Breaking

Showing posts with label CM CELL. Show all posts
Showing posts with label CM CELL. Show all posts

Sunday, November 19, 2023

November 19, 2023

6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply

6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா என்பதற்கான தகவல் தரவும் . அவ்வாறு அரசாணை ஏதும் இருப்பின் அதன் நகல் தருக...

பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், தூத்துக்குடி ஒ.மு.எண்.6273 / அ6 / 2023 பொருள்: தகவல்

பார்வை:

நாள் 10.11.2023

அறியும் உரிமைச் சட்டம் 2005-GÖTULO மனுதாரர், திருமதி.K.ராஜேஸ்வரி என்பாரிடமிருந்து பெறப்பட்ட மனு தகவல் வழங்குதல் - சார்பு

பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம) பள்ளிக் கல்வி இயக்க துணை இயக்குநர் (மின் ஆளுமை), பள்ளிக்கலவி ஆணைரக கடிதம் ந.க.எண் 61010/F/RTI/2023 நாள் 27.09.2023. இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட நாள் 10.10. னை-06

பார்வையில் காணும் கடிதத்துடன் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கோரப்பட்டுள்ள தகவலுக்கு கீழ்க்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.

கோரும் தகவல்

அரசு மேல்நிலைப் பள்ளிகளி 6 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா என்பதற்கான தகவல் தரவும். அவ்வாறு அரசாணை ஏதும் இருப்பின் அதன் நகல் தருக.

வழங்கப்படும் தகவல்

அரசாணை இல்லை




பொதுத் தகவல் அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்

தூத்துக்குடி

பெறுநர்

திருமதி.K.ராஜேஸ்வரி

1/131, சூரன்குடி,

விளாத்திகுளம் 628 901,

தூத்துக்குடி மாவட்டம்.

10/11/23

நகல்- பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம) பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநர் (மின் ஆளுமை) . அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது.

Friday, October 27, 2023

October 27, 2023

CTET - தமிழில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு CM CELL பதில்



CM CELL's response to Tamil Nadu government's request to conduct CTET - in Tamil - CTET - தமிழில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு CM CELL பதில்

மேற்கொண்ட நடவடிக்கைவிபரம்: மத்திய அரசின் கொள்கை முடிவினை சார்ந்தது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . கோப்பின் மீது மேல் நடவடிக்கை இல்லை. கோரிக்கை ஏற்கப்பட்டதா?: நிராகரிக்கப்படுகிறது

Thursday, March 09, 2023

March 09, 2023

SC,ST மாணவர்களிடம் அதிகப்படியான கட்டணங்கள் வசூலித்தல் தொடர்பான CM Cell Complaints புகார்கள் - TNTEU எச்சரிக்கை

SC,ST மாணவர்களிடம் அதிகப்படியான கட்டணங்கள் வசூலித்தல் தொடர்பான CM Cell Complaints புகார்கள் - TNTEU எச்சரிக்கை

Wednesday, January 12, 2022

January 12, 2022

அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - CM CELL Reply!

அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தனிப் பிரிவில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

2020ல் வெளிவந்த அரசாணையை சுட்டிக்காட்டி சிறப்பு தற்செயல் விடுப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் முதலமைச்சர் தனிப்பிரிவு வாயிலாக மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்!

Covid Positive Leave - CM Cell Reply - Download here...

Thursday, November 25, 2021

November 25, 2021

முதல்வர் புகைப்படம் அனைத்து பள்ளிகளிலும் வைக்கலாமா? CM CELL Reply!

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அனைத்து பள்ளிகளிலும் வைப்பதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது

Sunday, October 24, 2021

October 24, 2021

அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - CM CELL Reply!

அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தனிப் பிரிவில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

2020ல் வெளிவந்த அரசாணையை சுட்டிக்காட்டி சிறப்பு தற்செயல் விடுப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் முதலமைச்சர் தனிப்பிரிவு வாயிலாக மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்!!

Sunday, September 26, 2021

September 26, 2021

முதல்வரின் தனிப்பிரிவில் வெள்ளைத்தாளில் மனு அளித்தால் போதும் - தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

முதல்வரின் தனிப்பிரிவில் வெள்ளைத்தாளில் மனு அளித்தால் போதும்


சென்னை, செப். 25: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:


முதல்வரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும் பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில்தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற வதந்தி மக்களிடையே சில தனிப்பட்ட நபர்களால் பரப்பப்பட்டு வருவதாகவும், அதை நம்பி மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான பொதுமக் கள் குறிப்பிட்ட படிவங்களை பணம் கொடுத்து வாங்கி மனுக்களை அளித்து வருவதாகவும் செய்திகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்பட வில்லை. மேலும், மனுக்களை அளிக்க வரும் பொதுமக் கள், ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது. முதலமைச்சரின் தனிப்பிரிவில் பல்வேறு வழிகளில் பெறப்படும் (தபால்/இணையதளம் WWW. cmcell.tn.gov.in/முதலமைச்சர் உதவி மையம் (cmhelp line.tnega.org) மற்றும் மின்னஞ்சல் (cmcell@tn.gov.in) அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும்.
September 26, 2021

