Breaking

Showing posts with label Distance Education. Show all posts
Showing posts with label Distance Education. Show all posts

Saturday, February 22, 2025

Tuesday, December 05, 2023

December 05, 2023

அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம்?

நேரடி வகுப்பு சேர்க்கை கட்டணத்தைவிட அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய படிப்புக்கு அதிக கட்டணம்!

அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கூடுதலாக உள்ளதா கவும், அதற்கான விண்ணப்பிக்கும் தேதியையும் நீடிக்க வேண்டு மெனவும் கோரிக்கை எழுந்தது.

தமிழகத்தில் 30 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் உள்ளன. இங்கு ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேரடி வகுப்பில் சேர ரூ.18,750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும் கூட்டுறவுத் துறையில் வேலை வாய்ப்பு குறைந்ததால், இந்தப் பயிற்சியில் நேரடியாக சேர ஆர்வம் குறைந்து இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நகர மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் எழுத்தர் உள்ளிட்ட 2,400 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன.

இதற்கான அறி விப்புகள் அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டு நவ.30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப் படிப்புடன் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பட்டயப் பயிற்சியில் சேர்ந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேரடிப் பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. தற்போது கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் அஞ்சல் வழி மூலம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியை தொடங்கியுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இன்று (நவ.30) கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களுக்கு விண்ணப் பிக்க கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்திருக்க வேண்டுமென கூறியிருப்பதால், ஏராளமானோர் அஞ்சல்வழியில் விண்ணப்பித்து வருகின்றனர். அஞ்சல் வழிக்கு நிர்ணயிக் கப்பட்ட பயிற்சிக் கட்டணம் ரூ.20,750, நேரடி வகுப்புக்கான கட்டணத்தை விட அதிகம். மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கும் குறுகிய காலமே வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டணத்தைக் குறைக்கவும், விண்ணப்பிக்கும் காலத்தை நீடிக்கவும் வேண்டுமென கோரிக்கை எழுந்தது. அதே போல் காலியிடங்களுக்கு விண்ணப் பங்களை பெறும் தேதியும் நீட்டிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். இது குறித்து அஞ்சல் வழி படிப்புக்கு விண்ணப்பித்த சிலர் கூறுகையில் ‘‘நேரடி வகுப்புகள் வாரத்தில் 5 நாட்கள் நடைபெறும். அதற்குப் பயிற்சிக் கட்டமாக ரூ.18,750 வசூலிக் கின்றனர். ஆனால் அஞ்சல் வழியில் வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். இதற்கு ரூ.20,750 கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இதைக் குறைப்பதோடு கட்டணத்தை 2 தவணைகளில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும். அஞ்சல் வழிப் பயிற்சி சேர்க்கையை குறுகிய காலத்தில் அறிவித்துவிட்டு உடனே கட்டணம் செலுத்தச் சொல்கின்றனர். ரூ.20,750-ஐ செலுத்த சிரமமாக உள்ளது.

இதனால் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். மேலும், 2 தவணைகளில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அஞ்சவழிப் பயிற்சி அறிவிப்பு பலரையும் சென்றடையவில்லை. இதனால் பயிற்சியில் சேர்வதற்கான காலத்தையும், அதேபோல் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் பெறும் காலத்தையும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கேட்டபோது ‘‘கட் டணம் நிர்ணயம், காலநீட்டிப்பை தலைமை அலுவலகம் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்று கூறினர். இப்பிரச்சினையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

Sunday, March 19, 2023

March 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விப் பிரிவு - தேர்ச்சி பெறாதோருக்கு இறுதி வாய்ப்பு



அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விப் பிரிவு

தேர்ச்சி பெறாதோருக்கு இறுதி வாய்ப்பு

அரக்கோணம், மார்ச் 16: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்விப்பிரிவில் கடந்த 2002 - 2014 வரையிலான கல்வியாண் டுகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே, டிசம்பர் 2023 ஆகிய இரண்டு பருவங்களில் சிறப்பு தேர்வுகள் நடை பெற உள்ளன என அரக்கோணம் அலுவலக பொறுப்பு அலுவலர் தினேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விப்பிரிவில் கடந்த 2002 முதல் 2014 கல்வியாண்டுகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக 2023 மே மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு பரு வங்களில் சிறப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இதற்கான விவரங்களுக்கு அண்ணா மலை பல்கலைக்கழக படிப்பு மைய பொறுப்பு அலுவலர் தினேஷை 81228 10012 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மே 2023-க்கான சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மார்ச் 3 முதல் மார்ச் 31-க்குள் பல்கலைக்கழக இணையதள இணைப் பில் தங்களது விவரங்களை பதிவிடலாம்.

2002 -14 இடைப்பட்ட காலத்தில் பயின்று தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு இது மட்டுமே இறுதி வாய்ப்பு. இதையும் தவற விட்டால் தங்களது படிப்பை முடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

Saturday, March 04, 2023

March 04, 2023

தொலைதுாரக் கல்வி மாணவர்கள் கவனத்திற்கு!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 2002 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி வழியில் பயின்று, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே 2023, டிசம்பர் 2023 ஆகிய இரண்டு பரு வங்களில் சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது.

