Ration Shop
April 12, 2025
Showing posts with label ration job. Show all posts

Saturday, April 12, 2025
Wednesday, August 16, 2023
ration job
August 16, 2023
ரேஷன் ஊழியர் தேர்வு விபரம் வெளியிடப்படுமா?

கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 5,578 விற்பனையாளர், 925 எடையாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2022 இறுதியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விற்பனையாளர் பணிக்கு, 3.75 லட்சம் பேரும், எடையாளர் பணிக்கு, 41,000 பேரும் விண்ணப்பித்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தி, தகுதியானவர்கள் மார்ச் இறுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.
நீதிமன்ற வழக்கால் தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின், நாகை, கன்னியாகுமரி ஆகிய, இரு மாவட்டங்களில் வேலைக்கு தேர்வானவர்கள் பட்டியல் ஜூலையில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, துாத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்வானவர்கள் விபரம் சில தினங்களுக்கு முன் வெளியானது.
இதுகுறித்து, தேர்வர்கள் கூறுகையில், 'மாவட்டங்களில் வேலைக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடும் விபரம் தெரிவதில்லை.
'எனவே, இதுவரை எத்தனை மாவட்டங்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது, மற்ற மாவட்டங்களில், எந்த தேதியில் வெளியிடப்படும் என்ற விபரத்தை, சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
Sunday, June 11, 2023
Saturday, October 15, 2022
Tn Ration
October 15, 2022
தமிழக அரசு நியாய விலைக்கடையில் மாபெரும் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் அனைத்து மாவட்ட நியாய விலைக் கடைகளுக்கு 6,500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிகளை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணி: நியாய விலைக்கடை விற்பனையாளர்
காலியிடங்கள்: 5578
தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பின்னர் மாதம் ரூ.8,600 - 29,000 வழங்கப்படும்.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 925
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.5,500. ஓராண்டுக்குப் பின்னர் மாதம் ரூ.7,800 - 26,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.150, கட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.100 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் மாவட்ட வாரியான காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
Wednesday, September 28, 2022
Tn Ration
September 28, 2022
4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு - Tamil Nadu government orders to fill 4,000 posts
ரேஷன் கடைகளில் 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு - Tamil Nadu government orders to fill 4,000 posts
ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விற்பனையாளர் பணிக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி கட்டுநர் பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ரேசன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, ரேசன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின் படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான 4000 இடங்கள் நிரப்ப பட உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இத்தேர்வு நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக் கூடும் என்பதால், தேர்வு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும், தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து பதிணைந்து நாட்களுக்குள்ளும் பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும் நாளில் இருந்து 90 நாட்களுக்கு முன்னரும் காலிப்பணி இடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களில் இருந்து பெற வேண்டும்.
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். நியாய விலைக்கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி (பிளஸ்-2) பெற்றிருக்க வேண்டும். அல்லது இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றும், கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.