Breaking

Showing posts with label COMPETITION. Show all posts
Showing posts with label COMPETITION. Show all posts

Wednesday, July 22, 2026

Thursday, November 27, 2025

Saturday, November 08, 2025

Monday, June 30, 2025

Monday, April 21, 2025

Thursday, January 02, 2025

Wednesday, December 18, 2024

Monday, December 16, 2024

Monday, November 25, 2024

Monday, November 18, 2024

Monday, August 26, 2024

Sunday, August 18, 2024

Thursday, July 11, 2024

Monday, March 11, 2024

Saturday, February 03, 2024

February 03, 2024

பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டி - தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு



Poetry, Essay Competition for School Students - Notification of Tamil Development Department - பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டி - தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடத்தப்படும், மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் வரும், 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

தமிழ் வளர்ச்சி துறையானது, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் தமிழ் அறிவை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகிறது. அந்த வகையில், மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்துள்ளன. சென்னை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நேற்றும், இன்றும், சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலை பள்ளியிலும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், சென்னை மாநில கல்லுாரியிலும் நடக்கின்றன.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு தலா 10,000, 7,000, 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மட்டும், வரும் 23, 24ம் தேதிகளில் மாநில அளவிலான போட்டிகள் நடக்க உள்ளன. சென்னையில் நடக்க உள்ள இந்த போட்டிகளுக்கான இடம், இன்னும் தேர்வாகவில்லை.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 15,000, இரண்டாம் பரிசாக 12,000, மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது

Saturday, January 06, 2024

January 06, 2024

9& 10.01.2024 அன்று பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி - முதல் பரிசு ரூ.10000/-

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது

10.01.2024 அன்று பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/-, இரண்டாம்பரிசு ரூ.7000/-, மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளன.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.


மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு தொடர் வண்டிக் கட்டணம் பயணப்படியாக வழங்கப்பெறும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000/- இரண்டாம் பரிசாகரூ. 12,000/- மூன்றாம் பரிசாகரூ.10,000/- வழங்கப்பெறும்.

Tuesday, December 26, 2023

December 26, 2023

மாநில ஓவிய போட்டியில் அரசு பள்ளி முதலிடம்

மாநில ஓவிய போட்டியில் அரசு பள்ளி முதலிடம்

தமிழக அரசு சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழாவில், ஓவிய போட்டியில், மலையாண்டிபட்டணம் அரசு உயர்நிலை பள்ளி மாணவன் ஹரிசுதன் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.மாணவனுக்கும், மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா, உடுமலை துாரிகை கலைக்கூடம் சார்பில் நடந்தது. உடுமலை தனியார் நுாற்பாலை நிறுவன இயக்குனர் குருசாமி, நல்லாசிரியர் தர்மலிங்கம், துாரிகை கலைக்கூட இயக்குனர் பூமுத்துக்குமாரி, கருத்தோவியன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Tuesday, November 21, 2023

November 21, 2023

ஓவியப்போட்டி - பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள ஓவியர்கள் பங்கேற்கலாம் - தலா ரூ .2000 / - ஊக்கத்தொகை வழங்கப்படும்



Painting Competition – School students, college students and aspiring painters can participate - ஓவியப்போட்டி - பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள ஓவியர்கள் பங்கேற்கலாம்

சங்க இலக்கிய ஓவியப்போட்டி பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள ஓவியர்கள் பங்கேற்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் இதர ஓவியங்களுக்குத் தலா ரூ .2000 / - ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும்

Friday, November 17, 2023

November 17, 2023

ஓவிய போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர், ஓவியர்கள் பங்கேற்க அழைப்பு - முதல் பரிசாக ரூ.25 ஆயிரம்



சங்க இலக்கிய பாடல்களை ஓவியங்களாக வரையும் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர், ஓவியர்கள் பங்கேற்க அழைப்பு

சங்க இலக்கிய பாடல்களை ஓவியங்களாக வரையும் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் பங்கேற்கலாம் என தமிழ் இணைய கல்விக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் இணைய கல்விக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்ப் பண்பாடு, இலக்கண இலக்கியங்கள் சார்ந்த முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சங்ககால மக்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் சங்கஇலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நாட்காட்டியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இப்பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களுக்கு 'சங்க இலக்கிய ஓவியப் போட்டியை' தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்துகிறது.

இப்போட்டியில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து கல்லூரி மாணவர்களும், ஓவியர்களும் ' www.tamilvu.org' என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம்.

பட்டியலிடப்பட்ட பாடல்களுள் தங்களுக்குப் பிடித்தமான பாடலைத் தேர்வு செய்து ஓவியமாக வரைந்து 10 நாட்களுக்குள் 'www.tamilvu.org' என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அஞ்சலில் அனுப்ப வேண்டும். இதில் ஒரு பாடலை 5 பேர் மட்டுமே தேர்வு செய்ய முடியும். இந்தப் போட்டிக்கான இணைப்பு நவ. 27 வரை செயல்பாட்டில் இருக்கும். மேலும், வண்ண ஓவியத்தின் அசலை அஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25 என்ற முகவரிக்கு உறையின் மேல் சங்க இலக்கிய ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு டிச.9-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவியங்களுக்குத் தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும் அவற்றில் சிறந்த ஓவியங்களுக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் என 3 பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.9ஆயிரம் வழங்கப்படும்.

இப்போட்டிக்கான விதிமுறைகள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 'இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25 என்ற முகவரியிலோ 044 - 2220 9400, 86678 22210 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது

Thursday, October 19, 2023

October 19, 2023

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் - வரும் 27-ம் தேதி கடைசி நாள்



பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் - வரும் 27-ம் தேதி கடைசி நாள்

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டிகள்

காமராஜர் துறைமுக நிறுவனம், 'இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி மற்றும்ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம். 'ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி' என்பதை நோக்கமாகக் கொண்டு 'கண்காணிப்புவிழிப்புணர்வு வாரம்-2023' வரும்30-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிவரை நாடெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான காமராஜர் துறைமுக நிறுவனம், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, 'இந்துதமிழ் திசை' நாளிதழுடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில், கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 'ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி' எனும்கருப்பொருளில், ஊழல் எதிர்ப்புகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் பரப்பும் வகையில் விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில் 6 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல்12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். இந்தப் போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது.

இதேபோல, பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் 'ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி' என்ற தலைப்பில் 500 முதல் 600 வார்த்தைகளுக்குள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (pdf, jpeg, png-size: upto 5MB) எழுதி, https://www.htamil.org/kpl2023 என்ற லிங்க்-ல் வரும் 30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99402 68686 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். போட்டியில் பங்கேற்க...

விநாடி-வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள்https://www.htamil.org/kpl2023 என்ற ஆன்லைன் லிங்க்-ல் பதிவு செய்யலாம். அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, வரும் 27-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.

Total Pageviews

Search This Blog