Breaking

Showing posts with label Pay Order. Show all posts
Showing posts with label Pay Order. Show all posts

Wednesday, January 22, 2025

Friday, September 22, 2023

September 22, 2023

3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு.



3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு.

3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1990 முதல் 2019-ம் கல்வியாண்டு வரையிலான பல்வேறு காலங்களில் தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு 300 தலைமை ஆசிரியர்கள், 2,460 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 760 தற்காலிக பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன. இவர்களுக்கான பணிக்காலம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்ட நிலையில், இந்தப்பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார்.அதை பள்ளிக்கல்வித்துறை கவனமாக ஏற்று, தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 2 ஆயிரத்து 760 தற்காலிக பணியிடங்களுக்கு 2026-ம் ஆண்டு வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், 2011-2013-ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசுப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 900 முதுநிலை ஆசிரியர்கள் பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. இவர்களுக்கும் தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.அவரின் கோரிக்கையை கவனமாக ஏற்று, தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள 900 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 2027-ம் ஆண்டு வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் தாமதமின்றி கிடைக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, April 29, 2023

Saturday, March 04, 2023

March 04, 2023

2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு

2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு

பள்ளிக் கல்வி 1990 1991 மற்றும் 2002-2003 முதல் 2006-2007. 2011-2012. 2014-2015 மற்றும் 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி-2023 ஆம் மாதத்திற்கு ஊதியக்கொடுப்பாணை (Pay Authoritation) வழங்குதல் சார்பு.

பார்வை:

1அரசாணை (நிலை) எண் 282 பள்ளிக் கல்வித் (மேநிக-2) துறை, நாள் 03.11.2009.

2அரசாணை (நிலை) எண்.120, பள்ளிக் கல்வித் (மே.நி.க.2) துறை, நாள் 08.08.2011.

3.அரசாணை (நிலை) எண்.148 பள்ளிக் கல்வித் (மு.க.2 (2) துறை, நாள் 22.09.2014.

4. அரசாணை (நிலை) எண்.98, பள்ளிக் கல்வித் (பக2(2)) துறை, நாள் 14.05.2018..

5. அரசாணை (நிலை) எண்.111, பள்ளிக் கல்வித் (பக2:2) துறை, நாள் 04.06.2018.

6. அரசாணை (நிலை) எண்.115, பள்ளிக் கல்வித்(அகஇ(1) துறை, நாள் 07.06.2018,

7. அரசாணை (நிலை) எண்.165, பள்ளிக் கல்வித் (பக2(2) துறை, நாள் 07.08.2018.

8. அரசாணை (நிலை) எண்.166, பள்ளிக் கல்வித் (பக2(2)) துறை, நாள்.07.08.2018

9. அரசாணை (1டி) எண்.49, பள்ளிக் கல்வித்(ப.க.5(1)) துறை, நாள். 09.02.2019,

10. அரசாணை (1டி) எண்.354, பள்ளிக் கல்வித் (ப.க.5(1) துறை, நாள்.06.09.2019.

11.அரசாணை (டி) எண்.82, பள்ளிக் கல்வித் (ப.க.5(1) துறை. நாள்.07.03.2019.

12. அரசாணை (1டி) எண்.21, பள்ளிக் கல்வித் (பக 5(1) துறை, நாள் 10.012020.

13. அரசாணை (1டி) எண்.25, பள்ளிக் கல்வித் (பக5(1) துறை, நாள் 21.01.2020.

14.பள்ளிக் கல்வி ஆணையரின் கடித ந.க.எண்.000503/ எல்/இ3/2022, நாள் 06.02.2023 பார்வை 1-இல் காணும் அரசாணையின்படி 1990 - 1991 மற்றும் 2002 2003ஆம் ஆண்டு முதல் 2006 -2007 ஆம் ஆண்டு வரை அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 45 பள்ளிகளுக்கு 45 முதுகலை ஆசிரியர் (வணிகவியல்) மற்றும் 45 முதுகலை ஆசிரியர் பொருளியல்) ஆக மொத்தம் 90 பணியிடங்கள் தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2. பார்வை 2-இல் காணும் அரசாணையின்படி 2011 2012 ஆம் கல்வியாண்டில் 100 அரசு / மாநகராட்சி/ நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தியும், நிலை உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு. பொருளியல், மற்றும் வணிகவியல் என 9 பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 பணியிடங்கள் தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டது.

