Breaking

Showing posts with label CPS Abolition Movement. Show all posts
Showing posts with label CPS Abolition Movement. Show all posts

Thursday, February 15, 2024

February 15, 2024

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் Frederic Engels கைது!!!

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் Frederic Engels கைது!!!

CPS ஒழிப்பு இயக்கத்தின் 'முதல்வர் இல்ல முற்றுகை' நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் Frederic Engels முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனும்பேரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு எரியோடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். திட்டமிட்டபடி நாளை நந்தனத்தில் கூடுவோம் என CPS ஒழிப்பு இயக்க மாநில மையம் அறிவிப்பு!

வீடியோ👇

CLICK HERE

Monday, February 12, 2024

February 12, 2024

பிப்ரவரி 16-இல் தமிழக முதல்வர் இல்லம் முற்றுகை - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு



பிப்ரவரி 16-இல் தமிழக முதல்வர் இல்லம் முற்றுகை - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு Tamil Nadu Chief Minister's residence siege on February 16 - Abolition of CPS movement announced

மதுரை, பிப். 11 : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, வருகிற 16-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்தப் போவதாகசிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்டக் கூட்டத்தில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் பேசியதாவது: திமுகவின் தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்கக் கோரி யும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம். திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, தேர் தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி வருகிற 16-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

பல்வேறு மாநிலங்கள் இந்தத் திட்டத்தை ரத்து செய்த நிலையில், தமிழகத்தில் திமுக அரசு ரத்து செய்ய மறுத்து வருகிறது. போராட் டத்துக்குப் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில், அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்ப டும் என்றார் அவர்.

Friday, February 02, 2024

February 02, 2024

CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் - 16.02.24 முதல்வர் இல்ல முகாம் அலுவலக முற்றுகை போராட்டம்!!

👍👍👍👍👍👍👍👍

CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

👍👍👍👍👍👍👍👍

முதல்வர் இல்ல முகாம் அலுவலக முற்றுகை போராட்டம்

👍👍👍👍👍👍👍👍

தேர்தல் வாக்குறுததி அளிக்காத ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டிஸ்கர், சிக்கிம்,

தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றவுடன் இமாச்சல்பிரதேசம் மாநில முதல்வர்கள் புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்த நிலையில்

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வின் தேர்தல் வாக்குறுதி எண் :309 ன் படி தமிழக முதல்வர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும்

இந்தியாவில் CPS திட்டத்தில் பணிபுரிந்து இறந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிகொடை கொடுக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்

எனவே CPS திட்ட ஊழியர்களுக்கு பணிகொடை வழங்கக்கோரியும்

16.2.24 காலை 10 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில்


முதல்வர் முகாம் இல்ல முற்றுகை போராட்டம்

ஆட்சியாளர்களின் இலக்கு தேர்தல் வெற்றி

நமது இலக்கு

CPS ரத்து செய்வது

CPS யை ரத்து செய்ய

பங்கேற்பீர்

முதல்வர் முகாம் இல்ல முற்றுகை போராட்டத்தில்

👍👍👍👍👍👍👍👍

மாநில மையம்

👍👍👍👍👍👍👍👍

Tuesday, December 19, 2023

December 19, 2023

27.12.2023 - மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு.



27.12.2023 - மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு.

தேர்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் , ஜார்கண்ட் , சட்டீஸ்கர் , சிக்கிம்

தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றவுடன் இமாச்சல்பிரதேசம் மாநிலமுதல்வர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்த நிலையில்

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வின் தேர்தல் வாக்குறுதி எண் : 309 ன் படி தமிழக முதல்வர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும்

இந்தியாவில் CPS திட்டத்தில் பணிபுரிந்து இறந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிகொடை கொடுக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்

எனவே CPS திட்ட ஊழியர்களுக்கு பணிகொடை வழங்கக்கோரியும்

Thursday, November 30, 2023

November 30, 2023

02.12.2023 - குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு



02.12.2023 - குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

எதிர்வரும் 02.12.2023 ( சனிக்கிழமை ) அன்று CPS- யை இரத்து செய்ய வேண்டும் எனும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் " குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டம் " நடத்திட திட்டமிட்டுள்ளோம்.

அனைத்து அரசுஊழியர் , ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை என்ற அடிப்படையில் தாங்களும் தங்களது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் " குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டத்தில் " கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம் .

