Breaking

Showing posts with label கொரோனா. Show all posts
Showing posts with label கொரோனா. Show all posts

Friday, August 05, 2022

August 05, 2022

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உதவி - கலெக்டர் தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோருக்கு கோவிட் உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் புதிய திட்டத்தை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்துக்கு செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் கேர் 1 மற்றும் கேர் 2 என்ற 2 வகை திட்டங்களை உள்ளடக்கியது, கேர் 1 திட்டத்தின்படி 2020 - 2021 மற்றும் 2021 - 2022 ஆகிய 2 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தாமாகவோ அல்லது தமது வாரிசுகள் மூலமோ ஏற்கனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோன்று இன்னொறு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க 25 சதவீதம் அரசு மானியத்துடன் (அதிகபட்சமாக வங்கி ரூ. 25 லட்சம் வரை) நிதி உதவி வங்கியின் மூலம் வழங்கப்படும். இதில், திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை இருக்கலாம். விண்ணப்பதாரர் 55 வயதுக்கு மேற்படாதவராகவும், குறைந்த பட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களும் பயன்பெறலாம். கேர் 2 திட்டத்தின் கீழ் கொரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் நுட்ப மேம்பாடு அல்லது நவீன மயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சமாக 25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். 23.3.2020க்கும் பின்னர் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்கான இயந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இதற்கான விண்ணப்பங்களை www.msmetamilnadu.tn.gov.in என்ற இணைய தளம் வழியே பதிவிடலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காஞ்சிபுரம் (044-27238837, 044-27238551, 044-27236686, 9566990779) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Monday, August 01, 2022

August 01, 2022

கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு: பள்ளிக்கல்வித்துறை

கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு: பள்ளிக்கல்வித்துறை

கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடுத்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிப்பை தொடருவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமானோர் இறந்தனர். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்தாலும் அவர்களும் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை பள்ளிகள் உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, July 14, 2022

July 14, 2022

தமிழகத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி அருகே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி அருகே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பழனியப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog