Breaking

Showing posts with label Neet 2022. Show all posts
Showing posts with label Neet 2022. Show all posts

Tuesday, January 10, 2023

January 10, 2023

நீட் தோ்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

நீட் தோ்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

நீட் தோ்வு விலக்கு சட்டமசோதாவுக்கு குடியரசுத் தலைவா் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநா் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

நீட் தோ்வு கிராமப்புற ஏழை மாணவா்களை மிகவும் பாதிப்பதாகவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதை கருத்தில்கொண்டு, இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தோ்வில் இருந்து தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இந்தச் சட்டம் குறித்து கோரப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்ட முன்வடிவுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க இந்த அரசு வலியுறுத்துகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, November 19, 2022

November 19, 2022

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் எழுதினார். இதில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல் தவிர்த்தார். நீட் தேர்வில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் உதயகுமார், தான் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி கோரினார். இதை தேசிய தேர்வு முகமை நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு 4 கருணை மதிப்பெண்களம் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று இது விசாரிக்கப்பட்டது.

அப்போது, தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'மாணவர் எழுதிய கேள்வித்தாள் பிரிவில் மொத்தம் 15 கேள்விகள் கொடுக்கப்பட்டது. அதில் அவர் பத்துக்கு விடை எழுதியிருக்க வேண்டும். ஆனால், 2 மட்டுமே எழுதி உள்ளார். அவருக்கு எப்படி கருணை மதிப்பெண் வழங்க முடியும்? இது மற்ற மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்,' என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தார்.

Tuesday, September 20, 2022

September 20, 2022

Increase in NEET pass percentage this year - நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி

நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி

விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டு கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு செல்கின்றனர்.

இந்தியாவில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியாகும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.ஆரம்பத்தில், நீட் தேர்வில் அதிகளவில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று வந்தனர்.

இந்த நிலையை மாற்றி அரசு பள்ளி மாணவர்களும், அதிகளவில் தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனுார், காணை, கண்டமங்கலம், விழுப்புரம், வானுார், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், முகையூர், மரக்காணம், ஒலக்கூர், மயிலம், வல்லம், செஞ்சி, மேல்மலையனுார் ஆகிய 14 மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது.வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகள் முதுகலை ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இப்பயிற்சியில் வாரம்தோறும் தேர்வு மற்றும் நீட் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறமையை வளர்த்து வருகின்றனர்.இத்தேர்வில் கடந்த 2019-20ம் ஆண்டு பங்கேற்ற 368 மாணவர்களில் 58 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, 2020-21ம் ஆண்டில் பங்கேற்ற 330 பேரில் 65 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதேபோன்று, நடப்பு 2021-22ம் ஆண்டில் பங்கேற்க 735 பேரில், 184 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் 119 நீட் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களிடையே நீட் தேர்வு குறித்து அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ள விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடையே நீட் தேர்வு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Friday, September 16, 2022

September 16, 2022

NEET coaching classes for government school students - அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள்: அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை NEET coaching classes for government school students from next month!

Chief Minister M.K. NEET coaching classes for government school students from next month. Stalin started it. The action has been taken when the pass rate of government school students in the NEET examination has fallen sharply.

It has been said that the NEET training which usually starts in December is going to start earlier this year. Officials of the school education department have said that improved NEET training will be provided to increase the pass rate.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கயுள்ளார். நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டில் முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நீட் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, September 11, 2022

September 11, 2022

14.4% தகுதி மதிப்பெண் போதும் - தகுதியானதா நீட்தேர்வு?

நீட் தேர்வு மொத்தம் 720 
மதிப்பெண்களுக்கு நடைபெறுகின்றது. 

அதாவது .

வேதியியல் 180
இயற்பியல் 180
உயிரியல் 360 

இதில் குறைந்தபட்சமாக அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க .. 

540 க்கும் அதிகமான மதிப்பெண்கள் தேவை,... 

ஆனால் இந்த பெண் மருத்துவக் கல்லூரியில் படிக்க ...

104 மதிப்பெண்களே போதுமானது என்கிறார். .. 

அதாவது நீங்கள் FC/OBC/SC/ST எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும்...

நீட் தேர்வில் 104 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது,.. 

எதாவது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பணமிருந்தால் சேர்ந்து கொள்ளலாம். ...

இந்த மதிப்பெண் வருடத்திற்கு வருடம் மாறுபடலாம். 

முன்பெல்லாம் தமிழகத்தின் மாநிலப் பாடதிட்டத்தில் ...

1200 மதிப்பெண்களுக்கு 600 மதிப்பெண்கள் அதாவது 50% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே MBBS/BDS படிப்பிற்கு விண்ணப்பிக்கவே முடியும். ...

ஆனால் நீட் தேர்வில் அவ்வாறு இல்லாமல் ...

50th Percentile இருந்தால் போதும் நீங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். 

பெர்சண்டைல் என்பது என்னவென்றால் ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதியவர்கள் என்றால் 

அதில் பாதியான 50,000மாவது நபர் என்ன மதிப்பெண் எடுத்திருக்கிறாரோ ...

அந்த மதிப்பெண்ணே 50th பெர்சண்டைல் ஆகும்.

இதன்படி பார்த்தால் 720க்கு 104 மதிப்பெண்கள் என்பது 100க்கு 14.4% ஆகும். ...

அதாவது பள்ளி கல்வியில் கூட 100 க்கு 35% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். 

ஆனால் நீட் தேர்வில் 14.4% பெற்றாலே போதுமானது நீங்கள் தேர்ச்சி பெற்றதாக எடுத்துக் கொண்டு... 

ஏதாவது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பணமிருந்தால் சேர்ந்து கொள்ளலாம். ...

இந்த 14.4%யைதான் மத்திய அரசு நீட்டிற்கான தகுதியாக கூறுகின்றது. 

இப்படி சேரும் மாணவர் எவ்வாறு தகுதிவாய்ந்த மருத்துவராக உருவாக்க முடியும் ...

இந்த பெண் கூறுவது போல் 93 மதிப்பெண்கள் பாஸ் மார்க் என்றால் ...

அது 100 க்கு 12.9% ஆகும். 

இது எப்படி மருத்துவம் படிக்க தகுதி மதிப்பெண்களாக இருக்க முடியும்?? ..

அப்படியென்றால் ஒன்றிய அரசு யாரை ஏமாற்றப் பார்க்கின்றது?

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுதந்தாலும் ...

அதற்கு குறைந்தது 1 கோடி செலவு ஆகும்.

இதுபோன்ற எத்தனையோ கிராமபுற மாணவர்கள் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

மேலும் இந்த பெண் கூறுவது போல் நீட் தேர்வு எளிது என்றால்... 

720 மதிப்பெண்களுக்கு 104 மதிப்பெண்களை பெற்றுவிட்டு ...

அதாவது 14.4% எடுத்துவிட்டு எப்படி தேர்வு எளிது என்று கூறுகின்றார். 

பொதுவாக 100க்கு 95% எடுத்த ஒருவர் நீட்தேர்வு எளிது என்று கூறினால்... அதில் ஒரு நேர்மை உள்ளது. 

100க்கு 14 மதிப்பெண் பெற்றவர் நீட்தேர்வு எளிது என்று கூறுகின்றார் என்றால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது??

யாரை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்?? 

இதிலிருந்தே தெரிகின்றது

#நீட்தேர்வின்_உண்மை_தன்மை !!

Thursday, September 08, 2022

September 08, 2022

நீட் தோ்வில் 4 பேர் ஒரே மதிப்பெண் எடுக்க ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்தாா்.

நீட் தேர்வில் தனிஷ்கா உள்பட நான்கு பேர் 715 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். இவர்களில் தனிஷ்கா முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தில்லியைச் சோ்ந்த வத்ஸா ஆசிஷ் பாத்ரா, ரிஷிகேஷ் கங்குலே, கர்நாடகத்தைச் சேர்ந்த ருச்சா பவாஷே ஆகியோரும் 715 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக 9.93 லட்சம் போ் இத்தோ்வில் வெற்றி பெற்றனா்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அதனை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

ஒரே மதிப்பெண்ணை இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எடுக்கும் போது அவர்களுக்குள் தரவரிசையில் பட்டியலிடும் முறைக்கு வயதை கருத்தில் கொள்ளும் முறையை தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு மாற்றியமைத்திருந்தது.

அதன்படி, இந்த ஆண்டு ஒரே மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அ. ஒரே மதிப்பெண் எடுத்த நான்கு பேரில் உயிரியியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை.
ஆ. அதிலும் ஒரே மதிப்பெண் இருந்தால், அடுத்து வேதியியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.
இ. அடுத்து இயற்பியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்ணும்
ஈ. உயிரியியல் பாடத்தில் எத்தனை கேள்விகளுக்கு தவறான பதிலளித்திருந்தார், எத்தனை கேள்விகளுக்கு சரியான பதிலளித்திருக்கிறார் என்பதும்
உ. வேதியியல் பாடத்தில் மாணவர்கள் எத்தனை கேள்விகளுக்கு தவறான பதிலளித்திருந்தார், எத்தனை கேள்விகளுக்கு சரியான பதிலளித்திருந்தார் என்பதும் கணக்கில் எடுக்கப்பட்டு முதல் இடத்தைப் பிடித்தவர்கள் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா் உள்பட 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வை 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்றனா். அதற்கான விடைக்குறிப்பு, தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவில் வெளியிடப்பட்டது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் அவை வெளியாகின.
September 08, 2022

NEET UG 2022 - Eligibility Marks

NEET UG 2022 RESULTS DECLARED

ELIGIBILITY MARKS

GENERAL - 117 MARKS

OBC/SC/ST - 93 MARKS

September 08, 2022

நீட் தோ்வு முடிவுகள் வெளியீடு: ராஜஸ்தான் மாணவி முதலிடம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்தாா். தில்லியைச் சோ்ந்த வத்ஸா ஆசிஷ் பாத்ரா இரண்டாம் இடமும் பெற்றனா். 9.93 லட்சம் போ் இத்தோ்வில் வெற்றி பெற்றனா்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அதனை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

இந்நிலையில் நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இந்த தோ்வை 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்றனா். அதற்கான விடைக்குறிப்பு, தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவில் வெளியிடப்பட்டது.

https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் அவை வெளியாகின. இரவில் முடிவுகள் வெளியானதால் பல மாணவா்கள் முடிவுகளை அறிந்து கொள்ள இயலாமல் அவதிப்பட்டனா்.

Wednesday, September 07, 2022

September 07, 2022

NEET தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை ஏன்?

NEET தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை ஏன்?

NEET UG தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை இன்று மாலை https://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Tuesday, August 30, 2022

August 30, 2022

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் தடுக்க கருவிழியை பதிவு செய்ய வேண்டும்

Iris should be registered to prevent impersonation in 'NEET' examination 'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுக்க மாணவர்களின் கருவிழியை பதிவு செய்ய வேண்டும் என, சி.பி.ஐ., - சி.பி.சி.ஐ.டி., தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக, சென்னை மாணவர் உதித்சூர்யா உட்பட சிலர் மீது, 2019ல் தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர்.கைதான இடைத்தரகர் கேரளா, திரூர் உன்னியலைச் சேர்ந்த ரஷீத் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.ஏற்கனவே விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், 'இவ்வழக்கில் தொடர்புடைய மாணவர்களுக்காக வெளிமாநில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் மூலம் சிலர் தேர்வு எழுதியுள்ளனர்.

'இதுபோல் பிற மாநிலங்களில் நடந்திருக்க வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் இதுபோல தவறுகள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சி.பி.ஐ., பதிலளிக்க வேண்டும்' என்றார்.இந்த வழக்கை நீதிபதி எம்.நிர்மல்குமார் மீண்டும் நேற்று விசாரித்தார். சி.பி.சி.ஐ.டி., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:நீட் ஆள்மாறாட்ட வழக்கில், 13 பேர் கைதாகியுள்ளனர். மூன்று பேர் கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இரண்டு பேர் முன்ஜாமின் பெற்றுள்ளனர்.

தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது போட்டோ, கைரேகையை தவிர கண்ணின் கருவிழியை பதிவு செய்து பாதுகாக்க வேண்டும்.மாணவர்கள், பெற்றோர் பெயர், முகவரியை முறையாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகம் அல்லது அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியின் சான்றொப்பம் பெற வேண்டும்.இதில், மாறுபாடு இருந்தால் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக அனுமதி வழங்கும் முன் ஆதார், இ.எம்.ஐ.எஸ்., எண், மாணவர், பெற்றோர் பெயர் இரட்டைப் பதிவுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.

Monday, August 29, 2022

August 29, 2022

Postponement of NEET - PG Counseling - NEET - PG கலந்தாய்வு ஒத்திவைப்பு

Postponement of NEET - PG Consultation

The National Medical Commission postponed it without specifying a date while it was announced to start on September 1

Postponement due to additional seats in postgraduate medical courses.

NEET - PG கலந்தாய்வு ஒத்திவைப்பு

செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேசிய மருத்துவ ஆணையம்

முதுநிலை மருத்துவ படிப்புகளில் கூடுதல் இடங்களை சேர்க்க வேண்டியதன் காரணமாக ஒத்திவைப்பு.

Saturday, August 27, 2022

August 27, 2022

உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம்: நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்திய விவகாரத்தில், மாணவிகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கேரளத்தில் அந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவிகளுக்கு மட்டும் செப்டம்பர் 4ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் பகுதியில், பாதிக்கப்பட்ட மாணவிகள் மட்டும் மறுதேர்வு எழுத தேசிய தேர்வு முகமை அனுமதி அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம், அவா்களின் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு தேசிய தோ்வு முகமையால் சோதனையிடும் பணிக்காக அமா்த்தப்பட்ட நிறுவனத்தின் பணியாளா்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை ஒரு மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, இது நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

தோ்வு மையத்தில் தனது மகள் அவமதிக்கப்பட்டதாக மாணவியின் தந்தை ஆயூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மாநில மனித உரிமைகள் குழுவும் இந்த விஷயத்தில் தலையிட்டு விளக்கம் கேட்டுள்ளது.

உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்திய விவகாரத்தில் நீட் தோ்வு மையப் பணியில் இருந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டனா். இதில் மூவா் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இப்பணிக்கு அமா்த்தப்பட்டவா்கள். இருவா் தனியாா் கல்வி நிலையத்தில் பணியாற்றிய பெண் துப்புரவுத் தொழிலாளா்கள் ஆவா்.

Saturday, July 23, 2022

July 23, 2022

நீட் விலக்கு மசோதா - 6 வகையான கேள்விகளுக்கு தமிழக சட்டத்துறை விளக்கமான பதில்

நீட் விலக்கு மசோதா குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: நீட் விலக்கு மசோதா நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத வாதம் ஆகும். இந்த மசோதா அரசமைப்பு சட்டம் பிரிவு 14ஐ மீறுவது என்ற ஆட்சேபனையை ஏற்க முடியாது.