Wednesday, November 29, 2023

November 29, 2023

டிசம்பர் 2 - CPS ஒழிப்பு இயக்கம் நடத்தும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு

டிசம்பர் 2 - CPS ஒழிப்பு இயக்கம் நடத்தும் பட்டினி போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆதரவு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF)

பெறுநர்

27-11-23

மாநில ஒருங்கிணைப்பாளர்கள், CPS ஒழிப்பு இயக்கம்

வணக்கம்

வரும் டிசம்பர் 2ஆம் தேதி மாநிலம் முழுவதும், நம்முடைய வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் நடத்தும் பட்டினி போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

இயக்கத் தோழர்கள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வென்றெடுக்க ஒத்துழைப்பு தர மாநில மையம் கேட்டுக் கொள்கிறது,



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை

தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்/ மேற்பார்வையாளர் சங்கம்

Tuesday, November 28, 2023

November 28, 2023

ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கையை 5 ஆண்டுகள் கடந்தும் வெளியிடாதது ஏன்? CPS ஒழிப்பு இயக்கம் கேள்வி

Why pension scheme expert committee report not published even after 5 years? CPS abolition movement question - ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கையை 5 ஆண்டுகள் கடந்தும் வெளியிடாதது ஏன்? சி.பி.எஸ்..ஒழிப்பு இயக்கம் கேள்வி

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சி.பி.எஸ்., வல்லுனர் குழு தனது அறிக்கையினை தமிழக அரசிடம் வழங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த அறிக்கையினை இதுவரை வெளியிடாதது ஏன் என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி. பிரடெரிக் ஏங்கல்ஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

திண்டுக்கல் தாடிக்கொம்பில் அவர் கூறியதாவது: 2016 பிப்.,ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய காலவரையற்ற போராட்டத்தின் விளைவாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா சீலா நாயர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. பலமுறை காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் சாந்தா சீலா நாயர், முன்னாள் முதல்வர் ஜெ., வின் மறைவுக்குப் பிறகு பதவி விலகினார். அதன் பிறகு டி.எஸ்.ஸ்ரீதர் குழுவிற்கு தலைமை வகித்தார். அவர் தலைமையிலான குழு தனது அறிக்கையினை 2018 நவ. 25ல் அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் வழங்கியது.

அறிக்கையினை பெற்றுக்கொண்ட அவர் வல்லுனர் குழு அறிக்கை பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 2019ல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒப்படைக்கப்பட்டது. 2021 தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்துவோம் என அறிவித்தது. தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் கடந்தும் இன்று வரை திட்டத்தை ரத்து செய்யவில்லை. வல்லுனர் குழு அறிக்கையும் வெளியிடவில்லை.

அ.தி.மு.க., தி.மு.க., அரசுகளின் மூடி மறைக்கும் செயல்பாடு அரசு ஊழியர், ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சி, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

Wednesday, November 22, 2023

November 22, 2023

CPS ஒழிப்பு இயக்கம் CPS ABOLITION MOVEMENT - குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - நாள் : 02.12.2023 சனிக்கிழமை



CPS ABOLITION MOVEMENT - Hunger strike with family - Date : 02.12.2023 Saturday CPS ஒழிப்பு இயக்கம் - CPS ABOLITION MOVEMENT

ABOLITION MOVEME

திண்டுக்கல் மாவட்டம்

திமுக-வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண். 309-ன் படி தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசியர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திடவும்.

CPS திட்டத்தில் பணியுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தியும்..

சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் 100 % நிறைவேற்றப்பட்டதாக உண்மைக்கு மாறாக தமிழக முதல்வர் அறிவித்ததை எதிர்த்தும்...

குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம்

நாள் : 02.12.2023 சனிக்கிழமை

நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இடம் :கல்லறைத் தோட்டம் அருகில், திண்டுக்கல்

வாழ்வாதாரக் கோரிக்கையை வென்றிட குடும்பத்தோடு பட்டினிப் போராட்டத்தில் களம் காண்போம்


புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்திட உயிர் தந்தேனும் ஒற்றைக் கோரிக்கையைக் வென்றெடுகக வேண்டுமெனக் களமாடி வரும் சிபிஎஸ். ஒழிப்பு இயக்கத்தின் 60-வது போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் எதிர்வரும் 02.12.2023-இல் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஓய்வுதியத்திட்டத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெக்கும் இம்மகத்தான போராட்டத்தில் பாதிப்பிற்குள்ளாயிருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் குடும்பத்துடன் அலைகடலெனத் திரண்டு பங்கேற்க தங்களை இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

CPS ஒழிப்பு இயக்கம், மாவட்ட மையம்

திண்டுக்கல்



Wednesday, September 13, 2023

September 13, 2023

CPS ஒழிப்பு இயக்க 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில், நள்ளிரவில் நடந்தது என்ன? ஒருங்கிணைப்பாளர் பேட்டி...



