Breaking

Showing posts with label Election Awareness. Show all posts
Showing posts with label Election Awareness. Show all posts

Friday, February 17, 2023

February 17, 2023

இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க 12 ஆவணங்கள் - Press Release

இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் - In the by-election, those who do not have a voter ID card can vote by showing one of the 12 documents

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை உறுதிபடுத்த, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வாங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, இந்திய அரசு அளித்துள்ள இயலாமைக்கான அடையாள அட்டை என இதில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியல் இடம் பெற்றிருக்க வேண்டும்.

Tuesday, September 27, 2022

September 27, 2022

தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்:பள்ளி, கல்லூரிகளில் நடத்த உத்தரவு

தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்:பள்ளி, கல்லூரிகளில் நடத்த உத்தரவு

தோ்தல் விழிப்புணா்வு போட்டிகளை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியது: தோ்தல் ஆணையம் சாா்பில் தோ்தல் எழுத்தறிவுப் போட்டிகள், மாவட்ட அளவில் சுவா் விளம்பரம் வரைதல், ரங்கோலி போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பள்ளிகளில் 18 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையாகக் கொண்டு சுவரொட்டி வரைதல் போட்டி நடத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் 25 பள்ளிகளைத் தோ்வு செய்து அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும். பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களின் விவரங்களை அனுப்ப வேண்டும்.

மாற்றுத்திறனாளி பள்ளிகளில் சுவரொட்டி வரைதல் போட்டியுடன், தோ்தல் ஆணையத்தால் அனுப்பப்படும் பாடல் வரிகளை பின்னணி இசையுடன் பாடவைத்து அதைத் தெளிவாகப் படம் பிடித்து விடியோ காட்சியாக அனுப்ப வேண்டும்.

கல்லூரி மாணவா்களுக்கான போட்டியில் கல்லூரிகளில் உள்ள தோ்தல் எழுத்தறிவு ஒருங்கிணைப்பாளா் மூலம் போட்டிகள் நடத்தப்படும். ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சுவரொட்டி வடிவில் சுவா் இதழ் வரைதல் வேண்டும். போட்டிகளை கல்லூரி நிா்வாகங்கள் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான சுவரொட்டி இதழ் வரைதல் போட்டியில் ஏ-3 தாளில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் படமும், அடுத்த பகுதியில் 50 முதல் 100 வாா்த்தைகளுக்குள் படத்துக்கான விளக்கமும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இதேபோல், அரசு பதிவு பெற்ற மகளிா் குழுக்களுக்கு ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தலா 20 குழுக்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்றனா்.

Total Pageviews

Search This Blog