Breaking

Showing posts with label Fellow Students. Show all posts
Showing posts with label Fellow Students. Show all posts

Friday, February 03, 2023

February 03, 2023

அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - கல்லால் சக மாணவர்கள் மீது தாக்குதல் - வைரலாகும் வீடியோ

அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - கல்லால் சக மாணவர்கள் மீது தாக்குதல் - வைரலாகும் வீடியோ Govt School Students Clash - Attacking Fellow Students With Stones - Video Goes Viral

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலின்போது, சக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில், ப்ளஸ் டூ மாணவர் கல்லால் தாக்க முயற்சித்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

புதுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில், பிளஸ் டூ மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் மோதல் ஏற்பட்டதால், பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அப்போது, பிளஸ் டூ மாணவர் ஒருவர், கல்லை எடுத்துக் கொண்டு சக மாணவர்களை தாக்க முற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த மோதல் சம்பந்தமாக புதுப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

CLICK HERE TO WATCH VIDEO

Total Pageviews

Search This Blog