3. பார்வை 3.இல் காணும் அரசாணையின்படி 2014-2015ஆம் கல்வியாண்டில் 100 அரசு / மாநகராட்சி/ நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தியும், 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம். இயற்பியல் வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் என 9 பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 பணியிடங்கள் தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டது. 4. பார்வை 4 முதல் 6 வரை உள்ள அரசாணைகளின்படி, 2018. 2019ஆம் கல்வியாண்டில் 5 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணையிடப்பட்டது. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட 5 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 5 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை தரம் உயர்த்தி 5 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 5 மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் 6 முதுகலை ஆசிரியர் பணியிடம் வீதம் 30 பணியிடங்களுக்கு உபரியாக உள்ள பணியிடங்களை பணிநிரவல் மூலம் நிரப்பிக் கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது.

5. பார்வை 7-இல் காணும் அரசாணையில், 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது மற்றும் 5 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் தோற்றுவித்தும், அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் ஒன்று வீதம் 100 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் அனுமதித்தும் ஆணை வெளியிடப்பட்டது.

6. பார்வை 8-இல் காணும் அரசாணையின்படி, 2018-2019ஆம் கல்வியாண்டில் 95 அரசு நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட 95 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 95 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தியும் மற்றும் 95 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒவ்வொரு பள்ளிக்கும் 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் (95x6=570) 570 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டது.

7. பார்வை 9 முதல் 13 வரை உள்ள அரசாணைகளின்படி, 200 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2460 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 8. பார்வை ஒன்று முதல் எட்டு வரை உள்ள அரசாணைகளின்படி ஒப்பளிப்பு செய்யப்பட்ட 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட தொடர் நீட்டிப்பு 31.122021 அன்று உடன் முடிவடைந்த நிலையில், இப்பணியிடங்களுக்கு 01.01.2022 முதல் 31:12.2022 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும், தற்பொழுது இப்பணியிடங்களுக்கு பிப்ரவரி-2023 ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

9. மேற்குறிப்பிட்டுள்ள தற்காலிகப் பணியிடங்களுக்கு 01.01.2022 முதல் 31:12:2022 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், பார்வை ஒன்று முதல் எட்டு அரசாணைகளின்படி ஒப்பளிப்பு செய்யப்பட்ட 2760 வரை உள்ள தற்காலிகப் பணியிடங்களுக்கு, பிப்ரவரி-2023 ஆம் மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான பிப்ரவரி-2023 ஆம் மாதத்திற்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

10. இக்கடிதம் மின் அலுவலகக் கோ.எண்.793/நிதி(கல்வி-11)/2023, நாள் 01.03.2023 இல் பெற்ற ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

Wednesday, January 18, 2023

January 18, 2023

2,194 ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி நீட்டிப்பு Extension of permission for 2,194 teaching posts

2,194 ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி நீட்டிப்பு Extension of permission for 2,194 teaching posts



தலைமை ஆசிரியர்கள் உள்பட, 2,194 ஆசிரியர் பணியிடங்களுக்கு, மூன்று மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி துறையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், அவ்வப்போது தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்.

கூடுதல் பணியிடங்களை பொறுத்தவரை, தற்காலிக அடிப்படையில் உருவாக்கப்படும். இந்த இடங்களில், நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்கள், இடமாறுதல் வழியே பணி அமர்த்தப்படுவர்.

அனுமதி நீட்டிப்பு

இதன்படி, அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட, ஏழு தலைமை ஆசிரியர், 500 முதுநிலை ஆசிரியர்கள் உள்பட, 2,194 பணியிடங்களுக்கான காலம், கடந்த டிசம்பருடன் முடிந்தது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டு முடியும் மார்ச் 31 வரை, இந்த பணியிடங்களுக்கு நீட்டிப்பு வழங்கி, பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார

Sunday, January 15, 2023

January 15, 2023

1282 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

1282 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

Proceedings of the Commissioner of School Education, Chennai - 600 006. R.c.No. 000506/L/E3/2022 Dated.01.2023

Sub: School Education Temporary Posts Sanctioned - High Schools and Higher Secondary Schools 1282 B.T. Assistant Post Post Continuation Orders from 01.01.2023 awaited from Government Certificate for a Period of 3 months from 01.01.2023 Issued - Regarding.

The under mentioned Officers are hereby informed that the orders of Government Sanctioning, further Continuance of B.T. Assistant Post beyond 31.12.2022 as particularized in the enclosed certificates are awaited.

The Certificate as prescribed with reference to paragraph 3 of G.O.Ms.No. 104, Finance (D) Department, dated: 20.01.1974 for the drawls of Pay and Allowances of the incumbents in their Temporary Posts is in order to draw and disburse the pay and allowances of the incumbents for a period of 3 months from 01.01.2023.

Orders of Government Sanctioning further Continuance to temporary posts from 01.01.2023 will be communicated on its receipt.



CERTIFICATE

Certified that the Government have been addressed in the Director's letter R.C .No. 000506/L/E3/2022 Dated 06.01.2023 for sanctioning the further continuance of the following temporary posts and the orders of the Government thereon are awaited.
January 15, 2023

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

Proceedings of the Commissioner of School Education, Chennai - 600 006. R.c.No.000518/L/E3/2022 Dated 1301.2023

Sub: School Education - Temporary Posts Sanctioned - High Schools -Headmasters and B.T. Assistant and P.G. Assistant Post - Posts Continuation Orders from 01.01.2023 awaited from Government Certificate for a Period of 3 months from 01.01.2023 Issued - Regarding.

The under mentioned Officers are hereby informed that the orders of Government Sanctioning, further Continuance of High Schools Headmasters and B.T. Assistant and P.G. Assistant Post beyond 31.12.2022 as particularized in the enclosed certificates are awaited.

The Certificate as prescribed with reference to paragraph 3 of G.O.Ms.No.104, Finance (D) Department, dated: 20.01.1974 for the drawls of Pay and Allowances of the incumbents in their Temporary Posts is in order to draw and disburse the pay and allowances of the incumbents for a period of 3 months from 01.01.2023.

Orders of Government Sanctioning further Continuance to temporary posts from 01.01.2023 will be communicated on its receipt

Monday, December 12, 2022

December 12, 2022

தற்காலிக பணியிடங்கள்: 600 ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு



தற்காலிக பணியிடங்கள்: 600 ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு

தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணியாற்றும் 600 ஆசிரியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்க கொடுப்பாணை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, அனைத்து மாவட்டக் கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2008-2009-ஆம் கல்வியாண்டு தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு 600 ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன. இவா்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் நிறைவு பெற்றுவிட்டது.

இந்தப் பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதனால் இந்த ஆசிரியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி பள்ளிக் கல்வி ஆணையா் கடிதம் அனுப்பி உள்ளாா். அதையேற்று 600 ஆசிரியா்களுக்கும் நவம்பா் மாத ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, ஊதியப் பட்டியல் தாக்கல் செய்யும்போது, அலுவலா்கள் அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 31, 2022

October 31, 2022

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அவ்வப்போது பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

இதன்படி, மேல்நிலைப் பள்ளிகளில் 200 தலைமை ஆசிரியர்; உயர்நிலைப் பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஆண்டே பணிக் காலம் முடிந்த நிலையில், இந்த ஆண்டு டிச., 31 வரை பணி நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Tuesday, August 30, 2022

August 30, 2022

2760 தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு



தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு

Serial extension order for 2760 temporary posts and release of salary payment for the month of August

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Total Pageviews

Search This Blog