தகுதிகாண் பருவம், பணிவரன்முறை, தேர்வுநிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுவே போதுமானது. ஆணை நகல் தேவையில்லை - Cm Cell பதில்

தனியர் மனுவில் கோரியுள்ள , பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74 ( iv ) பின்ணினைப்பு- ll பகுதி- III- ல் ( ( Ruling under FR.74 ( iv ) Annexure - ll - Part - lil ) - ல் உள்ளது . இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் www.tn.gov.in/rules/dept/22-60 காணலாம் . மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை தொடர்பான ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது . அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை . மேலும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்.

Saturday, September 25, 2021

September 25, 2021

10.03.2020 க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்.

கோரிக்கை விவரம் அரசாணை எண்.37, நாள்.10.03.2020 மற்றும் P&AR துறை அரசாணை எண்:116, P&AR துறை நாள்.15.10.2020 ஆகிய 10.03.2020க்கு முடித்து ஊக்க தகுதியுள்ளவர்கள் அரசாணைகளின்படி முன் உயர்கல்வி ஊதிய உயர்வு பெற அரசுக்கு பட்டியல் நிதித்துறை அனுப்பப்பட்டு, எப்போது கிடைக்கும்? மேற்கண்ட நடவடிக்கை பற்றிய விவரம் மேற்கண்ட அரசாணைகளின்படி ஊக்க ஊதிய உயர்வு சார்பாக முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக ஆசிரியர்களின் விவர பட்டியல் பெறப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது.

Tuesday, September 21, 2021

September 21, 2021

பணிவரன்முறை , தேர்வு நிலை , சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா? CM CELL REPLY

பணிவரன்முறை , தேர்வு நிலை , சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா ?? தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவில் பதில்
கோரிக்கை


மாண்புமிகு ஐயா வணக்கம்.


1) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத்தன்மை பெற்றால் தான் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்புநிலை மற்றும் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு சரிசெய்தல் ஆகியவைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கல்வித்துறை சார்பில் உத்தரவுகள் ஏதும் வெளியிடப்பட்டு உள்ளதா என்றும் ஆம் எனில் அந்த உத்தரவுகளின் விபரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.


2) ஆசிரியர்கள் கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை பெறாத நிலையிலும் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்புநிலை மற்றும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சரிசெய்தல் ஆகியவைகளுக்கு இனி வரும் காலங்களில் மாவட்டக்கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து உரிய உத்தரவுகளை பெற்றுக் கொள்ளலாமா? என்பது குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன்.


3) மேற்கண்ட எனது ஐயங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சார்பில் வழங்கப்படும் விபரங்கள் அல்லது பதில்களை உரிய அலுவர்களிடம் சார்பு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்வது குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். பதில்


ஏற்கப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களது பணிநியமன ஆணையிலே அன்னாரின் கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் மீது உண்மைத்தன்மை கண்டறிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசுப் பணியாளர்களும் தங்களது கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் மீது உண்மைத்தன்மை கண்டறிய வேண்டும் என்பது அவசியமானது என்ற விவரம் திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலரின் ந.க.எண். 7547/ இ3/ 2021 நாள். 15.09.2021- இன்படி மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது.

Monday, September 13, 2021

September 13, 2021

10.03.2020 முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? CM CELL Reply!

10.03.2020 முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்

CM cell reply - Download here....

Monday, June 28, 2021

June 28, 2021

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்களா? CM CELL Reply

தமிழ் நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனை சட்டம் 2016ன் படி அரசு பள்ளி ஆசிரியர்களும் அரசு பணியார்கள் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. ப.க.இ.ஓ.மு.எண் 48441/டபள்யூ3/இ3/2019 நாள் 06.09.2019.

Wednesday, June 09, 2021

June 09, 2021

முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடக்கம்.

முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடக்கம்.
cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம்.
தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.

Tuesday, June 08, 2021

June 08, 2021

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் – புகார்களை அனுப்புவது எப்படி?