இதையும் படிக்க | 10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

மசோதாவில் பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்களில் அடிப்படையிலான சேர்க்கை முறை வேறு எந்த சேர்க்கை முறையை விடவும் நியாயம், சமத்துவத்தை ஏற்படுத்துகிறது. எனவே அரசமைப்பு சட்டத்தை மீறுகிறது என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த மசோதா தேசிய கல்வி கொள்கை 2020ஐ மீறியுள்ளது என்று மத்திய அமைச்சகங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ள வாதம் முற்றிலும் ஏற்க முடியாது. தேசிய கல்வி கொள்கை நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானதாக உள்ளது. கூட்டாட்சி தத்துவம் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன. தேசிய கல்வி கொள்கை மாநில சட்டமன்றத்துக்கு வழிகாட்டும் காரணியாக இருக்க முடியாது என்பதால், மாநில சட்டமன்றங்களுக்கு உயர்கல்வி குறித்து சட்டம் இயற்ற முழு அதிகாரம் உள்ளது. மசோதா குறித்த ஒன்றிய அரசின் 6 வகையான கேள்விகளுக்கு தமிழக அரசின் சட்டத்துறை பல்வேறு விளக்கங்களுடன் கூடிய சட்டரீதியான பதில்களை தயாரித்துள்ளது.

இதையும் படிக்க | வகுப்பு12|கணினி அறிவியல்|பாடம் 15|SQL மூலம் தரவுகளை கையாளுதல்|பகுதி5

இது ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஏற்புடைய பதிலாக இருக்கின்ற காரணத்தினால் ஏற்றுக்கொண்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.புதிய ஜனாதிபதி அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர். நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் என்றே நாம் நம்புவோம். இந்த விஷயத்தில் வேகமான செயல்பாட்டை கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல், கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் ஒவ்வொரு காயாக நகர்த்தி கொண்டு இருக்கிறார். நிச்சயம் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Wednesday, July 20, 2022

July 20, 2022

கேரள நீட் கொடுமை- உண்மை கண்டறியும் குழு அமைப்பு

கேரள நீட் கொடுமை- உண்மை கண்டறியும் குழு அமைப்பு

கொல்லம் அருகே நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை களையச்செய்து தேர்வு எழுதவைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | DEO Promotion List Preparation - Dir Proceeding

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள அமைச்சர் பிந்து கடிதம் எழுதிய நிலையில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.
July 20, 2022

நீட் விலக்கு மசோதா நிலை என்ன? மத்திய அரசு பதில்

நீட் விலக்கு மசோதா நிலை என்ன? மத்திய அரசு பதில்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுமுதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அளித்துள்ள விளக்கத்தில்,

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மே 2ஆம் தேதி தமிழக ஆளுநர் மூலம் பெறப்பட்டது.

நீட் விலக்கு மசோதா மீது மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் தனது கருத்துகளை ஜூன் 21 மற்றும் 27ஆம் தேதிகளில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இதையும் படிக்க | TNPSC - VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Counselling)

தமிழக அரசு பதிலளித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவெடுப்பதற்கு தேவைப்படும் காலவகாசம் குறித்து முடிவு செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Tuesday, July 19, 2022

July 19, 2022

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள்

இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் 162 கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. இதில், இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில் இருந்தும் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

இதில், இவ்வாண்டு நடைபெற்ற தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் 162 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 38 கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தொடக்க கல்வி மாவட்ட மாறுதல் அட்டவணை
மாநில பாடத்திட்டத்தில் இருந்து வேதியியல் பாடத்தில் 40 கேள்விகளும், இயற்பியல் பாடத்தில் 48 கேள்விகளும், தாவரவியல் மற்றும் விலங்கியலில் மொத்தம் 74 கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக பாடத்திட்டத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.

Monday, July 18, 2022

July 18, 2022

நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி, ஹரியானாவில் ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி மற்றும் ஹரியானாவில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் பணம் கைமாற்றப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வ்ருகிறது

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது.