Sunday, July 03, 2022

July 03, 2022

பகுதி நேரமாக B.E., B.Tech., படிப்புகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

பகுதி நேரமாக B.E., B.Tech., படிப்புகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து , பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



CLICK HERE TO APPLY

Friday, July 01, 2022

July 01, 2022

MBA தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக சென்னை பல்கலை அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி நிறுவனத்தில் டிசம்பர் 2021 எம்பிஏ நடந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, June 23, 2022

June 23, 2022

தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Thursday, April 28, 2022

April 28, 2022

தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும்

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும்.
April 28, 2022

தொலைதூர கல்வி பயின்றோருக்கும் பேராசிரியா் பணி

தொலைதூர கல்வி பயின்றோருக்கும் பேராசிரியா் பணி வழங்கிட பல்கலைக்கழக மானியக் குழுவிடம் வலியுறுத்துவோம் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் செந்தில்நாதன் எழுப்பி பேசுகையில், ‘தொலைதூர கல்வி பயின்று தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பேராசிரியா் பணி நியமனம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. உயா் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி இதனைக் கூறுகிறாா்கள். எனவே, இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அமைச்சா் க.பொன்முடி:

பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மானியக் குழுவுக்கு உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர கல்வி அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்தது. அந்த விவகாரத்திலேயே கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில், பேராசிரியா் நியமனம் தொடா்பான பிரச்னை குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடிதம் எழுதலாம். அவா்களையும் பணிகளில் நியமிக்க அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று தெரிவித்தாா் அமைச்சா் க.பொன்முடி.

Tuesday, April 05, 2022

April 05, 2022

Annamalai University - Informed that regarding the UGC Distance Education notice

It is informed that regarding the UGC notice on running the Distance Education programme by Annamalai University, the W.P. No: 30039/2012 dt 12.03.2013 and W.P. No 15203/2018 dt 25.06.2018, the Hon'ble High Court of Madras granted stay to continue various DDE programmes. The stay still continues and letter will be sent to UGC officially. The problem will be resolved soon. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தை நடத்துவது குறித்த யுஜிசி அறிவிப்பு குறித்து, டபிள்யூ.பி. எண்: 30039/2012 dt 12.03.2013 மற்றும் W.P. எண் 15203/2018 dt 25.06.2018, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு DDE திட்டங்களைத் தொடர தடை விதித்தது. தங்கு தடை இன்னும் தொடர்கிறது மற்றும் அதிகாரப்பூர்வமாக UGC க்கு கடிதம் அனுப்பப்படும். விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

Tuesday, March 29, 2022

March 29, 2022

அங்கீகாரமற்ற தொலைநிலை படிப்பு - அண்ணாமலை பல்கலைக்கு எச்சரிக்கை!

'அண்ணாமலை பல்கலையில், தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம்' என, பல்கலை மானிய குழு எச்சரித்துள்ளது.

தொலைநிலை படிப்பை நடத்த, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் பெறாத படிப்புகளை படித்தால், உயர் கல்வியில் சேர முடியாது; வேலை வாய்ப்பும் கிடைக்காது. எனவே, அங்கீகாரம் இன்றி, தொலைநிலை படிப்பை நடத்த, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது. ஆனால், தமிழக அரசும், உயர் கல்வி துறையும், சம்பந்தப்பட்ட பல்கலைகளும் கவலைப்படாமல், அங்கீகாரம் இன்றி படிப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், யு.ஜி.சி., செயலர் ரஜனீஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இது, தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல். யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், 'ஆன்லைன்' படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது.

இதையும் படிக்க | 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாமல் ஒரே நாளில் 2.9 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்

அண்ணாமலை பல்கலைக்கு, 2014- - 15ம் ஆண்டு வரை மட்டுமே, தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பின், எந்த படிப்புக்கும் அங்கீகாரம் பெறவில்லை. எனவே, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், அண்ணாமலை பல்கலை நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. அந்த படிப்புகளுக்கும், அதனால், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், அந்த பல்கலையே முழு பொறுப்பு. எனவே, அப்பல்கலை நடத்தும் தொலைநிலை படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம். அங்கீகாரம் பெறாத பட்டப் படிப்புகளில், மாணவர்களை சேர்த்து வருவது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சக ஆசிரியையிடம் 16 லட்சம் மோசடி - பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறை தண்டனை

ஏற்கனவே, யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லாமல், அண்ணாமலை பல்கலை தொலைநிலை படிப்புகளில் ஏராளமானோர் சேர்ந்து படித்தனர். அவர்களில் பலர், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, உயர் கல்வி பெற முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்து, எதிர்கால வாழ்வை இழந்துள்ளனர்.

Total Pageviews

Search This Blog