மக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை உடனடியாக தமிழக முதல்வரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் செயல்பட்டு வருகிறது. அவற்றை பயன்படுத்தி புகார்களை சமர்ப்பிக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்
தமிழக மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ள முதல்வருடன் ஒரு நேரடி தொடர்பை உண்டாக்கும் விதத்தில் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உங்கள் ஊரில் உள்ள பொதுவான பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை மனுவாக அனுப்பலாம். இந்த மனு தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்றி தரும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மேற்கொள்ளும் நலத்திட்ட உதவிகள், செயல்பாடுகள் அனைத்திலும் கட்சியின் சின்னமோ, பெயரோ, புகைப்படமோ எதுவும் இடம்பெறவில்லை. அதே போல தான் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது உங்கள் புகார்களை முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் மூலம் தெரிவிக்க, http://cmcell.tn.gov.in/register.php மற்றும் http://cmcell.tn.gov.in/iogin.php என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
இதில் உங்கள் புகார்களை தெரிவிக்க பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றி உங்கள் புகார்களை அனுப்பலாம். இதை விட எளிதான வகையில் புகார்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியும், தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தபால் மூலம் உங்கள் புகார்களை தெரிவிக்க, Chief Minister’s Special Cell, Secretariat, Chennai – 600009, Phone No: 044-2567 1764, Fax No: 044-2567 6929 என்ற முகவரியும், cmcell@tn.gov.in என்ற மின்னஞ்சலும் கொடுக்கப்பட்டுள்ளது.

Sunday, June 06, 2021

June 06, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் தனிபிரிவுக்கு கோரிக்கை மனு அளிப்பது எப்படி?

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள். Chief Minister's Special Cell, Secretariat, Chennai - 600009. Phone Number : 044 - 2567 1764, Fax Number : 044 - 2567 6929, E-Mail : cmcell@tn.gov.in

Wednesday, May 26, 2021

May 26, 2021

ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் குறித்த முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட பதில்!

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் குறித்த முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட பதில் - பதில் வழங்கிய அலுவலர் - தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர்!

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் TNPSC நடத்தும் துறைத்தேர்வுகள் எழுதுகின்றனர்.ஆனால் முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் தேர்வுகளின் குறியீடுகள் என்ன ? என்பதை முதலமைச்சர் தனிப்பிரிவின் கீழ் அரசாணை மற்றும் செயல்முறைகள் கடித நகல்களை தெரிந்து கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன் . பள்ளி வேலை நாட்களில் துறைத் தேர்வு நடக்கும் போது ஆசிரியர்களுக்கு எவ்வகை விடுப்பு அனுமதிக்கப்படுகிறது என்பதையும் அல்லது துறைத் தேர்விற்கு on duty செல்ல அனுமதி உண்டா ? என்பதை முதலமைச்சர் தனிப்பிரிவின் கீழ் மேற்காணும் தகவல்களை தெரிந்துக்கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன்.

பதில் :
மனுதாரரின் கோரிக்கையினை ஆய்வு செய்ததில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறைத் தேர்வுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளித் துனை ஆய்வாளர் பணிக்கு தகுதி பெற 065 , 072 , 124 ( அ ) 152 , 172 குறியீடு தேர்வும் தலைமையாசிரியர் பணி தகுதிக்கு 124 ( அ ) 152 , 172 தேர்வும் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 124 ( அ ) 152 , 172 தேர்வும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது ஏற்பு : முதன்மைக்கல்வி அலுலவர் தருமபுரி . ந.க.எண் 0086/03/2021 நாள் 08.03.2021 .

Saturday, March 13, 2021

March 13, 2021

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கொரானா காலத்தில் பள்ளி செல்ல வேண்டுமா? CM CELL Reply

புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக 13.03.2021 மற்றும் 14.03.2021 ஆகிய இரு தினங்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு! கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து இது நாள் வரை அரசிடமிருந்து எவ்வித வழிகாட்டுதல் வழக்கப்படவில்லை . எனவே கொரோனா பெரும் தோற்று காலத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வருகை புரிய எந்த வித ஆணையும் வழங்கப்படவில்லை என்பதை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ந.க.எண் . 4265 / இ 1 / 2020 நாள் 18.01.2021 - ன் படி மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

Sunday, January 10, 2021

January 10, 2021

CPS திட்டத்தை ரத்து செய்வது குறித்து வல்லுநர் குழு பரிந்துரைகள் படி பரிசீலனை செய்து நடவடிக்கை - CM CELL REPLY

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Monday, December 28, 2020

December 28, 2020

முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தோருக்கு வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதல்வரின் தனிப்பிரிவில் மனு செய்தவர்களுக்கு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வேலைவாய்ப்பு தொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து, விண்ணப்பித்தவர்களின் கல்வி தகுதி அடிப்படையில், தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்க, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள், கடந்த, 14 முதல், 24ம் தேதி வரை நடத்தப்பட்டன. வேலைக்கு ஆள் எடுக்கும் தனியார் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களும் பங்கேற்றனர்.இதில், 361 பேர் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றனர்; 506 பேர் திறன் பயிற்சிக்கும், 33 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அரசின் வழிகாட்டுதல் பெற்று, 190 பேர் சுய வேலைவாய்ப்பு மேற்கொள்ள விரும்பினர். வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வீரராகவ ராவ் நியமன உத்தரவுகளை வழங்கினார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog