students news
December 01, 2024
Showing posts with label ITI. Show all posts

Sunday, December 01, 2024
Friday, September 22, 2023
ITI
September 22, 2023
ITI முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று: அக்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஐடிஐ படித்தவர்கள், மேற்படிப்புக்காக 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விரும்பினால் வரும் அக்டோபர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தாண்டு மார்ச் 30-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள், மேற்படிப்பை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்றஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின்கீழ் நடத்தப்பட்ட மொழித் தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 10-ம் வகுப்புமற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துஉரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள பொறுப்பு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ தபால்மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஆய்வு செய்து, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள்இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10-ம் வகுப்பு / 12-ம்வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் இதற்கென நியமிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் அக். 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sunday, February 12, 2023
ITI Colleges
February 12, 2023
“ஐடிஐ கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கும் மத்திய அரசு” - புதிய முறைக்கு எதிர்ப்பு
“ஐடிஐ கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கும் மத்திய அரசு” - புதிய முறைக்கு எதிர்ப்பு “Centre Govt Disrupting ITIs” - Opposition to New System
“ஐடிஐ கல்வி நிறுவனங்களின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட புதிய தொழிற்கல்வி முறையை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் 5500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஐடிஐ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியுற்ற கிராமப்புற, நகர்ப்புற மேற்படிப்பு படிக்க வாய்ப்பில்லாத 25 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் ஆண்டுதோறும் இந்நிறுவனங்களில் பயிற்சி பெற்று திறமை வாய்ந்த தொழிலாளர்களாக உருவாகி வருகிறார்கள்.
இவ்வாறு பயிற்சி பெறுவோர்கள் தொழில் முனைவோர்களாக, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களாக, பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐடிஐ-யின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கோடு புதிய தொழிற்கல்விக் கொள்கையினை புகுத்தி, கணிணி வழித் தேர்வு, கணிதம் மற்றும் வரைபடம் பாடத் திட்டம் மற்றும் பயிற்சி நேரம் குறைப்பு, பொறியியல் சார்ந்த அத்தியாவசிய பாடத் திட்டங்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.
இதனால் ஐ.டி.ஐ. படித்து செல்லும் இளைஞர்கள் எந்தவித தொழில்நுட்ப அறிவும், நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச் செய்யும் கூலித் தொழிலாளியாக (Bond Labour) பணிபுரியும் வகையில் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கு எதிரானதாகும். தமிழகத்தில் இயங்கும் 71 தொழிற்பயிற்சி நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்திட முதல்வர் ரூ.3200 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மத்திய அரசு ஐ.டி.ஐ. நிறுவனங்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
எனவே, மத்திய அரசு தொழிற்கல்வியில் புகுத்தியுள்ள புதிய தொழிற்கல்வி முறையை முற்றிலுமாக கைவிட வேண்டுமெனவும், கணிதம் மற்றும் வரைபடம், பாடத்திட்டம் மற்றும் பயிற்சி நேரம் குறைத்ததையும், தேசிய திறன் தகுதி குறைத்ததையும் உடனடியாக திரும்ப பெற்று பழைய நிலையிலேயே பாடத்திட்டங்கள் தொடர வேண்டுமெனவும், என்.டி.சி., மற்றும் என்.ஏ.சி., பயிற்சி முடித்த பயிற்சியளார்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.
மேலும், தொழிற்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழக அரசு திகழ்வதற்கு மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் ஐ.டி.ஐ. நிறுவனங்களில் பணியாற்றும் தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Saturday, February 11, 2023
Latest News
February 11, 2023
ITI சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம்
ITI சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம் ITI certificate holders can get 10th and 12th equivalent certificate
தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் அதேபோல் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்றவர்கள், 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவம்,முழுவிவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக பிப்ரவரி 28-ம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Friday, January 27, 2023
ITI
January 27, 2023
தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு

சென்னை: தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்குமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், தமிழக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையின்படி, 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி / என்ஏசி (NTC/ NAC) பெற்றவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி / என்ஏசி (NTC/ NAC) பெற்றவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்

Tuesday, May 17, 2022
ITI
May 17, 2022
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு.
I.T.I. The government has issued a certificate to issue equivalent certificates to those who have passed 10th and 12th classes. Certificate equivalent to 10th class will be given to those who have studied properly in 8th standard and obtained certificates in vocational training centers. It has been informed that those who have studied 10th standard and obtained certificates in vocational training centers will be given a certificate equivalent to 12th standard.
10, 12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு முறையாக படித்து தொழிற் பயிற்சி நிலையங்களில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
10ம் வகுப்பு முறையாக படித்து தொழிற் பயிற்சி நிலையங்களில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.