CPS ஒழிப்பு இயக்க 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில், நள்ளிரவில் நடந்தது என்ன? ஒருங்கிணைப்பாளர் பேட்டி...

CPS ஒழிப்பு இயக்க 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில், நள்ளிரவில் ஊடகங்களுக்கு CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.பிரடெரிக் ஏங்கெல்ஸ் அளித்த பேட்டி...

CLICK HERE

Sunday, April 02, 2023

April 02, 2023

CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு.



CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு - One-Day Contingent Leave Protest Demanding Abolition of CPS - CPS Abolition Movement Announcement

27.06.2023 ( செவ்வாய் ) அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது . அதே போல் தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி பெற அனைத்து துறை மற்றும் பொதுச் சங்கங்களின் ஆதரவை கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது .

ஐயா,

கீழ்க்காணும் நாளிதழ்/ஊடகத்தில் கொள்கிறோம். பத்திரிக்கை செய்தியினை தங்களது பிரசுரம் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் பத்திரிக்கை செய்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் | கூட்டம் மதுரை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் எதிர்கால போராட்ட நடவடிக்கைகளை முன்மொழிந்தார். மற்றுமொரு மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வகுமார் மாவட்டங்களில் வந்திருந்த அவர்கள் நிறைவுரையாற்றினார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் விவாதத்திற்குப் பிறகு கீழ்க்காணும் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்:

தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகளைப் பறித்தும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொச்சைப்படுத்தியும், நிதி மேலாண்மை எனக் காரணம் கூறி அரசுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுகளை வேகமாக்கும் நிதி அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தனது கண்டனத்தை பதிவு செய்கிறது.

மாநில மாநாட்டு அறைகூவல் தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் 12.04.2023 (புதன் கிழமை) அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சட்டமன்ற கட்சித் தலைவர்களைச் சந்தித்து முறையீடுவது என முடிவெடுக்கப்பட்டது.

2023-24-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சிபிஎஸ் இரத்து செய்வது தொடர்பாக எவ்விதமான அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் 19.04.2023 அன்று ஓய்வூதியம் தொடர்பான மானியக் கோரிக்கை நடைபெற உள்ளதால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 17.04.2023(திங்கள்) மாலை மாவட்டத் தலைநகரங்களில் "கவன ஈர்ப்பு பேரணி”-யை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. சிபிஎஸ்-இல் பணிபுரிந்து இறந்த அரசு ஊழியர், ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநிலம் அல்லது 2 இடங்களில் 19.05.2023(வெள்ளி) உண்ணாவிரதம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

27.06.2023(செவ்வாய்) அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அதே போல் தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி பெற அனைத்து துறை மற்றும் பொதுச் சங்கங்களின் ஆதரவை கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அகில இந்திய அளவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வரும் NATIONAL MOVEMENT FOR OLD PENSION SCHEME அமைப்புடன் இணைந்து ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் போராட்டங்களை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

CPS Press Report
CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, March 09, 2023

March 09, 2023

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணிவரன்முறை செய்யப்பட்ட 3618 பணியாளர்களுக்கு தகுதி வாய்ந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம்

தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01-04-2003க்கு (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு) முன் பணிவரன்முறை செய்யப்பட்ட 3618 நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தகுதி வாய்ந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் - Eligible Pension and Family Pension may be granted to 3618 employees who were scheduled before implementation of Contributory Pension Scheme.

பார்வை ஒன்றில் காணும் அரசாணையில், நகராட்சிகளில் துப்புரவு பணியிடங்களைத் தோற்றுவிக்க நகராட்சி நிர்வாக இயக்குநரை அனுமதிப்பதும், அப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் பணியாளர்களை அமர்த்துவது குறித்தும் ஆணை வெளியிடப்பட்டது. பார்வை இரண்டில் காணும் அரசாணையில்,

நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் குடிநீர் திட்டப் பராமரிப்புப் பணியாளர்கள் / பணியிடங்கள் தோற்றுவிக்க அளவுகோல் நிர்ணயித்தும் இதன் அடிப்படையில் பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்துவது குறித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன. 2. பார்வை மூன்றில் காணும் அரசாணையில், இதே போன்று தெரு விளக்கு

பராமரிப்புப் பணியிடங்கள் / பணியாளர்களுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டன.

3. பார்வை நான்கில் காணும் அரசாணையில், பார்வை ஒன்றில் காணும் அரசாணைக்கு திருத்தங்கள் வெளியிடப்பட்டன. 4. பார்வை ஐந்தில் காணும் அரசாணையில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலிப் பணியாளர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் மற்றும் மாதம் ரூ.2,000/- என்ற தொகுப்பூதியத்தில் நுழைவுப் பணியிடங்களில் அவர்களை பணியில் அமர்த்தி ஓராண்டு பணிமுடித்த பின் முறையான ஊதிய விகிதத்தில் பணியில் அமர்த்த ஆணைகள் வெளியிடப்பட்டன.

5. மேற்கண்டவாறு அரசாணைகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணியினை பின்னர் வெவ்வேறு காலங்களில் பணிவரன்முறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், பின்னர் வெளியிடப்பட்ட பார்வை ஆறில் காணும் அரசாணையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக/தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்களின் பணியினை அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அதாவது 23.02.2006 முதல் பணி வரன்முறை செய்து ஆணையிடப்பட்டது.

6. மேற்காணும் அரசாணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு 30.05.2017 தேதிய ஆணையில் (Review Application No.87 of 2014 in W.A (MD) No.729 of 2013 and others), தூய்மைப் பணியளார்களின் பணியினை நிர்ணயிக்கப்பட்ட தொகுப்பூதிய காலம் முடிந்த நாளிலிருந்து வரன்முறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் தனது 30.08.2017-ஆம் தேதிய ஆணையில் (SLP (Civil) No.21249 of 2017), இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு இன்றளவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 7.எனவே,01.04.2003-க்குப் பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் அமுலில் இல்லாததால், மேற்காணும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் பெறப்பட்ட ஓய்வூதிய செயற்குறிப்புகள் உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநரால் திருப்பி அனுப்பப்பட்டன. இப்பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட நாள் 23.02.2006 கருத என வேண்டுமா என்பது குறித்து உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநர் அரசினை கேட்டுக் கொண்டுள்ளார்.

8. இதுகுறித்து, நகராட்சி நிர்வாக இயக்குநரை கலந்தாலோசித்ததில், நகராட்சிகள் 1 மாநகராட்சிகள் (சென்னை தவிர) 30.04.1997-க்கு பிறகு தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01.04.2003 தேதிக்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வரப்பட்ட பணியாளர்கள் தகுதிவாய்ந்த ஓய்வூதிய பலன்கள் / அவர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் என்றும், இதுகுறித்து உரிய தெளிவுரையினை உள்ளாட்சி நிதித்தணிக்கை இயக்குநருக்கு அளிக்கலாம் எனவும் நகராட்சி நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

9.மேலே பத்தி 8-ல் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரின் செயற்குறிப்பினை கவனமாக பரிசீலித்தது, பார்வை ஒன்று முதல் ஐந்து வரை உள்ள அரசு அரசாணைகளின் அடிப்படையில் பரிசீலினைக்குப் பின், அதனை ஏற்று. நகராட்சிகள் / மாநகராட்சிகளில் 30.04.1997-ஆம் தேதிக்குப் பின்னர் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01.04.2003 தேதிக்கு முன்னர் (அதாவது புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்) பணிவரன்முறைப்படுத்தப்பட்டு முறையான ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்ட 1.779 நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் 20 மாநகராட்சிகளைச் (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) சேர்ந்த 1839 பணியாளர்களுக்கும் தகுதி வாய்ந்த ஓய்வூதியப் பலன்களை வழங்குமாறு தங்களுக்கு அரசால் தெளிவுரை வழங்கப்படுகிறது.

10. இதுகுறித்து அனைத்து தனிப்பட்ட ஓய்வூதிய கருத்துருக்களின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது சம்பந்தப்பட்ட நகராட்சிகள் / மாநகராட்சிகளின் பொறுப்பாகும் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, February 23, 2023

February 23, 2023

முதல்வருக்கு அனுப்பிய CPS ஒழிப்பு இயக்ககத்தின் தீர்மான கடிதம்!

முதல்வருக்கு அனுப்பிய CPS ஒழிப்பு இயக்ககத்தின் தீர்மான கடிதம்!

11.02.2023 - இல் சென்னை , சிவானந்தா சாலையில் உள்ள அண்னாா கலையரங்கில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர முறையீடுவது :

அரசு ஊழியர் , ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியம் தொடர்பான மானியக் கோரிக்கையின் போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து இது தொடர்பாக . சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

Total Pageviews

Search This Blog