Breaking

Showing posts with label Diwali. Show all posts
Showing posts with label Diwali. Show all posts

Thursday, November 02, 2023

November 02, 2023

தீபாவளிக்கு எத்தனை நாள் விடுமுறை?

தீபாவளிக்கு எத்தனை நாள் விடுமுறை?

தீபாவளி உள்ளிட்ட எந்த மதத்தின் பண்டிகை என்றாலும் உற்றார், உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வது தான் கொண்டாட்டத்தை உருவாக்குவதாக இருக்கும். தொடர் விடுமுறை இருந்தால் மட்டுமே நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரை சென்று சந்திக்க முடியும்.

அப்படியிருக்க தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமையில் வந்து ஒரு நாள் விடுமுறையுடன் முடிந்துவிடுமோ, சொந்த பந்தங்களை பார்க்க முடியாதோ என்ற கவலை பலதரப்பிலும் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தீபாவளி வரும் நிலையில் சனிக்கிழமை ஒரு நாளும் சேர்ந்து வழக்கமான வார இறுதி விடுமுறை போல் முடிந்துவிடுமோ என்ற கலக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களிடமும் உள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் கல்வி, வேலைவாய்ப்புக்காக வந்து தங்கியிருப்பவர்கள் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை பயணத்தை தொடங்கினாலும், தீபாவளி தினமான ஞாயிறுக் கிழமை இரவே மீண்டும் கிளம்பினால் மட்டுமே மறுநாள் திங்கள் கிழமை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு வர முடியும். விருதுநகரில் உதயநிதி கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிக்காக மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள்

பண்டிகை முடியும் முன்பே கிளம்புவது ஒரு புறம் என்றால், ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வதால் பேருந்துகள், ரயில்களில் நெருக்கடி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தீபாவளிக்கு மறுநாள் திங்கள் கிழமை அன்று அரசு பொது விடுமுறையாக அறிவித்தால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு சிரமமின்றி ஊர் திரும்ப முடியும் என்று பலதரப்பினரும் கூறுகின்றனர். அதற்கு பதிலாக வேறொரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

தமிழக அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Thursday, October 20, 2022

October 20, 2022

ஆசிரியர்களுக்கு தீபாவளி முன் பணம் மற்றும் சம்பளம் பெறுவதில் சிக்கல்

தீபாவளி முன்பணம் பெறுவதில் சிக்கல்

சென்னை : பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளால், ஆசிரியர்களுக்கு தீபாவளி முன் பணம் மற்றும் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளி கல்வி அலுவலகங்களிலும், மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் கட்டாய இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்த இடமாறுதல் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு பள்ளியின் கல்வி அலுவலக எல்லைகளும், பணியாளர்களும் மாறியுள்ளனர்.

நிர்வாக சீர்திருத்த எல்லைகளின்படி, பள்ளிகளின் விபரங்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் பணி ஆவணங்கள் உள்ளிட்டவை, எமிஸ் நிர்வாக தளத்தில் புதிய எல்லைக்கு மாற்றப்படுகின்றன.

இதனால், தமிழகம் முழுதும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான தீபாவளி முன் பணத்துக்கு, கருவூலத்துக்கு அறிக்கை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாத ஊதியம் வழங்குவதற்கான பணி விபர மற்றும் ஊதியம் வழங்க கோரும் அறிக்கை தயார் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக மாற்ற பிரச்னைக்கு, உரிய தீர்வு காண வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tuesday, October 18, 2022

October 18, 2022

தீபாவளிக்கு மறுநாள் 25 ந் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை

தீபாவளிக்கு மறுநாள் 25 ந் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை

தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அரசு பஸ்கள், ரெயில்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக 25, 26-ந்தேதிகளில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றிற்கு முன்பதிவும் நடந்து வருகிறது.

தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு துறைகளும் செயல்படுகிறது. அதனால் விடுமுறையில் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

அதன் அடிப்படையில் 25-ந்தேதி விடுமுறை விடலாமா? என்று அரசு பரிசீலனை செய்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் தொடரவும் ஊர் திரும்பவும் 25-ந் தேதி விடுமுறை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகள் தீபாவளிக்கு முந்தைய நாட்கள் விடுமுறை விடப்பட்டு தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊரில் இருந்து திரும்ப வசதியாக இருந்தது.

அதுபோல இந்த ஆண்டும் விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த விடுமுறையை நவம்பர் 12-ந்தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருகிறது.

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Total Pageviews

Search This Blog