Breaking

Showing posts with label announcement in the budget. Show all posts
Showing posts with label announcement in the budget. Show all posts

Monday, February 19, 2024

February 19, 2024

ரூ.300 கோடியில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் பள்ளிக் கல்வி அறிவிப்புகள்

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்

ரூ.300 கோடியில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் பள்ளிக் கல்வி அறிவிப்புகள்

சென்னை: “வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:

> தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, 2497 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிதியாண்டிலும் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

> அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்ட உண்டு. உறைவிட மாதிரிப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் நாட்டின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் 352 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக 100 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. > நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 525 ரூபாய் செலவில் 8,200 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi Tech lab) மற்றும் 435 கோடி ரூபாய் செலவில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்ட உள்ளன. மேலும், வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

> கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இல்லத்தில் முடங்கிக் கிடந்தவை குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களது கல்விக் கனவும் தான். அதனை மீட்டு அவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைப் போக்கவும் கற்றல் இழப்பை ஈடுசெய்யவும், இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் முதல்வரால் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் குழந்தைகளிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை மீட்டெடுத்ததில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்திட 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. > வாசிப்பை நேசிக்கும் மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கிடும் உயரிய நோக்கில் சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2022.23 ஆம் ஆண்டு முதல் 13 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில், 37 மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில், சுமார் 55 லட்சம் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

மேலும், இக்கண்காட்சிகளின் வாயிலாக, சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 72 இளைஞர்கள் அறிவுசார் தளத்தில் உயர்ந்திட நூலகங்கள் முதன்மைக் களமாக உள்ளன. குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இந்த வரவு - செலவத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தற்போது (பிப். 19) தாக்கல் செய்து வருகிறார்.

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்:

# நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

# அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

# தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு # உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

# பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

# இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு

*2023-24 பட்ஜெட்: ₹40,299 கோடி

*2024-25 பட்ஜெட்: ₹44,042 கோடி

Thursday, February 23, 2023

February 23, 2023

Tamil Nadu Government Budget - 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் - வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் !



2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்!!!

தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 அறிவிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் மாதம் 2வது வாரம் அதாவது 17ம் தேதி கூட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்வார். காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது.

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி எத்தனை நாட்கள் வரவு-செலவு திட்டத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து அறிவிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் முடிந்த அடுத்த நாள், 2023-2024ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அலுவல் ஆய்வு கூட்டத்தில், தொடர்ந்து மானிய கோரிக்கை கூட்டத்தை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் 3வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ‘மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 வழங்கப்படுவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம்’ என்று கூறப்படுகிறது. காரணம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதன்படி, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தகுதியான பெண்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே 5 மாதங்களில் உதவித்தொகை வழங்கும் பணியை தொடங்க முடியும். இதனால், தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, January 31, 2023

January 31, 2023

Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்


Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

Nirmala Sitharaman Budget: அதிகபட்ச வருமான வரி சம்பளம் பெறும் வகுப்பினரிடமிருந்தே வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வரி வரம்பை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 


ஊதியம் பெறும் வகுப்பினர் ஒவ்வொரு ஆண்டும் நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனின் கின் கீழ் 50,000 ரூபாய் விலக்கு பெறலாம்.

வருமான வரியின் பிரிவு 16 (IA) இல் அரசாங்கம் மாற்றங்களைச் செய்யக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையான விலக்கு வரம்பு ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் 2023: நாளை, அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த நிலையில், ஊதியம் பெறும் வகுப்பினருக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 பணவீக்கத்திலிருந்து நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் சில வேறுபட்ட வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்காக பட்ஜெட்டில் இந்த 5 அறிவிப்புகள் வெளியாகும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதிகபட்ச வருமான வரி சம்பளம் பெறும் வகுப்பினரிடமிருந்தே வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வரி வரம்பை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தவிர, நிலையான விலக்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி வரம்பு அதிகரிக்கும் 

பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறான நிலையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், புதிய வரி முறையின் கீழ், வருமான வரி செலுத்துவோருக்கு, ஐந்து லட்சம் ரூபாயாக வருமான வரி விலக்கை அதிகரிக்கலாம். தற்போது ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்துக்கு 5% வரியும், ரூ.5 முதல் 7.5 லட்சம் வருமானத்துக்கு 20% வரியும் செலுத்த வேண்டும்.

நிலையான விலக்கு மாறும்

ஊதியம் பெறும் வகுப்பினர் ஒவ்வொரு ஆண்டும் நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனின் கின் கீழ் 50,000 ரூபாய் விலக்கு பெறலாம். வருமான வரியின் பிரிவு 16 (IA) இல் அரசாங்கம் மாற்றங்களைச் செய்யக்கூடும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையான விலக்கு வரம்பு ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

80C இல் விலக்கு கிடைக்கும்
 
வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், வரி செலுத்துவோர் ரூ. 1.5 லட்சம் தொகையை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம். இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என வரி செலுத்துவோர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் இந்த விஷயத்தில் அரசு முடிவெடுத்தால், வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இந்த முதலீட்டை EPF, PPF, ELSS, NSC, NPS, Bank FD போன்றவற்றில் அவர்கள் செய்யலாம். 

ஓய்வூதியத்திற்கான முதலீடு 

வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அரசு இதிலும் வரி விலக்கு வரம்பை அதிகரிக்கக்கூடும். வருமான வரிச் சட்டத்தின் 80சிசிடி (1பி) பிரிவின் கீழ் அரசாங்கம் இந்த வரம்பை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவ காப்பீடு

தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளெய்மின் கீழ் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி உள்ளது. இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் அதனை 50 ஆயிரம் ரூபாவாகவும், முதியோர்களுக்கு 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறையின் எதிர்பார்ப்பு என்ன?

பல்வேறு தொழில்துறையினரும் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் உள்ள வல்லுநர்கள் இந்த பட்ஜெட்டில், வாடகை வருமானத்தின் மீதான வரி விலக்கு முதல் ஹோம் லோனில் பிரின்சிபல் அமவுண்ட் கழித்தல், ஆடம்பரப் பிரிவுக்கான ஊக்கத்தொகை, 80IBA பதிவு காலக்கெடுவை புதுப்பித்தல் போன்றவற்றில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கின்றனர்.  

பட்ஜெட் 2023- எவற்றில் அதிக கவனம் கவனம் செலுத்தப்பட வேண்டும்?

* மேன்யுஃபேக்சரிங், இன்ஃப்ரா
* டிஃபென்ஸ்
* ரூரல் செக்டர்
* கன்சப்ஷன்
* கேபிடலைசேஷன்
உற்பத்தித் துறைக்கு ஊக்கம்
* PLI திட்டத்தின் நோக்கத்தை அதிகரிப்பதில் கவனம்
* பிஎல்ஐ திட்டத்தின் கீழ் துறைக்கு ஊக்கத்தொகை
* சாலை, ரயில், உள்கட்டமைப்புத் துறைக்கான செலவுகள் அதிகரிப்பு
* புதிய தொழில் தொடங்குவது தொடர்பான விதிமுறைகள் எளிதாக்குதல்

Thursday, January 26, 2023

January 26, 2023

புதிய வருமான வரி.. பட்ஜெட்-ல் இதுதான் முக்கிய அறிவிப்பு..!

புதிய வருமான வரி.. பட்ஜெட்-ல் இதுதான் முக்கிய அறிவிப்பு..!

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது.  

காரணம் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல், இதில் வெற்றிபெற்றால் பிஜேபி தலைமையிலான 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கப்படும்.

இதற்கிடையில் கடந்த 3 வருடத்தில் இந்தியாவின் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்த நிலையில், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிதி நிலை, சேமிப்பு விலைவாசி உயர்வால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.'

மத்திய பட்ஜெட் 2023

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கையில் கட்டாயம் தனிநபர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் கட்டாயம் சில தளர்வுகள் வேண்டும் என்பதால் மத்திய அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. பல நெருக்கடி

மத்திய அரசு ரெசிஷன் அச்சம், பணவீக்கம், சர்வதேச சந்தையில் டிமாண்ட் சரிவு, ஏற்றுமதி பாதிப்பு, அன்னிய செலாவணி கையிருப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சனைக்கு மத்தியில் தான் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.

  மாத சம்பளக்காரர்கள்

இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளக்காரர்கள் தற்போது எதிர்பார்ப்பது போது 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு ஜீரோ வருமான வரி விதிப்போ அல்லது 80சி பிரிவில் அதிகப்படியான வரி விலக்கு வரம்பு விரிவாக்கம் போன்ற விஷயங்களை அளிக்க முடியாத நிலையில் தான் மத்திய அரசின் நிதி நிலை உள்ளது.

கூடுதலாக வரிப் பலகை

இந்தச் சிக்கலைச் சமாளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்துள்ளது, இதன் மூலம் புதிய வருமான வரி விதிப்பு முறையில் கூடுதலாக வரிப் பலகை சேர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய வருமான வரி விதிப்பு

இந்தப் புதிய வரிப் பலகை பழைய வருமான வரி விதிப்பு முறைக்கும் வர வாய்ப்பு உள்ளதால் இக்குறிப்பிட பிரிவில் இருக்கும் மக்கள் தங்கள் முதலீட்டை சிறப்பாகத் திட்டமிட்டு முதலீடு செய்து வரிப் பணத்தை மிச்சப்படுத்த முடியும். பட்ஜெட் ஏ டீம்

மத்திய நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் ஏ டீம் இதை உறுதி செய்யும் பட்சத்தில் இதற்கான அறிவிப்புப் பட்ஜெட் தாக்கலின் போது இடம்பெற்றும், இந்திய பட்ஜெட் அறிக்கை சர்வதேச ரெசிஷன் பாதிப்புகளில் இருந்து நாட்டின் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதைவிட விலைவாசி உயர்வால் பாதித்துள்ள மக்களை மீட்டுக் கொண்டு வருவது.

பட்ஜெட் அறிக்கை

புதிய வரி பலகையைச் சேர்ப்பது குறித்துப் பல நாட்களாகப் பட்ஜெட் ஏ டீம் ஆலோசனை செய்து அதைப் பட்ஜெட் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மையை அளிக்காவிட்டாலும் சிறிய அளவிலான மக்களுக்குக் கட்டாயம் நன்மை பயக்கும்.

வருமான வரி விதிப்பு முறை

தற்போது பழைய வருமான வரி விதிப்பில் 4 வரிப் பலகையில் 0, 5, 25, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. புதிய வருமான வரிப் பலகையில் 7 பலகையில் 0-30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

Total Pageviews

Search This Blog