனர். எனவே, மனுதாரர்களுக்கு மூன்று மாதங்களில் பேராசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். அரசுப் பள்ளிகளில் ஒரே நாளுடன் முடிவடைந்த காலை உணவுத் திட்டம் - மீண்டும் வருமா?

Friday, March 24, 2023

March 24, 2023

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - நீதிமன்றத் தீர்ப்பினால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இனிமேல் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்கள் வரவே முடியாது என்றும், பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே வரமுடியும் என்றும் வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பினால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?

பட்டதாரி ஆசிரியராக இருக்கும் ஒருவர் தம்முடைய பட்டதாரி ஆசிரியர் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு முதுகலை ஆசிரியர்/ உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் என்ற இரண்டு பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுகிறார். (உரிய தகுதியைப் பொறுத்து)

முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவுடன் அந்தத் தேதியை அடிப்படையாகக் கொண்டு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுகிறார். @kaninikkalvi

பட்டதாரி ஆசிரியர் பணிக்காலத்திற்காக அவருக்குக் கிடைத்தது முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு.

ஆனால் இவ்வளவு நாள்களாக விதிகளைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்ற பிறகும் கூட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்று இருந்தார். அவ்வாறு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகவும் வந்தார். ஆனால் அவ்வாறு வருவது அவருக்கு பதவி உயர்வு அல்ல. பணிமாறுதல் மட்டுமே. ஏனெனில் முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இரண்டும் சமமான ஊதிய அமைப்பைக் கொண்டவை. பட்டதாரி ஆசிரியராக இருந்து அந்தப் பணிக்காலத்தை வைத்து முதுகலை ஆசிரியராகச் சென்றவர் ஒரே நேரத்தில் அங்கு பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணிக்காலத்தை வைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலிலும் இடம் பெறுகிறார். இங்கு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றாத காலத்தையும் கணக்கில் கொண்டு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிமாறுதலுக்கும் வருகிறார் என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு.

அதனால் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக வரக்கூடாது என்ற தீர்ப்பினால் அவர்களுக்கு எவ்வித பண இழப்பும் இல்லை; அதே போல் அவர்களுக்கு உரிமையானது எதையும் இழக்கவில்லை.

இதற்கு முன்னர் ஆண்டுக்கு 500 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 500 பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற்றார்கள். 300 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் வெறும் 50 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பயன்பெற்றார்கள். அதில் 250 பேர் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களாக இருந்து பணிமாறுதலில் வந்துவிட்டனர்.

இனிமேல் என்ன ஆகும்? @kaninikkalvi ஆண்டுக்கு 500 முதுகலை ஆசிரியர்களாகவும், 300 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் ஆகமொத்தம் 800 பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர். தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு போன்ற பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மொத்தப் பணிக்காலத்திலும் ஒரு பதவி உயர்வைக் கூட காணாமல் பணிநிறைவு அடைந்த நிலை இனிமேல் வராது.

அவ்வகையில் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு எவ்வித பண இழப்பும் இல்லாமல் அதே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தங்கள் பணிக்காலத்தில் ஒரு பதவி உயர்வு பெற்று ஊதிய உயர்வினைப் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நல்ல நிலையை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த இயக்கம் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் என்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உண்மை நிலை என்னவென்பதை அனைத்துப்பாட பட்டதாரி ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

Wednesday, January 18, 2023

Thursday, January 12, 2023

January 12, 2023

தொடக்க கல்வித்துறை இணை இயக்குனருக்கு பதவி உயர்வு

தொடக்க கல்வித்துறை இணை இயக்குனருக்கு பதவி உயர்வு.

தொடக்க கல்வித்துறை ( நிர்வாகம்) இணை இயக்குனராக பணியாற்றிய வந்த திருமதி உமா அவர்கள் ஒருங்கினைந்த பள்ளிக் கல்வி கூடுதல் திட்ட இயக்குநர் II ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Total Pageviews

Search This Blog