இதையும் படிக்க | இன்று விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர்

இதையடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தேர்வர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்த தேர்வு எழுதிய 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக விண்ணப்பதாரர்களின் புகைப்படங்களை கலந்து மார்பிங் செய்து பயன்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சுஷில் ரஞ்சன், பிரிஜ் மோகன் சிங், பப்பு, உமா சங்கர் குப்தா, நிதி, கிருஷ்ண சங்கர் யோகி, சன்னி ரஞ்சன், ரகுநந்தன், ஜீபு லால், ஹேமேந்திரா மற்றும் பாரத் சிங் ஆகியோர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
July 18, 2022

நீட் தேர்வு எழுதிய தந்தை, மகள்: 50 வயதிலும் பார்மசிஸ்ட் ஆர்வம்

ராணிப்பேட்டை மையத்தில் மகள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 50 வயதான அவரது தந்தை வேலூர் மையத்தில் ஆர்வத்துடன் நீட் தேர்வு எழுதினார். வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீர் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் அவரை நிறுத்தி, ‘பெற்றோர் உள்ளே செல்ல அனுமதி கிடையாது’ என்றனர். அதற்கு அவர், ‘நானும் நீட் தேர்வு எழுத போகிறேன்’ என்றார். இதையடுத்து, அவரின் அனுமதி சீட்டை சோதனை செய்து, தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘நான் ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை சேர்ந்த தயாளன்(50). பார்மஸ்சிஸ்டாக பணிபுரிகிறேன். எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் ராணிப்பேட்டை டிஏவி பெல் மையத்தில் நீட் தேர்வு எழுதுகிறார். நீட் தேர்வு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் நானும் எழுத வந்துள்ளேன்’ என்றார். * நீட் தேர்வு எழுதிய 70 வயது தாத்தா

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த 70 வயதான பிரின்ஸ் மாணிக்கம், கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரி மையத்தில் நேற்று நீட் தேர்வு எழுதினார். அவர் கூறியதாவது:

இதையும் படிக்க | தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

நான் விவசாயம் படித்து, பிஎச்டி முடித்துள்ளேன். வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு சிறு வயது முதல் டாக்டராக வேண்டும் என்பது கனவு. மாணவர்கள் பலர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வுக்காக தற்கொலை செய்து கொள்வது என்பது தீர்வாகாது. அப்படி என்ன இந்த தேர்வில் இருக்கிறது? என கண்டறியவே இந்த முறை தேர்வு எழுதினேன் என்றார். இதேபோல மதுரை அருகே உள்ள மாடக்குளத்தைச் சேர்ந்த 55 வயது ராஜ்ஜியக்கொடி (55)யும் நீட் தேர்வு எழுதினார்.

Sunday, July 17, 2022

July 17, 2022

Neet 2022: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு... 18 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தை பொறுத்தவரை 18 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வு நாடு முழுவதும் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில், 10 லட்சத்து 64 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்களை சோதிப்பதற்கான இடங்கள், சமூக இடைவெளி விட்டு நிற்க குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.

தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதிச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் வண்ண புகைப்படமும் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும் ஒன்றாம் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒத்துப் போக வேண்டும்.

மாணவர்களின் கையெழுத்து அனுமதி சீட்டின் பக்கம் இரண்டில் புகைப்படத்தின் மீது இடதுபக்கம் இருக்க வேண்டும். பெற்றோரின் கையெழுத்து அனுமதிச் சீட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாணவருக்கும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் வந்து சேர வேண்டும். மதியம் 1.30 மணிக்கு மேல் நுழைவாயில் மூடப்படும். மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, என ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேர்வு எழுதி முடித்த பின், ஓ.எம்.ஆர் காகிதத்தை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வினாத்தாளை மட்டுமே வெளியே கொண்டுவர வேண்டும்.

தேர்வு கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் வெளியே செல்லக் கூடாது. தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரண்டு முறை attendance படிவத்தில் நேரம் குறிபிட்டு கையெழுத்திட வேண்டும். இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் கொடுக்கவில்லை என கருதப்படும்..

மாணவர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்கள், அனுமதி சீட்டு, வைத்திருக்கலாம்.

Total Pageviews

Search This Blog